Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நடப்பு சாம்பியன் சென்னை மீண்டும் ஏமாற்றம்! #ISLupdate

Featured Replies

நடப்பு சாம்பியன் சென்னை மீண்டும் ஏமாற்றம்! #ISLupdate

 

சென்னை

மும்பைக்கு எதிரான ஐ.எஸ்.எல். போட்டியில், நடப்பு சாம்பியனுக்கு உரிய எந்த அறிகுறியும் இல்லாது விளையாடிய சென்னை அணி மீண்டும் ஒரு தோல்வியைச் சந்தித்தது. சொந்த மண்ணில் மும்பை 2-0 என வெற்றி பெற்று, முதலிடத்தில் நீடிக்கிறது.

மும்பையில் இன்று நடந்த ஐ.எஸ்.எல். லீக் போட்டியில் மும்பை மற்றும் சென்னை அணிகள் மோதின. இந்த போட்டி தொடங்குவதற்கு முன் புள்ளிகள் பட்டியலில் மும்பை 19 புள்ளிகளுடன் ஜம்மென முதலிடத்திலும், சென்னை 14 புள்ளிகளுடன் ஏழாவது இடத்திலும் உள்ளன. இன்னும் இரண்டு போட்டிகள் மட்டுமே இருப்பதால், இந்த போட்டியில் வென்றால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற கட்டாயத்தில் இறங்கியது சென்னை.

ஆனால், முதல் பாதியில் அதற்குரிய ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அதேநேரத்தில் மார்க்கீ வீரர் டீகோ ஃபோர்லன், இந்திய அணிக்காக விளையாடி வரும் நட்சத்திர வீரரான சுனில் சேத்ரி மற்றும் ஃபெடரிகோ என கோல் அடிக்க ஒரு பட்டாளமே இருந்தபோதும், மும்பை அணியால் முதல் அரை மணி நேரம் கோல் அடிக்கவில்லை.

ஒருவழியாக அரை மணி நேரம் கழித்து, 32வது நிமிடத்தில் கோல் கணக்கைத் தொடங்கியது மும்பை. சென்னை அணியின் பெனால்டி பாக்ஸுக்குள் புகுந்த மும்பை ஸ்ட்ரைக்கர்கள், ஒருவருக்கொருவர் மாறி மாறி பாஸ் செய்தனர். ரைட் விங்கில் இருந்த சுனில் சேத்ரி நேர்த்தியாக தன் சக வீரர் ஃபெடரிகோவுக்கு செட் செய்து கொடுக்க அதை அவர், சென்னை டிஃபண்டர்களை கடந்து எளிதாக கோல் அடித்தார்.

44வது நிமிடத்தில் மும்பைக்கு ஒரு ஃப்ரி கிக் கிடைத்தது. 30 யார்டு தூரத்தில் இருந்து அடித்த டீகோ ஃபோர்லன் அடித்த ஷாட்டை, சென்னை கோல் கீப்பர் பாய்ந்து தடுத்தார். முதல் பாதியில் சென்னை அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் 1-0 என மும்பை முன்னிலை பெற்றது.

Matias%20Defederico%20of%20Mumbai%20City

இரண்டாவது பாதியில் சென்னை அட்டாக்கிங்கை துரிதப்படுத்தியது. இருந்தாலும், மும்பைக்குத்தான் அதிர்ஷ்டம் இருந்தது. ஆட்டத்தின் 60வது நிமிடத்தில் மும்பை மீண்டும் ஒரு கோல் அடித்தது. ரைட் விங்கில் இருந்து சக வீரர் கொடுத்த பாஸை  மார்பில் வாங்கி கோல் அடித்தார் வடோக்ஸ். மும்பை 2-0 என முன்னிலை பெற்றது.

அரை மணி நேரத்தில் இரண்டு கோல்கள் அடித்தால் டிரா செய்யலாம், மூன்று கோல்கள் அடித்தால் மட்டுமே வெற்றி என்ற இக்கட்டான நிலை சென்னைக்கு. ஆனால், மிட்ஃபீல்டில் பந்து நிற்கவே இல்லை. கடைசி 15 நிமிடத்தில், மும்பை மேலும் மேலும் அட்டாக்கிங்கை துரிதப்படுத்தியது. ஆனால், அப்படி ஆட வேண்டிய சென்னை அணியோ சான்ஸ் கிரியேட் செய்யவே இல்லை. 78 வது நிமிடத்தில் மும்பைக்கு இன்னுமொரு சான்ஸ் கிடைத்தது. ரைட் விங்கில் இருந்து சக வீரர் கொடுத்த கிராஸ், சென்னை டிஃபண்டர் மெண்டியை தாண்டி நின்றிருந்த சுனில் சேத்ரியிடம் தஞ்சம் புகுந்தது. கோல் கீப்பரை மட்டுமே ஏமாற்ற வேண்டிய சூழல். ஆனால், அதை சுனில் சேத்ரி எங்கோ அடித்து வீணடித்தார். அடுத்த நிமிடத்திலும் மீண்டும் அவருக்கு ஒரு சான்ஸ் வந்தது. ஆனால், அதையும் அவர் மிஸ் செய்தார்.

ஆட்டம் முடிய 2 நிமிடங்களே இருந்தபோது ஃபோர்லன், அழகாக சக வீரர் குன்ஹாவுக்கு செட் செய்து கொடுத்தார். நினைத்திருந்தால் ஃபோர்லனே அதை கோல் அடித்திருக்கலாம். ஆனால், குன்ஹா அதை சென்னை கோல் கீப்பர் கையில் அடித்து வீணடித்தார். ஆட்டத்தின் கடைசி நிமிடம் வரை மும்பை சான்ஸ் கிரியேட் செய்து கொண்டே இருந்தது. ஆனால், கடைசி வரை சென்னையால் ஆறுதலுக்கு கூட ஒரு கோல் அடிக்க முடியவில்லை.

முடிவில் மும்பை 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மும்பை முதலிடத்தில் நீடிக்கிறது.  சென்னை அதே ஏழாவது இடத்தில் நீடிக்கிறது. 

http://www.vikatan.com/news/sports/73282-mumbai-beats-defending-champion-chennaiyin-fc.art

  • தொடங்கியவர்

சென்னையின் அரையிறுதி வாய்ப்பை தகர்த்த அந்த கடைசி நிமிட கோல்!

 

சென்னை

சென்னை அணியின் நட்சத்திர வீரர் டுடு ஹாட்ரிக் கோல் அடித்து ஒருபுறம் அசத்த, கடைசி நிமிடத்தில் நார்த்ஈஸ்ட் வீரர் செளவிக் கோல் அடித்ததால் ஆட்டம் 3-3 என டிரா ஆனது. கடைசி நிமிடம் வரை தங்கள் கையில் இருந்த வெற்றியை, ஆட்டம் முடியும் நேரத்தில் அவர்கள் கையில் கொடுத்து கெடுத்துக் கொண்டனர். இதனால் சென்னை அரையிறுதிக்கு முன்னேறுவதில் சிக்கல் ஏற்பட்டது.

சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று நடந்த ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் டிஃபண்டிங் சாம்பியன் சென்னையின் எஃப்.சி. மற்றும் வடகிழக்கு யுனைடெட் அணிகள் மோதின. சென்னை அணியின் சக உரிமையாளரான தோனி, மனைவி, குழந்தையுடன் மைதானத்துக்கு வந்திருந்தார்.  

பதினைந்து நிமிடத்திற்குள் சென்னைக்கு கிடைத்த ஃப்ரீ கிக்கை ரிசே எடுத்தார். அட்டகாசமாக அடித்த அந்த ஷாட்டை நார்த்ஈஸ்ட் கோல் கீப்பர் சுப்ரதா பறந்து தடுத்து, சென்னையின் கோல் வாய்ப்புக்கு தடையாக இருந்தார். முதல் அரை மணி நேரத்தில் ஃப்ரீ கிக் ஷாட் தவிர்த்து இரு அணிகளும் சொல்லும்படி சான்ஸ் கிரியேட் செய்யவில்லை. ஒரு வழியாக 34வது நிமிடத்தில் சென்னை கோல் கணக்கைத் தெடங்கியது.

ரைட் விங்கில் இருந்து வாடூ கொடுத்த இஞ்ச் பெர்ஃபெர்க்ட் கிராஸை தலையால் முட்டி கோல் அடித்தார் டுடு. நார்த்ஈஸ்ட் கோல் கீப்பர் மற்றும் டிஃபண்டர்களால் அதை ஒன்றுமே செய்ய முடியவில்லை. சென்னை 1-0 என முன்னிலை பெற்றது. உடனே, சென்னை அணியின் சக உரிமையாளர் அபிஷேக் பச்சன் ஆர்ப்பரித்தார். தோனி தன் மடியில் இருந்த மகளின் பாதத்தை தட்டி, தனக்கே உரிய பாணியில் எளிமையாக கொண்டாடினார்.

ஆனால் இந்த மகிழ்ச்சி ஐந்து நிமிடத்திற்கு மேல் நீடிக்கவில்லை. 38வது நிமிடத்தில் பெனால்டி பாக்ஸுக்குள் பந்துடன் புகுந்த வேலஸ், கோல் கம்பத்தின் இடது மூலையை நோக்கி ஒரு ஷாட் அடித்தார். சென்னை கோல் கீப்பர் கரண்ஜித் டைவ் அடித்துப் பார்த்தார். ஆனால், அதை தடுக்க முடியவில்லை. ஆட்டம் 1-1 என சமநிலை அடைந்து சூடு பிடித்தது.

முதல் பாதி முடியும் நேரத்தில் இன்னொரு கோலை அடித்தது சென்னை. இந்த முறை ரைட் விங்கில் இருந்து கோப்ரா கொடுத்த பாஸை 6 யார்டு பாக்ஸில் இருந்து , நார்த்ஈஸ்ட் டிஃபண்டர் ஒருவரை ஏமாற்றி ஒரே டச்சில் கோல் அடித்தார் டுடு. இடைவேளையின்போது சென்னை 2-1 என முன்னிலை பெற்றது. தவிர, இரண்டு சான்ஸ் கிரியேட் செய்தது, பந்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது, கார்னர் கிக் என எல்லாவிதத்திலும் சென்னையின் கையே ஓங்கியிருந்தது.

சென்னை

சென்னை பயிற்சியாளர் மார்கோ மடராசி ஒவ்வொரு போட்டியிலும் மெயின் லெவனை மாற்றிக் கொண்டே இருப்பார். இந்தமுறை டுடுவை பிளேயிங் லெவனில் இருக்கியது பலரை புருவம் உயர்த்த வைத்தது. ஏனெனில் இந்த சீசனில் அவர் பெரிதாக சாதிக்கவில்லை. அதனால் பெரும்பாலும் சப்ஸ்டிட்யூட் வீரராகவே இறங்குவார். மடராசிக்கு எதோ பொறி தட்டி டுடுவை இறக்கி விட்டுள்ளார். அவரும் முதல் பாதியில் இரண்டு கோல்களை அடித்து, தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.

ஏற்கனவே முன்னிலை பெற்றிருப்பதால், அதே டெம்ப்போவை மெயின்டன் செய்தால் போதும் என்ற மனநிலையில் களமிறங்கியது சென்னை. ஆனால், நார்த்ஈஸ்ட் அணி வேறொரு பிளான் வைத்திருந்தது. 52வது நிமிடத்தில் சென்னை செய்த டிஃபன்ஸிவ் எரர், நார்த்ஈஸ்ட்டுக்கு சாதகமாக அமைந்தது. இந்த முறையும் அந்த கோலை வேலஸ் அடித்தார். ஆட்டம் 2-2 என சமநிலை அடைந்து, விறுவிறுப்பானது.

தசைப்பிடிப்பு காரணமாக நார்த்ஈஸ்ட் கோல் கீப்பர் சுப்ரதா வெளியேற, அவருக்குப் பதிலாக ரெஹ்னேஸ் களம் புகுந்தார். கடைசி பத்து நிமிடத்தில் கோல் அடிக்க இரு அணிகளும் போராடின. 81 வது நிமிடத்தில் ரைட் விங்கில் இருந்து மெண்டி பக்கவாக ஒரு பாஸ் செட் செய்தார். 6 யார்டு பாக்ஸுக்குள் இருந்த டுடு அதை வாங்க முயன்றபோது, நார்த்ஈஸ்ட் டிஃபண்டர் தடுக்க முயன்றார். அதற்குள் அவர்கள் கோல் கீப்பர் ரெஹ்னேஸும் வந்து மோதினார். எப்படியோ பந்து வலைக்குள் பாய்ந்தது. 3-2 என சென்னை மீண்டும் முன்னிலை பெற்றது.

மீண்டும் ஒருமுறை சென்னை பயிற்சியாளர் மடராசியின் மாஸ்டர் மூவ் வொர்க் அவுட் ஆனது. டிஃபண்டர் மெண்டியை ரைட் விங்கில் விளையாட பணித்தார். அதற்கு சரியான பலன் கிடைத்தது. ஹாட்ரிக் கோல் அடித்த டுடுடுவை மடராசி வெளியே எடுத்தார். அப்போது சென்னை ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டி வரவேற்றனர்.

ஆட்டம் முடிய ஒரு நிமிடமே இருந்தபோது கார்னர் கிக்கை தலையால் முட்டி கோல் அடித்தார் நார்த்ஈஸ்ட் வீரர் செளவிக். இது முழுக்க முழுக்க சென்னை பின்கள வீரர்கள் செய்த தவறுக்கு கிடைத்த தண்டனை. இதனால் ஆட்டம் 3-3 என சமநிலை அடைந்தது.

தற்போது புள்ளிகள் பட்டியலில் சென்னை 15 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் உள்ளது. அடுத்த போட்டியில் வெற்றி பெற்றாலும் கூட, அரையிறுதிக்கு முன்னேற முடியாது. கடைசி நிமிடத்தில் சென்னை டிஃபண்டர்கள் அஜாக்கிரதையாக இருந்ததால், செமி ஃபைனல் கனவு தகர்ந்தது.

http://www.vikatan.com/news/sports/73568-chennaiyin-fc-drew-with-northeast-and-misses-semi-finals.art

  • தொடங்கியவர்

நடப்பு சாம்பியன் சென்னை நடையைக் கட்டியது ஏன்? #ISLupdates

 

சென்னை

 

‛‛கால்பந்து கிளப் என்பது அழகான பெண்ணைப் போன்றது. அடிக்கடி அந்த பெண்ணிடம் நீ அழகு என சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையெனில் வசீகரம் குறைந்து விடும்’’

இது ஆர்சனல் கிளப் மேனேஜர் அர்சீன் வெங்கர் சொன்னது. 

இரண்டாவது ஐ.எஸ்.எல். சீசனில்(2015) சென்னையின் எஃப்.சி. சாம்பியன்.  இந்த சீசனில் இன்னும் ஒரு போட்டி முடிவதற்குள்ளேயே, செமி ஃபைனலுக்கு முன்னேற முடியாத சூழல். கடந்த முறை ஃபைனலில் சென்னையுடன் மோதிய கோவா அணியும், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை. கடந்த சீசனில் கடைசியாக மோதிய இரு அணிகளும் இப்போது முதலில் வெளியேற உள்ளன. இதுதான் கால்பந்து.  

சொந்த காலில் செமி ஃபைனலுக்கு முன்னேற முடியாத சென்னை தற்போது, ‛எதவாது அதிசயம் நிகழாதா’ என ஏங்கிக் கிடக்கிறது. வேர்ல்ட் கப் வின்னரை கோச்சாக வைத்திருக்கும் சென்னை அணிக்கு, அதுவும் நடப்பு சாம்பியனுக்கு இது அழகல்ல. எங்கே தவறு நடந்தது? நடப்பு சாம்பியனுக்கு என்ன ஆனது? 

வெங்கர் சொன்னது போல, ‛நாம் டிஃபண்டிங் சாம்பியன். அதற்கேற்ப விளையாட வேண்டும்’ என வீரர்களிடம் சொல்லத் தவறி விட்டார் மார்கோ மடராசி. கடந்தமுறை புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து மீண்டு வந்து சாம்பியன் ஆனதற்கும், இந்தமுறை அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் போனதற்கும் அவர்தான் முழுமுதற் காரணம்.  

மெயின் லெவனில் குழப்பம்...
எந்த ஒரு கிளப் பயிற்சியாளரும், வீரர்கள் காயம் அடையாத பட்சத்தில் ஸ்டார்டிங் லெவனை மாற்ற மாட்டார்கள். ஆனால், மடராசி ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு பொசிஷனில் ஒவ்வொரு வீரரை இறக்கினார். நிலையில்லாத அணியால், நிலையில்லாத ரிசல்ட். மட்டுமல்லாது, சில சமயங்களில் வீரர்களை வேறு பொசிஷனில் ஆட வைத்தார்.  சில சமயங்களில் அது வொர்க் அவுட் ஆனது. சென்டர் பேக் பெர்னார்டு மெண்டியை ரைட் விங்கில் இறக்கி விட்டார். டிரிபிளிங் செய்து அப்ளாஸ் அள்ளுவதில் கில்லியான மெண்டி, இஞ்ச் பெர்ஃபெக்ட் கிராஸ் கொடுத்து அசத்தினார். ஆனால்,  பல சமயங்களில் மடராசியின் திட்டம் சொதப்பியது. 


உருப்படியான ஸ்ட்ரைக்கர் இல்லை...

மும்பையில் மார்சிலினோவைப் போல சொல்லி வைத்து கோல் அடிக்க சென்னை அணியில் ஸ்ட்ரைக்கர் இல்லை. நார்த்ஈஸ்ட் அணிக்கு எதிரான போட்டியில் டுடு ஹாட்ரிக் கோல் அடித்தாரே தவிர, அதற்கு முந்தைய போட்டிகளில், அவர் வேஸ்ட் லக்கேஜாகத்தான் அணியில் இருந்தார். அல்வா போன்ற வாய்ப்புகளை வீணடித்து ரசிகர்களிடம் பேட் வேர்ட்ஸ்களை வாங்கினார்.  மற்றொரு வீரர் டேவிட் சூச்சியும் மார்க்கீ வீரருக்கு உரிய தொணியில் ஆடவில்லை. இவர்களுக்கு இந்திய வீரர் ஜெஜே எவ்வளவோ பரவாயில்லை. பெரும்பாலான போட்டிகளில் கோல் அடிக்க அவரை மட்டுமே நம்பி இருந்தது சென்னை. 

தவிர, கடந்த இரண்ட சீசன்களிலும் ஸ்டீவன் மெண்டோசா, எலனோ இருவரும் சென்னையின் கோல் அடிக்கும் மிஷின்களாக வலம் வந்தனர். இந்த முறை அவர்கள் இல்லாதது அப்பட்டமாக தெரிந்தது. அதேபோல, மிட் ஃபீல்டில் பந்தை ஹோல்ட் செய்து பாஸ் செய்வதிலும், செட் பீஸ்களை துல்லியமாக எடுப்பதிலும் வல்லவரான பெலிசாரியை,  டெல்லிக்கு தத்துக் கொடுத்தது, மடராசி செய்த மாபெரும் தவறு.  ரபேல் அகஸ்டோ மட்டும் இல்லையெனில், சென்னையின் மிட் ஃபீல்ட் சந்தி சிரித்திருக்கும். 

சென்னை

அஜாக்கிரதையால் தோல்வி...

சமீபத்தில் நேரு மைதானத்தில் நடந்த நார்த்ஈஸ்ட் அணிக்கு எதிரான போட்டியில், இஞ்சுரி டைமில் கோல் வாங்கியது சென்னை. அதுவரை 3-2 என சென்னை முன்னிலையில் இருந்தது. கடைசி நிமிடத்தில் செய்த டிஃபன்ஸிவ் எரர், ஒரு கோல் கன்சீட் செய்ய காரணமாகி விட்டது. அந்த தப்பு நடக்காமல் இருந்திருந்தால் ஆட்டம் டிராவில் முடிந்திருக்காது, சென்னை வெற்றி பெற்றிருக்கும். இன்னும் மீதமுள்ள ஒரு போட்டியில் வென்றால், செமி ஃபைனலுக்குள் நுழைய வாய்ப்பு இருந்திருக்கும். நொடி நேர அஜாக்கிரதையால் எல்லாமே பாழ்.

ஆரம்பமே சொதப்பல்...

முதல் சீசனில் சென்னையின் எஃப்.சி. உருவானதே கடைசி நேரத்தில் தான். ஆனாலும், செமி ஃபைனல் முன்னேறி புருவம் உயர்த்த வைத்தது. கடந்த முறை, புள்ளிகள் பட்டியலில் பின் தங்கிய நிலையில் இருந்து திடீரென விஸ்வரூபம் எடுத்து, கடைசியில் சாம்பியன் ஆனது. அதே மாதிரி, கடைசி நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம் என இந்த முறை ஆரம்பத்தில் அஜாக்கிரதையாக இருந்து விட்டனர். டெல்லியிடம் சொந்த மண்ணில் நடந்த முதல் போட்டியில் தோல்வியடைந்தபோதே சுதாரித்திருக்க வேண்டும். அதைச் செய்யவில்லை. ஹோம் அவே மேட்ச்களிலும் ஒழுங்காக பெர்ஃபார்ம் பண்ணவில்லை.  13 போட்டிகளில் மூன்றில் மட்டுமே வெற்றி பெற்றதும், ஆறு ஆட்டங்களை டிரா செய்ததுமே சென்னையின் இந்த நிலைமைக்கு காரணம். 

கடைசி நிமிட கோல்... 

‛இன்னும் பத்து நிமிஷம்தான்... ஜெயிச்சரலாம்’ என சென்னை ரசிகர்கள் மனக்கணக்கு போட்டுக் கொண்டிருப்பர். ஆனால், 80 நிமிடத்துக்கு மேல் சென்னை டிஃபண்டர்களுக்கு கிறுக்குப் பிடித்து விடும். கேரளா, மும்பை, புனே, நார்த்ஈஸ்ட் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் கடைசி பத்து நிமிடத்தில்தான், கோல் கன்சீட் செய்தது சென்னை. இதனால், சில வெற்றிகளோடு புள்ளிகளும் நழுவின. 

‛இந்த சீசனில் சென்னை செமி ஃபைனலுக்கு முன்னேறவில்லை எனில், நான் அடுத்த முறை இந்தியாவுக்கு வர மாட்டேன்’ என மடராசி சொன்னதாக, செய்தி வெளியானது. ஆத்திரமடைந்த மடராசி ‛நான் அப்படி சொல்லவே இல்லை’ என மறுத்தார். கடந்த முறை சென்னை சாம்பியன் ஆனதும்,  நேரு மைதானத்தில் நடந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் அணியின் சக உரிமையாளர்களான அபிஷேக் பச்சன், வீதா தானி மற்றும் அனைத்து வீரர்களும் பங்கேற்றனர். மடராசி மட்டும்  மிஸ்ஸிங். கொண்டாட்ட தருணத்தையே தவிர்த்த அவர், இந்தமுறை என்ன செய்யப் போகிறார் என தெரியவில்லை. 

http://www.vikatan.com/news/sports/73647-what-went-wrong-for-defending-champion-chennaiyin-fc.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.