Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஞானசாரரின் வருகைக்கு தடை உத்தரவு பிறப்பிப்பு

Featured Replies

ஞானசாரரின் வருகைக்கு தடை உத்தரவு பிறப்பிப்பு
 

article_1480742136-gavel04.jpgவெறுப்புணர்வைத் தூண்டும் சட்ட ரீதியற்ற ஒன்று கூடலைத் தடுக்கும் தடை உத்தரவொன்றை ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை மாலை (02.12.2016) பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவையும் மீறி வெறுப்புணர்வைத் தூண்டும் சட்ட ரீதியற்ற ஒன்று கூடல் நிகழுமாயின் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பிலுள்ள மங்களராம விஹாரைக்கு விஜயம் செய்யும் பொதுபல சேனா அமைப்பின் ஞானசார தேரர் தலைமையிலான குழுவினர் ஏறாவூர் நகரம், புன்னைக்குடா மற்றும் ஏறாவூர்ப்பற்றுப் பிரதேசத்தை அண்டிய பதுளை வீதியில் அரச மரம் உள்ள தனியார் காணியொன்றுக்குள் செல்வதாகவும் நிகழ்ச்சி நிரல் இடப்பட்டுள்ளது. இதனைக் கருத்திற் கொண்டு பிரதேசத்தில் ஆர்ப்பாட்டங்களும் இனவெறுப்புணர்வுகளைத் தூண்டும் சம்பவங்களும் இடம்பெறலாம் என்பதால் கரடியனாறு பொலிஸார் அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்தி வெறுப்புணர்வைத் தூண்டும் ஒன்று கூடலுக்குத் தடை விதிக்குமாறு நீதி மன்றத்தை வேண்டியிருந்தனர். மனுவை ஆராய்ந்த  மாவட்ட பதில் நீதிபதி ஆதம்லெப்பை முஹம்மத் முனாஸ் வெறுப்புணர்வைத் தூண்டும் சட்ட ரீதியற்ற ஒன்று கூடலைத் தடுக்கும் தடை உத்தரவைத் பிறப்பித்தார்.

மட்டக்களப்பு மங்களராமய விஹாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர், ஏறாவூர்ப் பற்று செங்கலடி - பதுளை வீதியிலுள்ள பன்குடாவெளியில் அரச மரம் உள்ள காணிக்குள் கடந்த 16.11.2016 அன்று அத்துமீறி நுழைந்து விஹாரை கட்ட முனைந்ததால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. அந்த அரச மரம் உள்ள இடத்தில் புத்த மத அடையாளங்கள் காணப்படுவதாகவும் கடந்த காலங்களில் பௌத்த வழிபாட்டுத்தலம் அங்கு இருந்ததாகவும் கூறி சர்சைக்குரிய அம்பிட்டிய  சுமணரத்ன தேரர் தனியார் காணிக்குள் அத்துமீறி நுழைந்து அமர்ந்து கொண்டதால் இந்த பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

- See more at: http://www.tamilmirror.lk/187375/-ஞ-னச-ரர-ன-வர-க-க-க-தட-உத-தரவ-ப-றப-ப-ப-ப-#sthash.tad4l0ru.dpuf
  • தொடங்கியவர்

இலங்கை: மட்டக்களப்பின் சில பகுதிகளில் நுழைய பொது பல சேனாவிற்கு நீதிமன்றம் தடை

 
 

இலங்கையின் பௌத்த கடும்போக்கு அமைப்பான பொது பல சேனாவிற்கு மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளுக்குள் நுழைய நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது,

பெயர் பலகை
 

பொது பல சேனாவின் பொதுச் செயலாளரான கலகொட அத்தே ஞானசார தேரர் உட்பட அந்த அமைப்பை சேர்ந்த பௌத்த பிக்குகள் இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தரவிருந்த நிலையில் மட்டக்களப்பு மற்றும் ஏறாவூர் நீதிமன்றங்களினால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தலாம்

பொது பல சேனாவின் வருகை அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தலாம் என போலிஸார் முன்வைத்த அறிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிமன்றங்கள் இந்த தடையை விதித்துள்ளன.

மட்டக்களப்பு போலிஸ் தலைமையக இன்ஸ்பெக்டர் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்வைத்த அறிக்கையை ஏற்றுக் கொண்ட பதில் நீதிபதி பேரின்பம் பிரேம்நாத், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற ஆளுகைக்கு உட்பட்ட பகுதிக்குள் நுழைவதற்கான தடை உத்தரவை பிறப்பித்தார்.

இந்த தடை உத்தரவு நடைமுறையிலிருக்கும் எதிர்வரும் 16 ஆம் தேதி வரை அந்த பகுதியில் அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் செயல்பாடுகளில் ஈடுபடக் கூடாது. கூட்டங்களோ அல்லது பேரணிகளோ நடத்தக் கூடாது என்றும் பொது பல சேனாவிற்கு பிறப்பித்துள்ள அந்த தடை உத்தரவில் பதில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு நகரிலுள்ள மங்களராமய விகாரையில் பொது பல சேனாவை சேர்ந்த பௌத்த பிக்குமார்கள் கலந்து கொள்ளும் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த தடை உத்தரவு வந்துள்ளது.

அதேவேளை ஏறாவூர் நீதிமன்றத்தில் கரடியனாறு போலிசார் முன்வைத்த அறிக்கையில் வெறுப்புணர்வை தூண்டும் சட்ட விரோத ஓன்றுகூடலுக்கு தடை விதிக்க கோரியிருந்தனர்.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உட்பட அந்த அமைப்பை சார்ந்தவர்கள் ஏறாவூர் நீதிமன்ற ஆளுகைக்குட்பட்ட பகுதிக்குள் நுழைய தடை விதிக்கும் கட்டளையை பிறப்பித்துள்ளது.

போலிஸ் பாதுகாப்பு

அதேவேளை பொது பல சேனா ஏனைய பௌத்த அமைப்புகளுடன் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பௌத்த மரபுரிமைகள் மற்றும் பௌத்த அடையாளங்களை பார்வையிட்டு அதனை பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில், அந்த இடங்களுக்கு நேரடியாக செல்லவிருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தது.

தற்போது நீதிமன்ற தடை விதித்துள்ள நிலையில் மட்டக்களப்பு நகர் உட்பட அவர்கள் விஜயம் செய்யக் கூடும் என கருதப்படும் இடங்களில் அவர்களை தடுக்கும் வகையில் போலிஸார் தயார் நிலையில் காணப்படுகின்றனர்.

http://www.bbc.com/tamil/sri-lanka-38193981

 

மட்டக்களப்பு பயணம் வெலிகந்தையில் நிறுத்தம் ..

  • தொடங்கியவர்

நகருக்குள் நுழைய முயன்ற பொதுபல சேனாவை தடுத்த பொலிஸார் : ரயிலை மறித்து ஆர்ப்பாட்டம் : மட்டக்களப்பில் பதற்றம்

 

 

D0001--BBS.jpg

மட்டக்களப்பு நகருக்குள் நுழைய முயன்ற பொதுபல சேனா அமைப்பினரை பாதுகாப்பு படையினர் ரிதிதென்னை பகுதியில் வைத்து தடுத்துள்ளதால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆர்ப்பாட்டக்காரர்கள் ரயிலையும் மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தால் பொலனறுவை மட்டக்களப்பிற்கான போக்குவரத்து சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது

மேலும் பாதுகாப்புக்காக படையினர் மற்றும் பொலிஸார் குறித்தப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

BBS-22.jpg

http://www.virakesari.lk/article/14126

 

 

 

மட்டக்களப்புக்குள் நுழைய பொது பல சேனாவுக்குத் தடை
 
 

article_1480763836-01.jpg

எம்.எம்.அஹமட் அனாம், பேரின்பராஜா சபேஷ், ஏ.எச்.ஏ. ஹுஸைன்
 
பொது பல சேனா உட்பட பல பேரினவாத அமைப்புகள் இணைந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த பேரணி, மட்டக்களப்பு - பொலநறுவை எல்லைப் பிரதேசமான ரிதிதென்ன பகுதியில் பொலிஸாரால் இடை நிறுத்தப்பட்டதையடுத்து அங்கு பதற்ற நிலை உருவாகியுள்ளது.
 
தாம் பூஜையொன்றுக்காகவே அங்கு செல்வதாகப் பொலிஸாருடன் ஞானசார தேரர் வாதத்தில் ஈடுபட்ட போதிலும் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய தம்மால் அனுமதிக்க முடியாது எனப் பொலிஸார் பதிலளித்துள்ளனர்.
 
இந்நிலையில், வீதியை மறித்து வாகனத்தை நிறுத்தி வீதியில் அமர்ந்து போராட்டம் செய்ததால் அங்கு சென்ற வாகனங்கள் இரு பக்கமும் வீதிகளில் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் வாகன நெரிசல் மற்றும் போக்குவரத்துத் தடை ஏற்பட்டுள்ளது.
 
சம்ப இடத்துக்குச் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களை செய்தி எடுக்க வேண்டாம் என்றும் மீறிப் படம் எடுத்தால் கமெரா உடைக்கப்படும் என்று பொது பல சேனா அமைப்பைச் சேர்ந்தஇளைஞர்கள் தெரிவித்தனர்.
 
ஏற்கெனவே, இவர்களின் மட்டக்களப்பு விஜயத்துக்கு நீதிமன்ற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
வெறுப்புணர்வைத் தூண்டும் சட்ட ரீதியற்ற ஒன்று கூடலைத் தடுக்கும் தடை உத்தரவொன்றை ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றம், நேற்று வெள்ளிக்கிழமை (02) மாலை பிறப்பித்துள்ளது.
 
இந்த உத்தரவையும் மீறி வெறுப்புணர்வைத் தூண்டும் சட்ட ரீதியற்ற ஒன்று கூடல் நிகழுமாயின் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மட்டக்களப்பிலுள்ள மங்களராம விஹாரைக்கு விஜயம் செய்யும் பொதுபல சேனா அமைப்பின் ஞானசார தேரர் தலைமையிலான குழுவினர் ஏறாவூர் நகரம், புன்னைக்குடா மற்றும் ஏறாவூர்ப்பற்றுப் பிரதேசத்தை அண்டிய பதுளை வீதியில் அரச மரம் உள்ள தனியார் காணியொன்றுக்குள் செல்வதாகவும் நிகழ்ச்சி நிரல் இடப்பட்டுள்ளது.
 
இதனைக் கருத்திற் கொண்டு பிரதேசத்தில் ஆர்ப்பாட்டங்களும் இனவெறுப்புணர்வுகளைத் தூண்டும் சம்பவங்களும் இடம்பெறலாம் என்பதால் கரடியனாறு பொலிஸார் அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்தி வெறுப்புணர்வைத் தூண்டும் ஒன்று கூடலுக்குத் தடை விதிக்குமாறு, நீதி மன்றத்தை வேண்டியிருந்தனர்.
 
மனுவை ஆராய்ந்த  மாவட்ட பதில் நீதிபதி ஆதம்லெப்பை முஹம்மத் முனாஸ் வெறுப்புணர்வைத் தூண்டும் சட்ட ரீதியற்ற ஒன்று கூடலைத் தடுக்கும் தடை உத்தரவைத் பிறப்பித்தார்.

article_1480763856-02.jpgarticle_1480763866-10.jpg

- See more at: http://www.tamilmirror.lk/187413/-மட-டக-களப-ப-க-க-ள-ந-ழ-ய-ப-த-பல-ச-ன-வ-க-க-த-தட-#sthash.fbX2PK7z.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

பிரபாகரனின் புகைப்படங்களுடன் சென்றவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை : எமக்கு வழிவிடுங்கள் என நீதிமன்ற உத்தரவினை கிழித்தெறிந்தார் ஞானசார (வீடியோ இணைப்பு)

 

 

பிரபாகரனின் புகைப்படங்களை எடுத்துச் சென்றார்கள். அவர்களுக்கு எதிராக எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் மட்டக்களப்புக்கு செல்லவிடாமல் எங்களை தடுக்கின்றீர்கள் என தெரிவித்த, பொதுபலசேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் நீதிமன்ற தடை உத்தரவினையும் கிழித்தெறிந்தார்.

பொதுபலசேனா உள்ளிட்ட பௌத்த அமைப்புக்கள் பல இன்று மட்டக்களப்பு நோக்கி சென்றுக் கொண்டிருந்த போது பாதுகாப்பு காரணம் கருதி வெலிகந்தை பகுதியில் வைத்து பொலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தப்பட்டதால் அப்பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டது.

குறித்த சந்தர்ப்பத்தில் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தடை உத்தரவினை கிழித்தெறிந்த பொதுபலசேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் பொலிஸாருடன் வாக்குவாதத்திலும் ஈடுப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு பௌத்த மக்கள் நான் போதி பூஜை நடத்த வேண்டும் என  ஆசைப்படுகின்றார்கள். அதற்காக நாங்கள் செல்கின்றோம். அது முடிந்ததும் நாங்கள் அங்கிருந்து வெளியேறி விடுவோம். எங்களுக்கு வழிவிடுங்கள். எங்களால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

ffff.jpg

நாங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட செல்லவில்லை. அவ்வாறு எதுவும் நடப்பின் பொலிஸ் அதிகாரிகள் அவற்றை பார்த்துக் கொள்ளுங்கள்.

ஆயுதம் ஏந்திய புலிகளை வீழ்த்தி அவர்களை நிராயுதபாணியாக மாற்றிய முப்படைகளுக்கு இதை செய்ய முடியாதா.

இது என்ன விளையாட்டு என்று எமக்கு தெரியும். இந்த அநியாயத்தினை எமக்கு செய்யவேண்டாம். மூளையுள்ள அதிகாரிகளின் பிரச்சினை அல்ல என்று எனக்கு தெரியும். மேல் இடத்தில் உள்ள கழுதைகளுக்கு இது தெரியாது.

6 ஆம் திகதி ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் ஒன்றும் உள்ளது. இதன் போது இங்குள்ள பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாட வேண்டும்.

இவ்விடத்தில் எமக்கு தடங்கல் செய்ய வேண்டாம். பொலிஸ் தடுத்தால் நாங்களும் வாகனங்களை விட்டு வீதியினை வழிமறித்து கொண்டு இவ்விடத்திலேயே இருப்போம்.

நீதிமன்ற தடை உத்தரவினை கொழும்பில் வைத்து தந்து இருக்கலாம் தானே என்று நீதிமன்றம் வழங்கிய தடை உத்தரவினை கிழித்தெறிந்தார்.

நீதிமன்ற தடை உத்தரவினை கடவத்தையில் கொடுத்து இருக்கலாம் தானே, வரக்காபொல,குருணாகல்,தம்புள்ளை இடங்களில் சரி வைத்து  கொடுத்து இருக்கலாம் தானே. 

அங்கு பிரபாகரனின் படத்தினை கொண்டு செல்கின்றார்கள். ஆனால் படையினர் ஒன்றும் செய்யவில்லை.

சிங்களவர்களுக்கு மட்டுமே இப்படி செய்கின்றீர்கள். எங்களுடன் பிரச்சினை ஏற்படுத்தி கொள்ளவேண்டாம்.  

 

 

 

http://www.virakesari.lk/article/14128

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.