Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னைய தவைர்களின் திட்டங்களை மீள திறப்பவிழா செய்வது தற்போதைய அரசின் கொள்கையல்ல-ஜனாதிபதி

Featured Replies

முன்னாள் தலைவர்கள் ஆரம்பித்த செயற்திட்டங்களின் பெயர்ப்பலகைகளை அகற்றி அவ ற்றை மீள திறந்துவைப்பது தமது கொள்கை அல்லவென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
 
பொலன்னறுவை, திம்புலாகல, நுவரகல, சுகலாதேவிகம மாதிரிக் கிராமத்தை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறி யுள்ளார்.
 
தற்போதைய அரசாங்கம் புதிதாக எதனையும் செய்யாது தனது ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை திறந்துவைத்து மக்களை ஏமாற்றி வருவ தாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நேற்றைய தினம் இடம்பெற்ற கூட்டமொன்றில் குற்றம்சாட்டியிருந்தார்.
 
இந்த நிலையில் இன்று பொலன்னறுவையில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதற்கு பதிலளித்துள்ளார்.
 
அரசாங்கம் புதிதாக எதனையும் செய்யவில்லை என முன்னாள் தலைவர்கள் ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்தும் கருத்துக்களுக்கு ஓராண்டு காலமாக பதில் எதனையும் தாம் வழங்க வில்லை என சுட்டிக்காட்டிய அவர், மீண்டும் அவ்வாறான கருத்துக்கள் தெரிவி க்கப்படுவதனால்  அது தொடர்பில் பதில் அளிக்கத் தீர்மானித்ததாகவும் குறிப்பிட்டு ள்ளார்.
 
கடந்த அரசாங்கங்களால் ஆரம்பிக்கப்பட்டு, இடைநடுவில் நிறுத்தப்பட்ட திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து அவற்றை முன்னெடுத்துச் செல்வது அரசின் பொறுப்பாகும் எனவும் பணிகள் நிறைவடைந்த திட்டங்களை திறந்து வைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வரு வதாகவும் ஜனாதிபதி கூறினார்.
 
2016 உலக குடியிருப்புத் தினத்தின் முப்பதாவது ஆண்டு நிறைவையொட்டி 'அனைவருக்கும் புகலிடம்' தேசிய வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட சுகலாதேவிகம மாதிரிக் கிராமம் இன்று ஜனாதிபதியினால் மக்களிடம் கையளிக்கப்பட்டது.
 
நாட்டு மக்களை வறுமையிலிருந்து விடுவிக்கும் ஆண்டாக 2017 பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தன் பிரகாரம் வீடமைப்பு நிர்மாணங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் அடங்கிய முன்மொழிவுகளை நாளைசெவ்வாய்க்கிழமை அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்க உள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
 
கடந்த ஆண்டு மற்றும் இந்த ஆண்டை விடவும் வீடமைப்பு, நிர்மாணம் தொடர்பில் மாற்றம் ஏற்படுத்தும் ஆண்டாக 2017 ஐ மாற்றுவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அதற்கு அனைத்துத் தர ப்புகளினதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
 
நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் சமமான அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாக வும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
 
தலைவர்கள் தத்தமது பிரதேசங்களை மாத்திரம் அபிவிருத்தி செய்யும் நிகழ்ச்சி நிரலுக்குப் பதிலாக முழு நாட்டையும் ஒரே மாதிரி அபிவிருத்தி செய்வது தற்போதைய அரசின் நிகழ்ச்சி நிரலாகும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்தார்.
 
வீடமைப்பு, நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச, ராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க, பிரதி அமைச்சர் இந்திக பண்டாரநாயக்க, வடமத்திய மாகாண முதலமைச்சர் பேசல ஜயரத்ன மற்றும் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் செயலாளர் டபிள்யு.கே.கே. அத்துகோரல, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் உட்பட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.