Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன, மதவாதம் பேசினால் விசேட பொலிஸ் பிரிவு தேடிவரும்

Featured Replies

இன, மதவாதம் பேசினால் விசேட பொலிஸ் பிரிவு தேடிவரும்
 
 

article_1479833437-Police.jpgஇனங்களுக்கும் மதங்களுக்கும் இடையிலான நல்லிணக்கத்தைக் குழப்பும் வகையில் செயற்படும் மற்றும் கருத்துகளை வெளியிடுபவர்களைக் கைது செய்து, அவர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்காக, விசேட பொலிஸ் பிரிவொன்று உருவாக்கப்பட்டுள்ளது.  பொலிஸ் திணைக்களத்தில் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பொலிஸ் பிரிவு, பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஒருவரின் தலைமையில் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

இலங்கையில், இனவாத மற்றும் மதவாதக் கருத்துக்கள் மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில், அதற்கு எதிராக அரசாங்கமும் பொலிஸாரும் செயற்படுவதில்லை என்ற விசனமும் கவலைகளும் வெளியிடப்பட்டு வருகின்றன.  

இந்நிலையில், முரண்பாடுகளை தூண்டும் நோக்கில் செயற்படும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கிணங்கவே, இந்த விசேட பொலிஸ் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.  

இன மற்றம் மதங்களுக்கிடையிலான முரண்பாடுகளைத் தூண்டி, நாட்டில் மீண்டும் இன வன்முறையொன்றை ஏற்படுத்துவதற்கான சதித்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, புலனாய்வுத் துறையினர், ஜனாதிபதியிடம் எச்சரிக்கை விடுத்த நிலையிலேயே, இந்த உத்தரவை ஜனாதிபதி பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   

- See more at: http://www.tamilmirror.lk/186727/இன-மதவ-தம-ப-ச-ன-ல-வ-ச-ட-ப-ல-ஸ-ப-ர-வ-த-ட-வர-ம-#sthash.VMcrimuH.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.