Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுதந்திரத்தின் பங்காளர்களில் கருணாவும் ஒருவர்- அவரின் கைது தவறென்கிறது கூட்டு எதிர்க்கட்சி

Featured Replies

சுதந்திரத்தின் பங்காளர்களில் கருணாவும் ஒருவர்- அவரின் கைது தவறென்கிறது கூட்டு எதிர்க்கட்சி
 
 
சுதந்திரத்தின் பங்காளர்களில் கருணாவும் ஒருவர்- அவரின் கைது தவறென்கிறது கூட்டு எதிர்க்கட்சி
வடக்கு, கிழக்கு மாகாணங்களை கைப்பற்றுவதே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரது நோக்கமாக இருந்த போதிலும், இன்று முழு இலங்கையையும் தமிழீழ விடுதலைப் புலிகள் கைப்பற்றி கட்டுப்படுத்திக் கொண்டிருக்கின்றார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக கூட்டு எதிர்கட்சி சந்தேகம் வெளியிட்டுள்ளது.
 
முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மான் கைது செய்யப்பட்டமை தொடர்பாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்கட்சி தனது கடும் எதிர்ப்பையும் இன்றைய தினம் வெளியிட்டது.
 
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான டளஸ் அழகப்பெரும, உதய கம்மன்பில, ரஞ்சித் த சொய்ஸா உள்ளிட்டோர் கலந்துகொண்ட ஊடகவியலாளர் சந்திப்பு இன்றைய தினம் கொழும்பில் நடைபெற்றது.
 
அங்கு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில “விநாயகமூர்த்தி முரளி தரன் என்ற கருணா அம்மான் அரச வாகனத்தை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சா ட்டில் கைது செய்யப்பட்டார். யார் இந்த கருணா அம்மான்? அன்று அங்குலிமாலா, கெப்பட்டி பொல போன்றவர்களைப் போன்று இருளிலிருந்து வெளிச்சத்திற்கு வந்தவர். பிழையான வழியிலிருந்து சரியான வழிக்கு வந்தவர். கிழக்கு மாகாணத்தை கைப்பற்றிக் கொள்ளும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரயத்தனத்தில் கருணா அம்மானும், பிள்ளையானும் முக்கிய பங்காற்றினர். இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரத்தின் பங்காளர்களில் ஒருவராக கருணா இருக்கின்றார்.
 
இன்றைய அரசாங்கத்தில்  அவர் நல்லிணக்க ஆலோசகராகவும், குறைந்த பட்சம் வெளி விவகார அமைச்சருக்கு நெருக்கமான ருத்ரகுமாரன், சுரேன் சுரேந்திரனைப் போன்றவர்க ளைப் போல வரப்பிரசாதங்களை அனுபவித்திருக்கலாம். தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து அரசாங்கத்துடன் இணைந்து கொண்டதாலேயே கருணா அம்மான் இன்று சிறை வைக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் விசேட அதிரடிப்படையின் முன்னாள் பிரதானியும் வாகன முறைகேட்டுப் பாவனை குற்றத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்க ப்பட்டுள்ளார்.
 
ஆனால் விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் மற்றும் இதர விடயங்களில் ஈடுபட்டு பாரதூர தண்டனைகளை பெறுவதற்கு ஈடானவர்களுக்கு வழக்கு தொடராமல் விடுதலை செய்வத ற்காக சட்டமா அதிபர் நடவடிக்கை எடுத்துவரும் நிலையில்தான் விசேட அதிரடிப் படையின் முன்னாள் பிரதானியும், கருணா அம்மானும் கைது செய்யப்பட்டனர்” - என்றார்.

http://www.onlineuthayan.com/news/20822

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.