Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தீவக தாக்குதல் வழக்கு விசாரணைகள் பூர்த்தி-தீர்ப்பு விரைவில்

Featured Replies

தீவக தாக்குதல் வழக்கு விசாரணைகள் பூர்த்தி-தீர்ப்பு விரைவில்
 
 
தீவக தாக்குதல் வழக்கு விசாரணைகள்  பூர்த்தி-தீர்ப்பு விரைவில்
யாழ்.தீவகம்   நாரந்தனை தாக்குதல்   சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகளில் 95 வீத மானவை பூர்த்தி செய்யப்பட்ட நிலையில் அடுத்துவரும் நாட்களில்  தீர்ப்பு வழங்கப்படும் என யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தெரிவித்தார். அத்தோடு இவ் வழக்கு விசார ணைகளின் போது ஆஜராகிய 3ஆம், நான்காம் எதிரிகளை எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் இன்று   உத்தரவு பிறப்பித்தார். 
 
யாழ் தீவகத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் மீது நாரந்தனையில் வைத்து ஈ.பி.டி.பி யினர் 2001/11/28 அன்று மேற்கொண்ட தாக்குதல் தொடர்பான தொடர் வழக்கு விசாரணையின் பத்தாவது நாளான இன்று வழக்கு தொடுனர் தரப்பு சாட்சியங்கள் அனைத்தும் நிறைவு பெற்றன. 
 
அத்துடன் எதிரிகளின் வாக்குப்பதிவு சாட்சிகள் மற்றும் குறுக்கு விசாரணைகள் மீள் விசாரணை என 95 வீதமான விசாரணை நிறைவு பெற்றுள்ளது. அந்த வகையில் இன்றைய தினம் காலை 10 மணியளவில் ஆரம்பமான தொடர் வழக்கு விசாரணைகளில் அரச தரப்பு சாட்சிகளாக இனங்காணப்பட்ட ஆவணங்கள், மற்றும் முக்கிய சாட்சிகளாய் இருந்து தற்போது சாட்சியமளிக்க முடியாமல் இருப்பவர்கள், இறந்தவர்கள் போன்றோரின் வாக்கு மூலங்கள் மற்றும் அவர்கள் சார்ந்த ஆவணங்கள் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. குறிப்பாக அந்த சம்பவத்தில் மரணமடைந்த இருவர் மற்றும் காயமடைந்த 18 பேரில் சட்ட மருத்துவ அறிக்கைகள் மற்றும் வேறு பல சான்றுப் பொருட்களும் ஆவணங்களும் பட்டியல் இடப்பட்டு மன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. 
 
அதன் பின்னர் நீதிமன்றம் கலைக்கப்பட்டு மாலை 2 மணியளவில் விசாரணை  ஆரம்பமா னது. 
 
இதன் போது அவ்வழக்கின் குற்றவாளிகள் என குற்றம் சாட்டப்பட்ட 3ஆம், 4ஆம் எதிரிகளின் சாட்சிகள் மன்றினால் அனுமதிக்கப்பட்டு விசாரிக்கப்பட்டது. 
 
இதன்போது இவ் வழக்கின் 3ஆவது எதிரியான அன்ரனி ஜீவாவின் சாட்சியமளிப்பானது பதிவு செய்யப்பட்டது. அவர் சாட்சியமளிக்கையில்
 
நான்  சம்பவம் நடந்த நேரத்தில் அங்கு இல்லை, எனக்கும்  அந்த குற்றச் செயலுக்கும் எந்த தொடர்பும் இல்லை, அச் சம்பவம் நடந்த அன்று காலை 9 மணியளவில் நான் எனது மனை வியை  வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றேன். மனைவியை அங்கு விட்டுவிட்டு   சந்தையில் மீன் வாங்கிவிட்டு நேராக வீடு சென்றதாகவும், வீட்டில்  சமையலில் ஈடுபட்ட தாகவும் தெரிவித்தார்.தனது வீடு ஒரு திறந்த வீடு போன்ற அமைப்புடையது எனவும் அய லில் தோழர்கள் பலரது வீடுகளும் இருந்தன என்றார். 
 
அத்தோடு நான் ஈ.பி.டி.பி உடன் 1992 ஆண்டில் இருந்து 2000 ஆண்டுவரை இருந்ததாகவும், 2002 ஆம் ஆண்டு சுய விருப்பின் பேரில் அக் கட்சியில் இருந்து விலகியதாகவும், கட்சியில் செயற்பா ட்டளாராக இருந்த போது எது வித சம்பளமும் இன்றி சமூக சேவைக்காக வேலை செய்ததாகவும் தெரிவித்தார். 
 
தற்போது தனக்கு இருதய நோய், ஆஸ்த்துமா, வலிப்பு, கண் பார்வைக் குறைவு, வயிறு மற்றும் காலில் மாறாத காயங்கள் இருப்பதாகவும் தெரிவித்தார். 
 
இவ் வழக்கின் 4ஆம் எதிரியான நமசிவாயம் கருணாகரமூர்த்தி தனது சாட்சியத்தில், 
 
சம்பவம் நடந்த நேரம் தான் வேலணைப் பிரதேச சபையில் இருந்ததாகவும், பேருந்தில் வந்தவர்கள் சொல்லியே எனக்கு இந்த தாக்குதல் சம்பவம் தெரியவந்தது.அவ்வேளை சம்பவ இடம் நோக்கி புறப்பட்டேன். அவ்வாறு போகும் வழியில் தமிழர் விடுதலைக் கூட்டணி யினருடைய ஒலிபெருக்கி சாதனம் பொருத்தப்பட்ட முச்சக்கர வண்டி ஒன்று காற்றுப் போய் நின்றது. அந்த முச்சக்கர வண்டியில் சாரதி மட்டுமே இருந்தார். அவருக்கு தன்னுடைய வாகனத்தில் இருந்த கருவிகளைப் பயன்படுத்தி ரயர் மாற்றி விட்டதாகவும், அச் சாரதி சம்பவ இடத்தில் இருந்து கடைசியாக வந்த நபர் நானே என இனி அங்கு வர எவரும் இல்லை என்று சொன்னதை அடுத்து தான் நேராக மீண்டும் வேலணை பிரதேச சபை அலுவலகத்திற்கு சென்று விட்டதாக தெரிவித்தார். 
 
இந்த ரயர் மாற்றும் நிகழ்வு அராலிச் சந்தியில் இருந்து ஊர்காவற்துறைக்கு செல்லும் 300 மீற்றர் தூரத்தில் இடம்பெற்றது எனத் தெரிவித்தார். 
 
இவரை அரச தரப்பு சட்டத்தரணி நிசாந்தன்  குறுக்கு விசாரணை செய்த போது சத்தியமாக தான் சம்பவம் நடந்த இடத்திற்கு செல்லவில்லை, இந்த சம்பவம் பற்றி எனக்கு 12 மணிக்கு பிற்பாடுதான் தெரிய வந்தது எனவும். 
 
ஆட்டோவில் வந்த சிவாஜிலிங்கத்தை நான் வழிமறித்து தாக்கவும் இல்லை, அவரை பார்க்கவும் இல்லை எனத் தெரிவித்தார்.
 
மேலும் அவர் அங்கு சட்சியமளிக்கும் போது தான் அப்போது வேலணைப் பிரதேச சபைத் தலைவராக இருந்ததாகவும் தற்போது தான் ஒரு சமாதான நீதவான் எனவும் தனக்கு இரண்டு மகள்மார் உள்ளனர் அவர்களில் ஒருவருக்கு 23 வயது மற்றவருக்கு 19 வயது எனவும் தெரிவித்தார். 

http://www.onlineuthayan.com/news/20906

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.