Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாணவர் மதுவுக்கு அடிமையாவதற்கு பெற்றோரே முழுமுதற் காரணம்

Featured Replies

மாணவர் மதுவுக்கு அடிமையாவதற்கு பெற்றோரே முழுமுதற் காரணம்
 
 
மாணவர் மதுவுக்கு அடிமையாவதற்கு பெற்றோரே முழுமுதற் காரணம்
பாடசாலை  மாணவர்கள் மது, போதைப்பொருட்களிற்கு அடிமையாவதற்கு அவர்களது  பெற்றோர்களே முக்கிய காரணம் என மது வரித்திணைக்களத்தின்   வடமாகாண உதவி மதுவரி ஆணையாளர் ந. சோதிநாதன் தெரிவித்தார்.
 
இது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
யாழ்ப்பாணத்தில் தற்போது இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் மத்தியில் மது, போதைப்பொருள் பாவனைகள் அதிகரித்து காணப்படுகின்றன.இதற்கு பெரும்பாலும்  அவர்களின் பெற்றோரே. மாணவர்கள் இன்று மதுபானங்களை கொள்வனவு செய்கின்றார்கள் எனின் அவரகளிடம் பணம் எப்படி வருகின்றது. நான் மாணவனாக இருந்த காலப்பகுதியில் (1979ஆம் ஆண்டளவில்) எனது வீட்டிற்கும் பாடசாலைக்கும் இடையில் நான்கு கிலோ மீற்றர் தூரம் பயணம் செய்ய வேண்டும் பயணம் செய்யும் பாதை செப்பனிடப்பட்ட  வீதியில்லை ஒரு மாதத்தில் 4 அல்லது 5 முறையேனும் ரியுப் ஓட்டையாகிவிடும் அப்போது ஒட்டுவதற்கு 50 சதம் தேவை . என்னிடம் 50 சதம் கூட இருப்பதில்லை எனவே 4 கிலோ மீற்றர் நடந்து வந்து அம்மாவிடம் காசு வாங்கி சென்று சைக்கிளை ஒட்டிக்கொன்டு வருவோம் காரணம் எமது பெற்றோர்  எம்மிடம் பணம் தருவதில்லை . ஆனால் இப்போது நிலமை வேறு. தற்கால மாணவர்களிடம் குறைந்தது 500 ருபாயானாலும் பெற்றோர் கொடுத்துவிடுகின்றனர். பணம் இருப்பதால் மதுபானங்களை நண்பர்களுடன் சேர்ந்து கொள்வனவு செய்கின்றனர். 
 
பிறந்த தினங்கள் வந்தவுடன் பெற்றோர் தமது பிள்ளைகளிற்கு 10,000 ருபாய் அல்லது அதற்கும் மேல் கொடுத்துவிடுகின்றனர் பணத்தை எப்படி செலவு செய்கின்றனர் என அவதானிப்பதில்லை . தங்களுடைய பிள்ளைகள் எங்கே செல்கின்றனர் யாருடன் சேர்கின்றனர் என்ன செய்கின்றனர் என அவதானிக்க வேண்டும் . 
 
கடந்த சில வருடங்களிற்கு முன் வட்டுக்கோட்டையில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது , பாடசாலையில் தரம் 11 இல் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் இரவில் படிக்காமல் துங்கிவிடுவான் இதனால் அவனது தாய் மனவேதனையடைந்தார். ஒரு நாள் தனது தாயிடம் அவனது மகன் கூறினான் அம்மா 200 ருபாய்க்கு ஒரு பானம் விற்கின்றது அதை குடித்தால் இரவில் துங்காமல் படிக்க முடியும் என கூறியுள்ளான். இதை நம்பிய அவனது தாய் ஒவ்வொரு நாளும் 200 ருபாய் கொடுத்துள்ளார். மகன் அதை வாங்கி குடித்து விட்டு இரவில் படித்துள்ளான் இதனால் தாயும் மகிழ்ச்சியுற்றாள். இருப்பினும் சில நாட்களுக்கு பின்பு மகனின் செயற்பாடுகளில் மாற்றங்கள் ஏற்பட்டது .  பின்பே மகன் மதுவுக்கு அடிமையானதும் , தான் காசு கொடுத்தது மதுபானம் வாங்கவே என்றும் தெரியவந்தது. 
 
எனவே பெற்றோர்கள் தமது பிள்ளைகளை குறித்து அவதானமாக இருப்பது முக்கியம் எனவும் தெரிவித்தார்.

http://onlineuthayan.com/news/19702

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.