Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் ஆறு தொழில் பயிற்சி நிலையங்கள்! இளைஞர்கள் ஆர்வம் காட்டுவதில்லை என குற்றச்சாட்டு

Featured Replies

யாழ். மாவட்ட மாணவர்களுக்கான தொழில் பயிற்சிகளை வழங்குவதற்காக திறன்கள் அபிவிருத்தி மற்றும் வாழ்க்கைத் தொழில் பயிற்சி அமைச்சின் கீழ் ஆறு தொழிற்பயிற்சி நிலையங்கள் காணப்படுகின்றன.எனினும் இவற்றில் இணைந்து கற்பவர்களின் தொகை மிகவும் குறைவாக உள்ளதாக யாழ். மாவட்ட மாணவர்களுக்குத் தொழிற்பயிற்சிக்கான சந்தர்ப்பத்தை வழங்கும் திறன்கள் அபிவிருத்தி மற்றும் வாழ்க்கைத் தொழில் பயிற்சி அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கவலை வெளியிட்டனர்.

யாழ்.குடாநாட்டு இளைஞர், யுவதிகள் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்கும் நோக்குடன் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்று யாழ். வர்த்தக சங்க மண்டபத்தில், யாழ். வர்த்தக சங்கத் தலைவர் இ. ஜெயசேகரம் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது இந்த கலந்துரையாடலில், இலங்கை அரசாங்கம் 2005 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்திய திட்டம் தேசிய தொழில் தகமை திட்டமாகும். (NVQ) தாங்கள் தெரிவு செய்து கற்கும் துறையில் இந்தத் திட்டத்தின் மூலம் தரமான சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

கல்வியியலில் மாணவர்களின் அடைவு மட்டம் O|L, A|L, பட்டப்படிப்புக்கள் எனப் படிப்படியாக உயர்ந்து செல்வது போல தொழில் துறையில் NVQ சான்றிதழானது தேசிய ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள தேசிய தொழில் தகைமை முறையாகும்.

எதிர்காலத் தொழில் சந்தையில் அங்கீகரிக்கப்பட்ட தொழில் தகமைச் சான்றிதழ்களாக NVQ சான்றிதழ்களே ஏற்றுக் கொள்ளப்படும். மூன்றாம் நிலைக் கல்வித் தொழில்கல்வி ஆணைக்குழுவின்(TVEC) அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் மூன்றாம் நிலைக் கல்வி தொழில்கல்வி ஆணைக் குழுவினால் சான்றுப்படுத்தப்பட்ட பயிற்சி நெறிகளைப் பின்பற்றுவதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

மேலும் தற்போதைய காலகட்டத்தில் இளைஞர், யுவதிகள் தரமற்ற சான்றிதழ்களைப் பெற்றுத் தமது எதிர்காலத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே, அவர்கள் தரமான சான்றிதழ்களைப் பெற்றுத் தமது எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்ள வேண்டும்

இளைஞர், யுவதிகள் மட்டத்தில் அரச தொழில் மீதான மோகம் அதிகரித்துக் காணப்படுகிறது. இந்த நிலை மாற்றமடைவதற்கு ஊடகங்கள் தம்மாலான விழிப்புணர்வுகளை இந்தச் சமூகத்திற்கு வழங்க வேண்டும் எனவும் இதன் போது வலியுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கொக்குவில் தொழில்நுட்பவியல் கல்லூரியின் பணிப்பாளர் எஸ்.முகுந்தன், இலங்கைத் தொழிற்பயிற்சி அதிகார சபை உதவிப் பணிப்பாளர் கு.நிரஞ்சன், இலங்கைத் தொழிற்பயிற்சி அதிகார சபையின் நிதி அலுவலர் த. சுரேஷ்குமார், தேசிய பயிலுனர் கைத்தொழிற்பயிற்சி அதிகார சபையின் பயிற்சி அலுவலகர் இ. திருமுருகன், இலங்கை சமூத்திரப் பல்கலைக் கழகத்தின் யாழ். பிராந்திய நிலையத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் அ. சூரியகுமார் மற்றும் யாழ். குடாநாட்டின் 14 பிரதேச செயலகங்களையும் சேர்ந்த திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு விளக்கமளித்தனர்.

http://www.tamilwin.com/politics/01/123031?ref=home

1_SLQF.png

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.