Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சியில் பெய்த மழையினால் உருத்திரபுரம் கிராமத்தின் போக்குவரத்து முற்றாக முடக்கம்

Featured Replies

தொடர்ச்சியாக கடந்த மூன்று நாட்களாக பெய்துவரும் மழையினால் உருத்திரபுரம் கிராமத்தின் பிரதான வீதிகள் முதல் உருத்திரபுரத்தினை சூழவுள்ள அனைத்து வீதிகளும் வெள்ளத்தினால் மூடப்பட்டுள்ளது. இதனால் குறித்த கிராமத்தில் வசிக்கின்ற ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கூலித்தொழிலாளிகள் உட்பட அனைவரும் பெரும் சிரமத்தினை எதிர்நோக்கி வருகிறார்கள்.

கிளிநொச்சி உருத்திரபுர கிராமத்தில் 60 வருடத்திற்கு மேலாக மாற்றம் எதுவும் பெறாத பௌதீக கட்டுமானங்களோடு அபாயசோதனயைத் தரும் கழிவாற்று உடைப்பானது அண்மைக்கால மழையினால் சிறு மழை வந்தவுடனேயே மக்களின் குடியிருப்பை மூடுமளவிற்கு குடிமனையினுள்ளே புகுந்து விடுகின்றது.

பெரியளவிலான நான்கு கிராம சேவகர் பிரிவினை கொண்டுள்ளதுடன் அதிகளவான கிராமங்களுக்கான பிரதான பிரயாண மார்க்கமாகவும் உருத்திரபுரம் காணப்படுகின்றது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

இதில் பிற இடங்களில் காணப்படும் நான்கு பிற குளங்களினது நீரும் புதுமுறிப்பு விவசாய நிலங்களின் வடிநீரும் மேலதிக நீரும், நீரேந்தல் ஊடாக கிடைக்கும் நீரும் சேர்ந்து உருத்திரபுர மக்களை இன்னல்களுக்குள்ளாக்கி வருகின்றது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

அன்றாட மக்களின் வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் பெரும் மழைகாலங்களில் மக்களின் இடம்பெயர்வும் சில சந்தர்ப்பங்களில் அபாயங்களும் நிகழ்ந்துள்ளது சிறு மழைக்கே வெள்ளக்காடாக மாறும் உருத்திரபுர பிரதேசமும் குறிப்பாக உருத்திரபுரம் 5ம் வீதியே முதலில் பாதிப்பை எதிர் கொள்வதுடன் பாரிய சேதத்தையம் கொண்டுள்ளது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

மழை வர மக்களின் கூக்குரலுக்கு அதிகாரிகள் சற்று அசைவதும், மழை வடியும் வரை பொறுமைகாத்து மெளனமாகி விடுகின்றார்கள். எனவே மக்களின் கேள்விகள் பலனற்றதால் மக்கள் நீதி தேடி வெளியே வர முற்படுகின்றார்கள் எனவே மக்களுக்கான உடனடித்தீர்வை எதிர்பார்க்கின்றார்கள்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

தொடா்ச்சியாக கடந்த மூன்று தினங்கள் பெய்து வரும் மழையினால் உருத்திரபுரம் கிராமத்தின் பிரதான வீதிமுதல் உருத்திரபுரத்தினை சூழ உள்ள அனைத்து வீதிகளும் வெள்ளத்தினால் மூடப்பட்டுள்ளது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

இதனால் குறித்த கிராமத்தில் வசிக்கின்ற ஆசிரியர்கள் ,மாணவர்கள் மற்றும் கூலித்தொழிலாளிகள் கூட குறித்த கிராமத்தை விட்டு வெளியே தமது வேலைகளைப் பார்ப்பதற்குக் கூட முடியாத நிலை காணப்படுகின்றது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

அத்துடன் அவசரமாக ஒருவர் வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டுமெனில் கூட வைத்திய சாலைக்கு செல்லமுடியாத நிலைமையில் உள்ளார்கள். அவர்களது போக்குவரத்து நடவடிக்கை முற்றிலும் பாதிப்படைந்துள்ள நிலையில் உருத்திரபுரத்திற்கு பின்புறமாக உள்ள ஒரு வயல்வெளிப் பாதையூடாகவே பல கிலோமீட்டர்கள் பயணம் செய்தே அவர்களது அன்றாடத் தேவைகளை பூர்த்திசெய்ய வேண்டியுள்ளது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

குறித்த சம்பவம் தொடர்பாக எமது செய்திச்சேவை கிராமமக்களிடம் வினவிய போது,

அபிவிருத்தியில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் உருத்திரபுரக் கிராமம் கிளிநொச்சியின் பிரதான வீதியின் மேற்கு திசையில் சுமார் 10 கிலோமீற்றர் தெலைவில் உருத்திரபுர கிராமம் அமைந்துள்ளது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

இக்கிராமத்தின் பிரதான வீதிக்கு தெற்கு பக்கமாக உருத்திரபுரம் D8 , உருத்திரபுரம் D10, சிவநகர் ஆகிய கிராமங்கள் காணப்படுகின்றது.

இக்கிராமங்களுக்கு தெற்குப்பகுதியில் கிராமத்தை வெள்ளத்திலிருந்து காக்கும் அரணாக பாரிய கழிவாறும், அரணும் காணப்படுகின்றது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

இந்த கழிவாறும் அரணும் சுமார் 35 வருடங்களுக்கு மேலாக எந்த அதிகாரிகளினதும் செயற்பாட்டிற்கும் உள்வாங்கப்படவில்லை. மக்கள் கையெழுத்திட்டு மனுக்கள் கொடுத்ததற்கு அமைவாக கண்துடைப்பிற்காக ஒரு மில்லியன் ரூபாய் செலவில் குறித்த அணைக்கட்டின் சிறிய பகுதி மட்டும் புனரமைக்கப்பட்டது.

இருப்பினும் குறித்த கழிவாற்று அணையினை மேவியும் உடைத்தும் வெள்ள நீர் உட்புகுந்துள்ளது. இன்றுவரை மழைகாலத்தில் இம் மூன்று கிராமமும் மூன்று பெரும் குளங்களின் நீரினால் மூழ்கடிக்கப்படுகிறது.

மழைகாலத்தில் மக்கள் இடம்பெயர்ந்து பாடசாலைகளில் தங்கும் நிலையும்,உயிர் அனர்த்தம் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களும் இடம் பெற்றுள்ளது. குறுக்கு வீதிகள் அனைத்தும் இரு தசாப்தத்திற்கு மேலாக கவனிப்பாரற்று விடப்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் பாரியளவில் அரிப்புக்குள்ளாகி மக்கள் பாவனைக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துவதாக காணப்படுகின்றது.

கந்தன் குளம், புதுக்குளம், புதுமுறிப்புக்குளங்களின் வான்பாயும் நீரையும், பயிர்ச்செய்கை நிலங்களிலிருந்து வரும் மேலதிக நீரையும், இவ் வாய்க்காலே மக்களின் குடிமனைக்கு பாதுகாப்பளித்து நீரைக்கடத்தும் முக்கிய அரணாக காணப்படுகின்றது.

இதனையே கழிவாறு என்கின்றார்கள். இதிலுள்ள நீர் வாய்க்கால் மூலம் உருத்திரபுரக் குளத்தை சென்றடையும். ஆனால் இது இன்று உருத்திரபுரக்கிராமத்தையே அடியோடு அழிக்கும் நிலையில் உள்ளது. கந்தன் குளத்திலிருந்து ஆரம்பிக்கும் இக்கால்வாய் உருத்திரபுர குளம் வரை 7 கிலோமீற்றர் தூரம் வரையில் உள்ளது. மேற்கு பகுதியில் வரும் மழை நீரும் இதில்தான் வந்து சேருகின்றது.

முறிப்புக்குளத்தின் நீர் கொள்ளளவு 7 அடியாக இருந்த போதும் இக்கிராமம் தொடர்பாக எதுவித முயற்சியும் மேற்கொளளப்படவில்லை. தற்பொழுது 17 அடி உயர்த்தப்பட்டும் யாரும் இந்த விடயம் தொடர்பில் பார்ப்பதாக இல்லை.

இரு இடங்களில் உடைப்பு எடுத்து கிராமங்களின் ஊடாக அறுத்தோடி கிராமங்களின் ஒரு பகுதியை மாரிகாலத்தில் வெள்ளத்தில் காணலாம். 35 வருடங்களுக்கு மேலாக இந்த பரிதாப நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எனவும் பலகாலங்களாக அவதிப்படும் எமக்கு இவ்வணைக்கட்டை சீராகவும் மற்றும் பாதுகாப்பானதாகவும் கட்டித்தருமறும் கோரிக்கை விடுக்கின்றனர் .

http://www.tamilwin.com/weather/01/125534?ref=morenews

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.