Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னார் கடலில் கடற்படையினரின் கெடுபிடி : மீனவர்கள் பாதிப்பு

Featured Replies

மன்னார் கடலில் கடற்­ப­டை­யி­னரின்  கெடு­பி­டி : மீன­வர்­கள் பாதிப்பு

 

 

 

மன்னார் நகர் பாலத்­த­டி­யி­லி­ருந்து தென் கடல் பரப்­புக்கு பட­கு­களின் மூலம் மீன்­பி­டிக்கச் சென்ற மீன­வர்­களை நேற்று கடலில் வைத்து கடற்­ப­டை­யினர் திருப்­பி­ய­னுப்­பி­யதால் சில மணிநேரம் இப்­ப­கு­தியில் அல்­லோலகல்­லோல நிலைமை ஏற்­பட்­டது.D0055fff.jpg

இப்­பி­ரச்­சினை குறித்து  விட­ய­ம­றிந்த மன்னார் மறை­மா­வட்ட குரு முதல்வர் அருட்­பணி அந்­தோனி விக்ரர் சோசை அடி­களார், வன்னி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சாள்ஸ் நிர்­ம­ல­நாதன், மன்னார் கடற்­தொழில் திணைக்­கள உதவிப் பணிப்பாளர் பி.சகா­ய­நாதன் மிராண்டா, மன்னார் பங்­குத்­தந்தை பெப்பி சோசை அடி­களார் ஆகியோர் இணைந்து மேற்­கொண்ட நட­வ­டிக்­கையால் நிலைமை சுமுக நிலைமைக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது.

இச் சம்­ப­வம் ­பற்றி தெரிய வரு­வ­தா­வது,

நேற்று வெள்­ளிக்­கி­ழமை மன்னார் நகரப் பகு­தி­யான பாலத்­தடி கடற்­க­ரை­யி­லி­ருந்து இரு­நூ­றுக்கு மேற்­பட்ட பட­கு­களில் பள்­ளி­முனை, பனங்­கட்­டு­கொட்டு, உப்­புக்­குளம், பெரி­ய­கடை மீன­வர்கள் வழ­மை­போன்று தென் கடல் பரப்­புக்கு மீன்­பி­டிக்­காக சென்­ற­போது அப்­ப­கு­தியில் கடற்­க­ரை­யோர கடற்­ப­டை­யினர் இம் மீன­வர்­களை எவ்­வித தடையும் விதிக்­காத நிலையில் மீன்­பி­டிக்க அனு­ம­தித்­துள்­ளனர்.

ஆனால் இம் மீன­வர்கள் கடலில் சென்று கொண்­டி­ருந்­த­பொ­ழுது கடற்­ப­டை­யினர் இவர்­க­ளிடம் தொழில் அனு­மதிப் பத்­தி­ரங்­களை பரி­சோ­தித்­த­துடன் அவை­களை காண்­பித்­த­போதும் வேறு பல கார­ணங்­களை கூறி தொழி­லுக்கு விடாது அனை­வ­ரையும் மீண்டும் கரைக்கு திருப்­பி­யுள்­ளனர்.

இதனால் ஐநூ­றுக்கு மேற்­பட்ட மீனவர் கள் தொழி­லுக்கு செல்ல முடி­யாது மீண் டும் கரை வந்து சேர்ந்­தனர். இதனால் அப்­ப­கு­தியில் அமை­தி­யின்மை ஏற்­பட்­டது.

இச் சம்­பவம் அறிந்து அப்­ப­கு­திக்கு விரைந்து வந்த வன்னி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சார்ள்ஸ் நிர்­ம­ல­நாதன், மன்னார் பேரா­லய பங்குத்தந்தை அருட்­பணி பெப்பி சோசை அடி­களார், மன்னார் கடற்­தொழில் திணைக்­கள உதவிப் பணிப்­பாளர் பி.எஸ்.மிராண்டா, வடமாகாண சபை உறுப்­பினர் குண­சீலன் ஆகியோர் மீன­வர்­களை அமை­திப்­ப­டுத்­தி­ய­துடன் மன்னார் மறை மாவட்ட குரு முதல்வர் அருட்­பணி அ.விக்ரர் சோசை அடி­களார் சகிதம் வந்த சனி வில்லேஷ் கடற்­படை அதி­காரி கே.எஸ்.திஸ­ாநா­யக்க ஆகி­யோ­ருடன் இப் பிரச்­சினை சம்­பந்­த­மாக கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. இதில் மன்னார்  பொலிஸ் அத்­தி­யட்­சகர் ஜி.எம்.சோம­ரட்ன, உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் எஸ்.யூ.ஐய­சே­கர ஆகி­யோரும் சமுகமளித்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து மீனவர்கள் கடலுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டபோதும் இன் றைய கால சூழ்நிலைக்கு அமைய குறிப் பிட்ட நேரம் தாழ்த்தி மீன்பிடிக்கச் செல்வ தால் பிரயோசனம் இல்லையென மீனவர் கள் கடலுக்குச் செல்லவில்லை.

http://www.virakesari.lk/article/13170

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.