Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் ஊடகவியலாளர்களின் படுகொலை தொடர்பில் உரிய விசாரணைகள் வேண்டும்

Featured Replies

தமிழ் ஊட­க­வி­ய­லா­ளர்­களின் படு­கொலை தொடர்பில் உரிய விசா­ர­ணைகள் வேண்டும்

 

ஊடகச் சுதந்­தி­ரத்தின் அவ­சியம் குறித்தும் படு­கொலை செய்­யப்­பட்ட தமிழ் ஊட­க­வி­ய­லா­ளர்கள் தொடர்­பான விசா­ர­ணை­களை துரி­தப்­ப­டுத்­த­வேண்­டி­யதன் தேவை குறித்தும் பாரா­ளு­மன்­றத்தில் நேற்று முன்­தினம் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது. அடுத்த வரு­டத்­திற்­கான வர­வு –செ­ல­வுத்­திட்­டத்தின் ஊட­கத்­துறை அமைச்சின் மீதான குழு­நிலை விவா­தத்­தின்­போது உரை­யாற்­றிய பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இந்த விடயம் தொடர்பில் விரி­வாக எடு­த­்துக்­கூ­றி­யி­ருக்­ கின்­றனர்.

இந்த விவா­தத்தில் உரை­யாற்­றிய எதிர்க்­கட்­சியின் பிர­தம கொற­டாவும், ஜே.வி.பி.யின் தலை­வ­ரு­மான அநு­ர­கு­மார திஸா­நா­யக்க தற்­போ­தைய அர­சாங்­கத்தின் ஆட்­சிக்­கா­லத்தில் ஊட­க­வி­ய­லா­ளர்கள் மீதான கடத்தல், கொலை மற்றும் ஊடக நிறு­வ­னங்கள் மீதான தாக்­கு­தல்கள் போன்ற அடக்குமுறைச் சம்­ப­வங்கள் இடம்­பெ­றா­விட்­டாலும் கூட ஊட­கங்கள் மீதான அடக்­கு­முறை தொடர்­கின்­றது. பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆங்­கிலப் பத்­தி­ரி­கையின் ஆசி­ரியர் ஒருவர் தொடர்பில் சில சந்­தர்ப்­பங்­களில் நேர­டி­யாக குறிப்­பிட்டு அவரை எச்­ச­ரிக்கும் வகை­யிலும் அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­களை விமர்­சிக்கும் வகையில் செய்தி வெளி­யி­டு­வதை எதிர்க்கும் வகை­யிலும் கருத்­துக்­களை வெளி­யிட்டு வரு­கின்றார். இதுவும் ஊடக அடக்­கு­மு­றையின் இன்­னு­மொரு போக்­கா­கவே காணப்­ப­டு­கின்­றது. ஊட­கங்­களை அச்­சு­றுத்தும் வகையில் அர­சாங்கம் செயற்­ப­டக்­கூ­டாது என்று தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இந்த விவா­தத்தில் உரை­யாற்­று­கையில் ஊட­கங்­களும் ஊட­க­வி­ய­லா­ளர்­களும் அர­சாங்­கத்தை விமர்­சிக்­கும்­போது அவர்கள் மீது தாக்­குதல் நடத்­தாமல் அவர்­களை கடத்திச் செல்­லாமல் அர­சாங்­கமும் அவர்­களை கருத்­துக்கள் மூலம் விமர்­சிப்­பதில் எந்த சிக்­கலும் கிடை­யாது. நாம் ஊடக அடக்­கு­மு­றையில் ஈடு­ப­ட­வில்லை. எம்­மை ­சில ஊட­கங்கள் மற்றும் ஊட­க­வி­ய­லா­ளர்கள் விமர்­சித்­த­போ­திலும் நாம் அவர்கள் மீது தாக்­குதல் நடத்­தவோ அல்­லது ஊடக நிறு­வ­னங்­களை தீ வைக்­கவோ இல்லை. மாறாக, நாம் அவர்கள் தொடர்­பாக விமர்­ச­னங்­களை முன்­வைத்தோம். இதில் தவறு எதுவும் இல்லை என்று சுட்­டிக்­காட்­டி ­யி­ருக்­கின்றார்.

ஊட­கத்­துறை அமைச்சர் கயந்த கரு­ணா­தி­லக இங்கு கருத்து தெரி­விக்­கையில், ஊட­க­வி­ய­லா­ளர்கள் மீதான தாக்­கு­தல்கள் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளன. நல்­லாட்சி அர­சாங்­கத்தில் ஊடக சுதந்­திரம் பாது­காக்­கப்­ப­டு­கின்­றது. கடந்த காலங்­களில் ஊடகச் சுதந்­தி­ரத்­திற்கு பெரும் அச்­சு­றுத்­த­லான நிலைமை காணப்­பட்­டது. பல்­வேறு ஊடக நிறு­வ­னங்கள் மீது தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­டன. ஊட­க­வி­ய­லா­ளர்கள் கொல்­லப்­பட்­டனர். ஆனால் தற்­போது ஊடகச் சுதந்­திரம் முழு­மை­யாக பாது­காக்­கப்­ப­டு­கின்­றது. இது ஜன­நா­ய­கத்­திற்­கான வெற்­றி­யாகும். ஜன­நா­யக முறையின் கீழ் ஊடகச் செயற்­பா­டு­களை வார்த்­தையில் மாத்­திரம் நாம் விமர்­சிக்­கின்றோம் என்று சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­ கின்றார்.

உண்­மை­யி­லேயே கடந்த ஆட்­சிக்­கா­லத்­துடன் ஒப்­பி­டு­கையில் தற்­போது ஊடகச் சுதந்­திரம் பேணிப் பாது­காக்­கப்­ப­டு­கின்­றது என்­பதை மறுக்க முடி­யாது.

 இத­னைத்தான் ஊட­கத்­துறை அமைச்சர் கயந்த கரு­ணா­தி­லக மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகியோர் எடுத்­துக்­கூ­றி­யி­ருக்­கின்­றனர். சர்­வ­தேச ஊடக சுதந்­தி­ரக் ­க­ணிப்­பீட்டில் இலங்­கை­யா­னது 165 ஆவது இடத்­தி­லி­ருந்து தற்­போது 141 ஆவது இடத்­திற்கு முன்­னே­றி­யி­ருக்­கின்­றது. இலங்­கையில் ஊடகச் சுதந்­திரம் பேணப்­ப­டு­கின்­ற­மைக்கு இது­வொரு நல்ல உதா­ர­ண­மாக அமைந்­தி­ருக்­கின்­றது.

யுத்தம் இடம்­பெற்ற காலப்­ப­கு­தியில் மாறி மாறி ஆட்­சிக்கு வந்த அர­சாங்­கங்கள் ஊட கச் சுதந்­திர விட­யத்தில் தவ­றி­ழைத்­து­வந்­தன. ஊட­க­வி­ய­லா­ளர்கள் படு­கொலை செய்­யப்­பட்­டனர். ஊடக நிறு­வ­னங்கள் தாக்­கு­த­லுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டன. உரிய வகையில் ஊடக சுதந்­தி­ரத்தை பின்­பற்ற முடி­யாத நிலைமை ஏற்­பட்­டி­ருந்­தது. செய்தித்தணி க்கை அமுல்­ப­டுத்­தப்­பட்­டது.

முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்­கவின் காலத்தில் ஊட­க­வி­ய­லா­ளர்கள் மீதான அச்­சு­றுத்தல் நீடித்­த­துடன் செய்தித் தணிக்­கையும் அமு­லுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்­டது.

யுத்தம் தொடர்­பான செய்­தி­களை சுதந்­தி­ர­மாக ஊட­கங்கள் வெளி­யிட முடி­யாது தணிக்கை அமுல்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது. பின்னர் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் கடந்த ஆட்­சிக்­கா­லத்தில் ஊட­க­வி­ய­லா­ளர்கள் படு­கொலை செய்­யப்­பட்­டனர்.

பல ஊட­க­வி­ய­லா­ளர்கள் கடத்­தப்­பட்டு தாக்­கு­த­லுக்கு உள்­ளாக்­கப்­பட்­டனர். ஊடக நிறு­வ­னங்கள் மீது தாக்­கு­தல்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. இதனால் ஊட­க­வி­ய­லா­ளர்கள் சுதந்­தி­ர­மாக செயற்­ப­ட­மு­டி­யாத நிலைமை ஏற்­பட்­டது.

இந்த ஆட்­சிக்­கா­லத்தில் இலங்­கையில் 24 ஊட­க­வி­ய­லா­ளர்கள் படு­கொலை செய்­யப்­பட்­டனர். நேற்று முன்­தினம் பாரா­ளு­மன்­ றத்தில் நடை­பெற்ற ஊடக அமைச்சின் மீதான விவா­தத்தில் உரை­யாற்­றிய ஊடகத் துறை அமைச்சர், கடந்த ஆட்­சி­கா­லத்தில் 13 ஊட­க­வி­ய­லா­ளர்கள் கொல்­லப்­பட்­ட­தாக தெரி­வித்­தி­ருந்தார். ஆனால் இங்கு உரை­யாற்­றிய பொது எதி­ர­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் முன்­னைய அர­சாங்­கத்தின் ஊட­கத்­துறை அமைச்­ச­ரு­மான கெஹெ­லி­ய­ரம்­புக்­வெல ஊடக அமைச்சர் தெரி­வித்த கருத்தை மறுத்­த­துடன் முன்­னைய ஆட்­சி­கா­லத்தில் 24 ஊட­க­வி­ய­லா­ளர்கள் கொல்­லப் ­பட்­ட­தாக தெரி­வித்­தி­ருந்தார்.

யுத்தம் கார­ண­மா­கவே இந்த உயி­ரி­ழப்­புக்கள் ஏற்­பட்­டன. தெற்கில் ஐந்து ஊட­க­வி­ய­லா­ளர்கள் படு­கொலை செய்­யப்­பட்­டனர். ஊடக­வி­ய­லா­ளர்­களின் படு­கொலை தொடர்பில் கடந்த ஆட்சி மீதே குற்­றஞ்­சாட்­டப்­ப­டு­கின்­றது. ஆனால் முன்­னைய ஆட்­சியின் போது பல ஊட­க­வி­ய­லா­ளர்கள் படு­கொலை செய்­யப்­பட்­டி­ருந்­தனர். 

1981 ஆம் ஆண்டு முதல் 1991 ஆம் ஆண்டு வரை 62 ஊட­க­­விய­லா­ளர்­களும் 1994 ஆம் ஆண்டு முதல் 2005 ஆண்டு வரை 37 ஊட­க­வி­ய­லா­ளர்­களும், 2005 ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை 24 ஊட­க­வி­ய­லா­ளர்­களும் படு­கொலை செய்­யப்­பட்­டனர் என்றும் ரம்­புக்­வெல எம்.பி. சபையில் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.

இவ்­வாறு நமது நாட்டைப் பொறுத்­த­வ­ரையில் ஊட­க­வி­ய­லா­ளர்கள் மீதான தாக்­குல்கள் தொடர்ந்தே வந்­தி­ருக்­கின்­றன. ஆனால் நல்­லாட்சி அர­சாங்கம் அமைந்த பின்னர் இது­வ­ரையில் ஊட­க­வி­ய­லா­ளர்கள் மீதான தாக்­கு­தல்கள் இடம்­பெ­ற­வில்லை என்­பது ஆறுதல் அளிக்கும் விட­ய­மாக உள்­ளது. தற்­போது ஊடக சுதந்­திரம் பேணப்­பட்டு வரு­கின்ற போதிலும் கடந்த காலத்தில் கொல்­லப்­பட்ட தமிழ் ஊடக­வி­ய­லா­ளர்கள் தொடர்­பான விசா­ர­ணைகள் உரிய வகையில் நடத்­தப்­ப­ட­வில்லை என்ற குற்­றச்­சாட்டு தற்­போது எழுந்­தி­ருக்­கின்­றது.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று முன்­தினம் ஊட­கத்­துறை அமைச்சு மீதா­ன­ வி­வா­தத்தில் உரை­யாற்­றிய தமிழ்த் தேசி­யக்­ கூட்­ட­மைப்பின் யாழ். மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஈ. சர­வ­ண­பவன் இந்த விடயம் தொடர்பில் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார். கொல்­லப்­பட்ட, கடத்­தப்­பட்ட ஊட­க­வி­ய­லா­ளர்கள் தொடர்­பான அத்­தனை வழக்­கு­களும் விசா­ரிக்­கப்­பட வேண்டும். ஊட­க ­நி­று­வ­னங்­களை தாக்­கி­ய­வர்­களும் ஊட­க­வி­ய­லா­ளர்­களை கொன்று குவித்­த­வர்­களும் சமூ­கத்தில் சுதந்­தி­ர­மாக நட­மா­டித்­தி­ரியும் போது ஊட­க­­விய­லா­ளர்கள் எப்­படி முழுச்சுதந்­தி­ரத்­துடன் செயற்­பட முடியும் என்று அவர் கேள்வி எழுப்­பி­யி­ருக்­கின்றார்.

காணாமல் ஆக்­கப்­பட்ட ஊட­க­வி­ய­லாளர் பிரகீத் எக்­னெ­லி­­கொட மற்றும் 'சண்டே லீடர்' ஆசி­ரியர் லசந்த விக்­கி­ர­ம­துங்­கவின் படு­கொலை விசா­ர­ணைகள் இடம்­பெற்று வரு­கின்­றன. இவர்­க­ளது விசா­ர­ணையைப் போன்று கொல்­லப்­பட்ட தமிழ் ஊட­க­வி­ய­லா­ளர்கள் தொடர்­பான விசா­ர­ணையும் உரிய வகையில் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்டும் என்றும் சர­வ­ண­பவன் எம்.பி. எடுத்­துக்­கூ­றி­யி­ருக்­கின்றார்.

உண்­மை­யி­லேயே கடந்த ஆட்­சி­களின் போது தமிழ் ஊடக வியலாளர்கள் பெருமளவு கொல்லப்பட்டனர். நிமலராஜன், டி. சிவ ராம், ஜி. நடேசன், சுகிர்தராஜன் என இந்தப் பட்டியல் தொடர்ந்து வருகின்றது. ஆனால் இந்த சம்பவங்கள் குறித்தான விசாரணைகள் உரியவகையில் இன்னமும் முன்னெடுக்கப்படவில்லை.

 சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க மற்றும் ஊட கவியலாளர் பிரகீத் எக்னெலிகொட ஆகியோரின் விசாரணை கள் உரியவகையில் நடத்தப்பட்டு அதன் பின்னணி என்ன என்பது குறித்தும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ் ஊடகவியலாளர்களின் படுகொலை தொடர்பில் குற்றவாளிகள் இன்னமும் தண்டிக்கப்படாததுடன் அவற்றின் பின்னணி குறித்தும் தகவல்கள் இன்னமும் வெளியாகவில்லை.

எனவே நல்லாட்சி அரசாங்கமானது ஊடகச் சுதந்திரத்தை அமுல்படுத்துவதுடன், கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பிலான விசாரணைகளையும் துரிதப்படுத்தி குற்றவாளிகளை தண்டிப்பதுடன், அந்த செயற்பாட்டிற்கு காரணமானவர்கள் யார் என்பதையும் வெளிக்கொண்டுவர முன்வரவேண்டியது அவசிய மாகும்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-11-30#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.