Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.பல்கலை மாணவர்கள் கொலை : 5 பொலிஸ் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு.!

Featured Replies

யாழ்.பல்கலை மாணவர்கள் கொலை : 5 பொலிஸ் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு.!

 

 

Related image

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்வைக்கப்பட்டுள்ள 5 பொலிஸ் அதிகாரிகளை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணை இன்று யாழ். நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவர்கள் மோட்டார் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் போது மோட்டார் வாகனம் பாதையை விட்டு விலகியமை காரணமாகவே மாணவர்கள் உயிரிழந்தார்கள் என பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இதன் பின்னர், மரணமடைந்த மாணவர்களின் பிரேத பரிசோதனைகளில் சுட்டுக் கொலைசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்ததையடுத்து, குறித்த 5 பொலிஸ் அதிகாரிகளினதும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த படுகொலை சம்பவம் கடந்த மாதம் 20 ஆம் திகதி யாழ். கொக்குவில் குளப்பிட்டி சந்தியில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/

  • தொடங்கியவர்
யாழ் பல்கலை மாணவர் கொலையை விபத்து எனத் தெரிவித்த பொலிஸாருக்கு எதிராக விசாரணை
 
 
யாழ் பல்கலை மாணவர் கொலையை விபத்து எனத் தெரிவித்த பொலிஸாருக்கு எதிராக விசாரணை
யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலைச் சம்பவத்தை கொலைச் சம்பவம் என்று தெரிந்து கொண்டே நீதவானுக்கு விபத்து என பொலிஸ் முதலில் அறிவித்தது தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என சட்டத்தரணி சுமந்திரனின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட நீதவான் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தர விட்டார். 
 
பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொலை தொடர்பாக இன்றையதினம்நடைபெற்ற வழக்கு விசார ணையில்   உயிரிழந்த மாணவர்கள் சார்பாக  மன்றில் முன்னிலையாகிய சிரேஸ்ட சட்டத்தரணி சுமந்திரன் மேலும் தெரிவிக்கையில்
 
கடந்த மாதம் 21ஆம் திகதி யாழ். பல்கலைக் கழக மாணவர்கள் இருவர் யாழ்ப்பாணப் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆஜராகும்படி உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர் எழுத்து மூலமாக எம்மைக்கேட்டுக்கொண்டதற்கிணங்க நாம் இவ்வழக்கில் முன்னிலையாகி இருந்தோம்.  
15267521_1861779910722326_582450610851226237_n.jpg
கடந்ததடவை விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்டபோது அதே நாளில் மாங்குளம் பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு மாணவர்களின் பெற்றோருக்கு பொலிஸாரால் அழைப்புக் கொடுக்கப்பட்டிருந்ததாகவும் அதற்கு அடுத்த நாள் கஜன் என்பவரது தாயார் மாங்குளம் பொலிஸ் நிலையத்துக்கு சென்றபோது பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் இது தற்செயலாக நடந்த சம்பவம்  தவறுதலாக நடந்துவிட்டது. வேண்டும் என்று செய்ய ப்பட்டது அல்ல என்று பல கருத்துக்களை அவர் சொல்லியதாக அந்தத் தாயார் எனக்கு முறைப்பாடு செய்தி ருந்தார். அதை நான் இன்றுமன்றுக்கு தெரியப்படுத்தினேன்.அது சம்பந்தமாக குற்றப்புலனாய்வுப்பிரிவி டம்  வினாவியபோது குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அது ஒழுக்காற்று நடவடிக்கைக்காக முல்லை த்தீவுப் பொலிஸ் அத்தியட்சகர் நடத்துகின்ற விசாரணை அதற்கும் எமக்கும் சம்பந்தம் இல்லை எனத் தெரி வித்தனர். 
 
பொலிஸாராலேயே மாணவர்கள் சுட்டு இறந்தார்கள் என்று நன்றாகத் தெரிந்திருந்தும்கூட முதலாவதாக நீதவானுக்குக் கொடுத்த பி அறிக்கையில் வீதிவிபத்தில்தான் இவர்கள் இறந்தனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதன்மூலம்  இந்தச் சம்பவத்தை மூடிமறைப்பதற்காக பொலிஸார் முயற்சித்த நிலை யில்  நீதிமன்றம் இன்று கடுமையான முடிவுகளை எடுத்திருக்கிறது. 
 
நீதிமன்ற நியாயாதிக்கத்தை நீதவான் செலுத்தி நெறிப்படுத்துகின்ற வேளையிலே இப்படியாகப் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து விசாரிப்பது உரிய செயற்பாடு அல்ல என்று நீதவான் கூறினார். இன்றை க்கு நான் கொடுத்த புகார்களை விசாரிக்குமாறு குற்றப்புலனாய்வுத் துறையினருக்கு அறிவித்தல் கொடு த்திருக்கிறார். 
 
இறந்தவர்களுடைய பெற்றோர்களை அழைத்து விசாரிக்கின்ற வேளைகளில்  சட்டத்தரணியின் அனுசர ணையுடனே விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என புதிதாக இயற்றப்பட்டிருக்கின்ற சட்டக்கோ வையில் இடம் இருக்கின்றது என நாம் சுட்டிக்காட்டியபோது அதையும் மேற்கோள்காட்டி அப்படித்தான் இடம்பெறவேண்டும் அதில் ஏதாவது மீறல்கள் இருக்கின்றது என்றால் அது தொடர்பாக நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டிருக்கிறார் எனத் தெரிவித்தார் சுமந்திரன்.
 
இதேவேளை மாணவர்கள் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள   சந்தேக நபர்களை தொடர்ந்து 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான்.பொலிஸ் ஆயுதக்களஞ்சியத்தில் இருந்து குறித்த சம்பவத்தின்போது ஆயுதங்கள் எடுக்கப்பட்ட விதம் தொடர்பாக விசேட அறிக்கையொ ன்றை கையளிக்குமாறு யாழ்.பொலிஸ் நிலைய ஆயுத களஞ்சிய பொறுப்பதிகாரிக்கு    கட்டளையிட்டார்

http://onlineuthayan.com/news/20885

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.