Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவப் புரட்சி ஏற்பட இந்தியா அனுமதிக்காது

Featured Replies

இரா­ணுவப் புரட்­சி­ ஏற்பட இந்தியா அனுமதிக்காது

03-85262c0d05426e0489c8a42995396c7e5f07a5bf.jpg

 

தினேஷ் குணவர்தன எம்.பி. பதவி வில­க­வேண்டும் என்­கிறார் எஸ்.பி.
(க.கம­ல­நாதன்)

இரா­ணுவப் புரட்சி ஏற்­பட வாய்ப்­புள்­ளது என பாரா­ளு­மன்ற உறுப்­ பினர் தினேஷ் குண­வர்த்­தன மன்றில் கூறி­ய­மை­யா­னது நாட்டு மக்கள் மத்­தியில் மீண்டும் குழப்­பத்தை ஏற்­ப­டுத்தும் செயற்­பா­டாகும். எனவே இத்­த­கைய கருத்­தினை வெளி­யிட்ட அவர் எம்.பி. 

பத­வி­யி­லி­ருந்து இரா­ஜி­னாமா செய்ய வேண்டும் என சமூக வலு வூட்டல் மற்றும் நல­னோம்­புகை அமைச்சர் எஸ்.பி.திஸா­நா­யக்க தெரி­வித்தார்.

அதே­நேரம் இந்­தி­யா­வுடன் தற்­போ­தைய அர­சாங்கம் நட்­பு­ற­வுக்கு அப்­பாற்­பட்ட சமூக, பொரு­ளா­தார உற­வு­களை  பேணு­வதால் இரா­ணுவ சூழ்ச்சி எமது நாட்டில் ஏற்­ப­டாமல் இந்­தியா எம்மை பாது­காக்கும் என்றும்  

அமைச்சர் சுட்­டிக்­காட்­டினார்.

சமூக வலு­வூட்டல் மற்றும் நல­னோம்­புகை அமைச்சின் அலு­ல­கத்தில் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

பாரா­ளு­மன்­றத்தில் ஜனா­தி­பதி பிர­தமர் மற்றும் 22 சுயா­தீன நிறு­னங்­க­ளுக்­கான செலவு தலைப்­பிற்­கான குழு­நிலை விவாதம் சனிக்­கி­ழமை இடம்­பெற்­றது. அந்த சந்­தர்ப்­பத்தில் பிர­தான கட்­சி­க­ளி­னதும் இணக்­கப்­பாட்­டுடன் உரு­வாக்­கப்­பட்ட வரவு செலவு திட்டம் குறித்து விவா­தங்கள் எழுந்­தன.

இதன்­போ­துதான் பரா­ளு­மன்ற உறுப்­பினர் தினேஸ் குண­வர்த்­தன பாரா­ளு­ம­ன­றத்­தையும் இந்­நாட்டு மக்­க­ளையும் குழப்பி விடும் வகையில் ஒரு கருத்தை வெளி­யிட்­டி­ருந்தார். அவர் இரா­ணுவ புரட்சி குறித்து பேசினார். தொடர்ந்தும் பொது எதி­ர­ணியின் கருத்­துக்கள் புறக்­க­ணிக்­க­பட்டு பாரா­ளு­மன்ற விவா­தங்கள் கொண்டுச் செல்­லப்­ப­டு­மாயின் அது இரா­ணுவ சூழ்ச்­சிக்கு வழி­வ­குக்கும் செயற்­பா­டாக அமைந்­து­விடும் என்றார்.

ஆனால் அவ்­வா­றா­ன­தொரு சூழல் எமது நாட்டில் ஏற்­படும் என்று நாம் நம்­ப­வில்லை. காரணம் இலங்கை இரா­ணுவம் முப்­பது வருட யுத்­தத்­தினை எதிர்­கொண்­டது. ஆனால் அவ்­வா­றான சந்­தர்ப்­பத்தின் பின்­னரும் கூட இரா­ணுவ சூழ்ச்சி ஒன்றை ஏற்­ப­டுத்தும் நோக்கம் அவர்­க­ளுக்கு வர­வில்லை. 1960 ஆம் ஆண்டு ஸ்ரீ மாவோ பண்­டா­ர­நா­யக்­கவின் ஆட்­சியை மாற்ற இரா­ணுவ சூழ்ச்சி ஒன்று முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது என்ற தக­வல்கள் வெளி­யா­கின. பிற்­கா­லத்­தில ஜே.ஆர் தனது புத்­த­க­மொன்­றிலும் இந்த இரா­ணுவ புரட்­சியின் பின்­ன­ணியில் இருந்­தவர் ட்டலி சேனா­நா­யக்க என குறிப்­பிட்­டுள்ளார்.

இவ்­வா­றன ஒரு வர­லாறு இருந்­த­போதும் நாம் இன்று தனி­நா­டாக இல்­லாமல் உலக நாடுகள் சக­ல­து­டனும் நற்­பு­றவை சிறப்­பாக பேணு­கின்றோம் குறிப்­பாக இந்­தி­வுடன் நட்­பு­ற­வுக்கும் அப்­பாட்­பட்ட உறவு இலங்­கைக்கு உள்­ளது. வர­லாற்­றிலும் தற்­போதும் சமூக அடிப்­ப­டை­யி­லான உற­வு­களை மீண்டும் வெகு­வாக வலுப்­பெறச் செய்­துள்ளோம்.

ஆனால் கடந்த அர­சாங்­கத்தின் கீழ் இந்­தியா மற்றம் ஐரோப்­பிய நாடு­க­ளுடன் பகைத்­துக்­கொண்­டி­ருந்தோம் அதனால் இலங்கை இரா­ணு­வத்­தி­ன­ருக்கு வேறு­நா­டு­க­ளுக்கு செல்ல முடி­யாத நிலைமை ஏற்­பட்­டி­ருந்­தது. மஹிந்த ஆட்­சியின் இறுதி காலப்­ப­கு­தியின் போதும் இங்­கி­லாந்து பல்­க­லைக்­க­ழ­கத்தின் அழைப்பின் பேரில் ஜனா­தி­பதி மற்றும் நான் உட்­பட இரா­ணுவ பிர­தா­னிகள் குழு­வொன்றும் இங்­கி­லாந்­துக்குச் சென்­றி­ருந்த போது அங்­குள்ள புலம்­பெயர் அமைப்­பொன்று எம்­முடன் வந்த இரா­ணுவ பிர­தானி ஒரு­வ­ருக்கு எதி­ராக வழக்கு தொடுத்­தது.

அதனை தேடு­மாறு அந்­நாட்டு நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டி­ருந்­தது. எனவே குறித்த இரா­ணுவ பிர­தா­னியை உட­ன­டி­யாக நாட்­டிற்கு இரவு வேளையில் அனுப்­பி­வைத்து பாது­காக்க வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டது. அவ்­வா­றான நிலைமை தான் அன்று இருந்­தது.

அதன் பின்னர் சகல உலக நாடு­களும் எம்­மீ­தான நம்­பிக்­கையை இழந்­தன. ஆனால் தற்­போது எமது இரா­ணு­வத்­தினர் உலக நாடு­க­ளுக்கு கற்­பிக்கும் அள­வுக்கு ஒழுக்க விதி­மு­றை­களை மதிப்­ப­வர்­க­ளாக உள்­ளனர். இவர்­க­ளிடம் கற்­றுக்­கொள்ள வெளி­நாட்டு இராணு உறுப்­பி­னர்கள் இலங்கை வரு­கின்­றனர். யுத்­தத்­தின்­போது எவ்­வாறு நடந்து கொள்ள வேண்டும் என்­ப­தையும் இரா­ணுவம் உல­கிற்கு உரைத்­துள்­ளது.

இவ்­வா­றான சந்­தர்ப்­பத்தில் தான் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தினேஸ் குண­வர்த்­தன பாரா­ளு­மன்த்தில் இது­போன்­ற­தொரு விச­மத்­த­ன­மான குற்­றச்­சாட்­டினை முன்­வைத்­துள்ளார். இது திட்­ட­மிட்டு வெளி­யி­டப்­பட்ட ஒரு கருத்­தாகும். இந்த கருத்தை வெளி­யி­டு­கின்ற போது ஜனா­தி­ப­தியும் பாரா­ளு­மன்­றத்தில் இருந்தார். இவ்­வா­றான சந்­தர்ப்­பத்தில் ஒரு சூழ்ச்சி ஏற்­ப­டக்­கூடும் என்­ப­தற்­கான முதல் அவ­தா­னத்தை தான் இவர் விடுத்­துள்ளார்.

எவ்­வா­றி­ருப்­பினும் இந்­தியா போன்ற ஒரு பலவான் எமக்கு வடக்கு பகு­தியில் இருக்­கின்ற போது எமது நாட்­டிற்குள் ஒரு இரா­ணுவ புரட்­சியை ஏற்­ப­டுத்த முடி­யாது. கடந்த காலத்தில் வடக்கில் உரு­வான ஒரு ஆயுத குழு­வொன்று மாலைத்­தீவை கைப்­பற்ற பெரும் முயற்­சி­யொன்றை முன்­னெ­டுத்­தது. அந்த முயற்­சியை தடுக்க இலங்­கை­யி­னதும் இந்­தி­யா­வி­னதும் இரா­ணு­வங்கள் ஒன்­று­பட்டு செயற்­பட்­டி­ருந்­தன. அதனில் வெற்­றியும் கண்டர்.

அதனால் தற்­போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உலக நாடுகள் மத்­தி­யிலும் இந்­தி­யா­வி­டத்­திலும் இலங்கை குறி்த்து கட்­டி­யெ­ழுப்­பி­யுள்ள நம்­பிக்­கை­யினை சிதைத்து இரா­ணுவ புரட்சி ஒன்­றறை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான வாய்ப்பு உரு­வா­காது.

இந்த விடயம் பாரா­ளு­மன்­றத்தில் பேசப்­பட்­டதன் பின்னர் இந்த சதியின் பின்­ன­ணியில் முன்னால் இரா­ணுவ தள­பதி சரத் பொன்­சேகா உள்ளார் என்ற பேசப்­பட்­டது. இன்னும் சில தரப்­புக்கள் இதன் பின்­ன­ணியில் முன்னாள் பாது­காப்பு அமைச்சின் செய­ளாலர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ உள்ளார் என்­கின்­றனர்.

ஆனால் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தினேஸ் குண­வர்த்­த­னவின் கருத்து ஏற்­பு­டை­ய­தல்ல. இவர்கள் இரா­ணு­வத்தின் மீது மக்­க­ளுக்கு அச்­சத்­தினை ஏற்­ப­டுத்தி மீண்டும் நாட்டு மக்கள் குழுக்­க­ளுக்குள் பிளவை ஏற்­ப­டுத்த முயற்­சிக்­கின்­றனர். எனவே இவ்­வாறு நாட்டு மக்­களை குழப்­பி­விட்டு மீண்டு பிரி­வினை செயற்­பா­டு­களை வலுப்­ப­டுத்­தி­விட முயற்­சிக்­கின்­ற­மை­யினை நாம் ஒரு­போதும் ஏற்­கப்­போ­வ­தில்லை. அத்­துடன் தினேஸ் குண­வர்த்­த­னவின் கருத்தை நாம் முற்­றாக நிரா­க­ரிக்­கின்றோம்.

இது ஓரு ஜனா­நா­யக நாட்­டிற்கு சேறு பூசும் செயற்­பாடு. இரா­ணு­வத்தை நிந்­திக்கும் செயற்­பா­டாகும். எனவே இவ்­வா­றான கருத்தை வெளி­யிட்­ட­மைக்­காக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தினேஸ் குண­வர்த்­தன பதிவி விலக வேண்டும்.

அத்­துடன் கடந்த தேர்­தலில் எதிர்­பா­ராத வித­மாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வெற்­றி­பெற்றார். அரசின் பிர­தா­னிகள் எவரும் மஹந்­த­வுக்கு அன்று உதவி செய்­ய­வில்லை.

2005 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­த­லின்­போது மஹிந்த வெற்­றி­பெற்றால் பிர­பா­க­ர­னுடன் முரண்­ப­டுவார் என்று தெரியும். அவ்­வா­றா­ன­தொரு சந்­தர்ப்­பதில் உலக நாடுகள் தலை­யீடு செய்து நாடடை பிரித்­துக்­கொ­டுக்கும் என்­ப­தையும் பிர­பா­கரன் அறிந்­துக்­கொண்­டி­ருந்தார்.

அந்த கனவை நன­வாக்­கவே 2005 ஆம் ஆண்டு தேர்­தலின் போது பிர­காரன் தமிழ் மக்­க­களை வாக்­க­ளிக்க விடாமல் தடுத்தார். ஆனால் அ வரின் என்னம் பலிக்­க­வில்லை. மாறாக யுத்தம் இடம்­பெற்­றது. யுத்­தத்தை வென்ற பின்னர் உலக நாடு­களை பகைத்­துக்­கொண்டோம். அன்று எமது நாட்டில் ஒரு இரா­ணுவ புரட்சி ஏற்­பட்­டி­ருந்தால் எம்மை ஒரு­வரும் திரும்பி பார்த்­தி­ருக்க மாட்­டார்கள். அதனால் தற்­போது உள்ள சூழலில் மீண்டும் குழப்­பத்­தினை ஏற்­ப­டுத்தி விட வேண்டாம் என்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தினேஸ் குண­வ­ரத்­த­ன­வி­டத்தில் கோரு­கின்றோம் என்றார்.

 கேள்வி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தினேஸ் குண­வர்த்­த­னவின் பேச்சு ஒரு சூழ்சி ஏற்­ப­டு­வ­தற்­கான அடித்­த­ள­மாக அமை­யாதா?

பதில் இது திட்­ட­மி­டப்­பட்டு வெளி­யி­டப்­பட்ட ஒரு கருத்­தாக அமைந்­தி­ருக்­கலாம். அவ்­வா­றான செயற்­பா­டுகள் ஏற்­றுக்­கொள்ள கூடி­யவை அல்ல.

கேள்வி இந்த கருத்தை அவர் வெளி­யிடும் போது அரச தரப்பு மௌனம் சாதித்தன் நோக்கம் என்ன?

பதில் வரவு செலவு திட்ட விவா­தத்தின் போது இரா­ணு­வத்­தி­னரின் இந்த விடயம் பெரி­தாக கருத்­திற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. இவ்­வா­றான பேச்­சுக்­களை அரச தரப்பு முற்­றாக நிரா­க­ரிக்­கின்­றது.

கேள்வி இவ்­வாறு இரா­ணு­வத்தின் மீது அழுத்­தங்கள் விடுக்­க­ப­டு­கின்­றன என்ற கருத்து வலு­வானால் சூழ்ச்சி ஏற்­படும் சாத்­தியம் அதி­க­மா­கும்­லவா?

பதில் அவ்வாறு கூற முடியாது. காரணம் இந்த அரசாங்கத்தில் அவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமில்லை. அண்மையில் இடம்பெற்ற விசேட தேவையுடைய இராணுவத்தினர் மீதான நீர் தாரை பிரயோகத்திற்கு அதன் பின்னணியிலிருந்து குழப்பியவர்களே காரணமாவர்.

கேள்வி உலக நாடுகள் முழுவதும் இன்று அடிப்படைவாத போக்கு மேலெலுகின்றது எமது நாட்டின் நிலைமை எவ்வாறு உள்ளது ?

பதில் இவ்வாறான சிக்கல் உள்ளது உண்மைதான். அவற்றின் தாக்கம் எமது நாட்டிற்கும் வரலாம். எவ்வாறாயினும் எமது நாட்டின் தமிழ்,முஸ்லீம்,சிங்கள மக்களை நாம் பாதுகாக்க வேண்டும் என்பதில் அரசாங்கம் அவதானத்துடன் இருக்கும்?

கேள்வி .அவ்வாறாயின் எமது நாட்டில் இனவாத சக்திகளின் எழுச்சி இல்லை என்கிறீர்களா?

பதில் இலங்கையில் இல்லை. வெளிநாடுகளின் தாக்கத்தினால் இவ்வாறான சக்திகள் உருவானால் அதனை தடுப்பதற்கு பாதுகாப்பு தரப்புகள் மிக அவதானத்துடன் உள்ளன.  

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-11-21#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.