Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்து சமுத்திரத்தின் கடற்பாதுகாப்பு தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்களை தீர்க்க பொது செயற்றிட்டம் அவசியம்

Featured Replies

இந்து சமுத்­தி­ரத்தின் கடற்­பா­து­காப்பு தொடர்பில் எழுந்­துள்ள சிக்கல்களை தீர்க்க பொது செயற்­றிட்டம் அவ­சியம்

u4-ad53808cccfc2cfd7699175b8089975d5b38f94c.jpg

 

இந்திய கடற்படை தளபதி தெரிவிப்பு
(ஆர்.யசி)

இலங்­கைக்கும் இந்­தி­யா­விற்கும் இடை­யி­லான தொடர்பு சிறுநீரி­ணையால் மட்­டுமே பிளவுபட்­டுள்­ளது. பிராந்­திய ஒத்­து­ழைப்பு மூலம் கடல்சார் பாது­காப்­பினை உறு­திப்­ப­டுத்த முடியும். இதற்கு பிராந்­திய நாடுகள் ஒன்­றி­ணைய வேண்டும் என இந்­திய கடற்­படை தள­பதி அட்­மிரல் சுனில் லம்பா தெரி­வித்தார். மேலும் இந்து சமுத்­தி­ரத்தில் பாரிய பிரச்­சி­னை­களை தோற்­று­வித்­துள்ள கடற்­பா­து­காப்பு தொடர்பில் எழுந்­துள்ள சிக்கல்களை தீர்க்க பொது செயற்­றிட்டம் ஒன்று அவ­சியம் எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார். கொழும்பு 'கோல்பேஸ்' ஹோட்­டலில் நேற்று இடம்­பெற்ற காலி கலந்­து­ரை­யாடல் பாது­காப்பு மாநாட்டில் கலந்­துக்­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், காலி கலந்­து­ரை­யா­ட­லா­னது இந்து சமுத்­தி­ரத்தில் உள்ள நாடு­க­ளுக்­கி­டை­யி­லான தொடர்­பு­களை வலுப்­ப­டுத்­து­வதில் முக்­கி­ய­மான இடத்தை பிடிக்­கின்­றது. மேலும் இந்­திய மற்றும் இலங்­கைக்­கான கடல்சார் வள அபி­வி­ருத்­தியை அடை­யாளம் காண்­ப­தற்கு பாரிய பங்­க­ளிப்பை வழங்கும். இம்­முறை "கடல்சார் கட்­ட­மைப்பின் ஊடாக தொடர்­பு­களை வலுப்­ப­டுத்­துதல்" எனும் தொனிப்­பொ­ருளின் கீழ் இடம்­பெறும் இக்­க­லந்­து­ரை­யா­ட­லா­னது பன்­னாட்டு அபி­வி­ருத்தி செயற்­பா­டு­க­ளின் முக்­கிய இலக்­கு­களை அடையச் செய்யும்.

இந்து சமுத்­தி­ரத்தின் பிராந்­திய ஒத்­து­ழைப்பு உலக நாடுகள் மத்­தியில் மிக முக்­கி­ய­மாக கரு­தப்­ப­டு­கின்­ற­மை­யினால் இக்­க­லந்­து­ரை­யாடல் பரந்­து­பட்ட வாய்ப்­புக்­களை வழங்கும். இலங்­கைக்கும் இந்­தி­யா­விற்கும் இடையில் ஒரு சிறிய நீரினை மட்­டுமே பிரி­வி­னையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. அந்­த­வ­கையில் சமூக, பொரு­ளா­தார கலா­சார கார­ணிகள் இரு­நா­டு­க­ளுக்­கு­மி­டையில் அதிக ஒத்த பண்பை கொண்­டி­ருப்­பதால் கடல்சார் தொடர்பு வர­லாற்று காலம் தொட்டு வலுப்­ப­டுத்­தப்­பட்டு வந்­துள்­ளது. சக்தி வளம் அதி­க­மாக கடல் வளத்­தினை நம்­பி­ய­தா­கவே காணப்­ப­டு­கின்­றது. உலக மய­மாக்­கலில் அடுத்த கட்­டத்­திற்­கான நகர்வு கடல்சார் அபி­வி­ருத்­தியை மையப்­ப­டுத்­தி­ய­தா­கவே காணப்­படும் என்ற வகையில் அதற்­கான முன்­னேற்­பா­டு­களை நிச்­சயம் நாம் மேற்­கொள்ள வேண்டும். இருப்­பினும் கடல்சார் பிரச்­சி­னை­களும் இந்து சமுத்­தி­ரத்தில் அதி­க­ரித்த போக்­கினை காட்­டு­கின்­றது. குறிப்­பாக கடற்­கொள்ளை, போதைப்­பொருள் கடத்தல், அத்­து­மீ­றிய மீன்­பி­டிப்பு, வளங்­களை கொள்­ளை­ய­டித்தல் போன்­றன எமது பிராந்­தி­யத்தில் பாரிய சவாலை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன

இவற்­றுக்­கான தெளி­வான வரை­ய­றை­களை அல்­லது செயற்­திட்­டங்­களை எம்மால் உரு­வாக்­கிக்­கொள்ள முடியும். அதற்கு காலி கலந்­து­ரை­யாடல் மிக முக்­கிய பங்­க­ளிப்பை வழங்கும். அத்­தோடு கால­நிலை மாற்­றமும் கடல்சார் அபி­வி­ருத்தி செயற்­பா­டு­களில் பாரிய தாக்­கங்­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

புவி வெப்­ப­ம­டைதல் மூல­மாக கடல்­வள சுரண்டல் அதி­க­ரித்­துள்­ளது. எனவே இவற்­றுக்­கெல்லாம் தெளி­வான வரை­ய­றையை பிராந்­திய நாடு­க­ளுக்­கி­டை­யி­லான ஒத்­து­ழைப்பின் மூலம் ஏற்­ப­டுத்­திக்­கொள்ள முடியும். நீலப் பொரு­ளா­தாரம், கடற்சார் பாது­காப்பு என்ற இரு தொனிப்­பொருள் தற்­போது அதிக கவ­னத்தை ஈர்த்­துள்ள தலை­ப்பு­க்க­ளாக மாற்றம் பெற்­றுள்­ளன.

நீலப்­பொ­ரு­ளா­தா­ர­ம் ஒரு நாட்டின் அபி­வி­ருத்­தியில் பாரிய பங்­க­ளிப்பை செலுத்­து­கின்­றது. மீன்­பிடி தொழி­லுக்கும் சர்­வ­தேச வர்த்­த­கத்­திற்கும் நீலப்­பொ­ரு­ளா­தா­ரத்தின் பங்­க­ளிப்பை பலரும் உணர்ந்­துக் ­கொண்­டுள்­ளனர்.

இந்­தி­யாவை பொருத்­த­மட்டில் கடற் பாது­காப்­பிற்­கான பிராந்­திய ஒத்­த­ுழைப்பை பண்­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது. கடல்­வள பாது­காப்பு மற்றும் கடற்­க­ரைசார் அபி­வி­ருத்தி செயற்­பா­டு­களின் போது ஏற்­படும் பிரச்­சி­னை­களை அடை­யாளம் காண இந்­தியா பரந்­து­பட்ட வேலை­த்திட்­டங்­களை முன்­வைத்து வரு­கின்­றது. தனித்­துவ பிராந்­திய ஒத்­து­ழைப்பு என்ற அடிப்­ப­டையில் 2008 பெப்ரவரி மாதம் பிராந்திய பாதுகாப்பிற்கான மையம் உருவாக்கப்பட்டது.

அடுத்­த­தாக தகவல் பரி­மாற்றம், கடல்சார் மனி­தா­பி­மான உத­வி­களை மேம்­ப­டுத்தல், கடல்சார் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்தல் போன்ற முக்­கி­ய­மான மூன்று இலக்­கு­களை அடைய பிராந்­திய ஒத்­து­ழைப்பு அவ­சி­ய­மாகும். எமக்கு அதிக சவால்கள் ஏற்­படும். அந்த சவால்­களை தீர்த்­துக்­கொள்­வ­தற்கு உரிய கட்­ட­மைப்பு ரீதி­யி­லான புரிந்­து­ணர்வு செயற்பாடுகள் பங்களிக்கும் என்றார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-11-29#page-2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.