Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய அரசியலமைப்பானது சிறுபான்மையினரின் பல பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வாக அமையும்

Featured Replies

புதிய அர­சி­ய­ல­மைப்­பானது சிறுபான்மையினரின் பல பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வாக அமையும்

07pakkam-d541508bad0b1d997079648fa9486d95f1cb9a8d.jpg

 

புதிய அர­சி­ய­ல­மைப்­பா­னது இலங்­கையில் வாழ்­கின்ற சிறு­பான்­மை­யின மக்­களின் பெரும்­பா­லான பிரச்­சி­னை­க­ளுக்கு ஒரு தீர்­வாக அமையும். மேலும், தற் ­போது நாட்டில் காணப்­ப­டு­கின்ற ஜன­நா­யகக் குறை­பா­டு­களை நீக்கும் வகை­யி­லேயே புதிய அர­சி­ய­ல­மைப்­பு தயா­ரிக்­கப்­படும். சில அர­சி­யல்­வா­திகள் புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் பொய்ப்­பி­ர­சா­ரங்­களை தொடர்ந்தும் மேற்­கொண்டு வரு­கின்­றார்கள். இவற்றில் எவ்­வித உண்­மைத்­தன்­மை­யு­மில்லை. மேலும், மக்­களின் குறை­களைத் தீர்த்து அவர்­களின் அபி­லா­ஷை­களை புதிய அர­சி­ய­ல­மைப்­பா­னது நிறை­வேற்றும் என்றே நம்­பு­கின்றேன் என இலங்கை மாற்­றுக்­கொள்­கை­க­ளுக்­கான நிலை­யத்தின் தலைவர் பாக்­கி­ய­சோதி சர­வ­ண­முத்து வீர­கே­சரி வார­வெ­ளி­யீட்­டுக்கு வழங்­கிய செவ்­வியில் தெரி­வித்தார்.

அவர் வழங்­கிய செவ்வி முழு­மை­யாகக் கீழே தரப்­ப­டு­கின்­றது.

கேள்வி: அர­சி­ய­ல­மைப்புப் பற்றி அண்­மையில் சந்­திப்­பொன்று இடம்­பெற்­றி­ ருந்­தது. பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­திரன், லால்காந்த மற்றும் பல பிர­மு­கர் கள் அந்த நிகழ்வில் பங்­கு­பற்­றி­யி­ருந்­தார்கள். அந்­நி­கழ்­வைப்­பற்றி விளக்­க­மா கக் கூற­மு­டி­யுமா?

பதில்: இந்­நி­கழ்வு புதிய அர­சி­ய­ல­மைப்பு மாற்­றத்­திற்­கான நடை­மு­றை­களை அடிப்­ப­டை­யாக வைத்து நடை­பெற்­றது. தற்­போது ஆறு உப­கு­ழுக்­களின் அறிக்­கைகள் வெளிவந்­த­ுள்­ளன. ஆகவே பொது­மக்கள் இந்த புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பான முழு­மை­யான செயற்­பாட்டில் எவ்­வாறு ஈடு­ப­டப்­போ­கின்­றார்கள் என்­பது பற்றி அங்கு ஆரா­யப்­பட்­டது. ஏனென்றால் இறு­தி­யாக சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு ஒன்றும் இடம்­பெ­ற­வுள்­ளது. இன்னும் சில­நாட்­களில் பிர­தான வழி­ந­டத்தல் குழுவின் இடைக்­கால அறிக்­கை­ வெளி­வ­ர­வுள்­ளது. மேலும், இவ்­வ­ருடம் நிறை­வு­பெ­று­வ­தற்கு இன்னும் சில நாட்­களே எஞ்­சி­யுள்ள நிலையில் இவ்­வ­ருட முடி­வுக்குள் அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பான சகல விட­யங்­களும் வெளி­யி­டப்­படும். அத்­துடன் எதிர்­வரும் ஆண்டில் இந்த செயற்­பா­டுகள் மீண்டும் ஆரம்­பிக்­கப்­படும்.

கேள்வி: புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கத்தில் இலங்கை மாற்றுக் கொள்­கை­க­ளுக்­கான நிலை­யத்தின் பங்­க­ளிப்பு என்ன?

பதில்: புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­ப­ணி­களில் இலங்கை மாற்­றுக்­கொள்­கைக்­கான நிலை­யத்தின் பங்­க­ளிப்பு அதி­க­மா­கவே உள்­ளது. அதா­வது புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் பல்­வே­று­பட்ட விட­யங்­களில் கருத்­து­ரைத்தல், அர­சி­ய­ல­மைப்­பு, அடிப்­படை உரி­மைகள் கட்­ட­மைப்­புக்கள் பற்­றியும் அர­சியல் விட­யங்கள் குறித்தும் ஆரோக்­கி­ய­மான கலந்­து­ரை­யா­டல்­களில் ஈடு­ப­டுதல், இவை குறித்து உரி­ய­வர்­க­ளுக்கு தெளி­வூட்டுதல் போன்­ற­வற்றை மேற்­கொண்­டு­வ­ரு­கின்றோம். மேலும், தேர்தல் முறையை மாற்­றி­ய­மைத்தல் தொடர்பில் சர்­வ­தேச பிர­தி­நி­தி­யொ­ரு­வரை இலங்­கைக்கு அழைப்­ப­தற்கு எதிர்­பார்த்­துள்ளோம். அத்­துடன், பொது கலந்­து­ரை­யா­டல்­களில் ஈடு­படல், அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் மக்கள், சிவில் அமைப்­புக்­க­ளுக்கு தெளி­வூட்­டுதல் போன்ற நட­வ­டிக்­கைகள் ஆகி­யற­வற்­றிலும் ஈடு­பட்டு வரு­கின்றோம்.

கேள்வி: புதிய அர­சி­ய­ல­மைப்பு இலங்­கையில் சிறு­பான்­மை­யினர் எதிர்­நோக்­கு­கின்ற அனைத்துப் பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்­வைக்­கொண்­டு­வரும் என நீங்கள் கரு­து­கின்­றீர்­களா?

பதில்: இலங்­கையில் சிறு­பான்­மை­யினர் எதிர்­நோக்­கு­கின்ற அனைத்துப் பிரச்­சி­னை­க­ளையும் புதிய அர­சி­ய­ல­மைப்பு தீர்க்­கு­மா என்­று எனக்குத் தெரியாது. ஆனால், சிறு­பான்­மை­யினர் எதிர்­நோக்கும் பெரும்­பாலான பிரச்­சி­னை­க­ளுக்கு ஒரு தீர்­வாக இந்த புதிய அர­சி­ய­ல­மைப்பு அமையும் என நான் கரு­து­கின்றேன்.

தற்­போது மக்கள் எதிர்­நோக்­கு­கின்ற குறை­பா­டு­களை நீக்கி சகல மக்­க­ளி­னதும் அபி­லா­ஷை­களை நிறை­வேற்­று­வதே புதிய அர­சி­ய­ல­மைப்பின் முதன்மை நோக்­க­மாகும். மேலும், தற்­போது நில­வு­கின்ற ஆட்­சி­யிலும் சேவை வழங்­க­லிலும் மக்கள் பிர­தி­நி­தித்­து­வத்­திலும் சில ஜன­நா­யகக் குறை­பா­டுகள் காணப்­ப­டு­கின்­றன.

அத்­துடன், பிர­ஜா­வு­ரிமை தொடர்­பிலும் சில ஜன­நா­யகக் குறை­பா­டுகள் காணப்­ப­டு­கின்­றன. மேலும், மக்கள் தாங்கள் எல்­லோரும் சம­மா­ன­வர்கள் என நினைக்­கின்ற நிலை தோன்­றுதல் வேண்டும். அத்­துடன் பிர­ஜை­களின் பன்­மு­கப்­ப­டுத்தல், பன்­மைத்­துவம், பிர­ஜா­வு­ரிமை போன்­றவை தொடர்­பாக மதிக்­கின்ற நிலை புதிய அர­சி­ய­ல­மைப்பின் மூலம் தோன்ற வேண்டும்.

கேள்வி: தற்­போ­துள்ள அர­சி­ய­ல­மைப்பில் மாகா­ண­ச­பை­க­ளுக்­குள்ள காணி மற்றம் பொலிஸ் அதி­கா­ரங்கள் பகிர்ந்­த­ளிக்­கப்­பட்­டுள்­ளன. ஆனால், அவை நடை­மு­றை­யி­லில்லை. வர­வுள்ள புதிய அர­சி­ய­ல­மைப்­பா­னது இதற்குத் தீர்­வாக அமை­யுமா?

பதில்: அது பற்றி எனக்குத் தெரி­யாது. ஆனால் அவையும் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருக்கும் என்று நான் ஊகிக்­கின்றேன். மேலும், புதிய அர­சி­ய­ல­மைப்பு அர்த்­த­முள்­ள­தாக அமை­ய­வேண்­டு­மானால் இது தற்­போது நடை­மு­றை­யி­லி­ருக்­கின்ற அர­சி­ய­ல­மைப்பை விட சிறந்­த­தாக இருக்­க­வேண்­டுமே ஒழிய அதை விட முக்­கி­யத்­து­வத்தில் குறை­வுள்­ள­தாக இருக்­கக்­கூ­டாது. மேலும், இந்த புதிய அர­சி­ய­ல­மைப்பை வடக்­கிலும் கிழக்­கி­லு­முள்ள மக்கள் ஏற்­றுக்­கொள்­வார்கள்.

ஆக­வே, புதிய அர­சி­ய­ல­மைப்பு நிச்­ச­ய­மாக தற்­போ­துள்ள அர­சி­ய­ல­

மைப்பில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்ள விட­யங்­களை விட குறையாது என்று என்னால் நிச்­ச­ய­மாகக் கூற­மு­டியும்.

கேள்வி: உங்­க­ளது எதிர்­பார்ப்­பின்­படி மாகா­ண­சபை தொடர்பில் புதிய அர­சி­ய­ல­மைப்­பா­னது எந்­தெந்த விட­யங்­களை உள்­ள­டக்­கி­யி­ருக்­க­வேண்டும்?

பதில்: மாகா­ண­சபை தொடர்பில் முத­லா­வது காணி, பொலிஸ் அதி­கா­ரங்கள் தொடர்­பி­லான முறை­யான ஏற்­பா­டு­கள் புதிய அர­சி­ய­ல­மைப்பில் கட்­டாயம் உள்­ள­டக்­க­ப்ப­டவேண்டும். இரண்­டா­வ­தாக தற்­போ­துள்ள அர­சி­ய­ல­மைப்பில் ஆளு­ந­ருக்கும் மாகா­ண­ச­பை­க­ளுக்கும் இடை­யி­லான தூரம் மிகவும் அதிகம். ஆகவே புதிய அர­சி­ய­ல­மைப்பில் இது மாற்­றப்­ப­ட­வேண்டும்.

அடுத்­த­தாக மாகா­ண­ச­பை­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்ள பொறுப்­புக்­க­ளுக்­கேற்­ற­வாறு அவற்­றை நிறை­வேற்­று­வ­தற்­கேற்ற வகையில் வளங்­களும் வழங்­கப்­ப­டுதல் வேண்டும். மாகா­ண­ச­பைகள் குறித்த இந்த ஏற்­பா­டுகள் புதிய அர­சி­ய­ல­மைப்பில் இடம்­பெறல் அவ­சியம்.

கேள்வி: புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர் பில் சில அர­சி­யல்­வா­திகள் தொடர்ந்தும் மக்­களை தவ­றாக வழி­ந­டத்­திக்­கொண்­டி­ருக்­கின்­றார்கள். ஏற்­க­னவே அர­சி­ய­ல­மைப்பு தயா­ரிக்­கப்­பட்­டா­யிற்று என்று சிலர் கூறு­கின்­றார்கள். புதிய அர­சி­ய­ல

மைப்பில் பெளத்த மதத்­திற்கு உரிய இடம் வழங்­கப்­ப­ட­வில்­லை­யென்று இன்

னும் சிலர் கூறு­கின்­றார்கள். இது குறித்து பொது­மக்­க­ளுக்கு என்ன கூற விரும்­பு­கின்­றீர்கள்?

பதில்: சில அர­சி­யல்­வா­திகள் வாக்­கு­களை பெற்றுக் கொள்­வ­தற்­காக இவ்­ வாறு தவ­றான பாதையில் மக்­களை வழி­ந­டத்­து­கின்­றார்கள்.

ஆகவே ஊட­கங்கள் மற்றும் சிவில் அமைப்­புக்கள் அனைத்தும் இதன் உண்­மைத்­தன்­மையை மக்­க­ளுக்கு வெளிப்­ப­டுத்­த­வேண்டும். மேலும், பொது­மக்கள் சில பொய்­களை நம்பி அதன் பின் செல்­லாமல் உண்­மைத்­தன்­மையை அறி­வ­தற்கு பல விழிப்­பு­ணர்­வு­ வே­லைத்­திட்­டங்­களை முன்­னெ­டுக்­க­வேண்­டி­யது எம்­மு­டைய பொறுப்­பாகும்.

எந்­த­வொரு தீர்­மா­னமும் எடுக்­கப்­ப­ட­வில்­வைல. மேலும் அர­சி­ய­ல­மைப்புக் குழு இது தொடர்­பான ஒரு இணக்­கப்­பாட்­டிற்கு வந்­துள்­ளது. அர­சி­யல்­வா­திகள் மக்­களை அச்­ச­மூட்­டு­வ­தற்கே இவ்­வாறு தெரி­விக்­கின்­றார்கள். ஆனால் இவற்றில் எதிலும் உண்­மை­யில்லை.   

கடைசித் தரு­ணத்தில் அதா­வது, புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­ப­ணிகள் நிறை­வு­பெ­றும்­போது சகல மதமும் கச­ம­மாக மதிக்­கப்­ப­டு­வ­தற்­கு­ரிய நிலைமை தோன்­றும. இலங்­கையில் பெரும்­பான்­மை­யா­ன­வர்கள் பௌளத்­தர்­களே. இவர்கள் பௌத்­தத்தை பின்­பற்­ற­கின்­றார்கள். அது­போ­லவே தாம், தாம் தமது மதத்தைப் பின்­பற்­ற­வ­தற்­கு­ரிய சுதந்­திரம் உண்டு.

கேள்வி: புதிய அர­சி­ய­ல­மைப்பில் சம ஷ்டி உள்­ள­டக்­கப்­டு­வ­தற்கு வாய்ப்­புண்­டென கரு­து­கின்­றீர்­களா? ஏனென்றால் பெரும்­பா­லான தமிழ் அர­சியல் தலை­மை கள் சமஷ்­டி­யையே விரும்பி நிற்­கின்­றன.

பதில்: தற்­போ­துள்ள அர­சி­ய­ல­மைப்பின் 2 ஆவது உறுப்­பு­ரையில் இலங்­கையில் ஒற்­றை­யாட்சி காணப்­ப­ட­வேண்­டு­மெனக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. ஆனால் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு காலத்­துக்குக் காலம் சமஷ்டி ஆட்­சியை கேட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றது. ஆகவே, புதிய அர­சி­ய­ல­மைப்­பிற்­கான பணிகள் நிறை­வுறும் நாளில் ஒற்­றை­யாட்­சியா அல்­லது சமஷ்­டியா என்ற வாதம் முன்­னி­லை­பெறும். அதன்­பேது ஏதேனும் மாற்­றுக்­க­ருத்­துக்கள், உடன்­பா­டில்­லாத தன்­மைகள் காணப்­ப­டு­மாயின் நீதி­மன்­றத்தில் வழக்குத் தொடுக்­கப்­படும் பின்னர் நீதி­மன்­றமே அதைத் தீர்­மா­னிக்கும்.

ஆனால், கடைசி நாளன்று மாகாண சபை­க­ளுக்கு எந்­தெந்த அதி­கா­ரங்கள் புதிய அர­சி­ய­ல­மைப்பில் பகிர்ந்­த­ளிக்­கப்­பட்­டுள்­ளன என்­பதே முக்­கி­யத்­துவம் பெறும். அதுதான் முக்­கிய ஒரு விட­ய­மாக அப்­போது கரு­தப்­படும். தனிப்­பட்ட ரீதி­யாக சமஷ்டி முறை­யி­லான ஆட்சி விருப்­ப­மாக அமை­யலாம். ஆனால் அதற்கு இன்னும் எதிர்ப்புக்க்ள் இருந்­து­கொண்டே இருக்­கின்­றன.

கேள்வி: அர­சி­ய­ல­மைப்புத் தொடர்­பான பணிகள் எப்­போது நிறை­வு­பெறும்?

பதில்: முத­லா­வது அர­சி­ய­ல­மைப்பு குழு புதிய அர­சி­ய­ல­மைப்பை வெளி­யி­ட­வேண்டும். அதன்­பின்னர் அது அமைச்­ச­ர­வைக்கு சமர்ப்­பிக்­கப்­படும். பின்னர் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்டு 2/3 வாக்­கு­களால் வெற்­றி­பெற வேண்டும். அதன்­பின்னர் பொது­மக்கள் வாக்­கெ­டுப்­பிற்கு புதிய அர­சி­ய­ல­மைப்பு செல்லும். ஆகவே, இப்­ப­ணிக்கு இன்னும் ஒரு முடிவுத் திகதி நிர்­ண­யிக்­கப்­ப­ட­வில்லை ஆனால், நான் நினைக்­கின்றேன் இது அடுத்­த­வ­ருடம் பாதி­ய­ளவில் நிறை­வு­பெ­று­மென்று.

கேள்வி: புதிய அர­சி­ய­ல­மைப்புத் தொடர்பில் குறித்த ஒரு சிறு­பான்மை மக்கள் அதி­ருப்­தி­ய­டைந்தால் அந்த புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் அவர்­களால் என்ன செய்­ய­மு­டியும்?

பதில்: கடை­சியில் இடம்­பெறும் மக்கள் வாக்­கெ­டுப்பு இதை வெளிப்­ப­டத்தும். அதா­வது பெரும்­பா­லான மக்கள் அதி­ருப்­தியால் புதிய அர­சி­ய­ல­மைப்­புக்கு எதி­ரா­கவோ அல்­லது அதற்கு வாக்­க­ளிக்­கா­மலோ விட்­டு­விட்டால் அது பெரிய பேர­ழிவை நாட்டில் ஏற்­ப­டுத்­தக்­கூடும். ஏனென்றால் 2015 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 8 ஆம் திகதி இடம்­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­தலை அடிப்­ப­டை­யாக வைத்­துப்­பார்த்தால் முன்னாள் ஜனா­தி­பதி .மஹிந்த ராஜபக் ஷ சிங்­கள மக்­க­ளி­னதும் சிறு­பான்­மை­யின மக்­க­ளி­னதும் வாக்­கு­களை பெரு­ம­ளவில் இழந்தார். அதே­வேளை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அதி­க­ளவு வாக்­கு­களை சிறு­பான்மை சமூ­கத்­தி­ன­ரி­ட­மி­ருந்தும் பெற்றுக் கொண்டார். ஆகவே சிறு­பான்­மை­யினர் புதிய அர­சி­ய­ல­மைப்­புக்கு வாக்களிக்கவில்லையென்றால் அது பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். ஆகவே அரசாங்கம் உடனடியாக நாட்டின் சகல பாகங்களிலுமுள்ள மக்களை சந்தித்து புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்கான நோக்கம் என்ன? அவற்றின் உள்ளடக்கங்கள் பற்றி மக்களுக்கு தெளிவூட்டுகின்றவகையில் நிகழ்ச்சித்திட்டங்களை தொடர்ந்தும் நடாத்தவேண்டும். அதை இப்போதிருந்தே ஆரம்பிக்கவேண்டும்.

கேள்வி இறுதியாக வரப்போகும் புதிய அரசியலமை்பு தொடர்பில் பொதுமக்களுக்கு நீங்கள் கூற விரும்புவது?

பதில்: புதிய அரசியலமைப்பு தொடர்பில் பொதுமக்களுக்கு நான் கூற விரும்புவது என்னவென்றால் புதிய அரசியலமைப்பு ஒன்று கட்டாயம் தேவை. எல்லாவற்றையும் விட இதுவே பிரதானம். நாட்டில் யுத்தமொன்று இடம்பெற்று ஓய்ந்த பிறகு மக்கள் ஒன்றாக வாழ்வதற்கு ஒரு அரசியலமைப்பு தேவை. அத்துடன் அரசாங்கத்தின் பல பிரச்சினைகள் குறைபாடுகள் காணப்படுகின்றன.

ஆகவே இவற்றை நிவர்த்திக்கும் வகையில் புதிய அரசியலமைப்பு ஒன்று தேவை. அத்துடன் மக்கள் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையிலும் அவர்கள் ஒத்துழைக்கக்கூடிய வகையிலும் ஒரு அரசியலமைப்பு அவசியமானது. அத்துடன் இந்த சட்டஏற்பாடானது எல்லாவற்றையும் விட உயர்வானது என்றும் அதன்மூலம் மக்களின் குறைகள் தீர்க்கப்பட்டு அவர்களின் அபிலாஷைகள் நிறைவுபெறும் என்றும் மக்கள் நினைக்கும் வகையில் புதிய அரசியலமைப்பு காணப்படவேண்டும்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2016-12-04#page-6

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.