Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உணர்ச்சிகளை ஒரு பக்கத்தில் வைத்து விட்டு தமிழ்த் தலைவர்கள் நிதானமாக செயற்பட வேண்டும்-கிழக்கு விவசாய அமைச்சர் கி. துரைராசசிங்கம்

Featured Replies

உணர்ச்சிகளை ஒரு பக்கத்தில் வைத்து விட்டு தமிழ்த் தலைவர்கள் நிதானமாக செயற்பட வேண்டும்-கிழக்கு விவசாய அமைச்சர் கி. துரைராசசிங்கம்
 
 
உணர்ச்சிகளை ஒரு பக்கத்தில் வைத்து விட்டு தமிழ்த் தலைவர்கள் நிதானமாக செயற்பட வேண்டும்-கிழக்கு  விவசாய அமைச்சர் கி. துரைராசசிங்கம்
தமிழ்த் தலைவர்கள் உணர்ச்சிகளை எல்லாம் ஒரு பக்கத்தில் வைத்து விட்டு, நிதானமாக செயற்பட வேண்டும் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி. துரைராசசிங்கம் கேட்டு க்கொண்டுள்ளார்.
 
எம்மை கவிழ்த்து விடுவதற்காக யாரும் எதனையும் பேசலாம் எனக் குறிப்பிட்ட அவர், அத னைப் பொருட்படுத்தாது, ஒன்றிணைந்த நாட்டிற்குள் ஒன்றாகச் செயற்படவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 
அன்று தொடக்கம் இன்று வரை தமிழ் மக்களை பிரிவினைவாதிகள் என சிங்கள மக்கள் கூறி வருவதாகவும் அந்தக் கருத்தை முற்றாக எடுத்து எறியக்கூடிய விதத்தில் செயற்பட வேண்டும் என்றும் கி. துரைராசிங்கம் வலியுறுத்தியுள்ளார்.
 
மட்டக்களப்பு – புதுக்குடியிருப்பில் கடந்த 1990ஆம் ஆண்டு இடம்பெற்ற இனப்படு கொலை யின் நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்ட போது, இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரை யாற்றும் போதே கி. துரைராசிங்கம் இதனைத் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் இந்த நாட்டினுடைய மக்கள், சமமாக வாழும் அருகதையுள்ள மக்கள், எங்களுக்கான உரிமைகள் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்கப்படுகின்ற பொழுதுதான் தேசிய கீதத்தில் உள்ளது போன்று நாங்களெல்லாம் அன்பான தாயால் பெற்றெடுக்கப்பட்ட அழகான குழந்தைகள் என்ற வரிகள் உண்மையாக இருக்க வேண்டும்.
 
எங்களுடைய தனித்துவம், இனத்துவம் பேணப்பட்டு, இன அடையாளத்தைக் காப்பாற்ற க்கூடிய நிலம் தொடர்பான விடயம் அங்கீகரிக்கப்பட்டு, மனித அடிப்படை உயரிடம் பெற்றுக் கொள்ளக் கூடியதாகவும் நாங்கள் இதுவரை அனுபவித்திருக்கின்ற விடயங்கள், வரலாற்று ரீதியாக நாடு கண்டிருக்கின்ற இன பிரச்சினைகள் தொடர்பான இணக்கப்பாடுகளை எல்லாம் பிழிந்து எடுத்து அரசியலமைப்பை உருவாக்க்க்கூடியதொரு சூழ்நிலைக்கு மக்களை கொண்டு செல்லவேண்டும்.
 
இனிமேல் இவ்வாறான துயரச் சம்பவங்கள் நடைபெறாமலிருக்க மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடுகளும் இருந்திட வேண்டும். இலட்சியத்தை மாற்றாதே, தேவைப்படின் வழி முறைகளை மாற்றிக்கொள் என்கின்ற வசனங்கள் எல்லோருடைய காதுகளிலும் தற்போது கேட்கின்றதாகவுள்ளது. வரலாறுகள் எவ்வாறு இலட்சியத்தை மாற்றாமல் வழிமுறைகளை நாம் அறிந்து கொள்ள வேண்டும், அதைக் கடைப்பிடிக்கவும் வேண்டும்.
 
இந்த நாட்டில் பல இன பல மொழிகளைப் பேசுகின்ற பன்மைத்துவ நாடு அதற்கு ஏற்ற விதத்தில் இந்த நாட்டின் அரசியல் நிலமைகளை மாறிட வேண்டும் என ஜனாதிபதி மைத்தி ரிபால சிறிசேன கடந்த சுதந்திர தின நிகழ்வின்போது கூறியிருந்தார்.
 
எதிர்க்கட்சி செய்பவற்றை நான் தடுக்கவில்லை ஆனால் இப்போதிருக்கின்ற சமாதான சூழ லைக் குழப்பக் கூடிய வித்தில் உங்களது செயற்பாடுகள் இருந்திடக் கூடாது என மாகநாயக்க தேரர் அண்மையில் விமல் வீரவன்சவிடம் தெரிவித்துள்ளார்.
 
நாங்களெல்லாம் எதிர்பார்த்திராத, கற்பனை செய்திராத இடத்திலிருந்து அந்தக் கருத்து வந்திருக்கின்றது. எனவே இவற்றையெல்லாம் மிகக் கவனமாகக் கையாள வேண்டி யவர்களாக இருக்கின்றோம் என்றும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி. துரைராசிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

http://onlineuthayan.com/news/17895

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.