Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊடகவளங்கள் பயிற்சி மையத்தில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

Featured Replies

ஊடகவளங்கள் பயிற்சி மையத்தில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
 
 
ஊடகவளங்கள் பயிற்சி மையத்தில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
யாழ்ப்பாணப் பல்கலைக் கழக ஊடகவளங்கள் பயிற்சி மையத்தில்   ஊடகக்ககற்கை பயிற்சி நெறிகளை நிறைவு செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. 
 
யாழப்பாணப் பல்கலைக் கழகத்தின் ஓர் அங்கமாக ஊடகக்கற்கைப் பயிற்சிநெறி  இடம்பெறுகின்றது. குறித்த பயிற்சி நெறியில்  தமது கற்கை நெறிகளை நிறைவு செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று காலை 10.45 மணியளவில் ஊடகவளங்கள் பயிற்சி மையத்தில் நடைபெற்றது.
 20161119_105132.jpg
இந்த நிகழ்வு குறித்த பயிற்சி மையத்தின்பணிப்பாளர் தே.தேவானந்த் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் முதன்மை விருந்தினராக யாழ் பல்கலைக் கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசர ட்ணம், சிறப்பு விருந்தினராக யாழ் பல்கலைக் கழக கலைப்பீடப் பீடாதிபதி கலாநிதி க.சுதாகர் பங்கே ற்றனர். 
 
காலை 10.50 மணியளவில் மங்கல விளக்கேற்றலுடன் இந்நிகழ்வு ஆரம்பமானது. இந்நிகழ்வின் வரவேற்பு ரையை ஊடகவளங்கள் பயிற்சி மையத்தின் பணிப்பாளர் தேவானந்த் நிகழ்த்தினார்.
20161119_112615.jpg
இதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர் கலாநிதி சுதாகர் உரையாற்றினார். வாழ்த்துரையை யாழ் பல்க லைக் கழகப் பதிவாளர் இராஜவிசாகன் நிகழ்த்தினார். பின்னர் பிரதம விருந்தினர் உரையை துணை வேந்தர் வசந்தி அரசரட்ணம் நிகழ்த்தியதோடு கற்கை நெறியை நிறைவு செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
 
இதழியல் டிப்ளோமா பயிற்சிநெறியை நிறைவு செய்த ஐந்தாம் மற்றும் ஆறாம் பிரிவு முழுநேர மாணவர்கள் 15 பேர் மற்றும் 3 அணி பகுதிநேர மாணவர்கள் இருவர் உட்பட 16 பேர் சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டனர். 
20161119_112634.jpg
இதில் முழுநேர ஐந்தாவது பிரிவு மாணவர்களான கலைவாணி சிறிகணேசன், புவிதாஸ் பரஞ்சோதி, விஜயஜந்தினி ராஜதுரை, கோவிந்தபிள்ளை அச்சுதன்,செல்வநாயகம் உமாசுதன், இராஜரட்ணம் யுகநாத், நியாமுடீன் முகமட் பர்ஷான்  முழுநேர ஆறாம் அணி மாணவர்களான கந்தசாமி பரதன், கணேசர் சக்திவேல், சின்னப்பு கலாராஜ், சிவபாலன் திவாகரன், பத்மநாதன் பார்த்தீபன், வரதராஜா ரஜிந்தன், செபஸ்தியான் பிள்ளை கலிஸ்டன், கிருத்திகா கிருஷ்ணபாலன் போன்றோரும் மூன்றாம் அணி பகுதிநேர மாணவனான தம்பித்துரை பிரதீபன்1479541065_20161119_113806.jpg சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டனர்.
20161119_113806.jpg
 

http://www.onlineuthayan.com/news/20381

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.