Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.தே.க.வுடன் எவ்விதமான இரகசிய பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை

Featured Replies

ஐ.தே.க.வுடன் எவ்­வி­த­மான இர­க­சிய பேச்­சு­வார்த்­தை­யிலும் ஈடு­ப­ட­வில்லை

bazil-eae31efb3e84e8d41ee68e1c6bd6f245c1fc9f69.jpg

 

சு.க.வே உடன்­ப­டிக்கை செய்­துள்­ளது என்­கிறார் பஷில்

(ரொபட் அன்­டனி)

ஐக்­கி­ய­ தே­சி­யக்­ கட்­சி­யுடன் நான் எவ்­வி­த­மான இரக­சியப் பேச்­சு­வார்த்­தை­யிலும் ஈடு­ப­ட­வில்லை. ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சி தான் ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யுடன் உடன்­ப­டிக்கை செய்து    இணைந்து அர­சாங்கம் அமைத்­துள்­ளது. மாறாக நாங்கள் ஐ.தே.க. வுடன் டீல்­போ­ட­வில்லை என்று சிறி­லங்கா பொது­ஜன முன்­ன­ணியின் பிர­தி­நி­தியும் முன்னாள் அமைச்­ச­ரு­மான  பஷில் ராஜ­பக்ஷ தெரி­வித்தார்.  

எமது புதிய கட்­சி­யா­னது 14 கட்­சி­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்தி வரு­கி­றது. அவ்­வாறு பேச்­சு­வார்த்தை நடத்­தப்­பட்டு இணக்­கப்­பா­டுகள் எட்­டப்­படும் சந்­தர்ப்­பத்தில் நாங்கள் இணைந்து பய­ணிப்போம். ஆனால் அந்த 14 கட்­சி­களில் ஐக்­கிய தேசி­யக்­கட்சி இல்லை எனவும் அவர் குறிப்­பிட்டார்.

பஷில் ராஜ­பக்ஷ ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யுடன் இர­க­சியப் பேச்­சு­வார்த்தை நடத்­து­வ­தாக சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் பேச்­சாளர் டிலான் பெரேரா தெரி­வித்­துள்­ளமை தொடர்பில் கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

பஷில் ராஜ­பக்ஷ இந்த விடயம் தொடர்பில் மேலும் குறிப்­பி­டு­கையில்:- ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யுடன் நான் எவ்­வி­த­மான இர­க­சியப் பேச்­சு­வார்­தை­யையும் நடத்­த­வில்லை. சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி தான் ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யுடன் உடன்­ப­டிக்கை செய்­து­கொண்டு ஆட்சி அமைத்­துள்­ளது. ஐக்­கி­ய­தே­சி­யக்­கட்­சி­யா­னது அர­சாங்கம் அமைப்­ப­தற்­கான ஆத­ர­தவை சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யி­டமே பெற்­றுக்­கொண்­டுள்­ளது.

 ஐக்­கிய தேசி­யக்­கட்­சியும் சுதந்­தி­ரக்­கட்­சியும் இவ்­வாறு இணைந்து உடன்­ப­டிக்கை செய்து ஆட்­சியை அமைத்­து­விட்டு தற்­போது நாங்கள் ஐ.தே.க. வுடன் உடன்­ப­டிக்கை செய்­வ­தாக கூறு­வது வேடிக்­கை­யா­னது. புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள சிறி­லங்கா பொது­ஜன முன்­ன­ணி­யா­னது 14 கட்­சி­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்தி வரு­கி­றது. அவ்­வாறு அந்­தக்­கட்­சி­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்­தப்­பட்டு இணைந்து செயற்­ப­டு­வது தொடர்பில் இணக்­கப்­பாடு எட்­டப்­பட்டால் நாம் எதிர்­கா­லத்தில் இணைந்து செயற்­ப­டுவோம்.

 ஆனால் அந்த 14 கட்­சி­களில் ஐக்­கிய தேசி­யக்­கட்சி இல்லை என்பதை திட்டவட்டமாக கூறிக்கொள்கின்றோம்.  டிலான் பெரேரா ஒரு அரசியல்வாதி என்ற அடிப்படையில் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கிறார். அவருடன் தனிப்பட்ட ரீதியில் எமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அவர் மீது எவ்விதமான வைராக்கியமும் எமக்கில்லை என்றார்.  

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-11-28#page-1

  • தொடங்கியவர்

ஐ.தே.க.வுடன் பஷில் இர­க­சிய பேச்சு நடத்­தி­ய­மைக்கு என்­னிடம் பல ஆதா­ரங்கள்

dilan-57cd71cba1b48e7acc0bce4b520d8f3c550e75da.jpg

 

(ரொபட் அன்­டனி)

ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் பஷில் ராஜ­பக் ஷ இர­க­சியப் பேச்­சு­வார்த்­தை­களை நடத்திக் கொண்­டி­ருக்­கின்றார் என்­ப­தற்கு என்­னிடம் அதி­க­மான ஆதா­ரங்கள் உள்­ளன என்று ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் பேச்­சா­ளரும், இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான டிலான் பெரேரா தெரி­வித்தார். பஷில் ராஜ­பக்ஷ எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி    மன்றத் தேர்தல் தொடர்­பாகக் கூட ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யுடன் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்ளார் என்றும் டிலான் பெரெரா குறிப்­பிட்டார்.   

சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யுள்ள இந்த விடயம் தொடர்பில் சுதந்­தி­ரக்­கட்­சியின் பேச்­சாளர் டிலான் பெரேரா மேலும் குறிப்­பி­டு­கையில்:- பஷில் ராஜ­பக்ஷ ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யுடன் இர­க­சியப் பேச்சு நடத்­திக்­கொண்­டி­ருப்­ப­தாக நான் குறிப்­பிட்­டி­ருந்தேன். அது தொடர்பில் என்­னிடம் அதி­க­மான ஆதா­ரங்கள் உள்­ளன.   

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் முறை­மையை மாற்­று­வது தொடர்­பாகக் கூட பஷில் ராஜ­பக்ஷ ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யுடன் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்ளார். கட்­சியில் இருக்­கின்ற அனை­வ­ரையும் பயன்­ப­டுத்தி மேலே வரு­வது பஷில் ராஜ­ப­க்ஷவின் கொள்­கை­யாகும்.

 அவர் அக்­கா­லத்தில் சுதந்­தி­ரக்­கட்­சியைப் பயன்­ப­டுத்தி மேலே வந்தார். தற்­போதும் சுதந்­தி­ரக்­கட்­சியை பயன்­ப­டுத்­தியே மேலே வரு­வ­தற்கு முயற்­சித்­திக்­கொண்­டி­ருக்­கின்றார். ஆனால் அவர்கள் என்ன கூறி­னாலும் பஷில் ராஜ­ப­க்ஷவும் ஐ.தே. க. வினரும் ரக­சி­ய­மாக பேச்­சு­வார்த்தை நடத்தி வரு­கின்­றனர் என்­பதே உண்­மை­யாகும்.

 பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் பல வழி­களில் பஷில் ராஜ­ப­க்ஷ­வுக்கு உதவி வரு­கிறார். இதனை நாம் பல சந்தர்ப்பங்களில் கண்டோம். இவ்வாறு ஐக்கிய தேசியக்கட்சியுடன் இரகசிய டீல் இருப்பதன் காரணமாகவே பஷில் ராஜபக்ஷவுக்கு பிரதமர் பல வழிகளில் உதவி வருகின்றார்.  

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-11-28#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.