Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை பற்றிய உலகத் தலைவர்களின் சாதகமான நிலைப்பாடு தொடர்பில் நான் மகிழ்ச்சியடைகின்றேன் : ஜனாதிபதி

Featured Replies

இலங்கை பற்றிய உலகத் தலைவர்களின் சாதகமான நிலைப்பாடு தொடர்பில் நான் மகிழ்ச்சியடைகின்றேன் : ஜனாதிபதி

 

 

Loews_Regency.jpg

இலங்கையில் பொருளாதார அபிவிருத்தி, சூழல் பாதுகாப்பு மற்றும் நல்லிணக்கம் போன்றவற்றுக்காக முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் தொடர்பாக இன்று ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தொடரில் உரையாற்றும்போது உலகத் தலைவர்களுக்கு எடுத்துரைக்க இருப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

நியூயோர்க் Loews Regency ஹோட்டலில் நேற்று மாலை இலங்கை ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். 

பிரேசில் ஜனாதிபதி இன்று பொதுச்சபையில் உரையாற்றும்போது தெரிவித்ததைப்போன்று, சட்டவிரோதமான போதைப்பொருள் கடத்தலைத் தடுத்தல் தொடர்பில் கூடிய அவதானத்தை செலுத்தவுள்ளதுடன் தான் முன்னெடுத்துவரும் போதைப்பொருளுக்கு எதிரான பிரச்சார நடவடிக்கைகள் தொடர்பிலும் பொதுச்சபையில் விளக்கமளிக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.  

ஐநா பொதுச் செயலாளர் பான் கீ மூனினால்; ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மதிய போசன நிகழ்விலும் கலந்துகொண்ட ஜனாதிபதி, அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா, பொதுச் செயலாளர் பான் கீ மூன் உள்ளிட்ட பல தலைவர்களுடன கலந்துரையாடல்களை மேற்கொண்டார். இலங்கையில் தெளிவான மாற்றம் ஒன்று தென்படுகின்றது என ஜனாதிபதி ஒபாமா இதன்போது தெரிவித்தார். அதேவேளை பான் கீ மூன், இலங்கையின் பல்வேறு துறைகளிலும் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பில் தன்னிடம் வாழ்த்துத் தெரிவித்ததாக குறிப்பிட்ட ஜனாதிபதி, இலங்கை தொடர்பில் எல்லோருமே பாராட்டுக்களைத் தெரிவித்ததோடு அவர்களுடைய இந்த சாதகமான பிரதிபலிப்புக்கள் தொடர்பில் தாம் மிகுந்த மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார். 

தற்போது எந்தவொரு நாடும் இலங்கையுடன் வெறுப்புடனோ அல்லது பகைமையுணர்வுடனோ இல்லையெனவும் அனைத்து நாடுகளும் நட்புறவுடன் கூடிய சாதகமான நிலைப்பாட்டுடனேயே உள்ளதாகவும் தெரிவித்த ஜனாதிபதி, உலகத்தலைவர்களுடைய இந்த சாதகமான நிலைப்பாட்டை இலங்கைக்கு திரும்பிச் செல்லும்போது தான் எடுத்துச் செல்வேன் எனவும் மேலும் தெரிவித்தார். 

உலக வெப்பமயமாதல் தொடர்பான பாரிஸ் பிரகடனத்திற்கு பல நாடுகள் ஒப்புதல் அளித்தமை தொடர்பில் தான் மகிழ்ச்சியடைந்திருந்ததாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாக்கும், பொருளாதார ரீதியில் பலம்மிக்க தேசமாக இலங்கையை மாற்றுவதற்கு முழுமையாக தன்னை அர்ப்பணிப்பதாகவும் ஜனாதிபதி; தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/11571

  • தொடங்கியவர்
நியூயோர்க் சந்திப்புக்கள்...
 
21-09-2016 11:07 AM
Comments - 0       Views - 28

ஐக்கிய நாடுகள் சபையின் 71ஆவது பொதுச்சபை கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்கு நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திபால சிறிசேன, அங்கு பல்வேறு தரப்பினருடன் சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றார்.

இந்திய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் எம்.ஜே.அக்பருடனான சந்திப்பு

article_1474436554-01.jpg

அவுஸ்திரேலியப் பிரதமர் மல்கம் டேர்ன்புள் உடனான சந்திப்பு

article_1474436564-02.jpg

US Millennium Challenge Corporation நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி தனா ஜே ஹைடி (Dana J Hyde) சந்தித்த போது, அமைச்சர்களான அர்ஜுன ரணதுங்க, கயந்த கருணாதிலக, பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா, ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தரத் தூதுவர் ரொஹான் பெரேரா, அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம் ஆகியோர் உடன் இருந்தனர்.

article_1474436577-03%20%281%29.jpg

- See more at: http://www.tamilmirror.lk/182318/ந-ய-ய-ர-க-சந-த-ப-ப-க-கள-#sthash.sJzmtKA3.dpuf

article_1474436588-03%20%282%29.jpg

  • தொடங்கியவர்

இலங்கையில் தற்போது ஏற்பட்டுவரும் மாற்றங்கள் உலகிற்கு ஒரு முன்மாதிரியாகும்: ஒபாமா

 

இலங்கையில் தற்போது ஏற்பட்டுவரும் மாற்றங்கள் உலகிற்கு ஒரு முன்மாதிரியாகும் எனக் குறிப்பிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, இலங்கையின் எதிர்காலப் பயணத்திற்குத் தேவையான முழுமையான உதவிகளை வழங்க தாம் தயாராகவுள்ளதாகவும் தெரிவித்தார்.

potus_phone_tout.jpg

ஐக்கிய நாடுகள் சபையின் 71 ஆவது கூட்டத்தொடரில் பங்குபற்றும் அரச தலைவர்களுக்காக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த விசேட பகல் போசன விருந்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவைச் சந்தித்தபோதே அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

இதேநேரம் ஐக்கிய நாடுகள் சபையின் 71 ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்குபற்றும் அரச தலைவர்களுக்காக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இராப்போசன விருந்துக்கும் ஜனாதிபதிக்கு விசேட அழைப்பு கிடைக்கப்பெற்றுள்ளது.

 

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையில் உரையாற்றும் இறுதி சந்தர்ப்பம் இதுவாகும் என்பதோடு, மாநாட்டில் உரையாற்றிய அவர், பயங்கரவாத செயற்பாடுகளை வன்மையாகக் கண்டித்துள்ள அதேநேரம் இந்த பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்கு ஒரு பூகோள ஒத்துழைப்பின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

http://www.virakesari.lk/article/11594

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.