Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொலிஸார் மீது மீளகாய்பொடி வீச்சு

Featured Replies

பொலிஸார் மீது மீளகாய்பொடி வீச்சு
 

article_1479702976-aaa.jpgசெல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம் துன்னாலை வடக்கு பகுதியில் உள்ள பொலிஸ் காவலரணில் கடமையில் ஈடுபட்டிருந்த பருத்தித்துறை பொலிஸார் மீது மிளகாய்பொடி வீசி ஆயுதங்களை பறிக்க முற்பட்ட சம்பவம்,  ஞாயிற்றுக்கிழமை (20) நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியூடாக மண் கடத்தல் இடம்பெறுவதையடுத்து, கெட்டிசந்தி பகுதியில் பொலிஸ் காவலரண் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

பகல் கடமைக்கு 5 பேரும், இரவுக் கடமைக்கு 5 பேரும் குறித்த பொலிஸ் காவலரனில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இரவு 12 மணிளவில் நடந்து வந்த ஐந்து பேர்ர் கொண்ட குழு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாhருக்கு மிளகாய்பொடியை வீசிவிட்டு அவரிடம் இருந்த ரீ-56 ரக துப்பாக்கியை கொள்ளையடிக்க முற்பட்டுள்ளனர்.

தூக்கத்தில் இருந்த ஏனைய நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களும் விழித்துகொண்டதை அடுத்து ஆயுதங்களை பறிக்க வந்த கொள்ளையர்கள் காட்டுப்பகுதியூடாக தப்பிச் சென்றுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்;பில் காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகர் தலமையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

- See more at: http://www.tamilmirror.lk/186511/ப-ல-ஸ-ர-ம-த-ம-ளக-ய-ப-ட-வ-ச-ச-#sthash.q5xs4yhY.dpuf
  • தொடங்கியவர்

யாழில்.காவல்துறை மீது மிளகாய் பொடி வீச்சு. ஆயுதம் கொள்ளையடிக்கவும் முயற்சி


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழில் காவல்துறை உத்தியோகஸ்தர் மீது மிளகாய் பொடி வீசி அவரது ஆயுதத்தை கொள்ளையடிக்க முயன்ற சந்தேகநபர்கள் தொடர்பில்  காவல்துறை புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.  யாழ்.துன்னாலை கெட்டி சந்தி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு குறித்த சம்பவம் இடம்பெற்று உள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது ,

துன்னாலை பகுதியில் சட்டவிரோத மண் கடத்தல்கள் இடம்பெற்று வருவதனால் அதனை கட்டுப்படுத்தும் நோக்குடன் , கெட்டி சந்திப்பகுதியில்  காவல்துறையினர் காவலரண் ஒன்று அமைத்து  தினமும் ஐந்து  காவல்துறை காவல் கடமையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

சம்பவ தினத்தன்று நள்ளிரவு வேளை காவலரணில் ஒரு  காவல்துறை உத்தியோகஸ்தர் காவல் கடமையில் ஈடுபட்டி இருந்த வேளை ஏனைய நான்கு  காவல்துறையினரும் தூக்கத்தில் இருந்துள்ளனர். அவ்வேளை குறித்த காவலரணுக்கு சென்ற ஐந்து பேர் கொண்ட குழுவினர் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த  காவல்துறை உத்தியோகஸ்தர் மீது மிளகாய் பொடியினை வீசி தாக்குதல் மேற்கொண்டு விட்டு அவரிடம் இருந்து ரி- 56 ரக துப்பாக்கியை பறிக்க முயன்றுள்ளனர்.

அதனை அடுத்து குறித்த காவல்துறை உத்தியோகஸ்தர் அவலகுரல் எழுப்பியதை அடுத்து தூக்கத்தில் இருந்த ஏனைய நான்கு காவல் துறை உத்தியோகஸ்தர்களும் விழித்துக் கொண்டதை அடுத்து தாக்குதலாளிகள் தப்பி சென்று உள்ளனர். குறித்த சம்பவம் குறித்து காங்கேசன்துறை காவல்துறை அத்தியட்சகர் தலைமையில் விஷேட குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

http://globaltamilnews.net/archives/7705

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.