Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

75 வீதமானவர்கள் அந்தந்த மாகாணங்களிலிருக்கும் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவுசெய்யப்படவேண்டும்

Featured Replies

75 வீத­மா­ன­வர்கள் அந்­தந்த மாகா­ணங்­க­ளி­லி­ருக்கும் பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளுக்கு தெரிவுசெய்­யப்­ப­ட­வேண்டும்

 

இந்த முறை குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்­கிறார் மாவை எம்.பி.
(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்)

நாட்டில் உள்ள ஒவ்­வொரு மாகா­ணத்­தி­லு­மி­ருந்து 75 சத­வீ­த­மா­ன­வர்கள் அந்­தந்த மாகா­ணங்­களில் உள்ள பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளுக்குத் தெரிவுசெய்­யப்­ப­டு­வது தொடர் ­பாக கவனம் செலுத்­த­வேண்டும் என தமிழ்த் ­தே­சியக் கூட்­ட­மைப்பின் யாழ்.­மா­வட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மாவை.சேனா­தி­ராஜா சபையில் கோரிக்கை விடுத்தார்.

பல்­க­லைக்­க­ழகச் சட்­டங்­களின் பிர­காரம் அவை சுயா­தீ­ன­மாக இயங்­கு­வ­தற்கு அனு­ம­தி­ய­ளிக்­கப்­ப­ட­வேண்­டு­மென வலி­யு­றுத்­திய அவர் உயர்­கல்­வியை தொட­ரு­வ­தற்க முன்­ன­தாக மாண­வர்­க­ளுக்கு கற்­கைத்­துறை சார்ந்த ஆலோ­ச­னையை வழங்­கு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வேண்­டு­மெ­னவும் பல்­க­லக்­கை­ழக மானிய ஆணைக்­கு­ழுவை கேட்­டுக்­கொண்டார். 

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை 2017ஆம் ஆண்­டுக்­கான வரவு செல­வுத்­திட்­டத்தின் உயர்­கல்வி மற்றும் நெடுஞ்­சாலை அமைச்சின் செல­வுத்­த­லைப்பு மீதான குழு நிலை விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்

அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

உல­கப்­பொ­ரு­ளா­ரத்தில் செல்­வாக்குச் செலுத்தும் ஆடை­வ­டி­வ­மைப்பில் கூட கலா­நி­திப்­பட்­டங்­களை பெற்­றுக்­கொள்ள முடியும். ஆனால் அவ்­வா­றான யுபட்­டப்­ப­டிப்­புக்கள் இங்கு இல்லை.கலைத்­து­றைப்­பட்­ட­தா­ரிகள் வெவ்­வேறு துறை­களில் நிய­மிக்­கப்­ப­டு­கின்­றார்கள். அர­சியல் ரீதி­யாக நிய­மிக்­கப்­ப­டு­கின்­றார்கள். அவற்றில் மாற்றம் அவ­சி­ய­மா­கின்­றது.

குறிப்­பாக இந்­தி­யாவில் பத்தாம் தரத்­தினை உடைய மாணவன் தன்­னு­டைய துறையை தெரிவு செய்யும் நிலை­மைகள் காணப்­ப­டு­கின்­றன. குறிப்­பாக அவர்­க­ளுக்­கான ஆலோ­ச­னைகள் சரி­யாக வழங்­கப்­ப­டு­கின்­றன. ஆனால் எமது நாட்டில் அவ்­வா­றான ஆலோ­ச­னைகள் வழங்­கப்­ப­டு­வ­தில்லை. ஆகவே பல்­க­லைக்­க­ழக மானிய ஆணைக்­குழு உள்­ளிட்ட துறை­சார்ந்த அமைப்­புக்கள் சரி­யான ஆலோ­ச­னையை வழங்­கு­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கைகள் அவ­சி­ய­மா­கின்­றன.

கலைப்­பீ­டத்தில் 65சத­வீ­த­மா­ன­வர்கள் பல்­க­லைக்­க­ழத்தில். அவர்கள் ஏனைய பாடங்­களை கற்­பதில் பின்­னிற்­ப­வர்கள் அல்ல. ஆனால் அவர்­க­ளுக்கு உரிய சரி­யான ஆலோ­ச­னைகள் வழங்­கப்­ப­டு­வ­தில்லை. குறிப்­பாக வணிக, மருத்­துவ, விஞ்­ஞான, தொழி­நுட்ப பீடங்­க­ளிற்கு மாண­வர்கள் தெரி­வு­செய்­யப்­ப­ட­வேண்டும். அதற்­கு­ரிய ஆலோ­ச­னைகள் வழங்­கப்­ப­ட­வேண்­டி­யுள்­ளது.

அவ்­வா­றான செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­பதன் ஊடா­கவே உல­கப்­பொ­ரு­ளா­தா­ரத்­தோடு நாம் ஒட்­டி­யு­ய­ர­மு­டியும். குறிப்­பாக வடக்கு கிழக்கில் பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளுக்­கான ஒதுக்­கீ­டுகள் குறை­வாக இருக்­கின்­றன. ஆகவே அதனை மிக கவ­ன­மாகக் கொள்ள வேண்டும்.

எமது பல்­க­லைக்­க­ழ­கங்­களை முன்­னேற்­ற­து­வ­தாயின் சர்­வ­தே­சத்தில் உள்ள மிகச்­சி­றந்த பல்­க­லை­க­ழங்­களை இணைக்­க­வேண்டும். அவர்­ளுடன் பரஸ்­பர விட­யங்­களை பகிர்ந்து கொள்­வ­தற்­கு­ரிய வாய்ப்­புக்கள் ஏற்­ப­டுத்­த­வேண்டும்.

ஆராய்ச்­சிக்­கான வாய்ப்­புக்கள் ஏற்­ப­டுத்­த­வேண்டும். அவுஸ்­தி­ரே­லியா, சீனா போன்ற நாடு­களில் பல்­க­லைக்­க­ழ­கத்தில் மாண­வர்கள் ஆய்வு செய்து நாட்­டிற்கு உல­கத்­திற்கு அதன் முடி­வு­களை பயன்­ப­டுத்தி பல்­வேறு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­தற்கு உத­வி­யாக அமைக்­கின்­றது.

ஆனால் எமது பல்­க­லைக்­க­ழ­கங்­களில் உரிய முறையில் ஆய்­வு­க­ளுக்­கான இடங்கள் அளிக்­கப்­ப­டு­வ­தில்லை. அவை தொடர்பில் கவனம் செலுத்­தப்­ப­ட­வேண்டும்.

நாட்டின் திட்­ட­மிடல் கொள்கை, கல்­விக்­கொள்­கையில் சரி­யான முறையில் இவை இணைக்­கப்­ப­ட­வேண்டும். வடக்கில் யுத்­தத்தின் போதி­ருந்த கல்வி நிலை கூட தற்­போது வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ள­தாக கணிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

ஆகவே அந்த பகு­தியில் உள்ள மாண­வர்­க­ளுக்கு சரி­யான ஆலோ­ச­னைகள் வழங்­கப்­பட்டு புதிய பாட­வி­தா­னங்­களை கற்று துறை­சார்ந்த ரீதியில் முன்­னே­று­வ­தற்கும் தொழில்­வாய்ப்பை பெற்­றுக்­கொள்­வ­தற்கும் வழி­வகை செய்­ய­வேண்டும்.

ஒவ்­வொரு மாகா­ணாத்­திலும் உள்ள மாணவர்கள் அந்த மாகாணங்களில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு 70 முதல் 75சதவீதமானவர்கள் தெரிவு செய்யப்படுவது தொடர்பாக கவனம் செலுத்தவேண்டும். இவ்வாறு அந்தந்த பல்கலைக்கழங்களில் உள்ள துறைகளுக்கு இவ்வாறு 70 முதல் 75சதவீதமானவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் என்றால் பல்வேறு பிரச்சினைகளுக்கு பிரச்சினைகளை தெரிவு செய்யமுடியும்.

அத்தோடு அந்தந்த பிராந்தியங்களில் உள்ள பல்கலைக்கழகங்கள் சுயாதீனமாக இயங்குவதற்குரிய சட்டதிட்டங்கள் ஏற்படுத்தப்பட்டு அவைற்றை நடைமுறைப்படுத்துவதையும் உறுதிசெய்யவேண்டும் என்றார். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-11-24#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.