Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையின் புனிதநகரத் திட்டத்தை தமிழ்நாட்டில் ஏன் நடைமுறைப்படுத்த முடியாது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் புனிதநகரத் திட்டத்தை தமிழ்நாட்டில் ஏன் நடைமுறைப்படுத்த முடியாது?

இலங்கையில் பழமையான, புராதனச் சின்னங்களும், கோயில்களும் புனித நகராக அரசால் அறிவிக்கப்படும். அந்தப் புனித நகரத்தின் தொன்மையையும், புனிதத்தையும் குலைக்கும் வகையில் அந்தக் கோயிலைச் சுற்றியும் அதன் அண்மையான பகுதிகளிலும் புதுக் கட்டிடங்களோ, வேற்று மதச் சின்னங்களோ, சிலைகளோ, கோயில்களோ அனுமதிக்கப் படுவதில்லை.

தமிழ்நாட்டின் பல நகரங்களில் நான் பார்த்த அசிங்கமான தோற்றம் என்னவென்றால் பழம்பெரும், புராதனக் கட்டிடக் கலையுடன், தமிழ் முன்னோர்களின் சிற்பக் கலையின் சிறப்பையும், பழம் பெருந்தமிழரசர்களின் சரித்திரத்தையும் பறைசாற்றும் வகையில் அமைந்த கோயில்களுக்கு அருகாமையிலேயே, அந்தக் கோயில்களின் பழமையையும், புனிதத்தையும் பழிப்பது போல் புதுப்புது சிமெண்டினாலான கிறிஸ்தவ, இஸ்லாமியக் கட்டிடங்கள் எழுப்பப் படுகின்றன.

இலங்கையில் போன்று தமிழ்நாட்டின் பழமையான கோயில்களையும், அதன் சுற்றுப் புறப் பகுதிகளையும் புனிதநகராகப் பிரகடனத்தப்படுத்தி, புராதனச் சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இலங்கையில் இதைச் செய்ய முடியுமென்றால் தமிழ்நாட்டு அரசால் அல்லது மத்திய அரசால் இதை நடைமுறைப் படுத்துவது பெரிய காரியமல்ல.

இந்தியாவில் இந்துக்கள் எல்லாம் புத்தரும் இந்து தான் என்று சொந்தம் கொண்டாடி ஆப்கானிஸ்தானின் பாமியன் புத்தர் சிலைக்காகக் கண்ணீர் வடித்தார்கள், ஆனால் இலங்கையில் சிங்கள பெளத்தர்களோ இந்துக் கோயில்களை, எத்தனை ஆயிரமாண்டுகள் பழமையானதாக இருந்தாலும் புனிதநகரமாகப் பிரகடனப்படுத்த மாட்டார்கள், ஏனென்றால் சைவக்கோயில் நிலங்களை ஆக்கிரமித்து, சைவக்கோயில்களுக்கெதிராக புத்த விகாரைகளைக் கட்டி சிங்களவர்களைக் குடியேற்றி, தமிழர்களை அந்தப் பிரதேசங்களில் சிறுபான்மையினராக்குவது தான் நோக்கம்.

அப்படியான புனிதநகர திட்டத்தை அமுல்படுத்துமாறு நான் கூறவில்லை, எல்லா மதங்களுக்கும் சமமான புனிதநகரதிட்டம். இது பழமையான இந்துக் கோயில்களுக்கு மட்டுமல்ல, நாகூர் போன்ற இஸ்லாமியத் தலங்களுக்கும், வேளாங்கண்ணி போன்ற கிறிஸ்தவ புனித நகரங்களுக்கும் பொருந்தும். அங்கும் குறிப்பிட்ட எல்லைக்குள் புதிதாக இந்துமதக் கோயில்கள், வேற்றுமதச் சின்னங்கள், சிலைகள் அனுமதிக்கப்படக் கூடாது.

வெளிநாடுகளில் 100 ஆண்டுகளுக்குக் குறைந்த கட்டிடங்களையே பழமையானதாகக் கருதிப் பாதுகாக்கிறார்கள், நான் சொல்வதெல்லாம் குறைந்தது 1000 ஆண்டுகள் பாரம்பரியமுள்ள கோயில்களின் புனிதத்தையாவது காக்க வேண்டுமென்பது தான்.

நான் தமிழர்களின் சிற்பக் கலையும், வரலாறும் பாதுகாக்கப்பட வேண்டுமென்பதை மதப்பற்று எனத் திரித்தால் அதைப்பற்றிக் கவலையில்லை, ஏனென்றால் மற்றவர்களைப் போல் நாமும் மதப்பற்றுடன் இருப்பதில் தவறேதுமில்லை.

கிறிஸ்தவ நாடுகளிலெல்லாம் நாங்கள் இந்துக் கோயில்களைக் கட்டுகிறோம் அவர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்காத போது நாங்களும் தமிழ்நாட்டிலோ, ஈழத்திலோ கிறிஸ்தவக் கோயில்கள் கட்டப்படும் போதும் எதிர்ப்புத் தெரிவிக்க முடியாது, ஆனால் உண்மையில் எனக்கு ஆத்திரமூட்டுவது எதுவென்றால், பழமை வாய்ந்த, புராதனச் சின்னங்களான கோயில்களுக்குப் பக்கத்தில் கூட அவற்றின் அழகையும், தொன்மையையும், அதன் புனிதத்தையும் குலைக்கும் வகையில் புதுப் புது மிஸனரிமாரினதும் வேற்றுமதக் கட்டிடங்கள் தோன்றி, பழமையான கோயில்களுக்கு நையாண்டி காட்டிச் சவால் விடுவது தான்.

இலங்கையில் கோயில் மதிலைச் சுற்றியோ, கோயிலுக்கு மிக அருகாமையிலோ கடைகள் அனுமதிக்கப்படுவதில்லை, ஆனால் தமிழ்நாட்டில் பழமையான, புனிதமான கோயில்களுக்கு முன்னால் புஹாரி ஹோட்டல் இருக்கும், அர்ச்சனையை முடித்து விட்டு, கோயில் வாசலைக் கடந்தால் கோழி புரியாணி மூக்கைத் துளைக்கும், இப்படியான செயல்கள் மிகவும் அருவருக்கத் தக்கவை, பள்ளிவாசலுக்கு முன்னால், பன்றியிறைச்சிக் கடை வைத்தால் இஸ்லாமியர்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்.

இந்தக் கொடுமையிலும், கொடுமை என்னவென்றால், மதுரை மீனாட்சி கோயில் தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலக இந்துக்கள் அனைவருக்கும் புனிதமானது, மத வேறுபாடற்று முழுத்தமிழர்களாலும் பாதுகாக்கப் பட வேண்டியது. இலங்கையில் கோயிலுக்கு அண்மையிலேயே கடைகளை அனுமதிக்க மாட்டோம், அங்கு கோயிலுக்குள்ளேயே கடைகள், ஒரு கடையின் ஒரமாக தூண்பக்கமாக நான் கழற்றி விட்டுப் போன சப்பாத்தைப் போடப் போனால் அங்கிருந்து கோழி எலும்பைக் கடித்துச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார் ஒருவர். உண்மையில் எந்தளவுக்கு வேதனைப்பட்டேன் என்பதை விவரிக்க முடியாது, அவர் கோழி சாப்பிடுகிறார் என்பதற்காக அல்ல. இலங்கையில் நாங்கள் கோழியை வீட்டில் சாப்பிட்டால் கூட கோயிலுக்குப் போக மாட்டோம்.

அண்மைக்காலம் வரை கம்யூனிச நாடாகவிருந்த ரஸ்யாவில் கூட, அமெரிக்காவிலிருந்து போகும் புதுப்புது மிசனரிமாரின் கிறிஸ்தவம், பழமை வாய்ந்த ரஸ்யாவின் பழமைவாத, கிழக்கு ஐரோப்பிய கிறிஸ்தவத்துக்கு பங்கம் ஏற்படுத்துவதாகக் கருதி, அமெரிக்க மிசனரி , விவிலிய போதனை (Evangelical Christianity) யைக் கட்டுப்படுத்தத் தொடங்கி விட்டார்கள்.

கம்யூனிசம் பேசிய, அதில் வளர்ந்த ரஸ்யாவின் தலைவர்கள் தமது பழமையான கிறிஸ்தவத்தை, இன்னொரு கிறிஸ்தவத்திடமிருந்து பாதுகாக்க முனைவதும் மதவெறியா? இல்லை அவர்கள் தமது நாட்டின் பழமையைப், பாரம்பரியத்தைப் பேணவிரும்புகிறார்கள். அப்படித் தான் இதையும் நினைத்துச் செயல் படவேண்டும்.

இருந்தாலும், எந்தத் தமிழர்களும் வத்திக்கானின் St. Paul Church க்கு அல்லது ஜேர்மனியில் கொலோன் தேவாலயத்துக்குப் பக்கத்திலோ, மெக்காவிலோ இந்துக் கோயிலைக் கட்டுவதற்கு யாரும் அனுமதிக்கப் போவதில்லை,

அதனால் தமிழ்நாட்டின் புராதனமான கோயில்களும் புனித நகரங்களாகப் பிரகடனப் படுத்தப்பட்டு, புதிய கட்டிடங்கள், வேற்று மதச் சின்னங்கள் அகற்றப் பட வேண்டும், அல்லது இனிமேலாவது கட்டப்படாமல் தடை செய்யப்பட வேண்டும்.

இதற்கு உங்களின் கருத்து என்ன? இதை நடைமுறைப் படுத்துவது மதவெறிக்காக அல்ல, புராதனச் சின்னங்களை, எகிப்தியர்கள் சிலைகளை வெறுக்கும் முஸ்லீம்களாக இருந்தாலும் பிரமிட்டுக்களை பாதுகாப்பது போல், தமிழர்களும் தமது பாரம்பரியத்தை, தமிழர்களின் சரித்திரத்தை, தமிழர்களின் கட்டிடக் கலையை, அழகும், புனிதமும் கெடாமல் பாதுகாப்பதற்காகத் தான்.

இணையத்தில் சுட்டது.

நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

xxxxxx

Edited by vengaayam

  • கருத்துக்கள உறவுகள்

******** அது தமிழ்தேசியவிடுதலைப் போருக்கு ஆதரவாகத் தான் எழுதுவதாக நான் உணருகின்றேன்.

யாழ்களத்தின் விதிகளில் ஒன்றே, குறித்த கட்டுரை ஒன்றை இணைக்கின்றபோது, அது எங்கிருந்து பெறப்பட்டது என்பதைச் சொல்ல வேண்டும் என்பதே! அது தான் எந்த எழுத்தாளனையும் ஊக்குவிக்கும்.

குறித்த கருத்து நீக்கப்பட்டதால் அதற்கான பதிலும் நீக்கப்பட்டுள்ளது.-யாழ்பாடி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இணையத்தில் சுட்டது என்றால் அது தொடுப்பாகுமோ? யாழ் களத்தின் நிபந்தனை மூன்றை மீறியதாகவே இது உள்ளது.

பிற தளங்களைப் பிடிக்காவிட்டால் அங்கிருந்து இடுகைகளை எடுக்கக்கூடாதே. அப்படி இட்டால் அவர்களுக்கான தொடுப்பை மறுத்தலாகாதே.

கறுப்பி பதிந்ததை ஆரூரன் உணர்வுகள் வலைப்பூவில் பின்வரும் தொடுப்பில் இட்டிருந்தார்.

http://unarvukal-unarvukal.blogspot.com/20...g-post_284.html

இப்பவாவது தொடுப்புப் போடுவாரோ? இல்லை நிபந்தனை மூன்றை மீறுவாரோ?

இணைப்பினை பதிந்தமைக்கு நன்றிகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

xxxx

Edited by vengaayam

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.