Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கி.மு. 543 ஆம் ஆண்டில் விஜயன் இலங்கைக்கு விசா வாங்கிக்கொண்டு ஸ்ரீலங்கன் விமானத்திலா வந்தார்?

Featured Replies

கி.மு. 543 ஆம் ஆண்டில் விஜயன் இலங்­கைக்கு விசா வாங்­கிக்­கொண்டு ஸ்ரீலங்கன் விமா­னத்­திலா வந்தார்?

01-84cdbf2b792ff6e74fd3b5f9451cbc14e80899fd.jpg

 

பாரா­ளு­மன்­றத்தில் அமைச்சர் மனோ கணேசன் கேள்வி 
(ஆர்.ராம்,எம்.எம்.மின்ஹாஜ்)

கி.மு.543ஆம் ஆண்டு விஜய இள­வ­ரசன், தனது நண்­பர்­க­ளுடன் இலங்கை தீவின் மேற்கு கரையில் வந்து குடி­யே­றி­ய­தாக மகா­வம்சம் கூறு­கி­றது. அவர்கள் வெளியில் இருந்து இந்த நாட்­டுக்கு படகில் வந்து

குடி­யே­றி­ய­வர்கள். அவர்கள் என்ன விசா வாங்­கிக்­கொண்டா வந்­தார்கள்? படகில் வராமல், அவர்கள் என்ன, ஸ்ரீலங்கன் விமா­னத் திலா வந்­தார்கள் என்று தேசிய சக­வாழ்வு கலந்­து­ரை­யாடல் மற் றும் அர­ச­க­ரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன்  சபையில் கேள்வி எழுப்பினார்.  

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு செலவு திட்ட ஒதுக்­கீடு குழு­நிலை விவா­தத்­தில் பதி­ல­ளித்து பேசிய அமைச்­சரும், தமிழ் முற்­போக்கு கூட்­டணி தலை­வ­ரு­மான மனோ கணேசன் மேற்கண்டவாறு கூறினார்.

அமைச்சர் மனோ கணேசன் தனது உரையில் மேலும் கூறி­ய­தா­வது,

விஜ­யனின், குவே­ணி­யு­ட­னான திரு­மணம் பற்­றியும், பின்னர் பாண்­டிய நாட்டு இள­வ­ர­சி­யு­ட­னான திரு­மணம் பற்­றியும் மகா­வம்சம் கூறு­கி­றது. அவர்கள் விமா­னத்தில் வந்­தாலும் சரி, படகில் வந்­தாலும் சரி, அவர்கள் வெளியில் இருந்து வந்­தார்கள் என்று மஹா­வம்சம் சொல்­லு­கி­றது.

விஜ­யனின் வரு­கையை நினை­வு­கூர்ந்து 1956ம் ஆண்டு மே மாதம் 23ம் திகதி இலங்கை அர­சாங்க தபால் திணைக்­களம் ஒரு முத்­தி­ரையை வெளி­யிட்­டது. அந்த முத்­தி­ரையின் பெறு­மதி மூன்று சதம். அந்த முத்­திரை, பத்து வரு­டங்­க­ளுக்கு பிறகு, 1966ம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் 1ம் திகதி திடீ­ரென வாபஸ் பெற்­றுக்­கொள்­ளப்­பட்­டது. ஒரு­புறம் மகா­வம்­சத்தை புகழ்­கி­றீர்கள். மறு­பு­றத்தில் அதையே மறுக்­கி­றீர்கள்.

நாங்கள் மட்­டுமே இங்கே ஆதி­முதல் இருந்தோம். நீங்கள் எல்­லோரும் வெளியில் இருந்து வந்­தீர்கள் என தமிழ், முஸ்லிம் இன மக்­க­ளையும், இந்து, இஸ்லாம், கத்­தோ­லிக்க மதத்­த­வர்­க­ளையும் பார்த்து எடுத்­த­துக்­கெல்லாம், சிங்­கள மக்­களை சார்ந்த ஒரு சிறு பிரி­வினர் கூறு­கி­றார்கள். குறிப்­பாக பொது­பல சேனா பொது செயலர் ஞான­சார தேரர் தமி­ழர்­களை இந்­தி­யா­வுக்கு போக சொல்­கிறார். மட்­டக்­க­ளப்பில் ஒரு தேரரும், இங்கே கொழும்பு மாவட்ட இரத்­ம­லா­னையில் ஒரு தேரரும் தமி­ழர்­க­ளுக்கு எதி­ராக இன­வாதம் பேசி, தாக்­குதல் நடத்த முயன்­றுள்­ளனர். இது அடிப்­ப­டை­வாத சிந்­த­னை­யாகும். இது இந்­நாட்­டிலே தேசிய சக­வாழ்­வுக்கு தடை­யாக இருக்கும் பிர­தா­ன­மான ஒரு­பக்க கார­ண­மாக அமைந்­துள்­ளது. நாங்கள் ஓட மாட்டோம். போக மாட்டோம். இது எங்கள் நாடு.

அடுத்த பக்க பிர­தான கார­ணங்­களும் உள்­ளன. பல இனங்கள் வாழும் இந்­நாட்டில் இன்று முடி­வுக்கு வந்­து­விட்ட தமி­ழீழ வாதத்­தையும், ஆயுத போராட்­டத்­தையும், இன்­னமும் வலி­யு­றுத்­தி­ய­ப­டியே வாழ முனையும் ஒரு சிறு பிரிவு தமி­ழர்­க­ளி­டையே நிலவும் அடிப்­ப­டை­வா­தமும், மத்­திய கிழக்கு அரபு நாடு­களில் நிலவும் பழ­மை­வாத சட்ட திட்­டங்­க­ளுடன், பல இனங்கள் வாழும் இந்­நாட்­டிலும் வாழ முனையும் ஒரு சிறு பிரிவு முஸ்­லிம்­க­ளி­டையே இருக்கும் அடிப்­ப­டை­வா­தமும் தேசிய சக­வாழ்­வுக்கு தடை­யாக இருக்­கின்ற அடுத்த பக்க பிர­தான கார­ணங்கள்.

இந்த நாட்­டிலே இனங்கள் மத்­தியில் சக­வாழ்வு நிலை பெற வேண்­டு­மானால், இந்த சிங்­கள, தமிழ், முஸ்லிம் அடிப்­ப­டை­வாத சிந்­த­னைகள் மாற­வேண்டும் என்­பதை நடு­நி­லை­யாக நின்­ற­படி, தேசிய சக­வாழ்வு அமைச்சர் என்ற முறையில் இந்த சபை­யிலே, நான் மிகவும் பொறுப்­புடன் கூறி வைக்க விரும்­பு­கிறேன்

நாட்டில் வாழும் இனங்கள் மற்றும் ஒதுக்­கப்­பட்ட பிரி­வினர் இடையே சக­வாழ்வை உறுதி படுத்­து­வதும், இந்­நாட்டின் மும்­மொழி கொள்­கையை அமுல் செய்­வதும், ஜனா­தி­பதி அவர்­களால் எனது அமைச்­சுக்கு வழங்­கப்­பட்ட பொறுப்­புகள் ஆகும். இந்­நோக்­கங்­களை நிறை­வேற்ற எனது அமைச்சில் இன்று, அர­ச­க­ரும மொழிகள் திணைக்­களம், அரச கரும மொழிகள் ஆணைக்­குழு, தேசிய மொழிகள் கல்வி மற்றும் பயிற்சி நிறு­வனம், அரசு சார்­பற்ற அமைப்­பு­களின் செய­லகம் ஆகிய நிறு­வ­னங்­க­ளையும், தேசிய சக­வாழ்வு பிரிவு, மொழிக்­கொள்கை தெளி­வுப்­ப­டுத்தல் பிரிவு ஆகிய உள்­ளக பிரி­வு­க­ளையும் கொண்­டுள்­ளது.

நான் என் அமைச்சை, இன்­றி­லி­ருந்து ஒரு வரு­டமும், மூன்று மாதங்­க­ளுக்கும் முன் பொறுப்­பேற்ற போது இந்த அமைச்­சுக்கு அர­சியல் வழி­காட்டி இருக்­க­வில்லை. எமது நூறு நாள் ஆட்­சியில் இந்த அமைச்சு அரச நிர்­வாக முகா­மைத்­துவ அமைச்­சுடன் இணைக்­கப்­பட்டு இருந்­தது. இதற்கு ஒரு அமைச்சர் தனி­யாக இருக்­க­வில்லை. எனவே எல்­லா­வற்­றையும் ஆரம்­பத்தில் இருந்து கட்டி எழுப்ப வேண்­டிய சவாலை நான் சந்­தித்தேன். அமைச்சின் உள்­ளக அதி­கா­ரி­க­ளையும், வெளிக்­கள அதி­கா­ரி­க­ளையும் எனது அமைச்சின் நோக்கை புரிந்­து­கொள்ளும் வண்ணம் மாற்றி அமைப்­பதில் இன்று நான் வெற்றி கண்­டுள்­ள­தாக நினைக்­கின்றேன். இந்த நாட்டின் மொழிப்­பி­ரச்­சி­னைக்கு 60 வருட வர­லாறும், இனப்­பி­ரச்­சி­னைக்கு சுதந்­திரம் கிடைத்த நாள் முதல் கடந்த 68 வருட வர­லாறும் உள்­ளது. எனவே இவற்றை ஒரே வரு­டத்தில் தீர்த்­திட முடி­யாது.

பொறுப்பை நிறை­வேற்­று­வ­தற்­கான அமைச்சின் நோக்­கங்­களை நாம் தீர்­மா­னித்­துள்ளோம். இதை செய்­வ­தற்கு இந்த நாட்டில் நிலவும் இன­வாத நோயை நாம் சரி­யாக அடை­யாளம் கண்­டுள்ளோம். இனி அந்த நோயுக்கு மருந்து தேடு­வ­துதான் எஞ்சி இரு­கி­றது. இது ஒரு முன்­னேற்­ற­க­ர­மான வளர்ச்சி என நினைக்­கின்றேன்.

“இலங்­கையர் என்­பது எம் அடை­யாளம்: பன்­மை­தன்மை எம் சக்தி” என்­பது எனது அமைச்சின் சக­வாழ்வு கொள்கை. “மும்­மொழி கொள்கை அமு­லாக்கல், அர­சியல் தீர்­வுக்கு, தேசிய சக­வாழ்­வுக்கு முன்­னோடி” என்­பது எனது அமைச்சின் மொழி அமு­லாக்கல் கொள்கை.

மொழிக்­கொள்கை அமு­லாக்கல் இலகுவான விடயம் அல்ல. அதற்கு 60 வயது. ஆனால், கடந்த காலங்­களில் இல்­லா­த­வி­தத்தில் இன்று அதை ஒரு பேசு பொரு­ளாக நான் மாற்­றி­யுள்ளேன். அரச ஊழி­யர்கள் பெரும்­பான்­மையோர் தமி­ழையும், சிங்­க­ளத்­தையும் படிக்க ஆர்வம் காட்­ட­வில்லை. சட்டம் போட்டும் அவர்­களை மாற்ற முடி­ய­வில்ல்லை. இந்­நாட்டு அரசு ஊழி­யர்கள் ஒருநாள் இரு­மொ­ழி­க­ளையும் படித்து, இந்­நாட்டு அரசு அலு­வ­ல­கங்கள் இரு­மொழி அலு­வ­லங்­க­ளாக மாறும் என்று கனவு கண்டு கொண்டு இருக்க என்னால் இருக்க முடி­யாது. ஆகவே, கணி­ச­மான தொழில்­ரீ­தி­யான தமிழ்-­சிங்­கள மொழி­பெ­யர்ப்­பா­ளர்­களை நான் நாடு முழுக்க நிய­மிக்க உள்ளேன். அதற்­கான அமைச்­ச­ரவை பத்­திரம் தயார்.

இன்­னொரு அமைச்­ச­ரவை பத்­திரம் இப்­போது குழு­நி­லையில் உள்­ளது. அதன்­மூலம் அரசு சேவைக்கு விண்­ணப்­பிக்கும் ஒருவர் இரு­மொழி ஆற்றல் கொண்­ட­வ­ராக இருப்­பா­ராயின் அவ­ருக்கு மேல­தி­க­மாக நான்கு புள்­ளிகள் நேர்­முக பரீட்­சையில் வழங்­கப்­படும். இதன்­மூலம் ஒரு­மொழி ஆற்றல் கொண்­ட­வரை விட இரு­மொழி ஆற்றல் கொண்­ட­வ­ருக்கு அரசு தொழில் வாய்ப்பு அதி­க­ரிக்கும். ஆகவே இரு­மொ­ழியில் கற்கும் ஆர்­வமும் அதி­க­ரிக்கும்.

நண்பர் வாசு­தேவ நாண­யக்­கார தமிழ் தெரிந்­த­வர்­களை அமைச்சு பணியில் நிய­மிக்­கும்­படி எனக்கு ஆலோ­சனை கூறினார். அவ­ருக்கு நன்றி. ஆனால், அவர் இந்த அமைச்சு பத­வியில் இருந்த போது என்ன செய்தார்? மாவட்ட மட்­டத்தில் 29 ஒரு­மைப்­பாட்டு அதி­கா­ரி­களை நிய­மித்தார். அதில் 4 தமி­ழரும், 7 முஸ்­லி­க­ளும்தான் இருந்­தார்கள். மிகுதி 18 சிங்­க­ள­வர்­க­ளுக்கும் தமிழ் தெரி­யாது. பிர­தேச செய­ல­கங்கள் தோறும் 188 ஒரு­மைப்­பாட்டு உத­வி­யா­ளர்­களை நிய­மித்தார். அதில் 7 தமி­ழரும், 13 முஸ்­லி­ம்­க­ளும்தான் இருந்­தார்கள். மிகுதி 168 சிங்­க­ள­வர்­க­ளுக்கும் தமிழ் தெரி­யாது. இந்­நி­லையில் எப்­படி தமிழ் மொழி அமு­லாக்கல் தொடர்­பாக அவர்கள் கண்­கா­ணிப்பு வேலை­களை மாவட்ட, பிர­தேச மட்­டங்­களில் செய்­ய­மு­டியும் எனக்­கேட்­கிறேன்?

இன்று நான் இந்த என் அமைச்­சுக்­கான ஆள் சேர்ப்பு விதி­களை மாற்­றி­யுள்ளேன். ஒரு­மைப்­பாட்டு உத­வி­யா­ளர்­களை சேர்க்கும் போது அவர்­க­ளுக்கு தமிழ், சிங்­களம் ஆகிய இரு­மொழி அறிவு அவ­சியம் என நான் மாற்­றி­யுள்ளேன். விரைவில் இரு­மொழி அறிவு கொண்ட உத­வி­யா­ளர்­களை நான் பணிக்கு உள்­வாங்­குவேன். ஏற்­க­னவே இருக்கும் இந்த ஒரு­மொழி உத­வி­யா­ளர்­களை வேறு ஒரு அமைச்­சுக்கு மாற்றும் முயற்­சி­களில் ஈடு­பட்­டுள்ளேன். பிறகு அந்த வெற்­றி­டங்­க­ளையும் இரு­மொழி ஆட்கள் மூலம் நிரப்­புவேன்.

தமிழ் தெரி­யாமல், பலர் அரசு தொழில் வேண்டி பணியில் சேர்ந்­து­விட்டு தமிழை கொலை செய்­கி­றார்கள். இது ஒரு தேச துரோகம். இதை இனி அனு­ம­திக்க முடி­யாது. இப்­போது சபைக்கு தலைமை தாங்கும் ஆச­னத்தில் என் கட்சி எம்பி வேலு­குமார் இருக்­கிறார். அவர் கண்டி மாவட்ட எம்பி. இப்­போது சமூ­க­ஊ­ட­கங்­களில் ஒரு செய்தி பர­வ­லாக அடிப்­ப­டு­கி­றது. கண்­டிக்கு போகும் பஸ்ஸில், கண்டி என்ற பெயரில் முதல் எழுத்­தாக “க” என்­ப­துக்கு பதில் “கு” என எழு­தப்­பட்­டுள்­ளது. இதன் அர்த்தம் என்ன என்­பதை வேலு­கு­மா­ரி­டமே கேட்டு தெரிந்து கொள்­ளுங்கள். தமிழ் தெரி­யா­த­வர்கள் தமிழை அமுல் செய்யும் பணியில் அமர்த்­தப்­பட்டால், இதுதான் நடக்கும்.

தம் தாய் மொழியில், “நமோ, நமோ, தாயே” என தேசிய கீதத்தை பாடவே இந்த நாட்டு தமிழர்களை 67 வருடங்கள் காத்திருக்க வைத்த நாடு இது என்பதை நான் மறக்க மாட்டேன். கடந்த சுதந்திர தின விழாவில் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாட வைக்கும் முடிவை அமைச்சரவை உப குழுவில் எடுக்க நான் கடுமையாக உழைத்தேன். அதில் எனக்கு எதிரணியில் இருந்தபடி எம்பீக்கள் சுமந்திரனும், வாசுதேவாவும் ஒத்துழைப்பு வகித்தார்கள். அதை இங்கே சொல்லியாக வேண்டும். அதன்மூலம் பெரும் எதிர்ப்பு சிங்கள மக்கள் மத்தியில் எழும் என எங்கள் அரசுக்கு உள்ளேயே பலர் நினைத்தார்கள். ஆனால், சிங்கள மக்கள் அதை புரிந்துக்கொண்டு ஆதரித்தார்கள். அதன்பிறகு அந்த வெற்றிக்கு பலர் உரிமை கோரினார்கள். ஆனால், அதற்கு பின்னால் நாமே இருந்தோம்.    

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-12-02#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.