Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தனியார் பஸ் பணிபகிஷ்கரிப்பு காரணமாக பயணிகள் பாதிப்பு.!

Featured Replies

தனியார் பஸ் பணிபகிஷ்கரிப்பு காரணமாக பயணிகள் பாதிப்பு.!

 

 

2.jpg

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் தனியார் பஸ் பணிபகிஷ்கரிப்பு காரணமாக பாடசாலை மாணவர்கள், அரச ஊழியர்கள் மற்றும் பயணிகள் பல்வேறு சிரமங்களை எதிர் நோக்குகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் ஆரம்பித்துள்ள இந்த பணிபகிஷ்கரிப்பு காரணமாக மலையகத்தில் ஹட்டன், பொகவந்தலாவ, நோர்வுட், மஸ்கெலியா, தலாவாக்கெலை, நுவரெலியா, டயகம போன்ற பகுதிகளில் பயணிகள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

a.jpg

25000 ரூபா தண்ட பணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மலையத்திலும் தனியார் பஸ் சங்கம் தொழில் சங்க நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

6500 அரசாங்க பஸ்கள் சேவையில் : 20 பஸ்கள் மீது தாக்குதல் : பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை

 

நாடளாவிய ரீதியில் தனியார் பஸ் உரி­மை­யா­ளர்கள் சம்­மே­ளனம்  பணிப்­ப­கிஸ்­க­ரிப்பை மேற்கொண்டுள்ளதையடுத்து இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான 6500 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதேவேளை சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த அரசாங்க பஸ்களில் 20 பஸ்கள் மீது தாக்குதல்  மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

மேலும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பஸ்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸாரிடம் இலங்கை போக்குவரத்துச் சபை கோரிக்கை விடுத்துள்ளது.

http://www.virakesari.lk/

பஸ்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் : அரசாங்கம்

 

 

attacked-on-bus-sl-gov.jpg

சேவையில் ஈடுபட்டுள்ள பஸ்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில் சேவையில் ஈடுபட்டுள்ள அரசாங்க மற்றும் தனியார் பஸ்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

http://www.virakesari.lk/

  • தொடங்கியவர்

அநுராதபுரத்தில் வீதியில் இறங்கி சாரதிகள் ஆர்ப்பாட்டம்.!

 

pro.jpg

அநுராதபுரத்தில் முச்சக்கரவண்டி, பஸ், லொறி மற்றும் வேன் சாரதிகள் வீதியில் இறங்கி இன்று பிற்பகல் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

25000 ரூபா தண்ட பணத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இவர்கள் இந்த ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/14089

புகையிரதத்தினை வழிமறித்து ஆர்ப்பாட்டம் ;புகையிரத சேவை பாதிப்பு

 

நீர்கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதங்களை இடை நடுவில் முச்சக்கர வண்டி சாரதிகள் தண்டவாளத்தை மறைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதன் காரணமாக  புகையிரதங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு – நீர்கொழும்பு புகையிரத பாதையில் கல்கந்த பிரதேசத்தில் குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகின்றது.

http://www.virakesari.lk/article/14088

பதுளையில் பாரிய ஆர்ப்பாட்டம் : பொலிஸார் குவிப்பு

 

 

D0f0f1fff-Badulla.jpgபதுளையில் தனியார் பஸ் உரிமையாளர்கள் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

7 வீதி விதிமீறல்களுக்கு குறைந்தபட்ச தண்டப்பணமாக 25 ஆயிரம் ரூபா அதிகரிக்கப்பட்டுள்ளது என அர­சாங்கம் முன்­வைத்­துள்ள வர­வு­செ­லவுத் திட்ட மும்­மொ­ழிவுக்கு எதிராகவே ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரசாங்க பஸ்கள் சேவையில் ஈடுபட்டுள்ளதோடு பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளனர். 

http://www.virakesari.lk/article/14087

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.