Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டயலொக் ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருது விழா

Featured Replies

டயலொக் ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருது விழா
 

சர்­வ­தேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட் அரங்­கு­களில் அதீத ஆற்­றல்­களை வெளிப்­ப­டுத்­திய அதி சிறந்த கிரிக்கட் வீரர்­க­ளுக்கு மகுடம் சூட்டும் விழா­வான டயலொக் ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருது விழா பத்­த­ர­முல்லை வோட்டர்ஸ் எஜ் அரங்கில் இன்று இரவு நடை­பெ­ற­வுள்­ளது.

 

2098329.jpgஇந்த மாபெரும் விருது விழா­வின்­போது சர்­வ­தேச மற்றும் உள்ளூர் அரங்­கு­களில் திற­மையை வெளிப்­ப­டுத்­திய கிரிக்கெட் வீராங்­க­னை­க­ளுக்கும் விரு­துகள் காத்­தி­ருக்­கின்­றன.

 

இந்த விரு­து­வி­ழா­வின்­போது வரு­டத்தின் அதி­சி­றந்த கிரிக்கெட் வீர­ருக்­கான பிர­தான விருது வழங்­கப்­படும்.

 

நடந்து முடிந்த கிரிக்கெட் பரு­வ­கா­லத்தில் சர்­வ­தேச கிரிக்கெட் அரங்கில் அதீத திற­மையை வெளிப்­ப­டுத்­தி­ய­வ­ருக்கு இந்த விருது சொந்­த­மாகும்.

 

இதனைவிட டெஸ்ட் கிரிக்கெட், சர்­வ­தேச ஒருநாள் கிரிக் கெட், சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் ஆகி­ய­வற்றில் அதி சிறந்த துடுப்­பாட்­டக்­கா­ரர்கள், அதி சிறந்த பந்­து­வீச்­சா­ளர்கள், அதி சிறந்த சக­ல­துறை வீரர்கள் ஆகிய விரு­து­களும் முக்­கியம் பெறும். அத்­துடன் வெகு­வாக முன்­னே­றி­வரும் கிரிக்கெட் வீரர் விருதும் மக்கள் அபி­மான வீரர் விருதும் வழை­மைபோல் வழங்­கப்­படும். 

 

மகளிர் சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் அதி சிறந்த துடுப்­பாட்ட வீராங்­கனை, அதி சிறந்த பந்­து­வீச்சு வீராங்­கனை, சக­ல­துறை வீராங்­கனை ஆகி­யோரும் விருது வழங்கி கௌர­விக்­கப்­ப­டுவர்.

 

உள்ளூர் கிரிக்கெட் விரு­துகள்
உள்­ளூரில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரி­வு­களில் நடத்­தப்­படும் பல்­வேறு கிரிக்கெட் போட்­டி­களில் சம்­பி­ய­னான மற்றும் இரண்டாம் இடங்­களைப் பெற்ற அணி­க­ளுக்­கான வெற்றிக் கிண்­ணங்­களும் தனி நபர் ஆற்­றல்­க­ளுக்­கான விரு­து­களும் வழங்­கப்­படும்.

 

இம்முறை முதல் தட­வை­யாக இளம் வீரர்­களும் விழாவில் கௌரவிக்கப்படவுள்ளதுடன் வழமைபோல் மத்தியஸ்தர்களுக்கான விருதுகள் அடங்கலாக 70 க்கும் மேற்பட்ட விருதுகள் மொத்தமாக வழங்கப்படும்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=20983#sthash.dCqEsZxJ.dpuf
  • தொடங்கியவர்

15241827_1991863580844839_64015898540361

15241862_1991863564178174_26115341119781

15220154_1991863560844841_40138373754503

 

15192791_1991863484178182_39618256133468

15179053_1991863480844849_59315544031718

15220236_1991863474178183_40795620561619

15193460_1991863310844866_17095138987529

15319318_1991863307511533_48400062037042

 

15267881_1991863250844872_79076369370991

15202527_1991863247511539_41110457633198

15319156_1991863244178206_54613342433041

15267940_1991863180844879_85250885905061

 

15319120_1991863087511555_38685584787460

15283906_1991863004178230_74750334603434

 

 

டயலொக் ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருது விழா

  • தொடங்கியவர்

2015 ஆம் ஆண்டிற்கான சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருது அஞ்சலோ மெத்தியூஸ் வசமானது

 

2015 ஆம் ஆண்டிற்கான சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருது அஞ்சலோ மெத்தியூஸ் வசமானது

இலங்கை கிரிக்கெட் அணித்தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் , 2015 அம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரராக தெரிவானதுடன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆகியவற்றில் திறமையை வெளிப்படுத்திய சிறந்த வீரருக்கான விருதை சுவீகரித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நேற்று நடைபெற்ற வருடாந்த விருது வழங்கும் விழாவில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டில் சர்வதேச ரீதியில் திறமையை வெளிப்படுத்திய கிரிக்கெட் வீர வீராங்கனைகள் மற்றும் நடுவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (30) இரவு பத்தரமுல்லையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வசிம் அக்ரம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ஆசியக்கிண்ண 20 இற்கு 20 மகளிர் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றுள்ளதால் மகளிர் கிரிக்கெட் அணியால் இந்த நிகழ்வில் பங்கேற்க முடியவில்லை.

20 இற்கு 20 கிரிக்கெட் போட்டியில் சிறந்த பந்துவீச்சாளருக்காக விருதை வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க பெற்றுக் கொண்டார்.

அந்த போட்டி பிரிவின் சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான விருது டீ.எம்.டில்ஷான் வசமானது.

இதேவேளை ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த பந்துவீச்சாளருக்கான விருது லசித் மாலிங்கவுக்கு கிடைத்துள்ளது.

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் சிறந்த துடுப்பாட்ட வீரர் விருது குமார் சங்கக்காரவுக்கு கிடைத்துள்ளது.

மேலும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த பந்துவீச்சாளருக்கான விருது ரங்கன ஹேரத்திற்கும் சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான விருது தினேஷ் சந்திமாலுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை புதுமுக வீரர்களில், குசல் மெண்டிஸ் வருடத்தின் வளர்ந்து வரும் வீரருக்கான விருதை தட்டிச் சென்றார்.

இதேவேளை விளையாட்டு இரசிகர்களின் செல்வாக்குமிக்க வீரருக்கான விருது டி. எம் டில்ஷான் வசமானது.

http://newsfirst.lk/tamil/2016/12/2015-ஆம்-ஆண்டிற்கான-சிறந்த-கி/

  • தொடங்கியவர்

15181174_613256072216404_231269032911457

  • தொடங்கியவர்
கிரிக்கெட் விருதுகள்: உயர் விருது மத்தியூஸுக்கு
 
01-12-2016 09:35 AM
Comments - 0       Views - 0

article_1480609416-In6430Mathews_0112201

இலங்கை கிரிக்கெட் சபையின் வருடாந்த விருது வழங்கும் நிகழ்வான டயலொக் கிரிக்கெட் விருதுகளில், 2015ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரர் விருதை, இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் வென்றார். அதேபோல், டெஸ்ட் சகலதுறை வீரர், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளின் சகலதுறை வீரர் ஆகியவற்றையும் அவர் வெற்றிகொண்டார்.

மக்கள் தெரிவு விருதை, ஓய்வுபெற்ற திலகரட்ண டில்ஷானும் சிறந்த ஒருநாள் சர்வதேசப் போட்டிகளின் துடுப்பாட்ட வீரர் விருதை ஓய்வுபெற்ற குமார் சங்கக்காரவும் வெற்றிகொண்டனர்.

விருது விவரம்:
2015இன் சிறந்த கிரிக்கெட் வீரர்: அஞ்சலோ மத்தியூஸ்
மக்கள் தெரிவு வீரர்: திலகரட்ண டில்ஷான்
எதிர்கால கிரிக்கெட் வீரர்: குசல் மென்டிஸ்
சிறந்த டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்: டினேஷ் சந்திமால்
சிறந்த டெஸ்ட் பந்துவீச்சாளர்: ரங்கன ஹேரத்
சிறந்த டெஸ்ட் சகலதுறை வீரர்: அஞ்சலோ மத்தியூஸ்
சிறந்த ஒ.நா.ச போட்டி துடுப்பாட்ட வீரர்: குமார் சங்கக்கார
சிறந்த ஒ.நா.ச போட்டி பந்துவீச்சாளர்: லசித் மாலிங்க
சிறந்த. ஒ.நா.ச போட்டி சகலதுறை வீரர்: அஞ்சலோ மத்தியூஸ்
இ-20 சர்வதேசப் போட்டிகளின் துடுப்பாட்ட வீரர்: திலகரட்ண டில்ஷான்
இ-20 சர்வதேசப் போட்டிகளின் பந்துவீச்சாளர்: லசித் மாலிங்க
பெண்கள் ஒ.நா.ச.போட்டி சிறந்த துடுப்பாட்டம்: சாமரி அத்தப்பத்து
பெண்கள் ஒ.நா.ச.போட்டி சிறந்த பந்துவீச்சாளர்: இனோகா ரணவீர
பெண்கள் ஒ.நா.ச.போட்டி சகலதுறை வீரர்: ஷஷிகலா சிரிவர்தன
சர்வதேச நேர்முக வர்ணனையாளர்: ரசல் ஆர்னல்ட்
சர்வதேச ஊடகவியலாளர்: றெக்ஸ் கிளெமென்டைன்
சர்வதேச நடுவர்: றுச்சிர பல்லியகுருகே

- See more at: http://www.tamilmirror.lk/187296/க-ர-க-க-ட-வ-ர-த-கள-உயர-வ-ர-த-மத-த-ய-ஸ-க-க-#sthash.XPAUKtcD.dpuf
  • தொடங்கியவர்
வருடத்தின் அதி சிறந்த கிரிக்கெட் வீரர் ஏஞ்சலோ மெத்யூஸ்; டில்ஷான், மாலிங்கவுக்கு தலா இரண்டு விருதுகள்
 

(நெவில் அன்­தனி)

இலங்கை கிரிக்கெட் அணித் தலைவர் ஏஞ்­சலோ மெத்யூஸ் வரு­டத்தின் அதி சிறந்த டயலொக் கிரிக்கெட் வீரர் விருதை மூன்­றா­வது தட­வை­யாக வென்­றெ­டுத்தார். 

 

21041mathews.jpg

 

வருடத்தின் சிறந்த டயலொக் கிரிக்கெட் வீரருக்கான விருதை விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவிடமிருந்து இலங்கை அணித்தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் பெறுகின்றார்


 

 

சர்­வ­தேச கிரிக்கெட் அரங்கில் பிர­கா­சிக்கும் வீரர்­க­ளுக்கு விருது வழங்கி கௌர­விக்கும் மகுடம் சூட்டும் விழா­வான டயலொக் ஸ்ரீலங்கா கிரிக்கெட் விரு­து­விழா, வோட்டர்ஸ் எஜ் மண்­ட­பத்தில் புதன் இரவு கோலா­க­ல­மாக நடை­பெற்­றது.

 

2015 – 2016 கிரிக்கெட் பரு­வ­கா­லத்தில் அதி சிறந்த ஆற்­றல்­களை வெளிப்­ப­டுத்­தி­ய­வர்­களைக் கௌர­விக்கும் இவ்­வி­ழாவில் விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர, பாகிஸ்­தானின் கிரிக்கெட் மேதை வசிம் அக்ரம் ஆகியோர் முறையே பிர­தம அதி­தி­யா­கவும் சிறப்பு அதி­தி­யா­கவும் கலந்து கொண்­டனர்.

 

21041dilshan.jpg

வருடத்தின் மக்கள் அபிமான கிரிக்கெட் வீரருக்கான விருதினை டயலொக் ஆசியாட்டாவின் புதிய பிரதம நிறைவேற்று அதிகாரியாக பதவியேற்கவுள்ள சுமித் வீரசிங்கவிடமிருந்து திலக்கரட்ண டில்ஷான் பெறுகின்றார்.


 

வரு­டத்தின் அதி சிறந்த டயலொக் கிரிக்கெட் வீரர் விருதை வென்­றெ­டுத்த ஏஞ்­சலோ மெத்யூஸ், டெஸ்ட் மற்றும் சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் ஆகிய இரண்டு வகை போட்­டி­க­ளிலும் அதி சிறந்த சக­ல­துறை வீர­ருக்­கான இரண்டு விரு­து­க­ளையும் வென்­றெ­டுத்தார்.

 

வரு­டத்தின் மக்­களின் அபி­மான வீர­ராக சர்­வ­தேச கிரிக்கெட் அரங்­கி­லி­ருந்து ஓய்வு பெற்ற திலக்­க­ரட்ன டில்ஷான் வென்­றெ­டுத்தார்.
இவ் விழாவில் திலக்­க­ரட்ன டில்­ஷானும் லசித் மாலிங்­கவும் தலா இரண்டு விரு­து­க­ளுக்கு சொந்­தக்­கா­ரர்­க­ளா­கினர்.

 

21041Untitled-2.jpg

 

மக்கள் அபி­மான வீரர் விருதை விட சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் போட்­டி­களில் வரு­டத்தின் அதி சிறந்த துடுப்­பாட்­டக்­காரர் விரு­தையும் டில்ஷான் வென்­றெ­டுத்தார்.

 

சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் மற்றும் சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் ஆகிய இரண்டு வகை அரங்­கு­க­ளிலும் வரு­டத்தின் அதி சிறந்த பந்­து­வீச்­சா­ள­ருக்­கான விரு­து­களை லசித் மாலிங்க வென்­றெ­டுத்தார்.

 

கடந்த வருடம் முன்­னே­றி­வரும் வீர­ருக்­கான டயலொக் விருதை வென்­றெ­டுத்த குசல் மெண்டிஸ், வரு­டத்தின் எதிர்­கால கிரிக்கெட் வீர­ருக்­கான விருதை வென்­றெ­டுத்தார். பாகிஸ்­தானின் கிரிக்கெட் மேதை வசிம் அக்­ர­மி­ட­மி­ருந்து இந்த விருதைப் பெறும் பாக்­கியம் குசல் மெண்­டி­ஸுக்கு கிடைத்­தமை அவ­ரது வாழ்­நாளில் மறக்க முடி­யாத ஒரு நிகழ்­வாக அமைந்­தி­ருக்கும் என்­பதில் சந்­தே­க­மில்லை.

 

வரு­டத்தின் அதி சிறந்த டெஸ்ட் துடுப்­பாட்­டக்­கா­ர­ராக தினேஷ் சந்­தி­மாலும் வரு­டத்தின் அதி சிறந்த டெஸ்ட் பந்­து­வீச்­சா­ள­ராக ரங்­கன ஹேரத்தும் தெரி­வா­கினர்.

 

21041_Untitled-4.jpg

 

வரு­டத்தின் அதி சிறந்த சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் துடுப்­பாட்­டக்­காரர் விருது குமார் சங்­கங்­கா­ர­வுக்கு வழங்­கப்­பட்­டது.

சர்­வ­தேச மகளிர் கிரிக்கெட்

 

*அதி சிறந்த சர்­வ­தேச ஒருநாள் துடுப்­பாட்­டக்­காரர்: சமரி அத்­தப்­பத்து.

 

*அதி சிறந்த சர்­வ­தேச ஒருநாள் பந்­து­வீச்­சா­ளினி: இனோக்கா ரண­வீர.

 

*அதி சிறந்த சர்­வ­தேச ஒருநாள் சக­ல­துறை வீராங்­கனை: ஷஷி­கலா சிறி­வர்­தன.

 

இதர விரு­துகள்

 

*வரு­டத்தின் அதி சிறந்த வர்­ண­னை­யாளர்: ரசல் ஆர்னல்ட்.

 

*வரு­டத்தின் அதி சிறந்த ஊட­க­வி­ய­லாளர்:  ரெக்ஸ் க்ளமென்டைன் (தி ஐலண்ட்).

 

*வரு­டத்தின் அதி சிறந்த மத்­தி­யஸ்தர்: ருச்­சிர பல்­லி­ய­குரு.

 

 

மகளிர் கிரிக்கெட் அணி­யினர் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றிவருவதால் அவர்களில் எவரும் விருது விழாவில் கலந்துகொள்ள வில்லை.

 

குமார் சங்கக்கார, ரசல் ஆர்னல்ட், ரெக்ஸ் க்ளமென்டைன் ஆகியோர் தொழில் நிமித்தம் விருதுவிழாவுக்கு வருகை தரமுடியாமல் போனதாக தெரியவருகின்றது. உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளுக்கான விருதுகள் எதிர்வரும் 19ஆம் திகதி வழங்கப்படவுள்ளன.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=21041#sthash.k0UlQtAE.dpuf

21041666.jpg

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.