Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரணைமடு நீர்ப்பாசனத் திட்டத்தில் பசுமாடுகள் வளர்ப்புத் திட்டம்!

Featured Replies

இரணைமடு நீர்ப்பாசனத் திட்டத்தில் பசுமாடுகள் வளர்ப்புத் திட்டம்!

இரணைமடு நீர்ப்பாசன அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் கிளிநொச்சியில் பசுமாடுகள் வளர்ப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட 28 பயனாளிகளுக்கு நேற்று வெள்ளிக்கிழமை (28.10.2016) வடக்கு விவசாய மற்றும் கால்நடை அபிவிருத்தித்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலப்பினப் பசுமாடுகளை வழங்கி வைத்து இத்திட்டத்தைச் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார்.

இரணைமடு நீர்ப்பாசன அபிவிருத்தித் திட்டம் விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதி நிறுவனத்தின் இலகு கடன் வசதியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இரணைமடுக்குள நீர் வழங்கு பிரதேசத்தின் கட்டுமானங்களைப் புனரமைத்து நீர் விநியோகப் பொறிமுறையை சீர் செய்வதன் மூலம் நெல் உற்பத்தியையும், அதனுடன் இணைந்ததாக மறுவயல் பயிர்ச் செய்கையையும் கால்நடை உற்பத்தியையும் ஊக்குவிக்குவிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையிலே இரணைமடு நீர்பாசன அபிவிருத்தித் திட்டத்துடன் இணைந்ததாக, இப்பிரதேசத்துக்குப் பொருத்தமான கலப்பினப் பசுக்களை வழங்கும் திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு, இரண்டுக்கு மேல் தங்கிவாழ்வோரைக் கொண்ட பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு 208 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இருந்து முதற்கட்டமாக 28 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு தென்இலங்கையில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட கலப்பினப் பசுமாடுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. ஏனையவர்களுக்கும் கட்டம் கட்டமாக வழங்கப்படவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் வடமாகாணசபை உறுப்பினர்கள் அ.பசுபதிப்பிள்ளை, ப.அரியரத்தினம், வை.தவநாதன், கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் சி.வசீகரன், பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் எந்திரி ந.சுதாகரன் ஆகியோரும் கலந்து கெண்டிருந்தார்கள்.

0201-308-205-21003

http://thuliyam.com/?p=46368

 

வடமாகாண விவசாய அமைச்சரால் கிளிநொச்சியில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட கலப்பின மாடுகள்!

வடமாகாண விவசாய அமைச்சரால் கிளிநொச்சியில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட கலப்பின மாடுகள்!

விவசாய திணைக்களத்தின் இரணைமடு நீர்ப்பாசன அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இன்று (28-10-2016) இருபத்தெட்டு பயனாளிகளுக்கு கிளிநொச்சியில் கலப்பின மாடுகள் வழங்கப்பட்டுள்ளது.

வடமாகாண விவசாய, கால்நடை, நீர்ப்பாசனம், சூழல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு கலப்பின மாடுகளை பயனாளிகளுக்கு கையளித்த இந்நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர்கள் பசுபதிப்பிள்ளை, அரியரத்தினம், தவநாதன், இரணைமடு நீர்ப்பாசன அபிவிருத்தித் திட்டப் பணிப்பாளர் எந்திரி சுதாகரன் மற்றும் விவாசாய, கால்நடைத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.

10

12

18

58

43

53

http://thuliyam.com/?p=46262

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவிடயம்....

இப்படியொரு திட்டம்

பொருண்மிய மேன்பாட்டுத்துறையால்  ஆரம்பிக்கப்பட்டிருந்தது

2003 இல் நானே நேரே போய் பார்த்தேன்

சினைப்படுத்தல் உட்பட பலதும் வெளிநாட்டவர்களின் தொழில் நுட்ப அறிவு மற்றும் பொருளாதார உதவிகளூடாக செயற்படுத்தப்பட்டிருந்தது.

ஒரு மாட்டின் அளவைப்பார்த்து நானே அசந்துவிட்டேன்

ஆனால் இங்கு  மாடுகளைப்பார்த்தால்........???

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.