Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுன்னாகம் தண்ணீரின் உண்மை நிலை என்ன?

Featured Replies

சுன்னாகம் தண்ணீரின் உண்மை நிலை என்ன? அருணன் நிமலேந்திரா – அம்ரித் பெர்னான்டோ:-

சுன்னாகம் தண்ணீரின் உண்மை நிலை என்ன?

  • அருணன் நிமலேந்திரா

அம்ரித் பெர்னான்டோ

  • இரண்டு இலட்சம் மக்களின் வாழ்வை அபாயத்துக்குள்ளாக்கும் அறிஞர்களின் அறிக்கை?
  • இலங்கையில் தமிழர்களின் கடைசி அடையாளமாகக் கருதப்படும் யாழ்ப்பாணம் தனது கல்வியை, ஒழுக்க விழுமியத்தை, தனித்துவத்தை மெல்ல மெல்ல இழந்து வருகிறதா?

தண்ணீர் மக்களது அடிப்படையான உரிமை

Water is the basic human rights

இலங்கையில் 30 வருடங்களுக்கு மேலாக நீண்ட யுத்தம் முள்ளிவாய்க்கால் பேரழிவுடன் முடிவுக்கு வந்தாலும் இன்றுவரை தமிழ் மக்கள் பல்வேறு அழிவுகளை சந்தித்த வண்ணமே உள்ளனர். இலங்கையின் வடபகுதி யாழ்ப்பாணத்தின் வலிகாமம் பகுதி நன்னீர் வளமானது பன்னாட்டு நிறுவனத்தால் 2008 இல் நஞ்சாக்கப்பட்டது.  அழிக்கப்பட்டது. 2014 இல் ஏறத்தாழ 2 இலட்சத்துக்கும் அதிகமான வலிகாமம் மக்களின் நீர் வளமானது கழிவு எண்ணெயால் நஞ்சாக்கப்பட்டமை மெல்ல மெல்லத் தெரிய வந்தது. நஞ்சாக்கப்பட்ட சுன்னாகம் நீரை இன்றும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் உணவுக்கும் விவசாயம் மற்றும் கால்நடைகளுக்கும் பயன்படுத்தி வருகின்றார்கள்.

ஏறத்தாழ 4 இலட்சம் இலீற்றர் மின்உற்பத்திக்கு பாவிக்கப்பட்ட கழிவு எண்ணெயானது  சுன்னாகம் மின்நிலைய வளாகத்தின் நிலத்தடி நீர்ப்படுக்கையினுள் செலுத்தப்பட்டது.

சுன்னாகம் தண்ணீர் கழிவு ஓயில் பாதிப்பின் பின்னணி

11

10

சுன்னாகம் மின்சாரசபை வளாகத்தில் புதைக்கப்பட்ட கழிவு எண்ணெய் மின்சாரசபை வளாகத்துக்கு அண்மையில் உள்ள விவசாயக் கிணறுகளில் 2008 இல் வெளித் தெரிந்ததைத் தொடர்ந்து அப்போதைய யாழ்ப்பாண அரசாங்க அதிபர் கணேஷ் அவர்களினால் சுன்னாகம் மின்சாரசபைப் பொறியியலாளருக்கு எழுதப்பட்ட கடிதத்தை 2015 இல் தோன்றிய நிபுணர் குழு கண்டு கொள்ள வில்லை.

2009 இல் சுன்னாகம் தெற்குப் பகுதிக்குப் பரவிய கழிவு ஒயிலானது படிப்படியாக வடக்குத் திசையாக நகர்ந்து சுன்னாகம் கிழக்கு, ஊரெழு, மயலணி, சூராவத்தை, ஏழாலை, மல்லாகம், தெல்லிப்பழை முதலான இடங்களிலுள்ள கிணறுகளுக்குப் பரவ ஆரம்பித்ததைத் தொடர்ந்து பொதுமக்களால் 2010 முதல் 2015 வரை உடுவில் மற்றும் தெல்லிப்பழை சுகாகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளுக்கு முறைப்பாடு செய்யப்பட்டது.

2013 இல் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் காரைநகருக்குப் ஊரெழு பொக்கணையில் இருந்து வழங்கப்பட்ட குடிதண்ணீரில் எண்ணெயினது மணமும் தண்ணீரின் நிறமாற்றமும் பொதுமக்களால் அவதானிக்கப்பட்டு முறையிடப்பட்டதைத் தொடர்ந்து தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து தே.நீ.வ.வ.அமைப்புச் சபை 2014 இல் 150 கிணறுகளை ஆய்வு செய்து 73 சதவீதமான கிணறுகளில் கழிவு எண்ணைய் பரவியிருந்ததை உறுதிப்படுத்தியது.

2015 பெப்பிரவரியில்  கொழும்பிலுள்ள சுகாதார அமைச்சினது அதிகாரிகள் வலிகாமம் பகுதிக்கு நேரடியாக வருகை தந்து ஆய்வு செய்து கோப்பாய், உடுவில், தெல்லிப்பழை மற்றும் சண்டிலிப்பாய் ஆகிய 4 சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள 30 கிணற்று நீர் மாதிரிகளை அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு அனுப்பி பரிசோதித்ததில் 30 கிணறுகளிலும் எண்ணெயும் கிறீசும் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

தன்னை ஒரு சூழலியலாளயானக் காட்டிக் கொள்ளும் விஞ்ஞான முதுமாணிப் பட்டதாரியான வடமாகாண விவசாய அமைச்சர் ஆரம்பத்தில் நிலத்தடி நீரை நஞ்சாக்கிய இலங்கை மின்சாரசபையையும் நொதேண் பவர் நிறுவனத்தையும் குற்றம் சாட்டி வந்தார். பின்னர் சடுதியாக பிரச்சினையைத் திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டார்.

“சுன்னாகத்தில் நைத்திரேற் பிரச்சினை அபாயம் உள்ளது, எரிபொருள் நிரப்பும் நிலையங்களிலிருந்து வெளியேறும் பெற்றோலியமே நிலத்தடி நீரில் கலந்துள்ளது, கோண்டாவிலில் உள்ள இலங்கை வட பிராந்திய போக்குவரத்துச் சபை சேவை நிலையத்தில் நிலத்தில் விடப்படும் கழிவு எண்ணையாலும் நீர்மாசடைகிறது என்று பிரச்சினையைத் திசை திருப்பி எம் ரி டீ வோர்க்கர்ஸ் என்ற பன்னாட்டு நிறுவனத்தைப் பாதுகாக்கும் முயற்சியில் இறங்கினார். 2014 நடுப்பகுதியில் இருந்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிப்பதையும் தவிர்த்து வந்த அமைச்சர் ஐங்கரநேசனும் அவரால் பணத்துக்காக அமர்த்தப்பட்ட போலிநிபுணர்களும் இன்று வரை சுன்னாகம் தண்ணீர் பற்றிய எந்த ஒரு தொலைக்காட்சி விவாதத்திற்கோ அன்றி பகிரங்க விவாதத்துக்கோ முன்வந்ததில்லை.

 8

நிபுணர்குழு திடீரென (7,டிசம்பர் 2015 ) தனது ஆய்வு அறிக்கையை வெளியிட்டதன் பின்னணி என்ன ?

இலண்டனில் உள்ள எம் ரி டீ வோர்க்கர்ஸ் (MTD walkers) என்ற பன்னாட்டு நிறுவனத்தையும் அதன் உப நிறுவனமான நொதேண் பவரையும் காப்பாற்ற வடகாணசபை என்ற பெயரில் ஐங்கரநேசன் என்ற தனிநபரால் அமைக்கப்பட்ட போலியான நிபுணர்குழுவின் அறிக்கையை வடமாகாண முதலமைச்சர் 7 டிசம்பர் 2015 அன்று வெளியிட்டார். இந்நிறுவனம் 2 இலட்சம் மக்களின் வாழ்வாதாரமான குடிநீரை அழித்தது. மகாணசபையும் அமைச்சரும் தமிழினத்தை அழிக்க பணத்துக்காகத் துணைபோனதுடன். புத்தியீவிகளான நிபுணர்கள் பணம் மற்றும் பதவிக்காக அறிவுக்கொலை புரிந்தாக பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகிறார்கள்.

இலண்டனில் MTD walkers என்ற நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யும் நோக்கில் சட்டத்தரணி ஒருவர் MTD walkers நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய போது MTD walkers இடமிருந்து சட்டத்தரணிக்கு அனுப்பப்பட்ட பதிலில் – “அடுத்தவாரம் வடமாகாண சபை இது பற்றி அதாவது ஒயில் மாசு இல்லை என்ற அறிக்கையை வெளியிடும் ” என்றும் “வடமாகாண சபை இது பற்றி நன்கு அறிந்திருப்பதாகவும்” குறிப்பிட்டிருந்தது. கடந்த பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் நிபுணர்குழுவின் அறிக்கையை வெளியிடப்போவதாக அறிவித்தவர்கள் 9 மாதங்களாகக் காலம் கடத்தினார்கள்?

MTD walkers குறிப்பிட்டது போன்று அமைச்சர் தன்னிச்சையாக அமைத்த போலியான நிபுணர் குழு சுன்னாகம் நீரில் எந்தவித ஒயில் மாசும் இல்லை என்று MTD walkers இனது பதில் சட்டத்தரணிக்குக் கிடைத்த அடுத்த வாரத்தில் அறிவித்தது. நிபுணர் குழு யாழ் பொது நூலகத்தில் வைத்து மாண்புமிக முதலமைச்சரிடம் அறிக்கையை கையளித்து பல் தேசியக் கம்பனியைக் காப்பாற்றியது.

நிபுணர் குழு தனது அறிக்கையில் பெற்றோலியத்தில் காணப்படும் BTEX (பிரெக்ஸ் – BTEX is an acronym that stands for benzene, toluene, ethylbenzene, and xylenes. These compounds are some of the volatile organic compounds (VOCs) found in petroleum derivatives such as petrol (gasoline). Toluene, ethylbenzene, and xylenes have harmful effects on the central nervous system.) தமது ஆய்வின் போது சுன்னாகம் நீர்மாதிரிகளில் காணப்பட வில்லை என்று கூறுவது அதன் நம்பகத்தன்மையை கேள்விக்கு உட்படுத்துவதாக உள்ளது. ஏனெனில் பாவிக்கப்பட்ட ஒயிலில் பிரெக்ஸ் இருக்காது என்பது வெளிப்படையான விடயம். நிபுணர் குழு  ஒயில் இல்லை என்றால்  தமது கிணறுகளில் தெரியும் ஒயில் படலம் என்ன என்று பொது மக்கள் கேட்கிறார்கள்.

வடமாகாண சபை அமைத்த நிபுணர் குழுவைச் சேர்ந்த எந்திரி அற்புதராஜா அரச இரசாயனப் பகுப்பாய்வின் அறிக்கையை கொழும்பு சுகாதார அமைச்சுக்குச் சென்று ஆய்வு செய்தும் ஏன் அதனைப் பற்றி நிபுணர் குழு அறிக்கையிலோ பத்திரிகையாளர் சந்திப்பிலோ குறிப்பிட வில்லை? வைத்திய நிபுணர் நச்சினார்க்கினியார் சுன்னாகத்தில் நைத்திரேற் என்றும் மலக்கழிவு என்றும் கதை கூறுகிறார்.

யாழ்ப்பாணம் தனது கல்வியை, ஓழுக்க விழுமியத்தை, கல்வியால் பெற்ற அறத்தை, தனித்துவத்தை மெல்ல மெல்ல இழந்து வருகிறதா?

நாடாளுமன்றப் பொதுத் தேர்தலோடு சுன்னாகம் மக்களைக் கைவிட்டுச் சென்றவர்கள் பலர் இருக்கிறார்கள். சுன்னாகம் தூய நீருக்கான மக்கள் ஒன்றியம் தேர்தலோடு முடங்கிப்போனது! வைத்திய கலாநிதி ஆர்.சிவசங்கர் நிபுணர்குழுவின் அறிக்கை பற்றி மூச்சும் விடவில்லை. தமிழ் மக்களுக்காக – உண்மைக்காக – பாதிக்கப்பட்ட மக்களுக்கா , நீதி கிடைக்க , குரல் தருவதற்கு எந்த அரசியல் கட்சியுமில்லை? எந்த தனிநபரான அரசியல் வாதியுமில்லை – எந்த அமைப்பும் கூட இல்லை, தமது மக்கள் ஒயில் கலந்த நீரை அருந்திக் கொண்டிருக்க பிடில் வாசித்துக் கொண்டிருக்கும் ஒரு முதலமைச்சர் தமிழர்களுக்குத் தேவையா ? என்று சுன்னாகம் மக்கள் கேட்கிறார்கள்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண பிரதேச சபை  உறுப்பினர்கள் தங்களது மக்களைக் கைவிட்டு பணத்தைப் பெற்றுக் கொண்டு அரசியல் செய்கிறார்கள்??? நொதேண்  பவருக்கும் வலிகாகம் பகுதி பாரளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவுக்கும்  இடையில் பங்கு பண  பரிமாற்றம் நடை பெற்றதாக பெயர் குறிப்பிட விரும்பாத மாகாண சபை உறுப்பினர் ஒருவர் உறுதியாகத் தெரிவிக்கிறார்.

7

5

சுன்னாகம் நிலத்தடி நீர் கழிவு ஒயிலால் நஞ்சாக்கப்பட்டதற்கு தீர்வு தான் என்ன?

  • சுன்னாகம் மின்னிலைய வளாகம் சுயாதீனமான ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
  • பிறநாடுகளில் இது போன்ற அனர்த்தங்களின் போது மேற்கொள்ளப்பட்ட பொறிமுறையும் தொழிநுட்ப அறிவும் அனுபவமிக்க அறிஞர்களின் ஆலோசனையும் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும்
  • மின்நிலைய வளாகத்தின் நிலத்தடி நீர்ப்படுக்கையினுள் செலலுத்தப்பட்ட கழிவு எண்ணெய் அகற்றப்பட்டு நஞ்சாக்கப்பட்ட நீரானது சுத்திகரிக்கப்பட வேண்டும். முக்கியமாக கழிவு எண்ணெய்கள் சென்ற நிலம்,கிணறுகள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட வேண்டும்.
  • பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்படுவது தொடர்பில் தகவல் வெளிப்படுத்தப்படவேண்டும்.
  • பொதுமக்கள் தண்ணீரை அருந்த முடியுமா என்ற விடயம் தெளிவு படுத்தப்பட வேண்டும்.
  • தொடர்ச்சியான ஆய்வுகள் செய்யப்பட்டு ஒயில் மாசு இல்லை என்று உறுதிப்படுத்தும் வரை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சீரான நீர் விநியோகம் உறுதிப்படுத்தப் பட வேண்டும்
  • பாதிக்கப்பட்ட பிரதேச மக்கள் அனைவருக்கும் மருத்துவப்பரிசோதனை செய்யப்பட்டு, அவர்களின் வாழ்வாதாரம் உறுதிப்படுத்தப்படவேண்டும்.
      • பொதுமக்கள் தண்ணீரை அருந்த முடியுமா என்ற விடயம் தெளிவு படுத்தப்பட வேண்டும்.
      • தொடர்ச்சியான ஆய்வுகள் செய்யப்பட்டு ஒயில் மாசு இல்லை என்று உறுதிப்படுத்தும் வரை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சீரான நீர் விநியோகம் உறுதிப்படுத்தப் பட வேண்டும்பாதிக்கப்பட்ட பிரதேச மக்கள் அனைவருக்கும் மருத்துவப்பரிசோதனை செய்யப்பட்டு, அவர்களின் வாழ்வாதாரம் உறுதிப்படுத்தப்படவேண்டும்.
          • சுன்னாகம் மின்னிலைய வளாகம் சுயாதீனமான ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.பிறநாடுகளில் இது போன்ற அனர்த்தங்களின் போது மேற்கொள்ளப்பட்ட பொறிமுறையும் தொழிநுட்ப அறிவும் அனுபவமிக்க அறிஞர்களின் ஆலோசனையும் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும்
            • இரண்டு இலட்சம் மக்களின் வாழ்வை அபாயத்துக்குள்ளாக்கும் அறிஞர்களின் அறிக்கை?
            • இலங்கையில் தமிழர்களின் கடைசி அடையாளமாகக் கருதப்படும் யாழ்ப்பாணம் தனது கல்வியை, ஒழுக்க விழுமியத்தை, தனித்துவத்தை மெல்ல மெல்ல இழந்து வருகிறதா?பாதிப்புக்கு உள்ளான மக்கசுன்னாகம் தண்ணீரின் உண்மை நிலை என்ன?
              • அருணன் நிமலேந்திரா

              அம்ரித் பெர்னான்டோ

            தண்ணீர் மக்களது அடிப்படையான உரிமை

            Water is the basic human rights

            இலங்கையில் 30 வருடங்களுக்கு மேலாக நீண்ட யுத்தம் முள்ளிவாய்க்கால் பேரழிவுடன் முடிவுக்கு வந்தாலும் இன்றுவரை தமிழ் மக்கள் பல்வேறு அழிவுகளை சந்தித்த வண்ணமே உள்ளனர். இலங்கையின் வடபகுதி யாழ்ப்பாணத்தின் வலிகாமம் பகுதி நன்னீர் வளமானது பன்னாட்டு நிறுவனத்தால் 2008 இல் நஞ்சாக்கப்பட்டது.  அழிக்கப்பட்டது. 2014 இல் ஏறத்தாழ 2 இலட்சத்துக்கும் அதிகமான வலிகாமம் மக்களின் நீர் வளமானது கழிவு எண்ணெயால் நஞ்சாக்கப்பட்டமை மெல்ல மெல்லத் தெரிய வந்தது. நஞ்சாக்கப்பட்ட சுன்னாகம் நீரை இன்றும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் உணவுக்கும் விவசாயம் மற்றும் கால்நடைகளுக்கும் பயன்படுத்தி வருகின்றார்கள்.

            ஏறத்தாழ 4 இலட்சம் இலீற்றர் மின்உற்பத்திக்கு பாவிக்கப்பட்ட கழிவு எண்ணெயானது  சுன்னாகம் மின்நிலைய வளாகத்தின் நிலத்தடி நீர்ப்படுக்கையினுள் செலுத்தப்பட்டது.

            சுன்னாகம் தண்ணீர் கழிவு ஓயில் பாதிப்பின் பின்னணி

            4

            சுன்னாகம் மின்சாரசபை வளாகத்தில் புதைக்கப்பட்ட கழிவு கழிவு எண்ணெய் மின்சாரசபை வளாகத்துக்கு அண்மையில் உள்ள விவசாயக் கிணறுகளில் 2008 இல் வெளித் தெரிந்ததைத் தொடர்ந்து அப்போதைய யாழ்ப்பாண அரசாங்க அதிபர் கணேஷ் அவர்களினால் சுன்னாகம் மின்சாரசபைப் பொறியியலாளருக்கு எழுதப்பட்ட கடிதத்தை 2015 இல் தோன்றிய நிபுணர் குழு கண்டு கொள்ள வில்லை.

            2009 இல் சுன்னாகம் தெற்குப் பகுதிக்குப் பரவிய கழிவு ஒயிலானது படிப்படியாக வடக்குத் திசையாக நகர்ந்து சுன்னாகம் கிழக்கு, ஊரெழு, மயலணி, சூராவத்தை, ஏழாலை, மல்லாகம், தெல்லிப்பழை முதலான இடங்களிலுள்ள கிணறுகளுக்குப் பரவ ஆரம்பித்ததைத் தொடர்ந்து பொதுமக்களால் 2010 முதல் 2015 வரை உடுவில் மற்றும் தெல்லிப்பழை சுகாகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளுக்கு முறைப்பாடு செய்யப்பட்டது.

            2013 இல் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் காரைநகருக்குப் ஊரெழு பொக்கணையில் இருந்து வழங்கப்பட்ட குடிதண்ணீரில் எண்ணெயினது மணமும் தண்ணீரின் நிறமாற்றமும் பொதுமக்களால் அவதானிக்கப்பட்டு முறையிடப்பட்டதைத் தொடர்ந்து தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து தே.நீ.வ.வ.அமைப்புச் சபை 2014 இல் 150 கிணறுகளை ஆய்வு செய்து 73 சதவீதமான கிணறுகளில் கழிவு எண்ணைய் பரவியிருந்ததை உறுதிப்படுத்தியது.

            2015 பெப்பிரவரியில்  கொழும்பிலுள்ள சுகாதார அமைச்சினது அதிகாரிகள் வலிகாமம் பகுதிக்கு நேரடியாக வருகை தந்து ஆய்வு செய்து கோப்பாய், உடுவில், தெல்லிப்பழை மற்றும் சண்டிலிப்பாய் ஆகிய 4 சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள 30 கிணற்று நீர் மாதிரிகளை அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு அனுப்பி பரிசோதித்ததில் 30 கிணறுகளிலும் எண்ணெயும் கிறீசும் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

            தன்னை ஒரு சூழலியலாளயானக் காட்டிக் கொள்ளும் விஞ்ஞான முதுமாணிப் பட்டதாரியான வடமாகாண விவசாய அமைச்சர் ஆரம்பத்தில் நிலத்தடி நீரை நஞ்சாக்கிய இலங்கை மின்சாரசபையையும் நொதேண் பவர் நிறுவனத்தையும் குற்றம் சாட்டி வந்தார். பின்னர் சடுதியாக பிரச்சினையைத் திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டார்.

            “சுன்னாகத்தில் நைத்திரேற் பிரச்சினை அபாயம் உள்ளது, எரிபொருள் நிரப்பும் நிலையங்களிலிருந்து வெளியேறும் பெற்றோலியமே நிலத்தடி நீரில் கலந்துள்ளது, கோண்டாவிலில் உள்ள இலங்கை வட பிராந்திய போக்குவரத்துச் சபை சேவை நிலையத்தில் நிலத்தில் விடப்படும் கழிவு எண்ணையாலும் நீர்மாசடைகிறது என்று பிரச்சினையைத் திசை திருப்பி எம் ரி டீ வோர்க்கர்ஸ் என்ற பன்னாட்டு நிறுவனத்தைப் பாதுகாக்கும் முயற்சியில் இறங்கினார். 2014 நடுப்பகுதியில் இருந்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிப்பதையும் தவிர்த்து வந்த அமைச்சர் ஐங்கரநேசனும் அவரால் பணத்துக்காக அமர்த்தப்பட்ட போலிநிபுணர்களும் இன்று வரை சுன்னாகம் தண்ணீர் பற்றிய எந்த ஒரு தொலைக்காட்சி விவாதத்திற்கோ அன்றி பகிரங்க விவாதத்துக்கோ முன்வந்ததில்லை.

             3

            நிபுணர்குழு திடீரென (7,டிசம்பர் 2015 ) தனது ஆய்வு அறிக்கையை வெளியிட்டதன் பின்னணி என்ன ?

            இலண்டனில் உள்ள எம் ரி டீ வோர்க்கர்ஸ் (MTD walkers) என்ற பன்னாட்டு நிறுவனத்தையும் அதன் உப நிறுவனமான நொதேண் பவரையும் காப்பாற்ற வடகாணசபை என்ற பெயரில் ஐங்கரநேசன் என்ற தனிநபரால் அமைக்கப்பட்ட போலியான நிபுணர்குழுவின் அறிக்கையை வடமாகாண முதலமைச்சர் 7 டிசம்பர் 2015 அன்று வெளியிட்டார். இந்நிறுவனம் 2 இலட்சம் மக்களின் வாழ்வாதாரமான குடிநீரை அழித்தது. மகாணசபையும் அமைச்சரும் தமிழினத்தை அழிக்க பணத்துக்காகத் துணைபோனதுடன். புத்தியீவிகளான நிபுணர்கள் பணம் மற்றும் பதவிக்காக அறிவுக்கொலை புரிந்தாக பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகிறார்கள்.

            இலண்டனில் MTD walkers என்ற நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யும் நோக்கில் சட்டத்தரணி ஒருவர் MTD walkers நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய போது MTD walkers இடமிருந்து சட்டத்தரணிக்கு அனுப்பப்பட்ட பதிலில் – “அடுத்தவாரம் வடமாகாண சபை இது பற்றி அதாவது ஒயில் மாசு இல்லை என்ற அறிக்கையை வெளியிடும் ” என்றும் “வடமாகாண சபை இது பற்றி நன்கு அறிந்திருப்பதாகவும்” குறிப்பிட்டிருந்தது. கடந்த பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் நிபுணர்குழுவின் அறிக்கையை வெளியிடப்போவதாக அறிவித்தவர்கள் 9 மாதங்களாகக் காலம் கடத்தினார்கள்?

            MTD walkers குறிப்பிட்டது போன்று அமைச்சர் தன்னிச்சையாக அமைத்த போலியான நிபுணர் குழு சுன்னாகம் நீரில் எந்தவித ஒயில் மாசும் இல்லை என்று MTD walkers இனது பதில் சட்டத்தரணிக்குக் கிடைத்த அடுத்த வாரத்தில் அறிவித்தது. நிபுணர் குழு யாழ் பொது நூலகத்தில் வைத்து மாண்புமிக முதலமைச்சரிடம் அறிக்கையை கையளித்து பல் தேசியக் கம்பனியைக் காப்பாற்றியது.

            நிபுணர் குழு தனது அறிக்கையில் பெற்றோலியத்தில் காணப்படும் BTEX (பிரெக்ஸ் – BTEX is an acronym that stands for benzene, toluene, ethylbenzene, and xylenes. These compounds are some of the volatile organic compounds (VOCs) found in petroleum derivatives such as petrol (gasoline). Toluene, ethylbenzene, and xylenes have harmful effects on the central nervous system.) தமது ஆய்வின் போது சுன்னாகம் நீர்மாதிரிகளில் காணப்பட வில்லை என்று கூறுவது அதன் நம்பகத்தன்மையை கேள்விக்கு உட்படுத்துவதாக உள்ளது. ஏனெனில் பாவிக்கப்பட்ட ஒயிலில் பிரெக்ஸ் இருக்காது என்பது வெளிப்படையான விடயம். நிபுணர் குழு  ஒயில் இல்லை என்றால்  தமது கிணறுகளில் தெரியும் ஒயில் படலம் என்ன என்று பொது மக்கள் கேட்கிறார்கள்.

            வடமாகாண சபை அமைத்த நிபுணர் குழுவைச் சேர்ந்த எந்திரி அற்புதராஜா அரச இரசாயனப் பகுப்பாய்வின் அறிக்கையை கொழும்பு சுகாதார அமைச்சுக்குச் சென்று ஆய்வு செய்தும் ஏன் அதனைப் பற்றி நிபுணர் குழு அறிக்கையிலோ பத்திரிகையாளர் சந்திப்பிலோ குறிப்பிட வில்லை? வைத்திய நிபுணர் நச்சினார்க்கினியார் சுன்னாகத்தில் நைத்திரேற் என்றும் மலக்கழிவு என்றும் கதை கூறுகிறார்.

            யாழ்ப்பாணம் தனது கல்வியை, ஓழுக்க விழுமியத்தை, கல்வியால் பெற்ற அறத்தை, தனித்துவத்தை மெல்ல மெல்ல இழந்து வருகிறதா?

            2

            நாடாளுமன்றப் பொதுத் தேர்தலோடு சுன்னாகம் மக்களைக் கைவிட்டுச் சென்றவர்கள் பலர் இருக்கிறார்கள். சுன்னாகம் தூய நீருக்கான மக்கள் ஒன்றியம் தேர்தலோடு முடங்கிப்போனது! வைத்திய கலாநிதி ஆர்.சிவசங்கர் நிபுணர்குழுவின் அறிக்கை பற்றி மூச்சும் விடவில்லை. தமிழ் மக்களுக்காக – உண்மைக்காக – பாதிக்கப்பட்ட மக்களுக்கா , நீதி கிடைக்க , குரல் தருவதற்கு எந்த அரசியல் கட்சியுமில்லை? எந்த தனிநபரான அரசியல் வாதியுமில்லை – எந்த அமைப்பும் கூட இல்லை, தமது மக்கள் ஒயில் கலந்த நீரை அருந்திக் கொண்டிருக்க பிடில் வாசித்துக் கொண்டிருக்கும் ஒரு முதலமைச்சர் தமிழர்களுக்குத் தேவையா ? என்று சுன்னாகம் மக்கள் கேட்கிறார்கள்?

            தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண பிரதேச சபை  உறுப்பினர்கள் தங்களது மக்களைக் கைவிட்டு பணத்தைப் பெற்றுக் கொண்டு அரசியல் செய்கிறார்கள்??? நொதேண்  பவருக்கும் வலிகாகம் பகுதி பாரளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவுக்கும்  இடையில் பங்கு பண  பரிமாற்றம் நடை பெற்றதாக பெயர் குறிப்பிட விரும்பாத மாகாண சபை உறுப்பினர் ஒருவர் உறுதியாகத் தெரிவிக்கிறார்.

            1

            சுன்னாகம் நிலத்தடி நீர் கழிவு ஒயிலால் நஞ்சாக்கப்பட்டதற்கு தீர்வு தான் என்ன?

        • மின்நிலைய வளாகத்தின் நிலத்தடி நீர்ப்படுக்கையினுள் செலலுத்தப்பட்ட கழிவு எண்ணெய் அகற்றப்பட்டு நஞ்சாக்கப்பட்ட நீரானது சுத்திகரிக்கப்பட வேண்டும். முக்கியமாக கழிவு எண்ணெய்கள் சென்ற நிலம்,கிணறுகள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட வேண்டும்.

        • பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்படுவது தொடர்பில் தகவல் வெளிப்படுத்தப்படவேண்டும்.

    • பாதிப்புக்கு உள்ளான மக்களிற்கு நட்ட ஈடு வழங்கப்படவேண்டும்.

    சுன்னாகம் தண்ணீர் பிரச்சினை தீர்க்கப்பட இதய சுத்தியுள்ள தமிழ் அரசியல் தலைவர்கள் எவருமே இல்லையா?

    இந்தியாவில் உள்ள  டொக்ரர் உதே என்ற அனுபவம் மிக்க நிபுணரை அழைத்து சுன்னாகம் நிலத்தடி நீரல் கலந்த ஓயில் மாசினை அகற்ற சில தனிநபர்கள் முயன்றனர். ஆனால் ஒரு அரசாங்கம் அழைக்காமல் டொக்ரர் உதே வரமுடியாது என்ற நிலை காணப்படுகிறது. நிபுணர் குழுவைக் கொண்டு தமது மக்களுக்குப் பேரவலத்தை ஏற்படுத்த முனையும் வடமாகாணசபை எப்படி சுன்னாகம் மக்களது அடிப்படை உரிமையான தூய நீரைப் பெற்றுக் கொடுக்க முன்வரும் என்று தமிழ் இளையோர் கேட்கின்றனர்.

    தமிழர் மண்மீட்கப் போராடினர். தமிழ்த் தலைவர்கள் தனித் தமிழ்ஈழம் கேட்டனர். பலர் ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமஷ்டியாவது கிடைக்கப் பிரார்த்தித்தனர். ஆனால் இன்று தமிழ்த்தலைவர்களால் ஒரு (வட)மாகாண சபையைக் கூட மக்கள் நலன் சார்ந்து நடத்தத் தெரியவில்லை? வடமாகாண முதலமைச்சரும், வடக்கின் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது தமிழ் இன அடையாளம், தமிழ் இன அழிப்புப் பற்றி அதிகம் குரல் கொடுப்பது எமக்கு நகைப்பைத் தருகிறது.

     “ குஞ்சியழகும் கொடுந்தானைக் கோட்டழகும்

    மஞ்சள் அழகும் அழகல்ல நெஞ்சத்து

    நல்லம்யாம் என்னும் நடுவுநிலைமையால்

    கல்வி அழகே அழகு.  (நாலடியார் 131)

    ளிற்கு நட்ட ஈடு வழங்கப்படவேண்டும்.

http://globaltamilnews.net/archives/4665

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.