Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி

Featured Replies

யாழ் பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி
 

article_1480067795-IMG_5971.JPG

சொர்ணகுமார் சொரூபன்

மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு, யாழ் பல்கலைக்கழகத்தில்,  இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் நடைபெற்றது.

article_1480067807-IMG_5973.JPG

article_1480067816-IMG_5972.JPG

- See more at: http://www.tamilmirror.lk/186905/ய-ழ-பல-கல-க-கழகத-த-ல-ம-வ-ரர-கள-க-க-அஞ-சல-#sthash.hCBnEAsA.dpuf
  • தொடங்கியவர்

யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர் தினம் அனுஷ்டிப்பு

 

 

(ஆர்.வி.கே.)

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சமூகத்தினரால் இன்று மதியம் 12 மணியளவில் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

15241870_1044745572303488_80839846986593

 

 

இறந்துபோன தமது உடன்பிறப்புக்களை நினைத்து இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

15192679_1044745555636823_13845636184141

unnamed-_7_.jpg

unnamed-_8_.jpg

unnamed-_9_.jpg

unnamed-_10_.jpg

unnamed-_11_.jpg

unnamed-_12_.jpg

unnamed__13_.jpg

unnamed-_14_.jpg

http://www.virakesari.lk/article/13863

 

  • தொடங்கியவர்
யாழ் பல்கலையில் மாவீரா்களுக்கு அஞ்சலி
யாழ் பல்கலையில் மாவீரா்களுக்கு அஞ்சலி
 யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர் தினம் பல்கலைக்கழக சமூகத்தினரால் இன்று உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
 
யாழ். பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் இன்று பகல் 12 மணியளவில் தமிழீழ விடுதலைக்காக போராடி உயிர்நீத்த மாவீரர்களுக்கு, விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
15209147_805568676248883_1410651453_n.jpg
 இந்நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள் பேராசிரியர்கள்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 
மேலும் மரநடுகை மாதத்தினை முன்னிட்டு பல்கலைக்கழக வளாகத்தினுள்  மரங்களும் இன்றையதினம் நாட்டப்பட்டன.
15240039_805568679582216_2141134480_n.jpg
 
14971970_805583469580737_2120903339_n.jpg
 
15228093_805583489580735_867349164_n.jpg

http://www.onlineuthayan.com/news/20665

  • தொடங்கியவர்

யாழ் பல்கலையில் இரண்டு நாள் முன்னதாகவே மாவீரர் தினம் அனுசரிப்பு

 

யாழ் பல்கலைக்கழக சமூகம் இன்று வெள்ளிக்கிழமை மாவீரர் தினத்தை அனுட்டித்துள்ளது.

 
மாவீரர் தினம் அனுசரிப்பு (கோப்புப்படம்)

பல்கலைக்கழகத்தின் கைலாசபதி அரங்கில் ஒன்று கூடிய பல்கலைக்கழக மாணவரகள் மற்றும் பல்கலைக்கழக சமூகத்தினர், யுத்த மோதல்களின் போது உயிரிழந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்களை நினைவுகூர்ந்து மெழுகுதிரிகளை ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தியிருக்கின்றனர்.

ராணுவத்தினருடனான மோதல்களிலும், பல்வேறு தாக்குதல் நடவடிக்கைகளிலும் உயிரிழந்த விடுதலைப்புலி உறுப்பினர்களை நினைவுகூர்வதற்காக நவம்பர் மாதம் 27 ஆம் திகதி மாவீரர் தினத்தை வருடந்தோறும் விடுதலைப்புலிகள் அனுட்டித்து வந்தனர்.

  மாவீரர் தினம் அனுசரிப்பு

இந்த மாவீரர் தினத்தை அனுட்டிப்பது சட்டத்திற்கு விரோதமானது என அறிவித்து, முந்தைய அரசாங்கம் அதற்குத் தடைவிதித்திருந்தது.

ஆயினும் ஆட்சி மாற்றத்தின் பின்னர் யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூறுவதற்கு அரசாங்கம் அனுமதியளிக்க வேண்டும் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அரசுக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடிய ஜேவிபியினர் தமது இறந்த சகாக்களை நினைவுகூர்வதற்கு அரசாங்கங்கள் அனுமதியளித்திருப்பது போன்று விடுதலைப்புலிகளை நினைவு கூர்வதற்கும் இடமளிக்கப்பட வேண்டும் என்ற வாதமும் முன் வைக்கப்பட்டிருந்தது.

உயிரிழந்தவர்களை நினைவு கூர்வதற்குத் தடையில்லை. ஆனால் விடுதலைப்புலிகளை நினைவுகூர முடியாது. விடுதலைப்புலிகளை நினைவுகூர்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்ற அறிவித்தலும் அரச தரப்பில் வெளியிடப்பட்டிருந்தது.

  மாவீரர் தினம் அனுசரிப்பு

இந்த நிலையில் நேற்றிரவு யாழ் பல்கலைக்கழகத்தின் பல இடங்களிலும் மாவீரர்களை நினைவுகூரும் சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, இன்று நண்பகல் யாழ் பல்கலைக்கழகத்தில் மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு அமைதியான முறையில் நடந்தேறியிருக்கின்றது.

http://www.bbc.com/tamil/sri-lanka-38105492

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.