Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய அரசமைப்பின் ஊடாக தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு -கூட்டமைப்புடனான சந்திப்பில் ஜனாதிபதி உறுதியளிப்பு

Featured Replies

புதிய அரசமைப்பின் ஊடாக தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு -கூட்டமைப்புடனான சந்திப்பில் ஜனாதிபதி உறுதியளிப்பு
 
புதிய அரசமைப்பின் ஊடாக தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு -கூட்டமைப்புடனான சந்திப்பில் ஜனாதிபதி உறுதியளிப்பு
புதிய அரசமைப்பின் ஊடாக தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
 
நாடாளுமன்ற கட்டட தொகுதியில் உள்ள ஜனாதிபதியின் செயலகத்தில் நேற்று மாலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளு மன்ற உறுப்பினர்கள் 16 பேரும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.இதன்போதே ஜனாதிபதி மேற்கண்டவா தெரிவித்தார்.
 
இந்தச் சந்திப்பில்  அரச தரப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாத்திரமே கலந்து கொண்டார். சுமார் இரண்டு மணிநேரம் இந்தச் சந்திப்பு நீடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இந்தச் சந்திப்பின் போது, அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான கரிசனைகள் மற்றும் வடக்கு, கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களின் இன்னமும் தீர்க்கப்படாத பிரச்சினைகள் உள்ளடங்கிய மனு ஒன்றை, கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன், ஜனாதிபதியிடம் கையளித்தார்.இந்த மனுவில் கூட்டமைப்பின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.
 
அரசியலமைப்புத் திருத்த விவகாரங்கள் குறித்தே இந்தச் சந்திப்பில் முக்கியமாக ஆராயப்பட்டுள்ளது.
 
TNA-maithri-1.jpg
தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு, தற்போதைய அரசியலமைப்பில் திருத்தங்களை மாத்திரம் செய்தால் போதாது என்றும்,  புதிதாக ஒரு அரசியலமைப்பை உருவாக்குவதே தீர்வாக இருக்கும் என்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதியிடம்  வலியுறுத்தியுள்ளனர்.
 
வடக்கில்  படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது குறித்தும் இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டு ள்ளது.
 
தமது தொகுதிகளின் பிரச்சினைகள் தொடர்பாகவும், ஜனாதிபதிக்கு விளக்கியுள்ள கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவற்றுக்கான தீர்வுகளையும் முன்மொழிந்துள்ளனர்.
 
அதேவேளை, வரவுசெலவுத் திட்ட இறுதி வாக்கெடுப்புக்கு முன்னதாக, மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 16 பேரையும், சந்தித்துக் கலந்துரையாடுவதாக ஜனாதிபதி உறுதி அளித்துள்ளார்.

http://onlineuthayan.com/news/20628

  • தொடங்கியவர்

புதிய அரசியலமைப்பின் மூலம் நிரந்தரமான தீர்வு திட்டம் உறுதி

01-96281f25b27b5821294342d52a74c12f0b23b56d.jpg

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி
(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்)

இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வதே எனது இலக்காகும். புதிய அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு நிரந்­த­மான தீர்வை அடை­ய­வேண்டும் என்­பதில் நான் உறு­தி­யாக இருக்­கின்றேன்.தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு நிரந்­தர தீர்வு வழங்­கு­வதில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ உட்­பட அனை­வரின் நிலைப்­பா­டு­க­ளையும் பெற்­றுக்­கொள்

வோம் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பிர­தான எதிர்க்­கட்­சி­யான தமிழ்த்­தே­சி­யக்­கூட்­ட­மைப்­பிடம் தெரி­வித்­துள்ளார்.

தற்­போது புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் பணிகள் இடம்­பெற்று வரும் நிலை யில் அது மூன்­றி­லிரண்டு பெரும்­பான்­மை­யுடன் நிறை­வேறும் என்­பது என்­னு­டைய நம்­பிக்கை. மக்­களின் அபிப்­பி­ரா­யங்­களை பெற்­றுக்­கொண்டு புதிய அர­சி­ய­ல­மைப்பை நிறை­வேற்­றிக்­கொள்­வ­தற்­காக அனை­வரும் இணைந்து செயற்­ப­ட­வேண்டும் என்றும் ஜனா­தி­பதி சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

வடக்கு, கிழக்கில் காணப்­படும் பிரச்­சி­னை­

க­ளுக்கு உரிய தீர்­வுகள் வழங்­கப்­ப­டு­வதில் வாக்­கு­றுதி அளிக்­கப்­பட்­டதன்

பிர­காரம் முன்­னெ­டுக்­கப்­ப­டாது கால­தா­மதம் செய்­யப்­பட்டு வரு­கின்­றது என தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் அனைத்து மக்கள் பிர­தி­நி­தி­களும் எதிர்க்­கட்­சித்­த­லை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­த­னிடம் பாரா­ளு­மன்றக் குழுக்­கூட்­டத்தின் போது குறை­பட்­டுக்­கொண்­டனர்.

அத­னை­ய­டுத்து வடக்கு கிழக்கில் காணப்­படும் நிலை­மைகள் தொடர்­பா­கவும் அவ­ச­ர­மாக முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்­டி­ய­வி­ட­யங்கள் தொடர்­பா­கவும் விரி­வான மக­ஜ­ரொன்றை ஜனா­தி­பதி பிர­த­ம­ரி­டத்தில் கைய­ளிப்­ப­தென்றும் ஜனா­தி­ப­தியை தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலைவர் தலை­மையில் அனைத்து பிர­தி­நி­தி­களும் நேர­டி­யாகச் சந்­தித்து இவ்­வி­ட­யங்கள் தொடர்­பாக கலந்­து­ரை­யா­டு­வ­தெ­னவும் ஏகோ­பித்து தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருந்­தது.

அதற்­க­மை­வாக ஜனா­தி­பதியின் கீழ் உள்ள மாகா­வலி அபி­வி­ருத்தி மற்றும் சுற்­றாடல் அமைச்சின் மீதான குழு நிலை விவா­தத்தில் பங்­கேற்­ப­தற்­காக நேற்று புதன்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்­திற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால வரு­கை­தந்­தி­ருந்தார்.

இச்­ச­ம­யத்தில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பா­ல­விற்கும் எதிர்க்­கட்­சித்­த­லை­வரும் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தலை­மையில் கூட்­ட­மைப்பின் அனைத்து பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் பற்­கேற்ற விசேட சந்­திப்­பொன்று பாரா­ளு­மன்­றத்தில் உள்ள ஜனா­தி­ப­தியின் உத்­தி­யோக பூர்வ அலு­வ­ல­கத்தில் நடை­பெற்­றது.

இச்­சந்­திப்­பின்­போது முதலில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் எதிர்­கொள்ளும் பிரச்­சி­னைகள் தொடர்­பாக விரி­வாக குறிப்­பி­டப்­பட்டு அதற்­கு­ரிய தீர்வு வழங்­கப்­ப­ட­வேண்டும் என்­பதை வலி­யுத்தி தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் 16பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் கையொப்­ப­மிட்ட மக­ஜ­ரொன்று அவரிடம் கைய­ளிக்­கப்­பட்­டது.

அத­னை­ய­டுத்து தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்­சித்­த­லை­வ­ரு­மான இரா.சம்­பந்தன், தமிழ் மக்கள் தங்­களின் மீது நம்­பிக்கை வைத்து வாக்­க­ளித்­துள்­ளார்கள். தற்­போது முன்­னேற்­ற­க­ர­மான விட­யங்கள் நடை­பெற்று வரு­கின்­றன. அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வதுடன் பல விட­யங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. அதனை நாம் வர­வேற்­கின்றோம்.

எனினும் எம்மை தெரிவு செய்த மக்­க­ளிற்கு அவர்கள் வழங்­கிய ஆணைக்கு நாம் பதி­ல­ளிக்க வேண்டும். அவர்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு வழங்­க­வேண்டும். மக்­களின் அன்­றாட பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு வழங்­க­வேண்டும் என்­பதே எமது உறுப்­பி­னர்­களின் கோரிக்­கை­யாக உள்­ளது. இப்­பி­ரச்­சி­னைகள் கால­தா­ம­த­மா­வதால் எமக்­குள்ளே பிரச்­சி­னைகள் கூட ஏற்­ப­டு­கின்­றன.

ஆகவே தாங்கள்(ஜனா­தி­பதி) பல விட­யங்­களில் முன்­னேற்­ற­க­ர­மான சமிக்­ஞை­களை வௌிப்­ப­டுத்தி வரு­கின்­றீர்கள். எனவே இவ்­வி­ட­யங்­களில் எமக்கு தீர்­வு­களை வழங்­கு­வீர்கள் என எதிர்­பார்க்­கின்றோம் என்றார்.

இத­னை­ய­டுத்து கருத்து வௌியிட்ட ஜனா­ப­தி­பதி மைத்­த­ரி­பால சிறி­சேன,

நான் தேர்தல் காலத்தில் வழங்­கிய வாக்­கு­று­தி­களை மறக்­க­வில்லை. இந்த நாட்டில் அனைத்து இனங்­க­ளுக்­கி­டை­யிலும் நல்­லி­ணக்­கத்தை கட்­டி­யெ­ழுப்ப வேண்டும் என்­பதில் நான் உறு­தி­யாக இருக்­கின்றேன். அதுவே எனது இலக்­காவும் உள்­ளது.

இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லிக்­க­ணத்தை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­காக நாம் கடந்த காலத்தில் சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்­கவின் காலத்தில் முன்­னெ­டுக்­கப்­பட்ட வெண்தா­மரை இயக்கம் போன்­ற­தொரு அமைப்பை விரைவில் ஸ்தாபிக்­க­வுள்ளோம். அந்த அமைப்பு தேசிய நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­ப­ட­வுள்­ளது.

அதே­நேரம் புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் பணிகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. புதிய அர­சி­ய­மைப்­பினை நிறை­வேற்ற முற்­ப­டு­கின்­ற­போது எதிர்ப்­புக்கள் வரும். ஆத­ர­வுகள் கிடைக்கும். அவற்றை நாம் எதிர்­கொண்டு புதிய அர­சி­ய­ல­மைப்பை நிறை­வேற்­ற­வேண்டும்.

பாரா­ளு­மன்­றத்தில் எவர் எதிர்த்­தாலும் மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மை­யுடன் நாம் புதிய அசி­ய­ல­மைப்பை நிறை­வேற்­றுவோம் என்­பது எனது நம்­பிக்கை.

அத்­துடன் புதிய அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காணப்­ப­ட­வேண்டும் என்­பதில் நாமும் உறு­தி­யாக இருக்­கின்றோம் எனக்­கு­றிப்­பிட்டார்.

இவ்­வே­ளையில் ஜனா­தி­ப­தியின் மொழி­பெ­யர்ப்­பாளர் அர­சி­ய­ல­மைப்பு அமைக்­கும்­ப­ணிகள், அர­சிய­ல­மைப்பு ஊடாக தீர்வு என்ற வார்த்­தைப்­பி­ர­யோ­கங்­களை பயன்­ப­டுத்தி மொழி­பெ­யர்த்த வேளையில் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் ஊட­கப்­பேச்­சா­ளரும் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன் தயவு செய்து புதிய அர­சி­ய­ல­மைப்பு எனத்­தி­ருத்தக் கூறுங்கள் என்று சுட்­டிக்­காட்­டினார்.

இத­னை­ய­டுத்து தொடர்ந்து தனது கருத்­துக்­களை வௌியிட்ட ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன,

இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வை அளிப்­பதில் முன்னாள் ஜனா­தி­பதி மகிந்த ராஜ­பக்ஸ இந்­திய அர­சாங்­கத்­திற்கு 13ஆம் திருத்­தச்­சட்­டத்­திற்கு அப்பால் செல்வேன் எனக்­கூ­றி­யி­ருந்தார். ஆனால் தற்­போது தீர்வு நோக்­கிய செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கின்­ற­போது அதனைப் பாதிக்கும் வகை­யி­லான செயற்­பா­டு­களை சில சக்­திகள் முன்­னெ­டுக்­கி­ன்­றன. நாம் அனை­வ­ரி­னதும் கருத்­துக்­களை பெற்­றுக்­கொள்வோம். அவர்­களின் நிலைப்­பா­டு­களை அறிந்து கொள்வோம்.

குறிப்­பாக இனப்­பி­ரச்­சினை தீர்வில் முன்னாள் ஜனா­தி­பி­தியின் தற்­போ­தைய நிலைப்­பாடு என்ன என்­ப­தையும் அறிந்­து­கொள்வோம். அதற்­கான முயற்­சிகள் நடை­பெ­று­கின்­றன என கரு­து­கின்றேன். புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் மக்­களின் அபிப்­பி­ரா­யங்­க­ளையும் நாம் அறி­வ­தற்கு தயா­ரா­க­வுள்ளோம்.

அர­சியல் தீர்வு ஏற்­ப­டு­கின்­ற­போது அபி­வி­ருத்­தி­களை முன்­னெ­டுப்­ப­தற்கு இல­கு­வாக இருக்கும். ஆகவே நாம் முதலில் அர­சியல் தீர்வை பெற்­றுக்­கொள்­வ­தற்­கான அனை­வரும் இணைந்து செயற்­ப­ட­வேண்டும் என்றார்.

அமைச்சர்கள் சுயாதீனமாக செயற்படுகின்றனர்

இத­னை­ய­டுத்து இலங்கைத் தமி­ழ­ர­சுக்­கட்­சித்­த­லை­வரும் யாழ்.மாவட்­ட­பா­ரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை.சோ.சேனா­தி­ராஜா, நாம் தேசிய அர­சாங்­கத்­திற்கு ஆத­ர­வ­ளித்து வரு­கின்றோம். அமைச்­சுப்­ப­த­வி­களில் அங்கம் வகிக்­க­வில்லை. அவ்­வா­றி­ருக்­கையில் எமது பகு­தி­களில் முன்­னெ­டுக்­கப்­படும் அபி­வி­ருத்­திகள் தனி­யாக மத்­திய அர­சாங்­கத்தின் அமைச்­சர்­களால் சுயா­தீ­ன­மாக முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன.

மக்கள் பிர­தி­நி­தி­க­ளான எம்­மி­டத்தில் அது தொடர்­பாக ஆலோ­சிப்­ப­தில்லை. வடக்கு மாகாண சபை­யுடன் ஆலோ­சிப்­ப­தில்லை. குறிப்­பாக மீள்­கு­டி­யேற்ற அமைச்சு தன்­னிச்­சை­யாக செயற்­ப­டு­கின்­றது. மேலும் வரவு செல­வுத்­திட்­டத்­திற்கு நாம் ஆத­ரித்­துள்ள போதும் ஒதுக்­கீ­டுகள் குறித்து எம்­முடன் கலந்­தா­லோ­சிக்­க­வில்லை. ஆகவே நாம் இணக்­கப்­பாட்­டுடன் செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்­கின்ற போது இவ்­வி­ட­யங்­களில் எம்­முடன் ஆலோ­சிக்க வேண்­டி­யது அவ­சி­ய­மா­கின்­றது என்றார்.

இதனை அடுத்து பதி­ல­ளித்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால, வடக்கு கிழக்கு மாகா­ணாங்­களில் உள்ள மாவட்ட அபி­வி­ருத்­திகள் குறித்து மாத­மொன்­றுக்கு இரண்டு தட­வைகள் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் சந்­தித்து கலந்­து­ரை­யா­டுவோம். ஆப்­போது அம்­மா­வட்­டத்­திற்­கான அர­சாங்க அதி­பர்கள் உள்­ளிட்ட அனைத்து அதி­கா­ரி­க­ளையும் அழைத்து கலந்­து­ரை­யா­டல்­களில் ஈடு­பட்டு செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்போம் என்றார்.

அதனைத் தொடர்ந்து ஏனைய பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் முக்­கி­ய­மான விட­யங்­களை ஜனா­தி­ப­தி­யி­டத்தில் கூறு­மாறு கோரப்­பட்­டது.

சிவ­சக்தி ஆனந்தன் எம்.பி

இங்கு கருத்து தெரிவித்த சிவசக்தி ஆனந்தன் எம்.பி.,

அர­சியல் கைதிகள் தொடர்­பாக உங்­களால் எமது தலை­வ­ருக்கு வாக்­கு­றுதி வழங்­கப்­பட்­ட­போதும் தற்­போ­து­வ­ரை­யில்­அவ்­வி­டயம் தீர்க்­கப்­ப­டா­துள்­ளது என்­பதைச் சுட்­டிக்­காட்­டினார்.

வவு­னி­யாவில் 200மில்­லியன் ரூபா செலவில் அமைக்­கப்­ப­ட­வுள்ள பொரு­ள­தார அபி­வி­ருத்தி நிலை­யத்தை அமைப்­ப­தற்கு இரண்டு தட­வைகள் மாவட்ட அபி­வி­ருத்தி ஒருங்­கி­ணைப்பு குழுக்­கூட்­டத்தில் முடி­வுகள் எட்­டப்­பட்­டுள்­ள­போதும் தாம­தங்கள் நில­வு­கின்­றன. இத்­தா­ம­தங்கள் மாவட்ட ஒருங்­கி­ணைப்பு குழுக்­கூட்­டங்­களின் தீர்­மா­னத்தின் மீது நம்­பிக்­கையை இழக்­கச்­செய்து விடும்.

அத்­தோடு வவு­னி­யாவில் வன பாது­காப்பு பிரி­வி­னரால் பொது­மக்­களின் காணிகள் ஏதேச்­ச­தி­கா­ர­மான முறையில் சுவீ­க­ரிக்­கப்­ப­டு­கின்­றமை தொடர்­பா­கவும் எடுத்­து­ரைத்தார்.

எம்.ஏ.சுமந்­திரன் எம்.பி

அர­சியல் கைதிகள் விடு­தலை தொடர்­பாக சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தில் காணப்­படும் விட­யங்­களை விரி­வாக சுட்­டிக்­காட்­டியதுடன் குறிப்­பாக சட்ட மா அதிபர் திணைக்­க­ளத்தில் கோப்­புக்கள் கால­த­ம­தப்­ப­டுத்தும் நிலை­மைகள் தொடர்­வ­தாக ஜனா­தி­ப­தி­யி­டத்தில் சுமந்திரன் எம்.பி. எடுத்துரைத்தார்.

ஸ்ரீ­தரன் எம்.பி

இங்கு கருத்து தெரிவித்த ஸ்ரீதரன் எம்.பி.,

கிளி­நொச்சி மாவட்­டத்தில் 98வய­தான தாயொ­ருவர் இருக்­கின்றார். அவர் தனது இறந்த மக­னுக்கு அஞ்­சலி செய்­ய­வேண்டும் என இறுதி ஆசை­யாக கொண்­டி­ருக்­கி்ன்றார். இவ்­வாறு பல மக்கள் உயிர்­நீத்த உற­வு­க­ளுக்கு அஞ்­சலி செலுத்­த­வேண்­டு­மென மன­த­ளவில் எதிர்­பார்த்துக் குமு­றிக்­கொண்­டி­ருக்­கின்­றார்கள். ஆகவே அதற்­கு­ரிய சூழலை தாங்கள் ஏற்­ப­டுத்த வேண்டும் எனக்கோரினார்.

கோடீஸ்வரன் எம்.பி

அம்பாறையில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பாகவும் திட்டமிட்ட ரீதியில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் தொடர்பாகவும் எடுத்துரைத்த கோடீஸ்வரன் எம்.பி. கல்முனை நிருவாக அலகை தரமுயர்த்துவது தொடர்பாவும் கோரிக்கையொன்றை முன்வைத்தார்.

சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா எம்.பி

கொக்கிளாய் மீனவர்கள் யுத்தத்தால் பதிக்கப்பட்டவர்கள் இவர்கள் தற்போது மெல்ல மெல்ல தொழிலை முன்னெடுகின்ற வேளையில் தென்னிலங்கை மீனவர்களினதும் இந்திய மீனவர்களினதும் அத்துமீறல்களால் பாதிக்கப்படுகின்றனர். இப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வொன்றைப் பெற்றுத்தாருங்கள் என சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா எம்.பி.

ஸ்ரீநேசன் எம்.பி.

மட்டக்களப்பில் நீர்வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு அமைச்சினால் பாரபட்சமாக நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக தமிழ்,சிங்கள விகிதாரத்தை புறந்தள்ளி இவ்வாறு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறான செயற்பாடுகள் மூவினங்கள் வாழும் பகுதியில் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.ஆகவே இது தொடர்பில் பரிசீலனைகள் மேற்கொள்ளப்படவேண்டும் ஸ்ரீநேசன் எம்.பி. சுட்டிக்காட்டினார்.

யோகேஸ்வரன் எம்.பி

மட்டக்களப்பு விகாரதிபதியின் செயற்பாடுகள் தொடர்பாக ஜனாதிபதி அவர்கள் கவனம் செலுத்தவேண்டும் என யோகேஸ்வரன் எம்.பி. கூறினார்.

அனைத்து விடயங்களையும் மிக கவனமாக கேட்டுக்கொண்டிருந்த ஜனாதிபதி மட்டக்களப்பு விகாரதிபதி என்னையும் திட்டித்தீர்க்கின்றார் என நகச்சுவையாகக் கூறி ஒன்றரை மணிநேர கலந்துரையாடலை நிறைவு செய்தார். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-11-25#page-1

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.