Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாகரையில் முஸ்லீம்களை குடியேற்ற துரித நடவடிக்கை

Featured Replies

5730_1475666636_PhototasticCollage-2016-10-05-13-21-23.jpg

மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட எலவட்டமடு, மாங்கேணி தெற்கு, மேவாண்டகுளம், பணிச்சங்கேணி புதிய நகரம் ஆகிய பிரதேசங்களில் முஸ்லீம் மக்களை உடனடியாக குடியேற்றுவதற்கு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் துரித நடவடிக்கை எடுத்துள்ளார்.

வாகரை பிரதேசத்தில் முஸ்லீம்களை குடியேற்றுவது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், இராஜாங்க அமைச்சின் செயலாளர் திருமதி. சாந்தி நாவுக்கரசு உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள்  திங்கட்கிழமை மாலை வாகரை பிரதேச செயலகத்துக்கு விஜயம் செய்திருந்தனர்.

அங்கு பிரதேச செயலாளர் எஸ்.ஆர். ரகுலநாயகி தலைமையிலான அரச அதிகாரிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதற்குத் தேவையான நிதியினை புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சினால் வழங்குவதற்குவதாகவும் அவர் உறுதியளித்தார்.

இராஜாங்க அமைச்சரின் ஆலோசனைக்கு அமைய எதிர்வரும் 17ஆம் திகதி காணி ஏலம் நடத்தப்பட்டு மீள்குடியேற்றப்பாடத மக்களுக்கு காணிகள் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளதுடன், குடியேற்றபடவுள்ள மேலதிக மக்களும் இணங்கானப்படவுள்ளனர்.

அதனை அடுத்து எலவட்டமடு, மாங்கேணி தெற்கு, மேவாண்டகுளம், பணிச்சங்கேணி புதிய நகரம் ஆகிய நான்கு பகுதிகள் மீள்குடியேற்றுவதற்காக ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டுள்ள 47 குடும்பங்களுடன் எதிர்வரும் 17ஆம் திகதி தெரிவு செய்யப்படும் குடும்பங்களும் டிசம்பர் மாதத்துக்கு முன்னர் தற்காலிகமாக மீள்குடியேற்றப்படவுள்ளனர். பின்னர், அடுத்த வருட ஆரம்பத்தில் நிரந்தரமாக மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சரின் பணிப்புரைக்கமை புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சினால் மேற்கொள்ளப்படவுள்ளது.

தற்காலிகமாக மீள்குடியேற்றப்படவுள்ள குடும்பங்களுக்கு 25 ஆயிரம் ரூபாவுடன், கழிப்பறை வசதிகளை செய்து கொள்வதற்காக 50 ஆயிரம் ரூபாவும் வழங்கப்படவுள்ளன.

வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அதிளவு வீடுகள் கட்டுவதற்கான தேவைப்பாடு இல்லாத காரணத்தினால், ஏற்கனவே கட்டப்பட்ட வீடுகளை திருத்துவதற்கு அமைச்சினால் நடவடிக்கை எடுப்பதாகவும், வீடுகளின் சேதத்தின் தரத்துக்கு ஏற்ப ஒரு குடும்பத்துக்கு 2 தொடக்கம் 3 இலட்சம் ரூபா வரை திருத்த வேலைகளுக்காக நிதி ஒதுக்குவதாகவும் வாக்குறுதி வழங்கினார்.

5730_1475666636_14568945_1785183481751003_1978676833_n.jpg

http://battinaatham.com/description.php?art=5730

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பக்கம் இவர்கள் விளையாட்டு நடத்துங்கோ நடத்துங்கோ கிஸ்புல்லா<_<

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.