Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பௌத்தத்திற்கு முன்னுரிமை சாதகமா? பாதகமா?

Featured Replies

பெளத்தத்திற்கு முன்னுரிமை சாதகமா? பாதகமா?

 

பௌத்த மதத்­துக்கு முன்­னு­ரிமை கொடுக்கும் விட­யத்தில் புதிய அர­சியல் சாசனம் ஏல­வே­யுள்ள அர­சியல் சாச­னத்­தி­லுள்­ள­வாறே பின்­பற்றும். அர­சியல் சாச­னத்தில் பெளத்த மதத்தை முதன்­மைப்­ப­டுத்தும் விட­யத்தில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு உள்­ளிட்ட சகல கட்­சி­களும் இணக்கம் தெரி­வித்­துள்­ளன.

 ஏனைய மதத்­த­லை­வர்­களும் இவ்­வி­வ­காரம் தொடர்பில் தமது பூரண ஆத­ரவை நல்க காத்­தி­ருக்­கின்­றார்கள். மேற்­படி கருத்தை பகி­ரங்­க­மா­கவும் வெளிப்­ப­டை­யா­கவும் தெரி­வித்­துள்ளார். பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க. பிர­த­மரின் இக்­க­ருத்­தா­னது ஏனைய மதத்­த­லை­வர்­களால் தெரி­விக்­கப்­படும் முக்­கிய செய்­தி­யா­கவும் தமிழ் மக்­களின் அர­சியல் உரி­மை­க­ளுக்­காக நீண்ட கால­மா­கவே போராடி வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை கொச்­சைப்­ப­டுத்தும் கருத்­தா­க­வுமே காணப்­ப­டு­கி­றது என கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒருவர் தனது விச­னத்தை தெரி­வித்­துள்ளார்.  

அண்­மையில் (9.10.2016) கொழும்பு கொலன்­னாவை விகாரையில் இடம்­பெற்­ற நிகழ்­வொன்றில் கலந்து கொண்டு உரை­யாற்­றிய பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, தனது உரையில்; பெளத்த மதத்தை முன்­னு­ரி­மைப்­ப­டுத்­து­வ­திலோ அதை பாது­காப்­பது தொடர்­பா­கவோ இந் நாட்டில் எவ்­வித பிரச்­சி­னையும் இல்லை.

 பாரா­ளு­மன்றில் அங்கம் வகிக்கும் த.தே.கூட்டமைப்பு உள்­ளிட்ட அனைத்து கட்­சி­களும் இந் நாட்டில் புதி­தாக உரு­வா­கி­வரும் அர­சியல் யாப்பில் பெளத்த மதத்­துக்கு முன்­னு­ரிமை வழங்கும் விட­யத்தில் தமது பூரண சம்­ம­தத்தை தெரி­வித்­துள்­ளன. இதன் பிர­காரம் அர­சியல் சாச­னத்தில் பெளத்த மதத்தை பாது­காக்கும் முன்­னு­ரிமை வழங்கும் உறுப்­பு­ரையை முன்­னைய அர­சியல் சாச­னத்தில் உள்­ள­வாறே முன்­கொண்டு செல்­லப்­படும்.  

இவ்­வி­ட­யத்தில் அர­சியல் கட்­சிகள் மாத்­தி­ர­மன்றி நாட்­டி­லுள்ள பிர­தான மதத்­த­லை­வர்­களில் ஒரு­வ­ரான, கத்­தோ­லிக்க கர்­தி­னால் மல்கம் ரஞ்சித் மற்றும் இந்து, இஸ்­லா­மிய தலை­வர்­களும் பெளத்த மதத்­துக்­கு­ரிய உறுப்­பு­ரையை பாது­காக்க வேண்­டு­மெனக் கூறி­யுள்­ளனர். ஏற்றும் கொண்­டுள்­ளனர் என கூறி­யி­ருப்­ப­துடன், நானும் ஜனா­தி­ப­தியும் பெளத்த மதத்தை வெறும் வார்த்­தை­ய­ளவில் பாது­காக்­காது செயற்­பாட்­ட­ள­விலும் பெளத்த மதத்தைப் பாது­காப்­போ­மென பிர­தமர் பெளத்­த­வா­திகள் முன் சூளு­ரைத்­துள்ளார்.

பிர­த­மரின் இக்­க­ருத்­தா­னது, மதம் சார்ந்த முறுகல் நிலையை மாத்­தி­ர­மன்றி, தேசிய அர­சாங்­கத்தில் ஒட்­டிக்­கொண்டு இணக்க அர­சியல் நடத்தி வரும் சிறு­பான்மை அர­சியல் தலை­வர்­களின் ஆரோக்­கி­யமான அர­சியல் போக்குக்கும் ஊறு விளை­விக்கும் குந்­த­க­மான கருத்­தா­கவே மாறி­யி­ருக்­கி­றதோ என எண்ண வைக்­கி­றது.

சுதந்­தி­ரத்­துக்கு முன்­னைய கால அர­சியல் சாச­னங்­களில் குறிப்­பாக கோல்­புறுக், டொனமூர், சோல்­பரி என்ற அர­சியல் திட்ட வளர்ச்­சி­களை ஆராய்ந்து பார்ப்போர் ஒன்றை தெரிந்து கொள்ள முடியும். மேற்­படி யாப்­புக்கள் பிரித்­தா­னிய ஆட்­சி­யா­ளர்­களால் வரை­யப்­பட்ட போதும், அவர்கள் தமது ஆட்சி நலம், பொரு­ளா­தார சுரண்டல் மற்றும் கலா­சாரத் திணிப்­புக்­களை மையப்­ப­டுத்­தியும் தமது ராஜ்­ஜிய பரி­பா­ல­னத்­துக்கு குந்­தகம் ஏற்­ப­டாத வகை­யிலும் குறித்த யாப்­புக்­களை, வரைந்­தார்கள் என்­பது, ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய உண்­மை­யாக இருந்த போதிலும் மதம் சார்ந்த அர­சியல் சாச­ன­மொன்றை வரை­வ­தற்கு அவர்­க­ளுக்குத் தேவையும் இருக்­க­வில்லை. அதில் அவர்கள் கவ­னமும் செலுத்­த­வில்லை.

அவர்­க­ளு­டைய மத ஆதிக்­கத்தை முன்­னெ­டுத்து செல்­வதில் மிஷ­ன­ரி­மாரும் தேவா­லய மத­கு­ரு­மாரும் பாட­சாலை கல்வி முறை­க­ளில் கவ­னம் செலுத்­தி­னார்­களே தவிர அர­சியல் யாப்பில் கவனம் செலுத்­த­வில்­லை.

சுதந்­திர நாட்­டுக்கு ஒரு புதிய அர­சியல் சாசனம் வேண்­டு­மென்ற வேட்­கையில் திரு­மதி.ஸ்ரீமாவோ பண்­டா­ர­நா­யக்க தலை­மை­யி­லான ஆட்­சி­யா­ளர்கள் 1972 ஆம் ஆண்டு மே.22, இலங்­கையின் முத­லா­வது குடி­ய­ரசு யாப்பை உரு­வாக்­கினர்.

இந்த யாப்பின் மூலம் இலங்கைத் தீவு ஸ்ரீலங்கா எனப்­பெயர் மாற்றம் செய்­யப்­பட்­டது. ஸ்ரீலங்கா சோஷ­லிச குடி­ய­ரசு எனப்­பெயர் இடப்­பட்­டது. சிங்­களம் மட்டும் அர­ச­க­ரும மொழி­யென உயர் நிலைப்­ப­டுத்­தப்­பட்­டது. பெளத்த மதத்­திற்கு அரச அந்­தஸ்து வழங்­கப்­பட்­டது.

ஏலவே குறிப்­பிட்­ட­துபோல் இலங்கைத் தீவை ஒரு மத­வ­ழிப்­பட்ட நாடாக உல­கெங்கும் பிர­க­ட­னப்­ப­டுத்த வேண்­டு­மென்ற ஒரு­தலைப்பட்­ச­மான தீர்­மா­னத்தின் அடிப்­ப­டை­யி­லேயே முத­லா­வது குடி­ய­ரசு யாப்பில் பெளத்த மதத்­துக்கு அர­சியல் உரிமை வழங்கும் முயற்சி முன்­னெ­டுக்­கப்­பட்­டது. 

இந்த முன்­னெ­டுப்பின் கார­ண­மாக பிற்­கா­லத்தில் எவ்­வி­த­மான விளை­வு­களை நோக்கி இலங்கை நகர வேண்­டி­யி­ருந்தது என்­பது அனை­வரும் தெரிந்து கொண்ட விட­யமே. மேற்­படி குடி­ய­ரசு யாப்பை, வட கிழக்­கி­லுள்ள தமிழர் தீவி­ர­மாக எதிர்த்­தார்கள். கறுப்புக் கொடி ஏந்­தி­னார்கள். பல இளை­ஞர்­களும் அர­சியல் தலை­வர்­களும் சிறை செல்ல வேண்­டி­யு­மி­ருந்­தது.  

இதன் ஒரு­பக்க விளை­வா­கவே 1972 மே 04 ஆம் திகதி திரு­கோ­ண­ம­லையில் தமி­ழ­ர­சுக்­கட்சி, தமிழ் காங்­கிரஸ், இலங்கைத் தொழி­லாளர் காங்­கிரஸ் உட்­பட தமிழ் இளை­ஞர்­களின் அமைப்­புக்­களும் ஒன்று இணைந்து தமிழர் ஐக்­கிய முன்­ன­ணி­யெனும் அமைப்பை திரு­கோ­ண­ம­லையில் உரு­வாக்கி 6 அம்சத் திட்­ட­மொன்றை வகுத்து, அத்­திட்­டத்தில் ஓர் முக்­கிய அங்­க­மாக இலங்கை ஒரு மதச்­சார்­பற்ற நாடாக ஏற்­றுக்­கொள்­ளப்­பட வேண்­டு­மென்ற கோரிக்­கையை முன்­வைத்­தன.

நடந்­தது என்ன, தீவி­ர­மான பெளத்த நாடாக இலங்கை தொடர்ந்தும் இருப்­ப­தற்­கு­ரிய சகல ஏற்­பா­டு­களும் பாது­காப்­புக்­களும் வழங்­கப்­பட்­டன. இக்­கா­லப்­ப­கு­தியில் பெருந்­தொ­கை­யான பெளத்த விகா­ரைகள் புனித நகர்­க­ளாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டன. அதே­ய­ளவு சலு­கை­களோ ஆத­ர­வு­களோ இந்து, இஸ்லாம், கிறிஸ்­தவ மதங்­க­ளுக்கு வழங்­கப்­ப­ட­வில்லை.

முன்னாள் ஜனா­தி­பதி ஜே.ஆர்.ஜெய­வர்­தன முன்­னைய ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு ஏட்­டிக்குப் போட்­டி­யாக சுதந்­திர இலங்­கையின் இரண்­டா­வது அர­சியல் அமைப்பை 1978 ஆம் ஆண்டு கொண்டு வந்தார். இலங்கை ஜன­நா­யக சோச­லிசக் குடி­ய­ரசின் அர­சியல் அமைப்பு எனக் கொண்டு வரப்­பட்ட இவ்­வ­ர­சியல் யாப்பு உரு­வாக்­கப்­பட்­ட­போது, மக்­க­ளு­டைய கருத்து பெறப்­ப­ட­வில்லை, சிறு­பான்மை மக்­களின் உரி­மை­களோ, கோரிக்­கை­களோ, அபி­லா­ஷை­களோ கவ­னத்தில் கொள்­ளப்­ப­ட­வில்லை.

தனி­ம­னித வழி­பாட்டை முன் நிறுத்தி தயா­ரிக்­கப்­பட்ட இவ்­வ­ர­சியல் அமைப்பில் ஜனா­தி­ப­தி­யென்ற ஆட்சி முதல்­வனின் நிறை­வேற்று அதி­கா­ரங்கள், நிர்­வாக கட்­ட­மைப்­புக்கள் அள­வுக்கு மீறிய தன்மை கொண்­ட­தாக உள்­ள­டக்­கப்­பட்­ட­போது இலங்கை குடி­ய­ரசு ஒற்­றை­யாட்சி கொண்ட குடி­ய­ர­சாக இருப்­ப­துடன் பெளத்த மதம் ஆள் பலத்தின் முதன்மை மத­மாக விளங்க வேண்­டு­மென அத்­தி­யாயம் 11 மூலம் வரை­யறை செய்­யப்­பட்­டது.

இலங்கை குடி­ய­ரசில் பெளத்த மதத்­துக்கு முதன்­மை ஸ்­தானம் வழங்­கப்­பட வேண்டும் என்­ப­தோடு அதற்­கி­ணங்க 10ஆம், 14 (1) (2) ஆம் உறுப்­பு­ரை­களால் வழங்­கப்­பட்­டுள்ள உரி­மையின் எல்லா மதங்­களும் காப்­பு­றுதி செய்யும் அதே­வே­ளையில் பெளத்த சாச­னத்தை பாது­காத்தும் பேணி வளர்த்­தலும் அரசின் கட­மை­யாக இருத்­தலும் வேண்டும் (அத்­தி­யாயம் 11) என முதன்­மைப்­ப­டுத்­தி­யி­ருக்கும் விவ­கா­ர­மா­னது தொடர்ந்தும் புதிய அர­சியல் அமைப்பில் பேணப்­ப­டு­வ­துடன் பின்­பற்­றப்­ப­டவும் வேண்டும் என்ற கருத்­துக்­க­ளையே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் உரை­யி­லி­ருந்து அறி­யக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது.

 பிர­த­மரின் இக்­க­ருத்­தா­னது புதிய பானையில் பழைய கள் என்­பது போல் முன்­னைய காலத்தில் முன்­னைய அர­சியல் யாப்பில் இடம் பெற்­றி­ருந்த அனைத்து விட­யங்­க­ளை­யுமே மீண்டும் புதிய அர­சியல் சாச­னத்தில் பிர­தமர் கொண்டு வர முயற்­சி­களை மேற்­கொண்­டு­வ­ரு­கின்றார் என்ற சந்­தே­கங்­களே இப்­பொ­ழுது தமிழ் மக்கள் மத்­தி­யிலும் சிறு­பான்மை சமூ­கத்­துக்­கி­டை­யேயும் தலை­தூக்கியுள்­ள­து.

அர­சாங்கம், சிறு­பான்மை சமூ­கத்தின் அனைத்துப் பிரச்­சி­னை­க­ளுக்கும் அபி­லா­ஷை­க­ளுக்கும் புதிய அர­சியல் சாச­னத்தின் மூலம் விடிவு கிடைக்­கு­மென கூறி­வ­ரு­கி­றது. இந்த வாக்­கு­று­தி­களை தமிழ் மக்கள் பூர­ண­மாக நம்பி வரு­வ­துடன் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு உட்­பட்ட தமிழ் மக்­களைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் அனைத்தும் கட்­சி­களும் தலை­வர்­களும் ஓர­ளவு நம்­பிக்கை கொண்­ட­வர்­க­ளாக காணப்­படும் சுமு­க­மான சூழ்­நி­லையில் பழை­ய­படி வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதைபோல் பிர­த­மரின் இக்­க­ருத்­தா­னது சிறு­பான்மை சமூ­கத்தின் மத்­தியில் கதி­க­லக்­கத்தை உண்­டாக்­கி­யி­ருக்­கி­றது.

இலங்­கையின் சுதந்­தி­ரத்­துக்குப் பின்­னுள்ள காலப்­ப­கு­தியில் பெளத்தம், இந்­து­மதம், இஸ்லாம், கிறிஸ்­தவம் என்ற மதங்­களின் அனுட்­டா­னங்­களும் பின்­பற்­று­தல்­களும் பேணப்­பட்­ட­போதும் பெளத்த மதமே முன்­னு­ரி­மைப்­ப­டுத்­தப்­பட்டு வந்­தி­ருக்­கி­றது. இதற்கு ஆட்­சி­யா­ளர்­களின் ஆத­ரவும் சிங்­கள பெளத்­தர்­களின் செல்­வாக்கு செலுத்­த­லுமே கார­ண­மாக இருந்து வந்­துள்­ளது.

சிங்­கள ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு பெரும்­பான்மை சமூ­கத்தின் உணர்ச்சி பூர்­வ­மான மத அபி­லா­ஷை­க­ளுக்கு முன்­னு­ரிமை அளிக்க வேண்­டிய தேவையும் இருந்­துள்­ளது என்­பது தவிர்க்­கப்­ப­ட­மு­டி­யா­த­வொன்றே. இன்­றைய சூழ்­நி­லையில் தமிழ் மக்­க­ளுக்­கான நியா­ய­மான தீர்­வொன்றை வழங்க வேண்­டிய இறுக்­க­மான சூழ்­நி­லை­யொன்று காணப்­ப­டு­கி­றது என்­பதும் யதார்த்தம்.  

இவ்­வா­றா­ன­தொரு சம­வாத சந்­தர்ப்­பத்தில் சிங்­கள மக்­களை திருப்­திப்­ப­டுத்­து­வதன் மூலமே தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வு விட­யத்­தையோ அல்­லது புதிய அர­சியல் யாப்­பையோ வென்­றெ­டுக்க வேண்­டு­மாயின் சிங்­கள மக்­களின் பேரா­த­ரவு தேவை­யென்­பதும் உண்­மையே. அதை ஈடு கட்­டவே பிர­தமர் இவ்­வாறு கூறி­யுள்ளார் என்ற கருத்தும் சிலரால் முன்­வைக்­கப்­ப­டு­கி­றது.

இவ்­வாறு நிக­ழ­வில்­லை­யாயின் தமிழ் மக்­க­ளுக்­கான தீர்வை உள்­ள­டக்­கிய அர­சியல் சாச­னத்தை பெளத்த அடிப்­ப­டை­வா­தி­களும் இன­வா­தி­களும் பெளத்த குரு­மாரும் எதிர்க்கும் நிலை­யொன்று உரு­வா­க­லா­மென்ற புத்­தி­பூர்­வ­மான முன்­னெச்­ச­ரிக்­கையின் அடிப்­ப­டையில் பிர­தமர் இவ்­வா­றான கருத்தைக் கூறி­யி­ருக்­கலாம் என்ற கருத்தும் நியா­யப்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது.

எது எவ்­வாறு இருந்த போதிலும் பல்­லின சமூகம், மதம் கொண்­ட­வர்கள் வாழும் ஒரு நாட்டில் குறித்த ஒரு மதத்தை பிர­தா­னப்­ப­டுத்­து­வது என்­பது சில­வே­ளை­களில் ஜீர­ணிக்­கப்­ப­ட­மு­டி­யாத விட­ய­மா­கவும் இருக்­கலாம். அவ்­வா­றா­ன­தொரு அசாத்­திய சூழ்­நிலை இலங்­கையில் நீண்­ட­கா­ல­மா­கவே இருந்து வரு­கி­றது என்­பது மறைக்க முடி­யாத உண்மை.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு உட்­பட பாரா­ளு­மன்றில் உள்ள அனைத்து கட்­சி­களும் யாப்பில் பெளத்த மதத்­துக்கு முன்­னைய யாப்­புக்கள் போன்றே முன்­னு­ரிமை அளிக்க இணக்கம் தெரி­வித்­துள்­ளன என்ற கருத்தை பிர­தமர் தெரி­வித்­துள்ளார். இது பற்றி தமிழ் மக்கள் மத்­தியில் வீணான சர்ச்­சை­களும் விமர்­ச­னங்­களும் எழுந்­துள்­ளன. இது பற்றி கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­தி­ர­னிடம் கருத்துக் கேட்­ட­போது, அவர் பின்­வரும் விட­யத்தைத் தெரி­வித்­தி­ருக்­கிறார்.

பெளத்த விகா­ரை­யொன்றில் பிர­தமர் உரை­யாற்­று­கின்­ற­போது இதைக் கூறி­யுள்ளார் என ஊட­கங்கள் மூலம் அறிந்து கொண்டேன். இச்­செய்­தியில் எவ்­வ­ளவு உண்­மை­யி­ருக்­கி­றது என்று எனக்குத் தெரி­யாது. இவ்­வி­டயம் தொடர்பில் த.தே.கூ. அமைப்பின் நிலைப்­பாடு என்­ன­வெனில் இலங்கை ஒரு மதச்­சார்­பற்ற குடி­ய­ர­சாகக் காணப்­ப­ட­வேண்டும். சகல மதங்­களும் சம­மாக மதிக்­கப்­பட வேண்டும். 

குறித்த மதம் ஒன்­றுக்கு முதன்மை வழங்­கு­வது முர­ணா­ன­தா­கவும் நல்­லி­ணக்க செயற்­பா­டு­களை பாதிப்­ப­தா­கவும் அமையும். ஆகவே இது விட­யத்தில் அரசு கவனம் செலுத்த வேண்­டு­மென்ற கருத்தை நாம் தெளி­வாக கூறி­யி­ருக்­கிறோம்.

அர­சியல் சாசன வழி­காட்டல் குழுவில் சமயம் சார்ந்த விவ­கா­ரங்கள் இன்னும் கலந்­து­ரை­யா­டப்­ப­ட­வில்லை. இவ்­வாறு இருக்கும் போது பெளத்த மதத்­துக்கு முதன்மை அளித்தல் விட­யத்தில் த.தே. கூட்­டமைப்பு உட்­பட அனைத்து கட்­சி­களும் சம்­மதம் தெரி­வித்­துள்­ளன என்ற செய்தி தவ­றான செய்­தி­யா­கு­மென சுமந்­திரன் தெரி­வித்­தி­ருந்தார்.

பிர­த­மரின் இன்­னு­மொரு கருத்தும் மதத்­த­லை­வர்­களின் மனதை புண்­ப­டுத்­து­வ­தாக இருக்­கலாம். பெளத்த மதத்தை அர­சியல் சாச­னத்தில் முன்­னு­ரி­மைப்­ப­டுத்­து­வதில் இலங்­கை­யி­லுள்ள அனைத்து மதத்­த­லை­வர்­களும் உடன்­பாடு தெரி­வித்­துள்­ளார்கள் என்ற கருத்தே அது­வா­கும்.

கத்­தோ­லிக்க மதத்தலைவரான கர்­தினால் மல்கம் ரஞ்சித் மற்றும் இந்து, இஸ்லாமிய, மதத்தலைவர்களும் இது விடயத்தில் தமது சம்மதத்தை அரசுக்கு அளித்துள்ளனர் என்ற கருத்து சில மதத்தலைவர்களுக்கு நேரடியான மனத்தாங்கல்களை உண்டு பண்ணும் விடயமாகும். இவ்விடயத்தில் பிரதமர் என்ன கருத்தைக் கொண்டிருந்தாரோ அதை அவர் மெளனம் காத்திருக்க வேண்டும்.

ஏலவே, பெளத்த விகாரைகள், சிலைகள் நிறுவுவது தொடர்பில் தமிழ் மக்களும் இந்து மதத்தினரும் அதிருப்தி கொண்டவர்களாக காணப்படுகின்றார்கள். பெளத்தர்கள் அல்லாத இடத்தில் விகாரைகள் நிறுவப்படுவதையோ ஏனைய மதத் தலங்களை கபளீகரம் செய்யும் விதத்தில் சிலை வைப்பு, விகாரை அமைப்பு என்ற விடயங்களில் தங்கள் விசனங்களைக் காட்டி வந்துள்ளனர்.

இதே போன்றே முன்னைய அரசாங்க காலத்தில் இஸ்லாமியரின் புனித பள்ளிவாசல்களுக்கு ஏற்படுத்தப்பட்ட சேதங்கள் அம் மக்கள் வாழும் குடிமனைகளுக்கு மத்தியில் பலாத்காரமாக விகாரைகளையமைக்கும் முயற்சிகள் அவர்களின் மனங்களை புண்படுத்தியதுடன் விசனம் அடையவும் வைத்துள்ளது. இவ்வாறான அத்துமீறல் ஒரு சில இடங்களில் கிறிஸ்தவ ஆலயங்களுக்கும் நடந்துள்ளது என்பது மறுக்கப்பட முடியாத செய்தி.

இவ்வாறு இருக்கும் சூழ்நிலையில் பெளத்தர்களை மாத்திரம் திருப்திப்படுத்தும் அரசியல் சாசனமாக புதிய அரசியல் சாசனம் அமையாமல் சகல மதத்தினரையும் கண்ணியப்படுத்தும் சாசனமாக உருவாக்கப்படும் போதே நிலையான சமாதானமொன்று உருவாக வழிவகுக்கும்.

திரு­ம­லை ­நவம்

 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-10-15#page-14

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

சர்ச்சையைக் கிளப்பும் பௌத்தத்திற்கான முன்னுரிமை

Iammmamaam055555-49166f8ef94141420f24460eee8f6b0dd7d07b80.jpg

 

பௌத்தம் தொடர்­பான ஏற்­பா­டுகள் பற்றி புதிய அர­சி­ய­ல­மைப்பில் பிரச்­சினை கொள்ள வேண்­டிய அவ­சியம் இல்லை என சிங்­கள மக்­க­ளிடம் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ளார். இவ்­வாறு அவர் தெரி­வித்­த­தற்கும் அப்பால் சென்று, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் பௌத்­தத்­திற்­கான முன்­னு­ரி­மை­யினை ஏற்­றுக்­கொண்­டுள்­ள­தா­கவும் தெரி­வித்­தி­ருந்தார். எனினும் தமிழ்த் தேசி­யக்­ கூட்­ட­மைப்பு உட­ன­டி­யா­கவே பிர­த­மரின் இக் கருத்­தினை நிரா­க­ரித்­துள்­ளது.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சிங்­கள மக்­க­ளி­டத்தில் சென்று இவ்­வாறு தெரி­வித்­தி­ருந்­த­போதும் இவ்­வி­டயம் தமிழ் மக்­க­ளையும் அவர்­க­ளது அர­சி­ய­லையும் சென்­ற­டை­வ­தற்குத் தாமதம் எடுக்­க­வில்லை. அர­சி­ய­ல­மைப்பு சகல இனங்­க­ளுக்கும் உரிய ஒன்று என்ற ரீதி­யிலும் தமிழ் மக்கள் அர­சியல் தீர்­வுக்­காக அர­சி­ய­ல­மைப்பு மாற்­றத்­தினை எதிர்­பார்த்­தி­ருக்­கின்­றனர் என்ற வகை­யிலும் அர­சாங்­கத்தின் இவ்­வா­றான கருத்­துக்கள் தமிழ்த் தரப்­புக்­க­ளி­டத்தில் விச­னத்­தினை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றன. இது மட்­டு­மல்­லாமல் பிர­த­மரின் கருத்து தமிழ் மக்­க­ளி­டத்தில் நல்­லி­ணக்கம் தொடர்­பாக கொண்­டி­ருக்கும் சந்­தே­கங்­களை ஒரு­படி உயர்த்­து­வ­தா­கவும் உள்­ளது.

நாட்டில் காலத்­திற்குக் காலம் பதவி ஏற்ற அர­சாங்­கங்கள் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­ட­போதும் இனப்­பி­ரச்­சி­னைக்கு உரிய அர­சியல் தீர்­ வினை முன்­வைக்­க­வில்லை. இனப்­பி­ரச்­சி­னைக்­கான அடிப்­ப­டைக் ­கா­ர­ணங்­களை நிவர்த்­திக்­காது இனப்­பி­ரச்­சி­னைக்­கான அடிப்­ப­டைக்­கா­ர­ணங்­களால் தோற்றம் பெற்ற மோதல்­களைத் தீர்ப்­ப­தற்கு அல்­லது அடக்­கு­வ­தற்கே இனப்­பி­ரச்­சினைத் தீர்வு என முன்­னு­ரிமை வழங்கி வந்­தன. அவ்­வா­றா­னதோர் நிலைமை தான் இன்றும் நில­வு­கின்­றதா என்ற சந்­தேகம் தமிழ் மக்­க­ளி­டத்தில் கணி­ச­மாகக் காணப்­ப­டு­கின்­றது. அச் சந்­தே­கங்­க­ளுக்கு அர­சாங்­கத்தின் இவ்­வா­றான சம்­பா­ஷ­னைகள் வலுச்­சேர்ப்­ப­தா­கவும் அமை­கின்­றன.

 சிங்­கள மக்­க­ளுக்கு ஏனைய இனங்­களைக் காட்­டிலும் அளிக்­கப்­பட்ட அரச அனு­ச­ர­ணை­களும் தமி­ழர்­க­ளுக்கு ஏற்­ப­டுத்­தப்­பட்ட இன

­ரீ­தி­யி­லான மற்றும் மத ரீதி­யி­லான பார­பட்­சங்­களும் இனப்­பி­ரச்­சி­னையில் முக்­கிய இடம் வகிக்­கின்­றன. இவ்­வாறு நிலை­மைகள் காணப்­ப­டு­கையில், நாட்டில் உள்ள சகல இனத்­த­வர்­களும் இலங்­கையர் என்ற அடிப்­ப­டைக்குள் வர­வேண்­டு­மாயின் சக­லரும் சம­மாக மதிக்­கப்­ப­டத்­தக்க அர­சி­ய­ல­மைப்பும் அதனை நடை­மு­றைப்­ப­டுத்­த­லுக்­கு­மான அவ­சி­ய­முமே நாட்­டிற்கு அவ­சி­ய­மா­னது என்­ப­தனை யாராலும் மறுக்க முடி­யாது.

நடை­மு­றையில் உள்ள இலங்­கையின் இரண்டாம் குடி­ய­ரசு அர­சி­ய­ல­மைப்பில் பௌத்த மதத்­திற்கு முதன்­மைத்­தானம் வழங்­கப்­பட்­டுள்­ளது. அதே­வேளை பௌத்த சாச­னத்­தினை பேணி வளர்த்­தலும் பேணிப்பாதுகாத்­தலும் அரசின் கட­மை­யாக இருத்தல் வேண்டும் எனவும் நடை­மு­றையில் உள்ள யாப்பு தெரி­விக்­கின்­றது.

நாட்டில் பல்­லி­னங்­களும் பல் மதங்­களும் பூர்­வீகக் குடி­க­ளாக வாழு­கின்ற நிலையில் குறிப்­பிட்ட ஓர் இனத்­தி­னதோ மதத்­தி­னதோ அடை­யா­ளங்­களை மாத்­திரம் அர­சாங்­கத்தின் விசேட கரி­ச­னைக்கு உட்­ப­டுத்­து­வது நல்­லி­ணக்­கத்­திற்­கான உத்­தி­யாக அமை­யாது. கடந்த காலங்­களில் தமிழ் மக்­க­ளுக்கு எதி­ரான அர­சாங்­கத்தின் போக்­கு­களில் பௌத்த சிங்­கள மய­மாக்கம் ஓர் முக்­கிய இடத்­தினைப் பிடிக்­கின்­றது.

தமிழ் மக்­களின் பூர்­வீக நிலங்­களில் பௌத்த விகா­ரைகள் அமைக்­கப்­ப­டு­வதை தமிழ் மக்கள் எதிர்க்­கின்­றனர். தமிழ் மக்கள் பௌத்த விகா­ரைகள் அமைக்­கப்­ப­டு­வதை இன­வா­தத்தின் அடிப்­ப­டை­யிலோ அல்­லது மத­வா­தத்தின் அடிப்­ப­டை­யிலோ எதிர்க்­க­வில்லை. வர­லாற்று ரீதி­யாக பௌத்த விகா­ரைகள் அமைக்­கப்­பட்டு அவற்­றுக்கு இருக்­கின்ற அரச அங்­கீ­காரம் மற்றும் ஆயுதப் போராட்டம் ஆரம்­ப­மான பின்னர் காணப்­ப­டு­கின்ற இரா­ணுவ ­ரீ­தி­யி­லான அனு­ச­ர­ணைகள் போன்­ற­வற்றின் மத்­தியில் தமி­ழர்­க­ளு­டைய அடை­யா­ளங்­களைக் காப்­பாற்­றிக்­கொள்ள முடி­யாது என்­ப­தனை கற்­றுக்­கொண்­ட­த­னா­லேயே தமிழ் மக்கள் பௌத்த விகா­ரைகள் அமைக்­கப்­ப­டு­வதை எதிர்க்­கின்­றனர்.

தமிழ் மக்­களின் இனரீ­தி­யி­லான அடை­யா­ளங்­க­ளையும் பண்­பாட்­டையும் தொன்­மை­யையும் வர­லாற்­றையும் இருப்­பி­னையும் மறுக்­கின்ற வகை­யி­லேயே வடக்கு கிழக்கில் பௌத்த சிங்­கள மய­மாக்கம் நடை­பெ­று­கின்­றது. தமிழ் மக்­களில் கணி­ச­மா­னோ­ருக்கு புத்த பிரானின் போத­னை­களில் மதிப்பும் நம்­பிக் ­கையும் உண்டு. எனினும் பௌத்த விகா­ரை கள் அமைக்­கப்­ப­டு­வதை தமிழ் மக்கள் எதிர் க்­கின்­றனராயின் பௌத்­தத்­திற்­குள்­ளாக வடக் குக் கிழக்கில் மேற்­கொள்­ளப்­படும் அர­சியல் கார­ண­மா­கவே ஆகும். தமிழ் மக்கள் பூர்­வீ­க­மாக வாழும் பகு­தி­களில் அர­சியல் ரீதியில் பௌத்த கோயில்கள் ஆக்­கி­ர­மிப்பின் உத்­தி­யாக பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றமை தமி­ழர்­க­ளி­டத்தில் பௌத்­தத்­தினை வடக்குக் கிழக்கில் ஏற்க முடி­யா­த­தற்­கான கார­ண­மா­க­வுள்­ளது.

இலங்கை அர­சி­யலும் பௌத்த சிங்­க­ளமும் ஒன்­றுடன் ஒன்று இணைந்­த­தாக மாறி மாறி ஆட்­சிக்கு வந்த அர­சாங்­கங்­களால் சட்­டரீ­தி­யிலும் சட்­டத்­திற்குப் புறம்­பா­கவும் பேணப்­பட்­டுள்­ளன. இது ஏனைய இனங்­களை தாய்­நாட்­டிற்­குள்­ளேயே அந்­நி­யப்­ப­டுத்­து­வ­தா­க­வுள்­ளது.

அர­சி­ய­ல­மைப்பு சட்­டத்­த­ர­ணியும் அர­சி­ய­ல­மைப்­பினைத் தயா­ரித்­து­வரும் பிர­தான வழி­ந­டத்தல் குழுவின் அங்­கத்­தவ­ரு­மான பரா­ளு­மன்ற உறுப்­பினர் ஜயம்­பதி விக்­கி­ர­ம­ரட்­னவும் அண்­மையில் அர­சி­ய­ல­மைப்பில் பௌத்­தத்­திற்கு அளிக்­கப்­படும் இடம் குறித்து கருத்துத் தெரி­வித்­தி­ருந்தார்.

அதில் அவர், இலங்­கையின் பிர­தான மத­மாக பௌத்­த­மதம் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­போதும்  

அரச மத­மாக பௌத்தம் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை என்றார். பாகிஸ்தான், மற்றும் சவூதி அரே­பியா போன்ற நாடு­களில் அரச மத­மாக இஸ்லாம் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது போன்று இலங்­கையில் இல்லை என்­பதை தெரி­வித்தார். அவரும் இது­வ­ரையில் பௌத்தம் எவ்­வாறு முன்­னு­ரிமைப் படுத்­தப்­பட்­டி­ருந்­ததோ அதே­போன்று தொடர்ந்தும் முன்­னு­ரி­மைப்­ப­டுத்­தப்­படும் என்றே கூறினார். இவற்­றி­லி­ருந்து அர­சி­ய­ல­மைப்பு மாற்­றத்­துடன் தொடர்பு பட்ட பெரும்­பான்­மையோர் இடது சாரி­க­ளாக இருந்­தா­லேன்ன வலது சாரி­க­ளாக இருந்­தா­லேன்ன நடை­மு­றையில் அரசில் காணப்­படும் பௌத்­தத்­திற்­கான முன்­னு­ரி­மை­யினைத் துறக்க விரும்­பு­கின்­றனர் இல்லை என்­பது தெளி­வா­கின்­றது. புதிய அர­சி­ய­ல­மைப்பில் ஏனைய இனங்­க­ளி­டத்தில் எதா­வது ஒரு­வகைத் திருப்­திப்­ப­டுத்­தல்­களின் ஊடாக பௌத்­தத்­திற்­கான முன்­னி­லைப்­ப­டுத்­த­லையே விரும்­பு­கின்­றனர் என்­பது புல­னா­கின்­றது. 

பௌத்­த­மதம் இலங்­கையின் பிர­தான மத­மாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. ஆனால் அரச மத­மாகக் காணப்­ப­ட­வில்லை என்­பது அர­சி­ய­ல­மைப்புச் சட்ட ரீதி­யிலும் சட்ட விவா­தங்­களின் அடிப்­ப­டை­யிலும் சரி­யா­ன­தாக அமை­கின்­றது. ஆனால், நடை­முறை ரீதியில் பௌத்­தமே இலங்­கையின் அரச மத­மாக பேணப்­ப­டு­கின்­றது என்­ப­தனை நாட்டு மக்­களால் சாதா­ர­ண­மா­கவே கண்­டு­கொள்­ளவும் உண­ரவும் முடி­கின்­றது. இதனால் கணி­ச­மா­ன­ளவு ஏனைய மதத்­த­வர்கள் பார­பட்சம் காட்­டப்­ப­டு­கின்­றனர் என்­பது யதார்த்­த­மாகும்.

மத­சார்­பற்ற அர­சி­ய­ல­மைப்பு ஏற்­ப­டு­வது பல்­லி­னங்­க­ளையும் அங்­கீ­க­ரிக்­கின்ற மனிதத் தன்மை மிக்க ஓர் முற்­போக்­கான நட­வ­டிக்­கை­யாகும். ஆர­சாங்­கத்­தினைப் பொறுத்­த­ளவில் நடை­மு­றையில் இருந்­து­வந்த பௌத்­தத்­திற்கு முன்­னு­ரிமை அளித்தல் என்னும் கொள்­கை­யினை மாற்றி மத­சார்­பற்ற ஓர் அர­சினை ஸ்தாபிக்கும் போது பௌத்த சிங்­க­ள­வர்­களில் பிற்­போக்­கான சிந்­த­னை­யு­டை­ய­வர்கள் எதிர்ப்­பினை வெளிப்­ப­டுத்­தக்­கூடும். அது நடை­மு­றையில் உள்ள அர­சாங்­கத்­திற்கு சிக்கல் மிக்­க­தா­கவும் அமையும். எனினும் யதார்த்­தத்தில் நாடு நல்­லி­ணக்­கத்­தினை நேக்கி நகர்ந்து கொண்­டி­ருக்­கின்­ற­தாயின் நல்­லி­ணக்­கத்­திற்­கான அர்ப்­ப­ணிப்பும் விட்­டுக்­கொ­டுப்பும் அவ­சி­ய­மாகும் என்­பதை சிங்­கள மக்கள் உண­ர­வேண்­டி­யுள்­ளது. அல்­லது உணர்த்­தப்­ப­ட­வேண்டும். இதனை விடுத்து நாடு முன்­னோக்கி பய­ணிக்க முடி­யாது.

பௌத்­தத்­திற்கு முத­லிடம் என்ற கொள்­கை­யினை ஆட்­சி­யா­ளர்கள் கைவிட வேண்டும் என்று தமிழ்த் தரப்­புக்கள் கோரி­வ­ரு­கின்­றன. நாட்டில் சக­ல­ருக்கும் சம உரிமை என்று கூறும் அர­சி­ய­ல­மைப்பில் ஒரு மதத்­திற்கு முன்­னு­ரிமை கொடுப்­பது அர­சி­ய­ல­மைப்­புக்கு முர­ணா­னது. நல்­லி­ணக்­கத்­திற்குப் பாதிப்­பாக அமையும் என்­பதை பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் அர­சி­ய­ல­மைப்­புக்­கு­ழுவில் அங்­கத்­துவம் வகிப்­ப­வ­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன் வெளிப்­ப­டுத்­தி­யுள்ளார். மதச்­சார்­பற்ற அர­சா­கவே நாடு இருக்க வேண்டும். என தமிழ்த் தரப்­புக்கள் விரும்­பு­கின்­றன.

தமி­ழர்கள் தமது மதத்­தினை முன்­னு­ரி­மைப்­ப­டுத்­தக்­கோ­ர­வில்லை. ஆனால் வேறு ஒரு மதம் மட்டும் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தையும் விரும்­ப­வில்லை. பௌத்தம் முன்­னு­ரி­மைப்­ப­டுத்­தப்­ப­டு­வது என்­பது இலங்­கை­யினை பௌத்த நாடாக மாற்றும் நகர்­வு­க­ளுக்கு வலுச்­சேர்ப்­ப­தாக அமை­கின்­றது என்­ப­தனை தமிழ் மக்கள் கண்­டு­வந்­தி­ருக்­கின்­றனர். எனவே எதிர்­வரும் காலங்­களில் அர­சி­ய­ல­மைப்புக் குழுவில் தர்க்­கத்­திற்கு உரிய விட­ய­மா­கவும் இது அமையும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. இந்த நிலையில் சிங்கள மக்கள் அரசியலமைப்பில் மதரீதியில் கொள்கையினை நீக்கி மதச்சார்பற்ற நிலைக்குச் செல்வதை ஏற்றுக்கொள்ள மட்டார்கள் என்ற போக்கு நிலவுகின்றதாயின் நல்லிணக்கத்திற்கான சிங்கள மக்களின் நிலைப்பாடு தொடர்பில் கேள்வி எழுகின்றது. நல்லிணக்கத்திற்கான தேவைப்பாடுகளை சிங்கள மக்களும் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் சமமாக அணுகவும் அர்ப்பணிக்கவும் வேண்டியுள்ளது.

நல்லிணக்கம் என்பது தமிழ் மக்களுக்கு மாத்திரம் அவசியமானதல்ல. சகல இனங்களுக்கும் நலன்களைத் தரக்கூடியதாகும். இந் நிலையில் தமிழ் மக்கள் பௌத்தத்திற்கு அளிக்கப்படும் முன்னுரிமையினால் நல்லிணக்கத்திற்குப் பங்கமுள்ளது என நியாயபூர்வமாகத் தெரிவிக்கையில் அவ்வாறு மேற்கொள்வதனால் சிங்கள மக்களைத் திருப்திப்படுத்த முடியாது. ஆகவே இவ்விடயத்தில் தமிழ் மக்கள் பொறுமை காத்துப் பயணிக்க வேண்டும் என ஆட்சியாளர்கள் கருதினால் அது எல்லாவற்றினையும் தமிழ் மக்கள் தாங்கிக் கொள்ள வேண்டும் அல்லது சகித்துக் கொள்ள வேண்டும் என்பதாக அமைந்துவிடும். அது நல்லிணக்கமல்ல. எனவே சகல இனங்களையும் பாதிக்காத மதச்சார்பற்ற ஓர் முற்போக்கான நிலைமையினை நாடிச் செல்வதுதான் காத்திரமான நல்லிணக்கத்திற்கு மிக அவசியமாகும்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2016-10-16#page-5

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.