Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன, மத வாதத்தை இல்லாது ஒழிக்கவேண்டியதன் அவசியம்

Featured Replies

இன, மத வாதத்தை இல்லாது ஒழிக்கவேண்டியதன் அவசியம்

 

நாட்டில் அண்மைக் கால­மாக இன­வா­தத்தைத் தூண்டி குழப்­பங்­களை ஏற்­ப­டுத்தும் நட­வ­டிக்­கைகள் தொடர்ச்­சி­யாக இடம்­பெற்று வரு­கின்­றன. இந்தச் செயற்­பாட்டில் பௌத்த தேரர்கள் உட்­பட அர­சி­யல்­வாதி­களும் ஈடு­பட்­டு ­வ­ரு­கின்­றனர். இன­வா­தத்­தையும் மத­வாதத்­தையும் தூண்டி சமூ­கங்­க­ளி­டையே உரு­வா­கி­வரும் நல்­லி­ணக்க சூழலை சீர்­கு­லைப்­ப­தற்கே இவ்­வா­றான முயற்­சிகள் எடுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

அண்­மையில் குரு­ணாகல், கண்டி ஆகிய பகு­தி­களில் பள்­ளி­வாசல்கள் மீது தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­டி­ருந்­தன. வடக்கு, கிழக்கு பகு­தி­களில் புத்தர் சிலைகள் தான்­தோன்­றித்­த­ன­மான வகையில் அமைக்­கப்­ப­டு­வ­துடன் மத­வா­தத்தை தூண்டும் செயற்­பா­டு­களும் தொடர்ச்­சி­யாக இடம்­பெற்று வரு­கின்­றன.

சட்­ட­வி­ரோத காணி அப­க­ரிப்பை தடுக்­கச்­சென்ற பட்­டிப்­பளை பிர­தேச செய­லக குழு­வினர் மற்றும் கிரா­ம­சே­வகர் ஆகி­யோரை மட்­டக்­களப்பு மங்­க­ள­ரா­மய விகா­ரா­தி­பதி அம்­பிட்­டிய சும­ண­ரத்ன தேரர் கடு­மை­யாக பய­மு­றுத்­தி­ய­துடன் துவேஷ நிந்­த­னைக்கும் உள்­ளாக்­கி­யி­ருந்தார். தமி­ழர்கள் அனை­வரும் புலிகள் என்று குறிப்­பிட்ட அவர் அந்த அதி­கா­ரி­க­ளுக்கு எதி­ராக நாக­ரி­க­மற்ற முறை­யிலும் இன­வா­தத்தைத் தூண்டும் வகை­யிலும் செயற்­பட்­டி­ருந்தார்.

இந்த பௌத்த தேரர் மீது நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டு­மென்ற கோரிக்கை எழுந்­தி­ருந்­த­நி­லையில் கடந்த வியா­ழக்­கி­ழமை மட்­டக்­களப்பு, செங்­க­லடி – பதுளை வீதியில் பன்­கு­டா­வெளி அரச மர­முள்ள காணிக்குள் மங்­க­ள­ரா­மய விகா­ரா­தி­பதி அத்­து­மீறி பிர­வே­சித்து குறித்த இடத்தில் பௌத்­த­மத அடை­யாளங்கள் காணப்­ப­டு­வ­தா­கவும் கடந்த ­காலங்­களில் பௌத்த வழி­பாட்டுத் தலம் இங்­கி­ருந்­த­மைக்­கான ஆதாரம் உள்­ள­மை­யினால் இங்கு பௌத்த விகாரை அமைக்­கப்­போவ­தா­கவும் கூறி­யி­ருந்தார். இதனால் இப்­ப­கு­தியில் பெரும் பதற்றம் ஏற்­பட்­டி­ருந்­தது. இவ்­வாறு இந்தத் தேரர் இன­வா­தத்­தையும் மத­வா­தத்­தையும் தூண்­டும்­வ­கையில் செயற்­பட்டு வரு­கின்றார்.

 இந்த தேர­ரினால் பாதிக்­கப்­பட்ட கச்­சைக்­கொடி கிரா­ம­சே­வகர் சிதம்­பர­நாதன் ஜீவிதன் நேற்று முன்­தினம் தேசிய சக­வாழ்வு கலந்­து­ரை­யாடல் மற்றும் அர­ச­க­ரும மொழிகள் அமைச்சர் மனோ கணே­சனைச் சந்­தித்து இவ்­வி­டயம் குறித்து முறை­யிட்­டி­ருந்­த­துடன் மனி­த ­உ­ரிமை ஆணைக்­கு­ழு­விலும் முறைப்­பாட்டைச் செய்­துள்ளார். மங்­க­ள­ரா­மய விகா­ரா­தி­ப­தியின் இத்­த­கைய நட­வ­டிக்­கைகள் அங்­குள்ள மக்கள் மத்­தியில் பெரும் பதற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. இவ­ரது செயற்­பா­டு­க­ளுக்கு எதி­ராக கிரா­ம­சே­வ­கர்­களும் ஆர்ப்­பாட்­டங்­களில் ஈடு­பட்­டி­ருந்­தனர்.

இதேபோல், பொது­ப­ல­சே­னாவின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரரும் தற்­போது முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இன­வாதத்தைப் பரப்பும் வகையில் செயற்­பட்டு வரு­கின்றார். முஸ்­லிம்கள் அனை­வ­ரையும் நாட்­டை­விட்டு வெளி­யேற்ற வேண்­டிய நிலை ஏற்­படும் என்று அவர் கருத்துக் கூறி­யி­ருக்­கின்றார்.

முஸ்­லிம்­களின் தனியார் சட்­டத்தில் மாற்­றத்தைக் கொண்­டு­வ­ரு­வ­தற்கு எடுக்­கப்­ப­டு­கின்ற முயற்­சிகளுக்­கெ­தி­ராக கொழும்பில் சிறி­லங்கா தௌஹீத் ஜமா அத் அமைப்பு ஆர்ப்­பாட்டம் நடத்­தி­யி­ருந்­தது. மாளி­கா­வத்­தையில் இந்த ஆர்ப்­பாட்டம் நடை­பெற்­ற­போது கோட்டை ரயில் நிலையம் முன்­பாக ஆர்ப்­பாட்டம் செய்த சிங்­கள இன­வா­திகள் சிலர் சிறு­பான்­மை­யி­னரை குறிக்கும் நிறங்­க­ளற்ற தேசி­யக்கொ­டிக்கு சமாந்­த­ர­மான கொடி­யொன்­றுடன் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மனி­த­வெ­டி­குண்­டா­கவும் மாற தாம் தயா­ரென அச்­சு­றுத்தல் விடுத்­தி­ருந்­தனர். இவ்­வாறு அச்­சு­றுத்தல் விடுத்­த­வர்­களில் ஒரு­வ­ரான வெல்­லம்­பிட்­டிய பகு­தியைச் சேர்ந்த தெமட்­ட­கொட சுதேஸ் பிரி­யசாந்த் என்­பவர் பொலி­ஸாரால் கைது­செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ளார்.

 இத­னை­ய­டுத்து பௌத்த மக்­களை கோபப்­ப­டுத்தும் வித­மாக கருத்­துக்­களை வெளிப்­ப­டுத்தி சிங்­கள, முஸ்லிம் சமூ­கங்­க­ளி­டையே மோதலை ஏற்­ப­டுத்த முயன்றார் எனும் குற்­றச்­சாட்டின் கீழ் சிறி­லங்கா தௌஹீத் ஜமா அத்தின் செய­லாளர் அப்துல் ராசிக் ரபாய்­டீனும் பொலி­ஸாரால் கை.துசெய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருக்­கின்றார்.

இவ்­வாறு இன­வா­தத்­தையும் மத­வா­தத்­தையும் தூண்டி சமூ­கங்­க­ளி­டையே நல்­லு­றவை சிதைக்கும் நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்டு வரு­கின்­ற­போ­திலும் அதனைத் தடுப்­ப­தற்கு பொலிஸார் சில நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­கின்­றனர். ஆனாலும் இந்த விட­யத்தில் தகுதி தரா­தரம் பாராது நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டிய சூழல் தற்­போது ஏற்­பட்­டி­ருக்­கின்­றது.

நாட்டில் மத­ரீ­தி­யா­கவும் இன­ரீ­தி­யா­கவும் விரி­சல்­க­ளையும் பிரச்­சி­னை­க­ளையும் ஏற்­ப­டுத்தி நாட்டை அழி­வுக்­குட்­ப­டுத்­து­வ­தற்கு சில சக்­திகள் சதி முயற்­சி­களில் ஈடு­பட்டு வரு­கின்­றமை தொடர்பில் அர­சாங்கம் அவ­தானம் செலுத்­தி­யுள்­ளது. இது­ தொ­டர்பில் அர­சாங்கம் மிகவும் கவ­ன­மா­கவும் பொறுப்­பு­டனும் செயற்­பட்டு வரு­கின்­றது என்று அமைச்­ச­ர­வையின் இணைப் பேச்­சா­ளரும் ஊட­கத்­துறை அமைச்­ச­ரு­மான கயந்த கரு­ணா­தி­லக்க தெரி­வித்­தி­ருந்தார்.

தேசிய நல்­லி­ணக்க செயற்­பா­டு­களை குழப்பும் இவ்­வா­றான சில சக்­தி­களின் சதி முயற்­சிகள் தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் அவ­தா­னத்­துடன் இருக்­கின்­றனர் என்றும் அமைச்சர் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார். கடந்­த­வாரம் இடம்­பெற்ற அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் இந்த விவ­காரம் தொடர்பில் ஆரா­யப்­பட்­ட­தை­ய­டுத்து அமைச்சர் இந்த அறி­விப்­பினை விடுத்­தி­ருந்தார்.

இன­வா­தத்தைத் தூண்டி நாட்டில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்தும் விட­யத்­துக்கு முற்­றுப்­புள்ளி வைப்­பது தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் நேற்று முன்தினம் இரவு விசேட கூட்­டமும் இடம்­பெற்­றுள்­ளது. பாது­காப்புச் சபைக் கூட்­டத்­தை­ய­டுத்து இடம்­பெற்ற இந்தக் கூட்­டத்தில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, அமைச்­சர்­க­ளான சாகல ரட்­ணா­யக்க, விஜ­ய­தாச ராஜபக் ஷ, மனோ கணேசன், டி.எம். சுவா­மி­நாதன், பொலிஸ்மா அதிபர் மற்றும் முப்­படைத் தள­ப­திகள் என பலரும் கலந்­து­கொண்­டனர்.

இந்தக் கூட்­டத்­தின்­போது இன­வா­தத்தை தூண்டும் செயற்­பா­டு­களில் ஈடு­ப­டு­வோரை தய­வு­தாட்­சண்யம் இன்றி, தகுதி தரா­தரம் பாராது கைது­செய்ய நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெய­சுந்­த­ர­வுக்கு உத்­த­ர­விட்­டுள்ளார்.

இன­வா­தத்தை தூண்­டு­வோ­ருக்கு எதி­ராக தண்­ட­னையை அதி­க­ரிக்கும் வகையில் சட்­டங்­களில் திருத்­தங்­களை மேற்­கொள்­ள­வேண்­டு­மென்றும் ஜனா­தி­பதி கூறி­யுள்ளார். இதன்­போது கருத்து தெரி­வித்த நீதி­ய­மைச்சர் விஜ­ய­தாச ராஜபக் ஷ சட்­டங்­களைத் திருத்­து­வ­தற்­கான பூர்­வாங்க நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­கின்­றது. தற்­போ­துள்ள சட்­டங்­க­ளுக்குக் கீழ் இன­வா­தத்தை பரப்­பு­வோ­ருக்கு ஒரு­வ­ருடம் வரை­யான சிறைத்­தண்­டனை விதிக்­கக்­கூ­டிய நிலை காணப்­ப­டு­கின்­றது என்று சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

இத­னை­ய­டுத்து இத்­த­கைய செயற்­பா­டு­களில் ஈடு­ப­டு­ப­வர்­களை கைது­செய்து உரிய நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு ஜனா­தி­பதி உத்­த­ரவு பிறப்­பித்­தி­ருக்­கின்றார். இத­னை­விட சமூ­க­வ­லைத் தளங்கள் மற்றும் இணை­ய­த­ளங்­களில் இன, மதவாதத்தைத் தூண்­டு­வோரை கண்­காணித்து நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு விசேட பொறி­முறை ஒன்றை நிறுவு­மாறும் ஜனா­தி­பதி ஆலோ­சனை வழங்­கி­யுள்ளார்.

இன­வா­தத்­தையும் மத­வா­தத்­தையும் தூண்டி நாட்டில் நல்­லி­ணக்­கத்தை சீர்­கு­லைப்­ப­தற்கு முயற்சி செய்யும் சக்­தி­களை இல்­லா­தொ­ழிக்­க­வேண்­டி­யது அர­சாங்­கத்தின் கட­மை­யா­க­வுள்­ளது. ஏனெனில் இன­வாதத்தின் தூண்­டு­த­லை­ய­டுத்து ஏற்­பட்ட 3 தசாப்­த­கால யுத்­தத்­தினால் நாட்டு மக்கள் பெரும் இன்­னல்­களை அனு­ப­வித்­தனர். தற்­போது நாட்டில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்டு வரும் நிலையில் அதனை சீர்­கு­லைத்து நாட்டை மீண்டும் அத­ல­பா­தா­ளத்­துக்குள் இட்­டுச்­செல்­வ­தற்கு அனு­ம­திக்க முடி­யாது. இந்­த­ வ­கையில் இன­வா­தத்தை தூண்­டு­வோ­ருக்கு எதி­ராக கடும் நட­வ­டிக்­கை­களை எடுப்­ப­தற்கு அர­சாங்கம் முன்­வந்­துள்­ளமை பாராட்டத்தக்க செயற்பாடேயாகும்.

இந்த விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் ஆகியோர் அக்கறையுடன் செயற்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. இதன் காரணத்தினால்தான் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தையடுத்து விசேட கூட்டமொன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூட்டி இத்தகைய முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

சுயநல அரசியல் நோக்கத்துக்காக தென்பகுதியிலோ அல்லது வடக்கு கிழக்கிலோ இனவாதத்தை தூண்டுவதற்கு யாருக்கும் அனுமதி வழங்க முடியாது. இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் மீது தராதரம் பார்க்காது பொலிஸார் நடவடிக்கைகளை எடுக்கவேணடும். இத்தகைய இனவாதத்தையும் மதவாதத்தையும் பரப்புகின்றவர்கள் பௌத்த தேரர்களாக இருந்தாலென்ன அவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டியது இன்றியமையாததாகும். எனவே, இந்த விடயத்தில் சகல தரப்பினரும் ஒத்துழைத்து இன, மதவாதத்திலிருந்து நாட்டை பாதுகாக்க முன்வரவேண்டும் என்று வலியுறுத்த விரும்புகின்றோம்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-11-19#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.