Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொலை குற்றத்தில் இருந்து தப்பிக்க மகிந்தவுடன் இணைந்த மேயர் யார்?

Featured Replies

தெஹிவளை - கல்கிஸசை மாநகர சபையின் முன்னாள் மேயர் தனசிறி அமரதுங்க, ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி, ஏன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜக்சவின் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டார் என்பதற்கான உண்மையான காரணம் தற்போது தெரியவந்துள்ளது.

2005ம் ஆண்டில் தெஹிவளை - கல்கிஸ்சை மாநகர சபைக்கு சொந்தமான இறைச்சி கடை சம்பந்தமான விலைமனு கோரலே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

இந்த விலை மனுவை வேறு ஒரு நபர் ஊடாக தனசிறி அமரதுங்க பெற்றுக்கொள்ள முயற்சித்துள்ளார். மற்றுமொரு தரப்பு அதற்கு எதிராக செயற்பட்டுள்ளது.

இந்த பிரச்சினை முற்றியத்தில் தனசிறி அமரதுங்க தரப்பினர், எதிர்த்தரப்பை சேர்ந்த இரண்டு பேரை கொலை செய்துள்ளனர்.

இந்த கொலை தொடர்பான விசாரணைகள் அப்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த கொலைகளுடன் தனசிறி அமரதுங்கவுக்கு தொடர்புள்ளமைக்கான தெளிவான சாட்சியங்கள் இருப்பதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம், சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அறிவித்திருந்தது.

இதனையடுத்து தனசிறி அமரதுங்கவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு சட்டமா அதிபர் திணைக்களம் ஆலோசனை வழங்கியிருந்தது.

கைது செய்யப்படுவதில் இருந்து தப்பிக்க ஒரே வழி மகிந்த ராஜபக்சவுடன் இணைவது என தீர்மானித்த அமரதுங்க, முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே ஊடாக ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி, மகிந்தவுடன் இணைந்து கொண்டார்.

சட்டமா அதிபர் திணைக்களம் அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்ததால், தனசிறி அமரதுங்கவுக்கு எதிரான விசாரணைகள் 24 மணிநேரத்திற்குள் மூடிமறைக்கப்பட்டன.

இந்த நிலையில், விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட போவதை உணர்ந்து கொண்டுள்ள தனசிறி அமரதுங்க, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு தகவல்களை அனுப்பி வருவதாக கூறப்படுகிறது.

தான் ஐக்கிய தேசியக் கட்சியின் உண்மையான விசுவாசி எனவும் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கி்ய தேசியக் கட்சியின் ஊடாக போட்டியிட வாய்ப்பு வழங்குமாறும் தனசிறி அமரதுங்க கோரிக்கை விடுத்து வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.tamilwin.com/politics/01/118548?ref=morenews

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.