Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சவாலை எதிர்கொள்வதற்கு தயாராகும் அரசாங்கம்

Featured Replies

சவாலை எதிர்­கொள்­வ­தற்கு தயா­ராகும் அர­சாங்கம்
 
showImageInStory?imageid=298597:tn
 

புதிய அர­சி­ய­ல­மைப்பு பூர்­வாங்க வரைவு நவம்­பரில் வர­வு-­ – செ­லவுத் திட்டம் மீதான விவாதம் நடை­பெ­று­வ­தற்கு முன்­ன­தாக பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­படும் என்று அர­சாங்­கத்­த­லை­வர்கள் கூறிக்­கொண்­டி­ருக்­கி­றார்கள். புதிய அர­சி­ய­ல­மைப்பை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டு­மானால் சர்­வ­ஜ­ன­ வாக்­கெ­டுப்­பொன்றில் மக்­களின் அங்­கீ­கா­ரத்தை அர­சாங்கம் பெற­வேண்டும். அத்­த­கைய வாக்­கெ­டுப்பில் மக்கள் புதிய அர­சி­ய­ல­மைப்பு வரைவை நிரா­க­ரிப்­பார்­க­ளாக இருந்தால், அதுவே அர­சாங்­கத்தின் வாட்­டர்­லூ­வாக இருக்­கலாம்.

புதிய அர­சி­ய­ல­மைப்பின் பல்­வேறு அம்­சங்கள் குறித்தும் ஆராய்ந்து அறிக்­கை­களைத் தயா­ரிப்­ப­தற்­கென்று நிய­மிக்­கப்­பட்­டி­ருந்த 6 பாரா­ளு­மன்ற உப­கு­ழுக்­களில் 5 குழுக்கள் அவற்றின் பணி­களைப் பூர்த்தி செய்­து­விட்­ட­தாக பொது­மக்கள் பிர­தி­நி­தித்­துவ குழுவின் தலை­வ­ரான மூத்த சட்­டத்­த­ரணி லால் விஜே­நா­யக்க கடந்­த­வாரம் தெரி­வித்­தி­ருந்தார். பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வினால் இவ்­வ­ருட ஆரம்­பத்தில் நிய­மிக்­கப்­பட்ட 19 உறுப்­பி­னர்­களைக் கொண்ட பொது­மக்கள் பிர­தி­நி­தித்­து­வக்­குழு அர­சி­ய­ல­மைப்பு வரைவுச் செயன்­மு­றை­க­ளுடன் தொடர்­பு­டைய விவ­கா­ரங்கள் குறித்து பொது­மக்­க­ளுடன் ஆலோ­சனை கலப்­ப­தற்கு விசேட முயற்­சி­களை மேற்­கொண்­டி­ருந்­தது. பொது­மக்கள் மத்­தியில் இருந்து பல்­வேறு தரப்­பினால் யோச­னைகள் இக்­கு­ழு­வுக்கு சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருந்­தன. புதிய அர­சி­ய­ல­மைப்பை வரையும் போது அந்த யோச­னைகள் கருத்­தி­லெ­டுக்­கப்­படும் என்று லால் விஜே­நா­யக்க உறு­தி­ய­ளித்தார். மிகவும் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட ஒரு கால கட்­டத்­திற்குள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தாலும் கூட, இத்­த­டவை இடம்­பெற்ற பொது மக்­க­ளு­ட­னான கலந்­தா­லோ­சனைச் செயன்­மு­றைகள் இலங்­கையைப் பொறுத்­த­வரை ஒரு புதிய நிகழ்வுப் போக்­காகும். 1972 ஆம் ஆண்­டிலும் 1978 ஆம் ஆண்­டிலும் முதல் இரு குடி­ய­ரசு அர­சி­ய­ல­மைப்­பு­களும் அர­சி­யல்­வா­திகள் மத்­தியில் இருந்தும் சட்­டத்­த­ர­ணிகள் மத்­தியில் இருந்தும் தெரிவு செய்­யப்­பட்ட சில நபர்­க­ளி­னா­லேயே வரை­யப்­பட்­டன. மக்­க­ளுடன் ஆலோ­சனை கலக்­காமல், அவர்­களின் கருத்­துக்­களை அறிந்து கொள்­ளாமல், மிகவும் முக்­கி­யத்­துவம் வாய்ந்த தீர்­மா­னங்கள் அவ்­விரு சந்­தர்ப்­பங்­க­ளிலும் எடுக்­கப்­பட்­டி­ருந்­தன.

1972 அர­சி­ய­ல­மைப்பை வரைந்­த­வர்கள் நீதித்­து­றையை அர­சாங்­கத்தின் நிறை­வேற்று அதி­கார பிரி­வுக்கு (Executive Branch of Government) கீழ் நிலைப்­பட்­ட­தாக்கத் தீர்­மா­னித்­ததன் மூல­மாக ஆட்­சி­மு­றையில் தவ­றுகள் இடம்­பெ­று­வதைத் தடுக்கக் கூடிய ஏற்­பா­டு­களை (Checks and Balances) பற்­றிய கோட்­பாட்டை பல­வீ­னப்­ப­டுத்­தினர். நாட்டை எதேச்­சா­தி­கார ஆட்­சியின்

திசையில் இழுத்­துச்­சென்ற அந்த முக்­கி­ய­மாற்­றங்கள் தொடர்பில் மக்­க­ளுடன் கலந்­தா­லோ­சனை நடத்­தப்­ப­ட­வில்லை.

அந்த எதேச்­சா­தி­கார ஆட்­சிப்­போக்கு இன்­றுதான் மாற்­றி­ய­மைக்­கப்­பட்டுக் கொண்­டு­வ­ரு­கி­றது.

1978 அர­சி­ய­ல­மைப்பை வரைந்­த­வர்கள் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி பத­வியில் மட்டும் மீறிய அதி­கா­ரங்­களைக் குவிப்­ப­தற்குத் தீர்­மா­னித்­தார்கள். மீண்டும் மக்­களின் சம்­மதம் இல்­லாமல், முன்­னெ­டுக்­கப்­பட்ட அந்தச் செயன்­முறை எதேச்­சா­தி­கார ஆட்­சியை மேலும் வலுப்­ப­டுத்­தி­யது.

கடந்த காலத்தைப் போலன்றி, இத்­த­டவை அர­சாங்கம் பொது­மக்­க­ளுடன் ஆலோ­சனை நடத்­தி­யது. அந்த ஆலோ­சனைச் செயன்­மு­றை­களின் இலட்­ச­ணங்கள் குறித்து விச­னங்கள் வெளி­யி­டப்­பட்­டி­ருக்­கின்­றன. 6 மாத கால­வ­ரை­யறை மிகவும் குறு­கி­ய­தாகும். ஆலோ­சனை நடத்தும் செயன்­மு­றை­யொன்று முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது என்­பதை பொது­மக்கள் பெரு­ம­ள­வுக்கு அறிந்­தி­ருக்­க­வில்லை. அதனால், அச்­செ­யன்­மு­றையில் சகல மட்­டங்­க­ளி­லு­மான பொது­மக்­களின் பங்­கேற்பு மிகவும் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­ட­தா­கவே இருந்­தது. மக்­களின் பங்­கேற்பைப் பெறு­வ­தற்கு பொது­மக்­களின் பிர­தி­நி­தித்­துவக் குழுவின் உறுப்­பி­னர்கள் தங்­க­ளது தொடர்­பு­க­ளையும் செல்­வாக்­கையும் பயன்­ப­டுத்த வேண்­டி­யி­ருந்­தது. ஆலோ­சனை நடத்தும் செயன்­மு­றை­க­ளுக்கு அர­சாங்­கத்­தினால் ஒதுக்­கீடு செய்­யப்­பட்ட வளங்­களும் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­ட­வை­யா­கவே இருந்­தன. ஆனால், பொது­மக்கள் பிர­தி­நி­தித்­துவக் குழுவின் உறுப்­பி­னர்­க­ளாக நிய­மிக்­கப்­பட்­டி­ருந்­த­வர்­களின் அக்­க­றை­யு­ட­னான ஈடு­பாடு நம்­ப­க­மா­ன­தொரு ஆலோ­சனை கலப்புச் செயன்­மு­றைகள் இடம்­பெ­று­வதை உறுதி செய்­தது.

மக்­களை தவ­றாக வழி­ந­டத்தல்

பொது­மக்­க­ளு­ட­னான ஆலோ­சனை கலப்புச் செயன்­மு­றை­களின் முடிவில் லால் விஜே­நா­யக்க தலை­மை­யி­லான அக்­கு­ழு­வினால் தயா­ரிக்­கப்­பட்ட 200க்கும் அதி­க­மான பக்­கங்­களைக் கொண்ட அறிக்கை மிகவும் எளி­மை­யா­கவும் தெளி­வா­கவும் எழு­தப்­பட்­டி­ருந்­தது என்­பது குறிப்­பி­டத்­தக்­க­தாகும். சட்ட சொற்­தொ­கு­தி­களைப் படிப்­பதில் நேரத்தைச் செல­வ­ழிக்க விரும்­பா­த­வர்­க­ளினால் விளங்கிக் கொள்­ளப்­ப­டக்­கூ­டி­ய­தாக அறிக்கை அமைந்­தி­ருக்­கி­றது. நாட்டு மக்கள் மத்­தியில் பிளவை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்கும் சர்ச்­சைக்­கு­ரிய அர­சியல் விவ­கா­ரங்கள் மீதான விவா­தத்தின் பிர­தான ஆய்­வுக்­கூ­று­களை அவ்­வ­றிக்கை விளக்­க­மாக வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. வெளிப்­ப­டைத்­தன்­மையை உறுதி செய்­வதில் இருந்த அக்­கறை கார­ண­மாக பொது மக்கள் பிர­தி­நி­தித்­துவக் குழுவின் உறுப்­பி­னர்கள் ஒவ்­வொரு விவ­காரம் தொடர்­பிலும் எத்­த­கைய சிந்­த­னையைக் கொண்­டி­ருந்­தார்கள் என்­பதை அறிக்கை புலப்­ப­டுத்­து­கின்­றது. குழுவின் உறுப்­பி­னர்­க­ளினால் தனி­யான விதப்­பு­ரையைச் செய்ய முடி­யாமல் போன சந்­தர்ப்­பங்­களில் அவர்கள் பல்­வே­று­வ­கைப்­பட்ட விதப்­பு­ரை­களைச் செய்­தி­ருக்­கி­றார்கள். அவை ஒன்­றுடன் ஒன்று முரண்­ப­டு­வ­தாக இருக்­கின்­றன. சர்ச்­சைக்­கு­ரிய விவ­கா­ரங்கள் தொடர்பில் மக்கள் மட்­டத்தில் இருக்­கின்ற பல்­வே­று­வ­கை­யான சிந்­த­னை­களைப் பற்­றிய ஒரு விளக்க உணர்வை அர­சி­ய­ல­மைப்பை வரை­யப்­போ­கின்ற பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு கொடுப்­பதே பொது­மக்கள் பிர­தி­நி­தித்­துவக் குழுவின் இலக்­காகும்.

இத்­த­கை­ய­தொரு சூழ்­நி­லை­யிலே, பொது­மக்கள் பிரதிநிதித்­துவக் குழுவின் அறிக்­கையில் உள்ள விதப்­பு­ரை­களில் சில­வற்றை புதிய அர­சி­ய­ல­மைப்பில் உள்­ள­டக்­கப்­படப் போகின்ற அம்­சங்­க­ளாக கூட்டு எதி­ர­ணியின் அர­சி­யல்­வா­திகள் நாட்டு மக்­க­ளுக்கு காட்ட முற்­ப­டு­வது மிகவும் துர­திர்­ஷ­ட­வ­ச­மா­ன­தாகும். உதா­ர­ண­மாக, அர­சி­ய­ல­மைப்பில் பெளத்த மதத்­துக்கு வழங்­கப்­பட்­டுள்ள அதி முதன்மை அந்­தஸ்து, அல்­லது அரசின் ஒற்­றை­யாட்சித் தன்மை அல்­லது வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களின் இணைப்பு போன்ற சர்ச்­சைக்­கு­ரிய விவ­கா­ரங்­களில் பொது­மக்கள் பிர­தி­நி­தித்­துவக் குழுவின் உறுப்­பி­னர்­க­ளினால் பொது­வான விதப்­பு­ரை­யொன்றை செய்­வ­தற்கு இணங்க முடி­யாமல் போன கார­ணத்தால், அவர்கள் பல்­வே­று­வ­கைப்­பட்ட விதப்­பு­ரை­களை முன்­வைத்­தி­ருக்­கி­றார்கள். குழுவின் முன்­னி­லையில் ஆஜ­ராகி யோச­னை­களைச் சமர்ப்­பித்­த­வர்கள் கூறிய வேறு­பட்ட கருத்­துக்­களும் அறிக்­கையில் தரப்­பட்­டி­ருக்­கின்­றன. குழுவின் உறுப்­பி­னர்கள் தங்­களால் ஒரு­மித்து இணக்­க­மான முறையில் ஒரு­த­னி­யான விதப்­பு­ரையை செய்ய முடி­யாமல் போன விட­யங்­களில் அவர்கள் ஒன்­றுக்கும் அதி­க­மான விதப்­பு­ரை­களைச் செய்­தி­ருக்­கி­றார்கள். குறிப்­பிட்ட விதப்­பு­ரை­களை ஆத­ரித்­த­வர்­களின் பெயர்­களும் அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளன. அறிக்­கையில் இருந்தும் அதில் முன்­வைக்­கப்­பட்­டுள்ள விதப்­பு­ரை­களில் இருந்தும் விருப்­ப­மா­ன­வற்றை அல்­லது அவற்றை விடவும் முற்­றிலும் வேறு­பட்­ட­வற்றை தெரிவு செய்­து­கொள்­வ­தற்­கான பொறுப்பை பொது­மக்கள் பிரதி நிதித்­து­வக்­குழு அர­சி­ய­ல­மைப்பை இறு­தியில் வரையப் போகின்­ற­வர்­க­ளான பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளி­டமே ஒப்­ப­டைத்­தி­ருக்­கி­றது.

கூட்டு எதி­ர­ணியின் சில உறுப்­பி­னர்கள் பொது­மக்கள் பிர­தி­நி­தித்­துவக் குழுவின் அறிக்­கையை தவ­றாக வியாக்­கி­யா­னப்­ப­டுத்­து­வதன் மூல­மாக பண்­பா­டில்­லாத முறையில் நடந்­து­கொள்­வதைக் காணக்­கூ­டி­ய­தா­க­வு­முள்­ளது. அர­சி­ய­ல­மைப்பில் இருந்து பெளத்த மதம் பற்­றிய குறிப்பை அர­சாங்கம் அகற்­றப்­போ­கின்­றது என்றும் ஒற்­றை­யாட்­சியை இல்­லாமல் செய்­வ­துடன் பொது­மக்கள் பிர­தி­நி­தித்­துவக் குழுவின் விதப்­பு­ரை­களின் அடிப்­ப­டையில் வடக்கு மாகா­ணத்­தையும் கிழக்கு மாகா­ணத்­தையும் இணைக்­கப்­போ­கின்­றது என்றும் இந்த கூட்டு எதி­ரணி உறுப்­பி­னர்கள் கூறித் திரி­கி­றார்கள். பொது­மக்­க­ளி­ட­மி­ருந்து கிடைக்­கப்­பெற்ற யோச­னை­களின் அடிப்­ப­டையில் குழுவின் உறுப்­பி­னர்­களில் சிலர் அத்­த­கைய விதப்­பு­ரை­களைச் செய்­தி­ருக்­கி­றார்கள் என்­கின்ற அதே­வேளை, குழு பொதுப்­ப­டை­யாக அல்­லது அதன் உறுப்­பி­னர்­களில் பெரும்­பான்­மை­யா­ன­வர்கள் அத்­த­கைய விதப்­பு­ரை­களைச் செய்­தி­ருக்­கி­றார்கள் என்று கூறு­வது சரி­யா­ன­தல்ல. இது பொது­மக்கள் பிர­தி­நி­தித்­துவக் குழுவின் பெரும்­பான்மை நிலைப்­பாடும் அல்ல. அர­சி­ய­ல­மைப்பில் ஏற்­க­னவே இருக்­கின்ற ஏற்­பா­டு­க­ளுக்கும் செய்­யப்­ப­ட­வேண்­டிய மாற்­றங்­க­ளுக்கும் இடைப்­பட்­ட­தான ஒரு நடுத்­த­ர­மான நிலைப்­பாட்­டையே குழு கடைப்­பி­டித்­தி­ருக்­கி­றது.

சரி­யான நேரம்

பொது­மக்கள் பிர­தி­நி­தித்­துவக் குழுவின் அறிக்­கையை தவ­றான முறையில் வியாக்­கி­யானம் செய்து கூட்டு எதி­ரணி முன்­னெ­டுத்துக் கொண்­டி­ருக்­கின்ற எதிர்ப்­பி­ர­சா­ரங்­க­ளுக்கு பதி­ல­டியைக் கொடுப்­பதில் அர­சாங்கம் தாமதம் காட்­டு­வதன் கார­ணத்தால், அந்­தக்­கு­ழுவின் அவ­தா­னிப்­புக்­களை எந்­த­வ­கை­யிலும் அர­சாங்கம் கருத்­தி­லெ­டுக்­காமல் போகலாம் என்ற விசனம் பல வட்­டா­ரங்­களில் தோன்­று­வ­தற்கு வாய்ப்பு ஏற்­பட்­டி­ருக்­கி­றது. பொது­மக்கள் பிர­தி­நி­தித்­து­வக்­கு­ழுவின் அறிக்­கையை அடிப்­ப­டை­யாகக் கொண்டு மக்­க­ளுக்கு அறி­வூட்­டு­வ­தற்­கான செயற்­பாடு எதையும் அர­சாங்கம் இது­வரை முன்­னெ­டுக்­க­வில்லை. நாட்டு மக்கள் வேறு­பட்ட அபிப்­பி­ரா­யங்­களைக் கொண்­டி­ருக்­கின்­றதும், ஆனால் அதே­வேளை பரஸ்­பரம் ஏற்­பு­டைய தீர்­வொன்றைக் காண­வேண்­டிய தேவையைக் கொண்­ட­து­மான (ஆட்­சி­முறை­யுடன் சம்­பந்­தப்­பட்ட) சர்ச்­சைக்­கு­ரிய விவ­கா­ரங்கள் தொடர்பில் மக்­க­ளுக்கு அறி­வூட்­டு­வ­தற்கு கிடைத்­தி­ருக்­கக்­கூ­டிய வாய்ப்பு தவ­ற­வி­டப்­ப­டக்­கூடும். பொது­மக்கள் பிர­தி­நி­தித்­துவக் குழுவின் அறிக்கை இனங்­க­ளுக்­கி­டை­யி­லான உற­வு­களில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்தும் விவ­கா­ரங்­களை பற்­றி­யது மாத்­தி­ர­மல்ல, பெண்­க­ளுக்­கான விசேட இட ஒதுக்­கீ­டுகள், பாலியல், சிறு­பான்­மை­யி­னரின் உரி­மைகள் மற்றும் ஊன­முற்­ற­வர்­களின் உரி­மைகள் போன்ற ஏனைய சர்ச்­சைக்­கு­ரிய விவ­கா­ரங்­க­ளு­டனும் சம்­பந்­தப்­பட்­ட­தாகும். தாராண்மைப் போக்கில் இருந்து தாராண்­மை­யற்ற போக்கு வரை­யான அந்த விவ­கா­ரங்கள் தொடர்பில் இலங்கைச் சமு­தா­யத்தின் தற்­போ­தைய சிந்­தனைப் போக்கை அகப்­ப­டுத்­தி­ய­தாக விளங்கும் பொது­மக்கள் பிர­தி­நி­தித்­து­வக்­கு­ழுவின் அறிக்கை மக்­க­ளுக்கு அறி­வூட்­டு­வ­தற்­கான ஒரு உன்­ன­த­மான கரு­வி­யாகும்.

எமது அர­சியல் சமு­தா­யத்தில் இருக்­கக்­கூடிய சில பிரத்தியேகமான தனி­ந­பர்கள் இந்த பணியை முன்­னெ­டுக்க முடியும். கடந்­த­வாரம் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க சமஷ்­டி­மு­றை­யி­னதும் மத­சார்­பற்ற ஆட்­சி­மு­றை­யி­னதும் பண்­புகள் தொடர்பில் மக்­க­ளுக்கு அறி­வூட்­ட­வேண்­டிய தேவையை உணர்ந்­த­வ­ராக கருத்து வெளி­யிட்­டதைக் காணக்­கூ­டி­ய­தாக இருந்­தது. அவ­ரது தலை­மை­யி­லான தேசிய ஐக்­கியம் மற்றும் நல்­லி­ணக்க அலு­வ­ல­கத்­தினால் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த கருத்­த­ரங்கு ஒன்­றி­லேயே அவர் அதைச்­செய்தார். மேடையில் திரு­மதி குமா­ர­துங்­க­வுடன் தேசிய சக­வாழ்வு அமைச்சர் மனோ ­கணே­சனும் புதிய அர­சி­ய­ல­மைப்பை வரை­வ­தற்­கான பொறுப்பு ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்ள பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கலா­நிதி ஜெயம்­பதி விக்­கி­ர­ம­ரத்­னவும் அருகே அமர்ந்­தி­ருந்­தனர். அரைச் சமஷ்டி கட்­ட­மைப்பைக் கொண்ட தென்­னா­பி­ரிக்கா மற்றும் சமஷ்டி கட்­ட­மைப்பைக் கொண்ட நைஜீ­ரியா போன்று இன­ரீ­தி­யாக பிள­வு­பட்­டுள்ள சமு­தா­யங்­களில் பிரச்­சி­னை­களைத் தீர்த்­து­வைப்­ப­தற்­கான அதி­கா­ரப்­ப­கிர்­வுக்கு சமஷ்­டி­மு­றையை நாடு­வதில் இருக்­கக்­கூடிய நன்­மைகள் பற்றி முன்னாள் ஜனா­தி­பதி கருத்துக் கூறினார். இந்­தி­யாவை ஒரு உதா­ர­ண­மாகக் காட்டி மத­சார்­பற்ற ஆட்சி முறையின் பண்பு குறித்தும் கூட அவர் பேசினார். கருத்­த­ரங்கில் கேள்வி – பதில் அமர்வு மிகவும் துடிப்­பா­ன­தாக இருந்­த­தே­யன்றி, குரோத உணர்­வு­டை­ய­தா­கவோ அல்­லது வெறுப்­பூட்­டு­வ­தா­கவோ அமைந்­தி­ருக்­க­வில்லை. அதை அடிப்­ப­டை­யாகக் கொண்டு நோக்கும் போது அங்கு கூடி­யி­ருந்த சபை­யினர் திரு­மதி குமா­ர­துங்­கவின் கருத்­துக்­களை ஏற்­றுக்­கொண்­ட­தா­கவே தோன்­றி­யது.

அடுத்த முனை­யிலே, கூட்டு எதி­ர­ணியின் கடுந்­தே­சி­ய­வாத தலை­வ­ரான விமல் வீர­வன்ச அர­சாங்­கத்தின் உத்­தேச புதிய அர­சி­ய­ல­மைப்­பினால் நாட்­டுக்கு ஏற்­படப் போகின்ற ஆபத்­துக்கள் குறித்து எச்­ச­ரிக்கை செய்­வ­தற்­காக முக்­கி­ய­மான பெளத்த மதத்­த­லைவர் ஒரு­வரை சந்­தித்த போது திட்டு வாங்­கி­ய­தாகச் செய்­திகள் வெளி­யா­கி­யி­ருக்­கின்­றன. புதிய அர­சி­ய­ல­மைப்பு நாட்டின் ஒற்­றை­யாட்சி முறைக்கு ஆபத்தை ஏற்­ப­டுத்தும் என்று வீர­வன்ச மல்­வத்தை பீடத்தின் மகா­நா­யக்­க­ரான அதி­வண.திப்­பட்­டு­வாவே ஸ்ரீ சித்­தார்த்த சுமங்­கள தேர­ரிடம் கூறி­ய­போது, நாட்டுப் பிரி­வி­னையை ஊக்­கு­விக்கக் கூடிய எந்­த­வொரு யோச­னையும் அர­சி­ய­ல­மைப்பில் உள்­ள­டக்­கப்­ப­ட­மாட்­டாது என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் தன்­னிடம் உறு­தி­ய­ளித்­த­தாக மகா­நா­யக்கர் தெரி­யப்­ப­டுத்­தினார் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. மக்­களின் அங்­கீ­கா­ரத்தைப் பெறு­வ­தற்­காக புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பொன்று நடத்­தப்­ப­டு­மென்­பதால் வீணாக அச்­ச­ம­டைய வேண்­டி­ய­தில்லை என்று வீர­வன்­ச­வி­டமும் அவரின் தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் ஏனைய உறுப்­பி­னர்­க­ளி­டமும் மல்­வத்தை மகா­நா­யக்கர் கூறி­யி­ருக்­கிறார்.

சரி­யா­ன­மு­றையில் சிந்­திக்­கின்ற மக்­களும் தார்­மீகத் தலை­வர்­களும் தீர்­வொன்றைக் காண­வேண்­டு­மென்­பதில் அக்­கறை கொண்­ட­வர்­க­ளாக இருக்­கி­றார்கள் என்­ப­தற்­கான அறி­கு­றிகள் தென்­ப­டு­கின்­றன. சரி­யான செய்­தியை மக்­க­ளிடம் எடுத்துச் செல்­வ­தற்­கான சரி­யா­ன­த­ருணம் இதுவே. பிரிட்டிஷ் கால­னித்­துவ ஆட்­சியில் இருந்து சுதந்­திரம் பெற்ற நாட்­களில் இருந்தே தொடர்ந்து கொண்டிருக்கின்ற அரசியல் பிரச்சினைகள் எளிதாக அகன்று விடப்போவதில்லை என்பதையும் அவற்றுக்குத் தீர்வு காண்ப­தற்கு பாடுபடவேண்டும் என்பதையும் அதற்கான சிறந்த நேரம் இது என்பதையும் அவர்கள் அறிவார்கள்.

http://epaper.virakesari.lk:8080/home/index?editionId=13&editionDate=23/09/2016

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.