Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரவிராஜ் படுகொலை வழக்கு விசாரணை : பிரதான சாட்சியாளர் பிரித்திவிராஜ் மனம்பேரியின் பிணை கோரிக்கை தொடர்பில் இன்று தீர்மானம்

Featured Replies

ரவிராஜ் படு­கொலை வழக்கு விசா­ரணை : பிர­தான சாட்­சி­யாளர் பிரித்­திவிராஜ் மனம்­பே­ரியின் பிணை கோரிக்கை தொடர்பில் இன்று தீர்­மா­னம்

Sp06-b0536f4cf565e30683a664c198522b1984b40b15.jpg

 

(எம்.எப்.எம்.பஸீர். க.கம­ல­நாதன்)

தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நட­ராஜா ரவிராஜ் கொலை வழக்கின் அரச சாட்­சி­ய­ள­ரான முன்னாள் பொலிஸ் கான்ஸ்­டபிள் பிரித்­திவிராஜ் மனம்­பே­ரியின் பிணை கோரிக்­கையை கொழும்பு மேல் நீதி­மன்ற நீதி­பதி மணிலால் வைத்­தி­ய­தி­லக நிரா­க­ரித்தார்.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரவிராஜ் வழக்கு விசா­ர­ணை ஏழா­வது நாளான நேற்றும் தொடர்ந்தும் முன்­னெ­டுக்­கப்­பட்ட நிலை­யி­லேயே அரச தரப்பு சாட்­சி­யா­ள­ரான பிரித்­தி­விராஜ் மனம்­பே­ரியின் சார்பில் ஆஜ­ரான சட்­டத்­த­ரணி தர்­க் ஷன ரன்­வ­து­வினால் பிணை கோரிக்கை மன்­றுக்­கு முன்­வைக்­கப்­பட்­டது.

அரச தரப்பு சாட்­சி­யா­ள­ரான முன்னாள் பொலிஸ் கான்ஸ்­ட­பிளின் மனை­விக்கு நான்­கா­வது குழந்தை பிறந்­துள்­ள­தா­கவும் அந்த சந்­தர்ப்­ப­திலும் கூட அவர் மகஸின் சிறையில் தடுப்பு காவலில் வைக்­கப்­ப ட்டி­ருந்தார் என்றும் சட்­டத்­த­ரணி தர்­க் ஷன நீதி­வா­னுக்கு அறி­வித் தார்.

மேற்­கு­றித்த கார­ணங்­களை கருத்­திற்­கொண்டும் நிபந்­த­னையின் அடிப்­ப­டையில் சாட்­சி­யா­ள­ராக்­கப்­பட்ட பிரித்­தி­விராஜ் மனம்­பேரி விடு­விக்­கப்­பட வேண்டும். அதே­நேரம் சாட்­சியா­ள­ராக முன்­னி லைப்படுத்­தப்­பட்ட இவ­ருக்கு விதிக்­கப்­பட்ட நிபந்­த­னை­களின் பிர­காரம் அவர் பிணையில் விடு­விக்­கப்­பட வேண்டும் என்றும் சட்­டத்­த­ரணி தர்­க் ஷன மன்­றிற்கு அறி­வித்தார். அத­னை­ய­டுத்து பிரதி சொலி­ஸிட்டர் ஜெனரல் ரொஹான் த அபே­சூ­ரிய குற்­ற­வியல் சட்­டத்தின் 256 ஆம் இலக்க அ, சட்­டத்தின் பிர­காரம் சாட்­சி­யா­ள­ரை பிணையில் செல்ல அனு­ம­திக்­கலாம் என மன்­றிற்கு சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.குறித்த கார­ணங்கள் தொடர்பில் ஆராய்ந்து பார்த்ததன் பின்னர் கொழும்பு மேல் நீதி­மன்ற நீதிவான் மணிலால் வைத்­தி­ய­தி­லக இது தொடர்­பி­லான தீர்ப்பை நாளை (இன்று) அறி­விப்­ப­தா­கவும் அது­வ­ரையில் (இன்­று­வ­ரையில்) வெலிக்­கடை மகஸின் சிறைச்­சா­லையில் பலத்த பாது­காப்­புடன் சாட்­சி­யா­ளரை தடுத்து வைக்­கு­மாறும் தீர்ப்­ப­ளித்தார்.மேலும் அரச சாட்­சி­யா­ள­ரான பிரித்­திவிராஜ் மனம்­பேரி உட்பட 4,5,12,27 ஆம் இலக்கச் சாட்­சி­யா­ளர்­க­ளையும் இன்­றைய தினம் மன்றில் ஆஜ­ரா­கு­மாறு நீதிவான் அறி­வித்தார்.

அதே­நேரம் நேற்று முன்­தினம் வின­வப்­பட்ட வினாக்­களின் தொடர்­ச்சி­யாக ஓரி­ரண்டு கேள்­வி­க­ளுடன் தனது குறுக்கு விசா­ர­ணையை பிர­தி­வா­திகள் தரப்பு சட்­டத்­த­ரணி நிறைவு செய்­த­தை­ய­டுத்து பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் ரொஹான் த அபே­சூ­ரிய மீள் விசா­ர­ணை­யை தொடுத்தார்.

இதன்போது சந்­தேக நபர்­களில் ஒரு­வ­ரான பிர­­சாத்தை சாட்சி அடை­யாளம் காண்­பித்தார். பின்னர் அவரின் சாட்­சி­யத்தின் பிர­காரம் ரவிராஜ் கொலைக்கு பயன்­ப­டுத்­தப்­பட்ட துப்­பாக்கி ரி–56 ரக துப்­பாக்கி என்றும் குறித்த துப்­பாக்­கிக்கும் ஏ.கே.47 ரக துப்­பாக்கி மற்றும் 51 ரக துப்­பாக்­கி­க­ளுக்கும் இடை­யி­லான வேறு­பா­டு­களை சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார். அதே­நேரம் தான் அரச குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவில் கட­மை­யாற்­ற­வில்லை என்றும் சமா­தான காலத்தின் போது மட்­டக்­க­ளப்பு பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஹான் த அபே­கு­ண­வர்­த­னவின் கீழ் உரு­வாக்­கப்­பட்ட விடு­தலைப் புலிகள் அர­சாங்க அலு­வ­ல­கங்கள் மீது தாக்­குதல் நடத்­தாமல் இருப்­ப­தற்காக நிய­மிக்­கப்­பட்ட பொலிஸ் பிரி­வி­லேயே தான் கட­மை­யாற்­றி­ய­தா­கவும் அத­னையே தான் குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவு என்று குறிப்­பிட்­ட­தா­கவும் அவர் மன்­றுக்கு சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.

முன்­தினம் சட்­டத்­த­ரணி அனோஜ பிரே­ம­ரத்­னவின் குறுக்கு கேள்­வி­க­ளுக்கு சாட்­சி­ய­ம­ளிக்­கின்ற போது அரச சாட்­சி­யாளர் பிரித்­தி ­விராஜ் அலரி மாளி­கைக்கும் லொன்­டறி வத்­தைக்கும். இடையில் உள்ள தூரம் 700 மீற்றர் என குறிப்­பிட்­டி­ருந்தார். எனினும் அதற்கு முன்­னைய சாட்­சி­ய­மளிப்­புக்­களின் போது குறித்த பகு­தி­க­ளுக்கு இடை­யி­லான தூரம் 150 மீற்றர் என்றும் குறிப்­பிட்­டி­ருந்தார்.

நேற்று குறித்த விடயம் தொடர்பில் மீண்டும் விளக்க­ம­ளித்த சாட்­சியாளர் தான் அலரி மாளி­கைக்கும் ஜனா­தி­பதி செய­ல­கத்­திற்கும் இடை­யி­லான தூரத்­தி­னையே 600 மீற்றர் என்று கூறி­ய­த­ாகவும் லொன்­ட­றி­வத்­தைக்­கும் அலரி மாளி­கைக்கும் இடைப்­பட்ட தூரம்தான் 150 மீற்றர் என்றும் தெரிவித்தார். முன்னாள் பொலிஸ் கான் ஸ்டபிள் பிரித்திவிராஜிடத்தில் முன்னெ டுக்கப்பட்ட சாட்சியங்கள் நேற்று நிறை வுற்றதையடுத்து அவரை மீண்டும் இன்று மன்றில் ஆஜராகும் படியும் ஏனைய 4,5, 12,27 உள்ளிட்ட சாட்சிகளும் மன்றில் ஆஜ ராக வேண்டும் எனவும் உத்­த­ர­விட்ட நீதி­பதி இன்று வரையில் குறித்த வழக்கை ஒத்திவைப்பதாகவும் அறி­வித்­தார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-12-02#page-2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.