Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா புலனாய்வு தலைவரைத் திணறடித்த ஐ.நா நிபுணர்கள் – பிணையெடுத்தார் சட்டமாஅதிபர்

Featured Replies

பயங்கரவாத தடுப்புப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் தடுப்புக்காவலில் இடம்பெற்ற சித்திரவதைகள் தொடர்பாக, சிறிலங்காவின் தேசிய புலனாய்வுப் பிரிவு தலைவர் சிசிர மென்டிசிடம், ஐ.நா நிபுணர்கள் சரமாரியான கேள்விகளை எழுப்பி திணறடித்தனர்.

dig-sisira-mendis

ஜெனிவாவில் நடந்து வரும் சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் 59ஆவது கூட்டத்தொடரில், சிறிலங்கா குறித்த மீளாய்வு நேற்றுமுன்தினமும், நேற்றும் இடம்பெற்றது.

இந்த அமர்வில் சிறிலங்கா தரப்புக் குழுவில் தேசிய புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் சிசிர மென்டிசும் இடம்பெற்றிருந்தார்.

இறுதிக்கட்டப் போரின் போது, சிறிலங்கா காவல்துறையின் பயங்கரவாத தடுப்புப் பிரிவு மற்றும் குற்றப்புலனாய்வுப் பிரிவு ஆகியவற்றுக்குப் பொறுப்பாக இருந்தவர் சிசிர மென்டிஸ்.

இவரது தலைமையின் கீழ் இருந்த அதிகாரிகளால் திட்டமிட்டு, முறைப்படுத்தப்பட்ட சித்திரவதைகள், தடுப்புக்காவலில் இருந்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்டதாக ஐ.நா அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நேற்று நடந்த இரண்டாவது நாள் அமர்வில், சிசிர மென்டிசிடம், இறுதிக்கட்டப் போரின் போது, தடுப்புக்காவலில் இருந்த கைதிகள் மீது நிகழ்த்தப்பட்ட சித்திரவதைகள் தொடர்பாக ஐ.நா நிபுணர்கள் கேள்விகளை எழுப்பினர்.

சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் உதவித் தலைவர் பெலிஸ் காயர், நேற்றைய அமர்வில் சிசிர மென்டிசிடம், 2008-2009 காலப்பகுதியில், பிரதி காவல்துறை மமா அதிபராக இருந்த போது, சிறிலங்கா பாதுகாப்பு படைகளால் நிகழ்த்தப்பட்ட சித்தரவதைகள் தொடர்பாக அறிவீர்களா? என்று கேள்வி எழுப்பினார்.

அத்துடன், “அனுபவம்மிக்க ஒருவர் இந்தக் குழுவின் முன் நிற்பது அசாதாரணமானது. நீங்கள் அல்லது உங்களது பொறுப்பில் இருந்த அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் அல்லது பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகளுடன் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டீர்களா? என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

ஆனால், ஐ.நா நிபுணர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு எந்தப் பதிலையும் அளிக்காமல் சிசிர மென்டிஸ் மௌனமாக இருந்தார்.

அப்போது குறிக்கிட்டு அவரைக் காப்பாற்றிய சிறிலங்காவின் சட்டமா அதிபர் ஜெயந்த ஜெயசூரிய, இதுகுறித்து கேள்விகளுக்கு 48 மணிநேரத்தில் எழுத்துமூலம் பதிலளிப்பதாகவும், தேவையான பரப்பில் விரிவான பதில்களை அளிக்க முடியும் என்றும் கூறினார்.

இந்த அமர்வுக்குப் பின்னர், இதுகுறித்து சிசிர மென்டிஸ் மற்றும் ஜெயந்த ஜெயசூரிய ஆகியோரிடம், ஏபி செய்தியாளர் கருத்துக்களை அறிய முயன்ற போதும், அவர்கள் பேச மறுத்து விட்டனர்.

http://www.puthinappalakai.net/2016/11/17/news/19408

Edited by போல்

  • தொடங்கியவர்

சிறிலங்கா புலனாய்வு தலைவரை ஐ.நா குழு விசாரிக்க வேண்டும் – ஊடக அமைப்புகள் கோரிக்கை

dig-sisira-mendis

ஜெனிவாவில் நடைபெறும் சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் 59 ஆவது கூட்டத்தொடரில், சிறிலங்காவின் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் சிசிர மென்டிஸ், சிறிலங்காவில் சார்பில் பங்கேற்பது குறித்து ஆர்எஸ்எவ் எனப்படும் எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பும், ஜேடிஎஸ் எனப்படும் சிறிலங்காவின் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் அமைப்பும் அதிர்ச்சியை வெளியிட்டுள்ளன.

இதுதொடர்பாக இந்த இரண்டு அமைப்புகளும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“சிறிலங்காவில் உள்நாட்டு போரின் இறுதிக் கட்டத்தில் ஊடகவியலாளர்களுக்கு எதிராக மோசமான குற்றங்கள் இழைத்ததாக குற்றம்சாட்டப்படும், தேசிய புலனாய்வு பிரிவின் தலைவர் சிசிர மெண்டிஸ், ஜெனிவாவில் நடக்கும் சித்திரவதைக்கு எதிரான ஐ.நா குழு கூட்டத்தில், சிறிலங்கா குழுவில் இடம்பெற்றிருக்கிறார் என்பது ஏமாற்றத்தைத் தருகிறது.

போரின் இறுதிக்கட்டத்தில், 2008 மார்ச் தொடக்கம், 2009 ஜூன் வரையான காலப்பகுதியில், பிரதி காவல்துறை மா அதிபர் மென்டிசின் கீழ் குற்றப் புலனாய்வுப் பிரிவு,  பயங்கரவாத தடுப்பு பிரிவு என இரண்டு பிரிவுகள் இருந்தன.

மென்டிஸ் தலைமை தாங்கிய காலப்பகுதியில், இந்த இரண்டு பிரிவுகளும், சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டதாக ஐ.நா விசாரணை ஒன்றில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மென்டிசின் தலைமையின் கீழ் இருந்த குற்றப் புலனாய்வுப் பிரிவு,  பயங்கரவாத தடுப்பு பிரிவு என்பனவற்றினால், பல நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பலரும் கடத்திச் செல்லப்பட்டும், கைது செய்யப்பட்டும், சித்திரவதை செய்யப்பட்டும் உள்ளனர்.

தடுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் பல ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டுத் தப்பியோடினர்.

பயங்கரவாத தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டு மோசமாக நடத்தப்பட்ட ஊடகவியலாளர்களில், ஜே.எஸ்.திசநாயகம், ஜசிகரன் அவரது மனைவி வளர்மதி, கே.விஜேசிங்க ஆகியோரும் அடங்குவர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவு, பயங்கரவாத தடுப்பு பிரிவு ஆகியவற்றினால், மேற்கொள்ளப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் ஊடக சுதந்திரத்துக்கு எதிரான மீறல்களுக்கு பொறுப்பாக இருந்த சிசிர மென்டிசிடம், சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழு கேள்விகளை எழுப்ப வேண்டும்.

தனது கண்காணிப்பில் இருந்த இந்த பிரிவுகளால் ஊடகவியலாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கள் குறித்து, ஏதும் தெரியாது என்றும் சிசிர மென்டிசினால் மறுக்க முடியாது.

ஏனென்றால், தடுப்பில் இருந்த போது மோசமாக நடத்தப்பட்டவர்கள் தொடர்பான நம்பகமான சான்றுகள் எம்மிடம் உள்ளன” என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

http://www.puthinappalakai.net/2016/11/16/news/19399

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் எவரும் தடுத்து வைக்கப்படவில்லையாம் – சிறிலங்கா கூறுகிறது

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேநபர்கள் எவரும் தடுப்புக்காவலில் இல்லை என்று சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவிடம் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஜெனிவாவில் நடந்து வரும், சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் 59 ஆவது கூட்டத்தொடரில் நேற்றுமுன்தினம், சிறிலங்கா தொடர்பான மீளாய்வு ஆரம்பமாகியது.

இதன்போது, பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும், புதிதாக உருவாக்கப்படும் பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தின் உள்ளடக்கம் தொடர்பாக ஐ.நா நிபுணர்கள், சிறிலங்கா குழுவிடம் கேள்விகளை எழுப்பியிருந்தனர்.

இந்த கேள்விகளுக்கு நேற்று சிறிலங்கா குழு பதிலளித்திருந்தது.

இதன்போதே, குற்றச்சாட்டுகள் பதியப்படாமல்,  பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் எவரும் தடுப்புக்காவலில் இல்லை என்று சிறிலங்கா அரச குழு தெரிவித்துள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட எவரும் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்ய முடியும் என்றும் சிறிலங்கா குழுவினர் கூறியுள்ளனர்.

http://www.puthinappalakai.net/2016/11/17/news/19414

 

சிசிர மென்டிசை நாடுதிரும்ப அனுமதிக்காது ஐநாவில் வைத்தே விசாரணைசெய்யவேண்டும்!

சிறீலங்காவில் கடந்த காலங்களில் இடம்பெற்ற சித்திரவதைகளுக்குப் பொறுப்பானவர் எனக் கருதப்படும் சிசிர மென்டிசை நாடு திரும்ப அனுமதிக்காது ஐநாவில் தடுத்துவைத்து விசாரணை நடாத்தவேண்டுமென பிரித்தானியாவுக்கான தமிழர் பேரவையும், அமெரிக்க தமிழ் அரசியல் பேரவையும் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன.

சர்வதேச அதிகார வரம்பின் அடிப்படையில் அவரைக் கைதுசெய்து விசாரணை நடாத்தவேண்டுமென சித்திரவதைகளுக்கெதிரான ஐநா அமைப்பிடம் கூட்டாக இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளன.

அத்துடன், இறுதிக்கட்ட யுத்தத்தின்போது ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகத்துறையுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் குறித்து சிசிர மென்டிஸிடம் விசாரணை நடத்தப்பட வேண்டுமென, எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பும் இலங்கையின் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர் அமைப்பும் இணைந்து அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளன.

சிசிரமென்டிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதிக் காவல்துறைமா அதிபராகப் பணியாற்றியதோடு, இறுதிக்கட்ட யுத்த காலமான 2008 தொடக்கம் 2009 வரையான காலப்பகுதியில் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் தலைவராகவும் இருந்தார். குறித்த இரண்டு அமைப்புக்களும் சித்திரவதைகளுக்கு பெயர்போன பிரிவாக சித்தரிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த காலங்களில் இடம்பெற்ற சித்திரவதைகளுக்கு சிசிரமென்டிசே பொறுப்புக்கூறவேண்டுமென புலம் பெயர் தமிழ் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

இதேவேளை, குறித்த அதிகாரியை சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா. குழுவின் அமர்வில் கலந்துகொள்வதற்காக இலங்கை அரசாங்கம் அனுப்பியுள்ளமை குறித்து உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா ஏற்கனவே கடும் அதிருப்தியை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://thuliyam.com/?p=48419

ஐநா நிபுணரால் கேட்கப்பட்ட கேள்விக்கு மௌனம் சாதித்தார் சிசிர மென்டிஸ்!

பயங்கரவாத தடுப்புப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் தடுப்புக்காவலில் இடம்பெற்ற சித்திரவதைகள் தொடர்பாக, சிறிலங்காவின் தேசிய புலனாய்வுப் பிரிவு தலைவர் சிசிர மென்டிசிடம், ஐ.நா நிபுணர்கள் சரமாரியான கேள்விகளை எழுப்பி திணறடித்தனர்.

ஜெனீவாவில் நடைபெற்றுவரும் சித்திரவதைகளுக்கெதிரான ஐநாவின் 59ஆவது கூட்டத்தொடரில் சிறீலங்கா தொடர்பான மீளாய்வு, நேற்றும், நேற்று முன்தினமும் நடைபெற்றது.

இந்த அமர்வில் சிறிலங்கா தரப்புக் குழுவில் தேசிய புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் சிசிர மென்டிசும் இடம்பெற்றிருந்தார்.

இறுதிக்கட்டப் போரின்போது, காவல்துறையின் பயங்கரவாத தடுப்புப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குப் பொறுப்பாக இருந்தவர் சிசிர மென்டிஸ்.

இவரது தலைமையின் கீழ் இருந்த அதிகாரிகளால் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட சித்திரவதைகள் தடுப்புக்காவலில் இருந்தவர்களால் மேற்கொள்ளப்பட்டது என ஐநா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற அமர்வில், சிசிர மென்டிசிடம், இறுதிக்கட்டப் போரின் போது, தடுப்புக்காவலில் இருந்த கைதிகள் மீது நிகழ்த்தப்பட்ட சித்திரவதைகள் தொடர்பாக ஐ.நா நிபுணர்கள் கேள்விகளை எழுப்பினர்.

சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் உதவித் தலைவர் பெலிஸ் காயர், நேற்றைய அமர்வில் சிசிர மென்டிசிடம் 2008-2009 காலப்பகுதியில், பிரதி காவல்துறை மமா அதிபராக இருந்த போது, சிறிலங்கா பாதுகாப்பு படைகளால் நிகழ்த்தப்பட்ட சித்தரவதைகள் தொடர்பாக அறிவீர்களா? என்று கேள்வி எழுப்பினார்.

அத்துடன், ‘அனுபவம்மிக்க ஒருவர் இந்தக் குழுவின் முன் நிற்பது அசாதாரணமானது. நீங்கள் அல்லது உங்களது பொறுப்பில் இருந்த அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் அல்லது பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகளுடன் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டீர்களா? என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு சிசிர மென்டிஸ் எந்தப் பதிலுமளிக்காது மௌனமாக இருந்தார்.

இதனால், சட்டமா அதிபர் ஜெயந்த ஜெயசூரிய குறுக்கிட்டு, இது குறித்த கேள்விகளுக்கு எதிர்வரும் 48 மணிநேரத்துக்குள் எழுத்துமூலம் பதிலளிப்பதாகத் தெரிவித்தார்.

http://thuliyam.com/?p=48390

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.