Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"எழுக தமிழ்' ஏற்படுத்தியிருக்கும் சங்கடங்கள்

Featured Replies

showImageInStory?imageid=299519:mr

 

"எழுக தமிழ்'
ஏற்படுத்தியிருக்கும் சங்கடங்கள்
செல்­வ­ரட்னம் சிறி­தரன்

'எழுக தமிழ்' பேரணி, எதிர்­பார்த்­ததைப் போலவே பல எதிர் உணர்­வ­லை­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. 

இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சி­யா­னது. இரண்டு முரண்­பட்ட கருத்­துக்­களைக் கொண்­டி­ருக்­கின்­றன என்­பதை இந்தப் பேரணி வெளிப்­படச் செய்­தி­ருக்­கின்­றது. அதே­போன்று தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பும் மக்கள் அணி திரள்­கின்ற விட­யத்தில் இரண்டு முரண்­பட்ட கருத்­துக்­களைக் கொண்­டி­ருப்­பதை இந்தப் பேரணி வெளிக் கொணர்ந்­தி­ருக்கின்றது. 

'எழுக தமிழ்' பேர­ணி­யா­னது, தமிழ் மக்கள் பேர­வையின் பய­ணத்தில் கிடைத்­துள்ள மூன்­றா­வது வெற்­றி­க­ர­மான நிகழ்­வாகக் கரு­தப்­ப­டு­கின்­றது.  

பலத்த எதிர்ப்­பு­க­ளுக்கு மத்­தியில் தோற்றம் பெற்ற தமிழ் மக்கள் பேரவை, முதல் நட­வ­டிக்­கை­யாக தமிழ் மக்­களின் அர­சியல் அபி­லா­ஷை­களை உள்­ள­டக்­கி­ய­தாக, அர­சியல் தீர்­வுக்­கான முன் யோச­னை­களை, ஒரு வரை­பாக முன்­வைத்­தது. அதனை இன்­னுமே தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலை­மையும், தமி­ழ­ரசுக் கட்­சியின் தலை­மையும் ஏற்­றுக்­கொள்ளத் தயா­ராக இல்லை.

தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­பினால், அதன் அங்­கத்­துவக் கட்­சி­களின் உடன்­பாட்­டுடன் முன்­வைக்­கப்­பட்ட கடந்த பொதுத் தேர்­த­லுக்­கான கொள்கைப் பிர­க­ட­னத்தை உள்­ள­டக்­கிய வகை­யி­லேயே தமிழ் மக்கள் பேர­வையின் அர­சியல் தீர்­வுக்­கான வரைவு தயா­ரிக்­கப்­பட்­டி­ருந்­தது. 

அர­சியல் தீர்வு விட­யத்தில், 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்­தலின் போது முன்­வைக்­கப்­பட்ட தேர்தல் கொள்கைப் பிர­க­ட­னத்­தையே தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பும் தமி­ழ­ரசுக் கட்­சியும், அர­சி­யல் தீர்­வுக்­கான தமது நிலைப்­பாடு என்று அவற்றின் தலைமை வலி­யு­றுத்தி வரு­கின்றது. 

அப்­படி இருந்­தும்­கூட, அந்தத் தேர்தல் பிர­க­ட­னத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்டு தமிழ் மக்கள் பேரவை உரு­வாக்­கிய அர­சியல் தீர்­வுக்­கான வரைவை அந்தத் தலைமை ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. 

அர­சியல் தீர்­வுக்­கான வரை­வை­ய­டுத்து, மட்­டக்­க­ளப்பில் கலா­சார விழா ஒன்றை ஒழுங்கு செய்து அத­னையும் வெற்­றி­க­ர­மாக தமிழ் மக்கள் பேரவை நடத்தி முடித்­தி­ருந்­தது. இது அந்தப் பேர­வைக்குக் கிடைத்த இரண்­டா­வது வெற்­றி­யாகக் குறிப்­பி­டப்­ப­டு­கின்­றது. 

கலை கலா­சா­ரங்­களைப் பாது­காப்­ப­துடன். இதன் ஊடாக வடக்­கையும் கிழக்­கையும் மேலும் இறுக்­க­மாக ஒன்­றி­ணைப்­பதே இந்தக் கலா­சார விழாவின் நோக்கம் என தமிழ் மக்கள் பேரவை கூறி­யி­ருப்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இந்த கலா­சார விழா­வுக்கு அடுத்­த­தாக, தமிழ் மக்கள் பேர­வையின் 'எழுக தமிழ்' பேரணி வெற்­றி­க­ர­மாக நடந்­தே­றி­யி­ருக்­கின்­றது. 

இந்தப் பேர­ணிக்கு ஆத­ர­வ­ளிக்க வேண்டும் என தமிழ் மக்கள் பேர­வை­யினர் விடுத்த வேண்­டு­கோளை தமி­ழ­ரசுக் கட்சி நிரா­க­ரித்­து­விட்­டது. அர­சாங்­கத்­துடன் இணக்­க­மாகச் செயற்­பட்டு பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்­கான முயற்­சி­களில் ஈடு­பட்­டி­ருக்­கின்ற நிலையில், அர­சாங்­கத்­திற்கு சங்­க­டத்­தையும், அர­சியல் ரீதி­யாக நெருக்­க­டி­க­ளையும் ஏற்­ப­டுத்தக் கூடிய நட­வ­டிக்­கை­களில் ஈடு­படக் கூடாது. இந்தச் சந்­தர்ப்­பத்தில் பேரணி நடத்­தப்­படக் கூடாது என தெரி­வித்து, பேர­ணியில் நாங்கள் கலந்து கொள்­ள­மாட்டோம் என தமி­ழ­ரசுக் கட்­சியின் தலைமை கூறி­விட்­டது. 

இதற்கு முன்­ன­தாக தமிழ் மக்கள் பேரவை பேர­ணி­யொன்றை நடத்தப் போவ­தாக விடுத்­தி­ருந்த அறி­வித்தல் பற்­றிய தக­வலை அறிந்­ததும், அதற்கு எதி­ராக அறிக்­கை­யொன்றை விடுத்து, அந்தப் பேர­ணியில் மக்கள் கலந்து கொள்ளக் கூடாது என்று கோரிக்கை விடு­வ­தற்கு தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலைமை முனைந்­தி­ருந்­த­தா­கவும், பின்னர் அவ்­வாறு அறிக்கை வெளி­யிடும் ஆலோ­சனை கைவி­டப்­பட்­ட­தா­கவும் தக­வல்கள் கசிந்­தி­ருந்­தன.

இத்­த­கைய ஒரு பின்­ன­ணி­யில்தான், 'எழுக தமிழ்' பேர­ணியில் யுத்­தத்­திற்குப் பின்னர் முதற் தட­வை­யாக பெரும் எண்­ணிக்­கையில் மக்கள் அணி­தி­ரண்டு யாழ் நகர வீதி­களில் நடந்து சென்று தமது கோரிக்­கை­களை விண் அதிர ஒலித்­தி­ருக்­கின்­றார்கள். 

இந்தப் பேர­ணியில் இணைந்து வந்து, யாழ் முற்­ற­வெளி மைதா­னத்தில் திரண்ட மக்கள் கூட்டம், வட­மா­காண சபையின் முத­ல­மைச்­ச­ராக மட்­டுமே நோக்­கப்­பட்டு வந்த விக்­னேஸ்­வ­ரனை, ஓர் அர­சியல் தலை­வ­ராக நோக்கி கோஷங்கள் எழுப்­பிய நிகழ்வும் இடம்­பெற்­றி­ருந்­தது. 

எழுக தமிழ் பேரணி

ஏற்­ப­டுத்­தி­யுள்ள சங்­க­டங்கள்

தமிழ் மக்கள் பேர­வையின் தோற்­றத்­தையே சகித்துக் கொள்ள முடி­யா­ம­லி­ருந்த தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் தiலை­மைக்கும், தமி­ழ­ரசுக் கட்­சியின் தலை­மைக்கும் இந்தப் பேர­ணியின் மூலம் பேரவை அடைந்­துள்ள வெற்­றி­யா­னது அர­சியல் ரீதி­யாகப் பெரும் சங்­க­டத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருப்­பதைத் தெளி­வாகக் காண முடி­கின்­றது.

இந்த சங்­கடம் இரண்டு வகைப்­பட்­டது. தமிழ் மக்­களின் ஏகோ­பித்த ஆத­ரவைப் பெற்­றுள்ள தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­பி­னு­டைய தலைமை தனது வழி­ந­டத்­தலில் 'எழுக தமிழ்' பேர­ணியைப் போன்று மக்­களை இது­வ­ரையில் எழுச்­சி­யுறச் செய்­த­தில்லை. இதே போன்று மக்­களை எழுச்சி கொண்­ட­வர்­க­ளாக அணி திரட்­டு­வ­தற்கு இனி­மே­லா­வது முடி­யுமா என்­பதும் கேள்­வி­யா­கவே தொக்கி நிற்­கின்­றது. 

அது மட்­டு­மல்ல. தமிழ் மக்கள் பேர­வையின் 'எழுக தமிழ்' செயற்­பா­டா­னது, தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் மீதும், தமி­ழ­ரசுக் கட்சி மீதும் மக்கள் கொண்­டி­ருந்த அர­சியல் ரீதி­யான ஆத­ர­வையும் அபி­மா­னத்­தையும் கரையச் செய்­து­வி­டுமோ என்ற நியா­ய­மான அர­சியல் அச்சம் சார்ந்த சங்­க­ட­மான நிலை­மையைத் தோற்­று­வித்­தி­ருப்­ப­தையும் உணர முடி­கின்­றது.

தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்புத் தலை­மையின் விருப்­பத்­திற்கு மாறா­கவே யாழ்ப்­பா­ணத்தில், வட­ப­குதி மக்கள் வேறு ஒரு தலை­மையின் கீழ் பெரும் எண்­ணிக்­கையில் அணி திரண்டு தமது உரி­மை­க­ளுக்­கா­கவும், தாங்கள் எதிர்­நோக்­கி­யுள்ள பிரச்­சி­னை­க­ளுக்­கா­கவும் குரல் கொடுத்­தி­ருக்­கின்­றார்கள். 

இது, தமிழ் மக்­களின் ஏகோ­பித்த ஆத­ரவில் பல­முள்­ளதோர் அர­சியல் சக்­தி­யாகத் தன்னைக் காட்டி வரு­கின்ற கூட்­ட­மைப்பின் தலை­மைக்கு அர­சாங்­கத்தின் முன்னால் ஓர் அர­சியல் ரீதி­யான சங்­க­டத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. 

தமிழ் மக்கள் பேர­வையின் இந்தப் பேர­ணி­யா­னது, எழுக தமிழ் என்ற மகு­டத்தின் கீழ் நடத்­தப்­பட்­டி­ருப்­ப­தனால், அது இன­வாத நோக்­கத்தைக் கொண்டு நடத்­தப்­பட்­ட­தா­கவும், பேரவை, இன­வா­தத்தை உள்­நோக்­க­மாகக் கொண்­டி­ருப்­ப­தா­கவும் கருத்­துக்கள் முன்­வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. இந்தக் கருத்­துக்கள் ஒரு குற்­றச்­சாட்­டா­கவே வைக்­கப்­பட்­டி­ருப்­ப­தையும் காண முடி­கின்­றது. 

பேர­ணியை வெற்­றி­க­ர­மாக நடத்தி முடித்­துள்ள போதிலும், அது குறித்து எழுந்­துள்ள எதிர்க்­க­ருத்­துக்கள் அல்­லது எதிர்­வி­னைகள் தமிழ் மக்கள் பேர­வை­யையும் சிறிது சங்­க­டத்­திற்கு உள்­ளாக்­கி­யி­ருப்­ப­தா­கவே தெரி­கின்­றது. 

'எழுக தமிழ்' பேர­ணியின் மூலம் வடக்கில் ஏற்­பட்­டுள்ள மக்கள் எழுச்­சி­யா­னது, தெற்கில் உள்ள இன­வாத மேலாண்­மை­யா­ளர்­க­ளுக்கு அர­சியல் ரீதி­யாக அச்­சத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருப்­பதை, பேரணி தொடர்பில் வெளி­யி­டப்­பட்­டுள்ள அர­சியல் கருத்­துக்­களின் மூலம் அறிய முடி­கின்­றது. 

அர­சியல் இல்­லாத அர­சியல்.......? 

தமிழ் மக்கள் பேர­வை­யா­னது சமூக அமைப்­புக்­க­ளையும், பொது அமைப்­புக்­க­ளையும், தொழிற்­சங்­கங்கள், பல்­க­லைக்­க­ழக சமூ­கத்­தையும், தமி­ழ­ரசுக் கட்­சியின் உப தலைவர் பேரா­சி­ரியர் சி.க.சிற்­றம்­பலம் மற்றும் ஈ.பி­.ஆர்­எல்.எவ்., புளொட் ஆகிய தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் பங்­காளிக் கட்­சி­க­ளுடன் தமிழ் தேசிய மக்கள் முன்­னணி ஆகிய அர­சியல் கட்­சி­க­ளையும் உள்­ள­டக்­கி­யதோர் அமைப்­பாகும்.

அதன் மூன்று இணைத்­த­லை­வர்­களில் ஒரு­வ­ரா­கவும் முக்­கி­ய­மா­ன­வ­ரா­கவும் வட­மா­காண முத­ல­மைச்சர் விக்­கினேஸ்­வரன் திகழ்­கின்றார். 

ஆயினும் தமிழ் மக்கள் பேர­வை­யா­னது, தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­புக்கு எதி­ரான ஓர் அர­சியல் அமைப்­பாக ஓர் அர­சியல் கட்­சி­யா­கவும், தமி­ழ­ரசுக் கட்­சியை வீழ்த்­து­வ­தற்­கான நோக்­கத்­துடன் உரு­வாக்­கப்­ப­டு­கின்­றதோர் அர­சியல் அமைப்­பா­கவும் ஆரம்­பத்தில் நோக்­கப்­பட்­டது. 

இத­னை­ய­டுத்து பலத்த கண்­ட­னங்­களும் மோச­மான விமர்­ச­னங்­களும் பேர­வைக்கு எதி­ரா­கவும், அதன் இணைத்­த­லை­வ­ரா­கிய வட­மா­காண முத­ல­மைச்சர் விக்­கினேஸ்­வ­ர­னுக்கு எதி­ரா­கவும் முன் வைக்­கப்­பட்­டி­ருந்­தன. 

ஆயினும் தமிழ் மக்கள் பேர­வை­யா­னது ஓர் அர­சியல் கட்­சி­யாக மாற்றம் பெற­மாட்­டாது என்ற உத்­த­ர­வா­தத்தை, உறு­தி­யான முறையில் வழங்கி, எதிர்ப்­பு­க­ளுக்கு மத்­தி­யிலும் அது தனது பணி­களை முன்­னெ­டுத்­தி­ருந்­தது. இந்த நிலை­யி­லேயே, பேர­வையின் ஏற்­பாட்டில் நடத்­தப்­பட்ட 'எழுக தமிழ்' பேர­ணியில் பெருந்­தி­ர­ளான மக்கள் கலந்து கொண்டு தமது உரி­மை­களைக் கோரி­யி­ருக்­கின்­றார்கள். 

தமிழ் மக்கள் பேரவை என்­பது ஓர் அர­சியல் கட்­சி­யல்ல. அது அர­சியல் கட்­சி­களை உள்­ள­டக்­கி­யி­ருந்­தா­லும்­கூட, மக்­களின் உரி­மைக்­காக, மக்­களை ஓர­ணியில் வைத்து, போராட்­டங்­களை ஓர் ஒழுங்­க­மைப்பில் முன்­னெ­டுப்­ப­தற்­கா­கவே, அது உரு­வாக்­கப்­பட்­டது என தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. 

ஓர் அர­சியல் கட்­சி­யாக அல்­லாமல் - ஆனால் சில அர­சியல் கட்­சி­களை உள்­ள­டக்கிக் கொண்டு, அர­சியல் செயற்­பாட்டை தமிழ் மக்கள் பேரவை முன்­னெ­டுத்­தி­ருக்­கின்­றது. இதனை, கட்சி அர­சியல் ரீதியில் நோக்­கு­வதன் கார­ண­மா­கவே பல்­வேறு சங்­க­டங்­களும் அர­சியல் ரீதி­யான அச்­சங்­களும் தோன்­றி­யி­ருக்­கின்­றன என கருத இட­முண்டு. ஆயினும் இந்த அர­சியல் அடை­யா­ள­மில்­லாத அர­சியற் செயற்­பாடு, பல­ரையும் சங்­க­டத்­திற்கும் கலக்­கத்­திற்கும் உள்­ளா­க்கி­யி­ருக்­கின்­றது. 

தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­பினால், இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியின் வீட்டுச் சின்­னத்தில் பொதுத் தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்­காக முன்­வைக்­கப்­பட்ட தேர்தல் பிர­க­ட­னத்தில் குறிப்­பி­டப்­பட்ட முக்­கி­ய­மான விட­யங்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்ட கோரிக்­கை­களே முன் வைக்­கப்­பட்­டி­ருந்­தன. 

புதிய விட­யங்கள் எது­வு­மில்லை

இந்தப் பேர­ணியின் நோக்­கத்­திலும், பேர­ணியின் இறு­தியில் நடை­பெற்ற பொதுக் கூட்­டத்தில் முத­ல­மைச்சர் ஆற்­றிய முக்­கிய உரை­யிலும் புதிய விட­யங்கள் எது­வுமே கூறப்­ப­ட­வில்லை. எல்­லோ­ருக்கும் தெரிந்த விட­யங்­க­ளையே – அவை சம்­பந்­தப்­பட்ட கோரிக்­கை­களே அவற்றில் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தன. 

இந்தக் கூட்­டத்தில் உரை­யாற்­றிய பாராளு­மன்ற உறுப்­பினர் சித்­தார்த்தன், முன்னாள் பாராளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான சுரேஷ் பிரே­மச்­சந்­திரன், பொன்­னம்­பலம் கஜேந்­தி­ர­குமார் போன்­ற­வர்­களும் புதிய விட­யங்கள் எதையும் பேச­வில்லை. அர­சியல் ரீதி­யாகக் கூட தீவி­ர­மான கருத்­துக்­களை அவர்கள் வெளி­யி­ட­வில்லை.

வடக்கு, கிழக்கு இணைந்த தாயகப் பிர­தே­சத்தில் அதி­காரப் பகிர்­வுடன் கூடிய சுய­நிர்­ணய உரி­மையின் அடிப்­ப­டையில் அர­சியல் தீர்வு வேண்டும். மக்கள் எதிர்நோக்­கி­யுள்ள இரா­ணு­வத்தின் பிர­சன்னம், இரா­ணு­வத்தின் பிடியில் உள்ள காணிகள் விடு­விப்பு, அர­சியல் கைதி­களின் விடு­தலை, காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் தொடர்­பான பொறுப்புக் கூறல் உள்­ளிட்ட விட­யங்­களே இந்தப் பேர­ணியில் முக்­கி­யத்­துவம் பெற்­றி­ருந்­தன.

தமிழ் மக்­க­ளுக்­கு­ரிய உரி­மை­களைத் தர­வேண்டும். அவர்கள் எதிர்­நோக்­கி­யுள்ள பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணப்­பட வேண்டும். அதற்கு அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். தமிழ் மக்­களின் நம்­பிக்­கைக்குப் பாத்­தி­ர­மான முறையில் புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­பட வேண்டும் என்ற கோரிக்­கைகள் எந்த வகையில் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­பையோ அல்­லது தமி­ழ­ரசுக் கட்­சிi­யையோ அர­சியல் ரீதி­யாகப் பாதிக்கும் என்­பது தெரி­ய­வில்லை. 

மக்கள் வீதியில் இறங்கி தமது தேவை­களை, பிரச்­சி­னை­களை வெளிப்­ப­டுத்தி, அர­சியல் உரி­மை­களைத் தாருங்கள் எனக் கோரு­வது அர­சாங்கம் முன்­னெ­டுத்­துள்ள நல்­லி­ணக்க முயற்­சி­க­ளுக்குப் பாத­க­மாக அமையும் என்று எவ்­வாறு கூற முடியும்? 

அர­சாங்கம் எடுத்­துள்ள நட­வ­டிக்­கை­களில் வேகம் போதாது. பல முக்­கிய பிரச்­சி­னைகள் இன்னும் தீர்க்­கப்­ப­ட­வில்லை என்­ப­தையே மக்கள் பேர­ணியில் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்­றார்கள். 

அர­சாங்­கம் ­செய்­த­வற்றை,  நிறை­வேற்­றி­யுள்ள விட­யங்­களைச் செய்­ய­வில்லை. தீர்க்­கப்­பட்ட பிரச்­சி­னை­களைத் தீர்க்­க­வில்லை என மக்கள் வீதி­களில் இறங்கி அடா­வ­டித்­த­ன­மாக பேரணி நடத்­தி­யி­ருந்தால், அது அர­சாங்­கத்தின் நல்­லி­ணக்க முயற்­சி­க­ளுக்கும், பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்கு அர­சாங்கம் முன்­னெ­டுத்­துள்ள நட­வ­டிக்­கை­க­ளுக்­கும் ­குந்­தகம் எற்­ப­டுத்தக் கூடும் என கூறலாம். குற்றம் சுமத்­தலாம். ஆனால் அந்த வகையில் இந்தப் பேர­ணியில் நடை­பெ­ற­வில்­லையே. 

கூர்மை பெற்­றுள்ள

அர­சியல் ஆதங்கம்

அது மட்­டு­மல்ல. அர­சாங்­கத்­துடன் இணைந்து

செயற்­பட்டு, பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்

­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­தி­ருப்­ப­தாகக் கூறு­கின்ற தமி;ழ்த்தேசிய கூட்­ட­மைப்பின் தலை­மையின் செயல்­வேகம் போதாது

என்ற உணர்வு பாதிக்­கப்­பட்ட மக்கள் மத்­தியில் கூர்மை அடைந்­தி­ருக்­கின்­றது. 

தங்­க­ளு­டைய ஏமாற்றம், கவலை, கரி­சனை என்­ப­வற்றை தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலை­மைக்கோ, தலை­வர்­க­ளுக்கோ உரிய தளத்தில் பாதிக்­கப்­பட்ட மக்­களின் மனச்­சு­மைகள் குறை­யத்­தக்க வகையில் எடுத்துக் கூறு­வ­தற்­கான சந்­தர்ப்பம் கிடைக்­க­வில்லை. வழங்­கப்­ப­ட­வில்லை என்­பது யதார்த்தம். 

பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வைப் பெற்றுத் தரும் என்று ஐ.நா.மன்­றத்தின் மீது மக்கள் அதிக நம்­பிக்கை கொண்­டி­ருந்­தார்கள். ஆனால்,

ஐ.நா. செய­லாளர் நாயகம் வட­ப­கு­திக்கு வந்­த­போது, அவ­ரு­டைய முன்­னி­லையில் தமது உள்ளக் குமு­றல்­களை முன்­வைக்க முடி­யாமல் போனது, அந்த மக்கள் மனங்­களில் பெரிய பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. இத்­த­கைய வாய்ப்பு கிடைக்கும் அது நடை­பெற வேண்டும் என்று மக்கள் எதிர்­பார்ப்­பது நியா­ய­மான எதிர்­பார்ப்­பா­க­மாட்­டாது என்­பதை மறுப்­ப­தற்­கில்லை.

ஆயினும் ஐ.நா.வும் சர்­வ­தே­சமும் தமிழ் மக்­க­ளு­டைய பிரச்­சி­னையில் அதிக அக்­கறை கொண்­டி­ருக்­கின்­றன. அவற்றின் ஆத­ரவு எமக்கு உண்டு. அதன் மூலம் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண முடியும் என்ற அதீத நம்­பிக்கை தமிழ் அர­சியல் தலை­வர்­க­ளினால், பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு ஊட்­டப்­பட்­டி­ருக்­கின்­றது. ஐ.நா. பிர­தி­நி­தி­களோ சர்­வ­தேச இரா­ஜ­தந்­தி­ரி­களோ தமது பிர­தே­சத்­திற்கு விஜயம் செய்­யும்­போது, அவர்­க­ளிடம் தமது மனத் தாக்­கங்­க­ளையும் ஆதங்­கங்­க­ளையும் வெளிப்­ப­டு­து­வ­தற்கு இந்த நம்­பிக்கை அவர்­களைத் தூண்­டி­யி­ருந்­தது என்றே கூற வேண்டும். 

ஆனால் அதற்­கான சந்­தர்ப்­பங்கள் அவர்­க­ளுக்கு முன்னாள் மனித உரி­மைகள் ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்­ளையின் விஜயம் தவிர்ந்த ஏனைய விஜ­யங்­க­ளின்­போது கிடைக்­க­வில்லை என்றே கூற வேண்டும்.

வெளித்­த­ரப்­பினர் மட­டு­மல்ல. தங்­களால் தெரிவு செய்­யப்­பட்­டுள்ள தமது அர­சியல் தலை­வர்­க­ளி­டம்­கூட அவர்கள் தமது உள்ளக் கவ­லை­களை கரி­ச­னை­களை வெளி­யி­டு­வ­தற்­கான சந்­தர்ப்பம் கிடைக்­காமல் மனதில் புழுங்­கிக்­கொண்­டி­ருக்­கின்­றார்கள். இந்த நிலை­யி­லேயே, அவர்கள் இந்தப் பேர­ணியில் கலந்து கொண்டு தமது உணர்­வு­களை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றார்கள். 

போராட்­டங்கள் மற்றும் பேர­ணி­களில் காணாமல்போனோரின் குடும்ப உற­வி­னர்கள், சிறைக்­கை­தி­களின் குடும்ப உற­வி­னர்­களே கூடு­த­லாகக் கலந்து கொள்­வார்கள் என்­பது வழ­மை­யாகும். ஆனால், இந்தப் பேர­ணியில் இவர்கள் மட்­டு­மல்­லாமல், இளைஞர் யுவ­திகள், குடும்­பஸ்­தர்கள் முதி­ய­வர்கள் என பல­த­ரப்­பட்டோர், ஆண்­களும் பெண்­க­ளு­மாகக் கலந்து கொண்­டி­ருந்­ததைக் காண முடிந்­தது. மொத்­தத்தில் இந்தப் பேர­ணி­யா­னது ஓர் இயல்­பான மக்கள் எழுச்­சி­யாக இடம்­பெற்­றி­ருந்­தது என்றால் அது மிகை­யா­காது.  

தென்­னி­லங்­கையின் உணர்­வுகள் 

தமிழ் மக்கள் பேர­வையின் 'எழுக தமிழ்' பேர­ணி­யா­னது, தென்­னி­லங்­கையின் தீவிர இன­வாத அர­சியல் போக்கைக் கொண்­டி­ருப்­ப­வர்­க­ளுக்கு வயிற்றில் புளியைக் கரைத்­து­விட்­டி­ருக்­கின்­றது. மித­வாத போக்கில் அர­சாங்­கத்­துடன் மென்­மை­யான அர­சியல் உறவைக் கொண்­டுள்ள தமிழ்த்;தேசிய கூட்­ட­மைப்­பையும், இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சி­யையும் மீறி வட­மா­கா­ணத்தில் மக்கள் வேறு ஒரு தலை­மையின் கீழ் குறிப்­பாக முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ரனின் தலை­மையில் எழுச்சி பெற்­றி­ருப்­பது அர­சியல் ரீதி­யாக அவர்­க­ளுக்கு புதிய அச்­சத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருப்­ப­தையே அவர்­க­ளு­டைய எதிர்­வினை கூற்­றுக்­களில் இருந்து உணர முடி­கின்­றது.

தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலை­வரும், எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மா­கிய சம்­பந்­த­னையும் மீறிய வகையில் வட­மா­காண முத­ல­மைச்சர் அர­சி­யலில் புத்­தூக்கம் பெறு­வ­தற்­கான அர­சியல் அடை­யா­ள­மா­கவே இந்தப் பேர­ணியும், அங்கு அவர் ஆற்­றிய உரையும் தென்­னி­லங்­கையின் தீவிர இன­வாத சக்­தி­க­ளினால் நோக்­கப்­ப­டு­கின்­றது. அதன் கார­ண­மா­கவே வட­மா­காண முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் இனவாதம் பேசியிருக்கின்றார். இனவாதத்தைத் தூண்டியிருக்கின்றார் என்ற குற்றச்சாட்டுக்களை அவர்கள் முன் வைத்திருக்கின்றார்கள். 

அது மட்டுமல்ல. இந்த மக்கள் எழுச்சி

யும், அவருiடைய தலைமையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ள நல்லிணக்க முயற்சிக ளுக்குப் பாதகமானது என்றும் அவர்கள் குற்

றம் சுமத்தியிருக்கின்றார்கள். மக்கள் தங்களு

டைய உரிமைகளுக்காகவே குரல் கொடுத் திருக்கின்றார்கள். உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என கேட்பது அரசாங்கத்தின் நல்லிணக்க முயற்சிகளுக்கு வேகமூட்டுவதற்கே அல்லா மல், அதற்கு இடையூறு செய்வதற்கல்ல. 

இனவாதத்திலேயே ஊறிவந்துள்ள தென்னி லங்கை அரசியல் சக்திகள் நியாயமான கோரிக்

கைகளுக்கான எழுச்சியை நோக்கி இனவாதத்

திற்கான எழுச்சி என சாடுவது நகைப்புக் குரியதாக இருக்கின்றது.

மொத்தத்தில் 'எழுக தமிழ்' பேரணியானது, வடபகுதி மக்களுடைய மனக்கவலைகள், தேவைகள், உரிமைக்கான கோரிக்கைகள் என்

பவற்றையே பிரதிபலித்திருக்கின்றது என்ற உண்மையை உணர்ந்து, அதற்கேற்ற வகை

யில் செயற்பட வேண்டியது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தமிரசுக் கட்சி மற்றும் தென்னி

லங்கை அரசியல் தலைமைகளின் பொறுப் பாகும். இந்தப் பொறுப்பு அரசாங்கத்திற்கும் உள்ளது. வடபகுதி மக்கள் தமது அரசியல் தலைமைகளில் காணப்படுகின்ற விரிசல்

களையே வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்காகச் செயற்படு கின்ற பொதுஅமைப்புக்களாயினும் சரி, பொது

சக்திகளாயினும் சரி, அரசியல் சக்திகளாயி னும் சரி அனைத்து சக்திகளும் ஓர் அணியில் இணைந்து செயற்பட வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து  தங்களுக்காகக் குரல் கொடு

க்க வேண்டும் என்ற விருப்பத்தையும் செய்தி யையுமே வடபகுதி மக்கள் எழுக தமிழ் பேரணி

யின் மூலம் தமிழ்த் தலைவர்களுக்கும், அர

சாங்கத்திற்கும், சர்வதேசத்திற்கும் கொடுத் திருக்கின்றார்கள். 

இதனைச் சரியாகப் புரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் தமிழ்த் தலைமைகள் உள்

ளிட்ட  சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் செயற்பட வேண்டியது இன்றைய காலத்தின் தேவையாகும். 

http://epaper.virakesari.lk:8080/home/index?editionId=13&editionDate=27/09/2016

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 27.9.2016 at 8:36 PM, நவீனன் said:

தமிழ் மக்­களின் ஏகோ­பித்த ஆத­ரவைப் பெற்­றுள்ள தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­பி­னு­டைய தலைமை தனது வழி­ந­டத்­தலில் 'எழுக தமிழ்' பேர­ணியைப் போன்று மக்­களை இது­வ­ரையில் எழுச்­சி­யுறச் செய்­த­தில்லை. இதே போன்று மக்­களை எழுச்சி கொண்­ட­வர்­க­ளாக அணி திரட்­டு­வ­தற்கு இனி­மே­லா­வது முடி­யுமா என்­பதும் கேள்­வி­யா­கவே தொக்கி நிற்­கின்­றது. 

அவையளின்ரை நோக்கமே எதிர்கட்சி தலைவர் பதவிதானே....கிடைச்சிட்டுது .....:cool:

On 27.9.2016 at 8:36 PM, நவீனன் said:

தமிழ் மக்கள் பேர­வையின் இந்தப் பேர­ணி­யா­னது, எழுக தமிழ் என்ற மகு­டத்தின் கீழ் நடத்­தப்­பட்­டி­ருப்­ப­தனால், அது இன­வாத நோக்­கத்தைக் கொண்டு நடத்­தப்­பட்­ட­தா­கவும், பேரவை, இன­வா­தத்தை உள்­நோக்­க­மாகக் கொண்­டி­ருப்­ப­தா­கவும் கருத்­துக்கள் முன்­வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. இந்தக் கருத்­துக்கள் ஒரு குற்­றச்­சாட்­டா­கவே வைக்­கப்­பட்­டி­ருப்­ப­தையும் காண முடி­கின்­றது. 

புத்த பிக்குகள் இனவாதம் கக்கி ஊர்வலங்கள் வரும் போது ஏன் இப்படியான குற்றச்சாட்டுக்கள் வரவில்லை?
ஏன்?
முன்னாள் சனாதிபதி அதி உத்தம மாண்புமிகு நிறைவேற்று அதிகாரம் கொண்ட காலஞ்சென்ற  ஜே.ஆர் ஜெயவர்த்தனா அவர்கள் பண்டா செல்வா ஒப்பந்தத்திற்கு எதிராக புத்தர் சிலையை தூக்கிக்கொண்டு பாதயாத்திரை போனதை என்னவென்று சொல்வது?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.