Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமற் போனவர்களின் குடும்பங்களின் பிரச்சினைகளை கேட்டறியும் நிகழ்வு யாழில்

Featured Replies

காணாமற் போனவர்களின் குடும்பங்களின் பிரச்சினைகளை கேட்டறியும் நிகழ்வு யாழில்
 
 
காணாமற் போனவர்களின் குடும்பங்களின்  பிரச்சினைகளை  கேட்டறியும் நிகழ்வு யாழில்
சர்வமதக் குழுக்களின் ஏற்பாட்டில் நாட்டில் கடந்த கால யுத்த நிலைமைகளின் போது காணாமற் போனவர்களின் விபரங்களை கேட்டு அறியும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
 
குறித்த நிகழ்வானது யாழ்ப்பாணம்,மன்னார் ,புத்தளம் ஆகிய மாவட்டங்களின் சர்வமதக் குழுக்களின் ஏற்பாட்டில்  இலங்கை சமாதானப் பேரவையின் அனுசரணையில்  இன்றைய தினம் யாழ்ப்பாணம் சரஸ்வதி மண்டபத்தில் காலை 9.00 மணியளவில் ஓய்வு பெற்ற யாழ்ப்பாண உயர் நீதிமன்ற நீதிபதி இ.வசந்தசேனன்  தலைமையில் நடைபெற்றது.
15226564_1212666168846906_809765889_n.jpg
யுத்தம் காரணமாக நேரடியாக அல்லது மறைமுகமாக கடுமையாக பாதிக்கப்பட்டோர் மத்தியிலிருந்து, தெரிவு செய்யப்பட்ட  சில ரின் இன்னல்களை நேரடியாக கேட்டறியும் நிகழ்வாகவே குறித்த நிகழ்வு அமைந்திருந்தது.
 
அந்த வகையில் யாழ்பாணத்தைச் சேர்ந்த ஜே.நர்மிலா,செ.பரமசாமி, யுத்த கால நிலைமைகளின் போது "வெள்ளை வானில் வந்த இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டதாக அவர்களின் உறவினர்கள் அவையில் சாட்சியம் அளித்தனர்,மேலும் மன்னார் புத்தளம் பகுதியைச் சேர்ந்த வ.ஆகத்தம்மாள்,செ.அருள்ராணி ,எம்.யாவாஹிர்,க.குகசிறி,ஏ.நாகூர்பிச்சை போன்றவர்கள் உயிலம் குளம் சோதனைச் சாவடியில் வைத்து கடத்தப்பட்டதாக அவர்களின் உறவுகள்  சாட்சியம் அளித்தனர்.
15218404_1212666178846905_1296941850_n.jpg
உறவுகள் கடத்தப்பட்டு கவலையுடன் வாழும் குறித்த குடும்பங்கள்  தற்பொழுது மிகவும் இன்னல்களுடன் வாழ்ந்து வருகின்றன. ஆட்பிணை மனுமூலம் காணாமல் போனவர்களுக்கான சலுகைகள் அரசினால் தற்பொழுது வழங்கப்பட்டு வருகி ன்றன,ஆனால் கடத்தப்பட்ட தமது உறவுகள் தற்பொழுது உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்னும் சந்தேகத்தினால் குறித்த ஆட்பிணை மனுவினை சமர்ப்பிக்க முடியாத காரணத்தினால்,அரசினால் வழங்கப்படும் உதவிகளை பெற்றுக் கொள்ள முடியாத நிலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
15227984_1212666165513573_1314928748_n.jpg
பல்வேறு காரணங்களுக்காக கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட சில நபர்கள் தற்பொழுது வீட்டினை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.கொடிகாமம் வடக்கினை சேர்ந்த மைக்கல் கொலின்ஸ் எனும் நபரின் கணவன் 2007ஆம்  ஆண்டு யுத்தத்தின் போது இராணுவத்தால்  கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார்,எனினும் சித்திரவதை காரணமாக ஒரு கால்,கண் என்பன செயற்படாத காரணத்தினால் தனது குடும்பம் வறுமையில் வாடுவதாக அவர் கூறியுள்ளார்.
15240302_1212666158846907_2084072589_n.jpg
நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக  இவ்வாறு பல வகையிலும் பாதிக்கப்பட்ட மக்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடுகள் செய்திருந்த போதிலும் எவ்வித பலனும் தமக்கு கிடைக்கவில்லை என விசனம் தெரிவித்துள்ளனர்.
 
யுத்தம் நிறைவடைந்த பொழுது  ஐ.நா சபையின்  ஆலோசனையின் கீழ், அமைச்சர் மங்கள சமரவீர  காணாமல் போனோர் தொட ர்பாகமூன்று செயற்பாடுகளை நடைமுறைபடுத்தினார்.காணாமல் போனவர்களின் உண்மை விபரங்களை தொகு த்தல், அவர்களுக்கானஇழப்பீட்டினை வழங்கல்,காணாமல் போனவர்களை கண்டறியும் அலுவலகம் ஒன்றினை நிர்மாணி த்தல். மேற்குறிப்பிட்ட நடைமுறைகள் தற்பொழுது நடைமுறையில் உள்ள போதிலும் எவ்வித பயனும் தமக்கு கிடைக்கவில்லை என குறி த்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட உறவுகள் தெரிவித்திருந்தனர்.
 
மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்த நிகழ்வின் வளவாளர்கள்,பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்வதாகவும்,இது பற்றி தங்களது அமைப்பின் மூலம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என நம்பிக்கை தெரிவித்தனர்.
15300560_1212666162180240_1912386352_n.jpg
 
வளவாளர்களாக  ஓய்வு பெற்ற யாழ்ப்பாண உயர் நீதிமன்ற நீதிபதி இ.வசந்தசேனன்,யாழ்ப்பாணம் சர்வ மத தலைவர் ஜெயக்கு மார்,சமாதான செயற்திட்ட முகாமையாளர் சமன் செனவிரத்தின,யாழ் பல்கலைக் கழக சிரேஷ்ட அரசியற் துறை விரிவுரையாளர் கே.ரி.கணேசலிங்கம்,யாழ் பல்கலைக் கழக சிரேஷ்ட சமூக விஞ்ஞான விரிவுரையாளர் ஜி.தில்லை நாதன்   யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் செந்தில் நந்தனன்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

http://www.onlineuthayan.com/news/20800

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.