Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை தமிழ் மக்களுக்காக ஓங்கி குரல் கொடுத்தார் : மறைவு வேதனையளிக்கின்றது : இரா. சம்பந்தன்

Featured Replies

இலங்கை தமிழ் மக்களுக்காக ஓங்கி குரல் கொடுத்தார் : மறைவு வேதனையளிக்கின்றது : இரா. சம்பந்தன்

 

 

இலங்கைவாழ் தமிழ்மக்களுக்காக ஓங்கிக் குரல் கொடுத்த தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதா ஜெயராமின் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரும் திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான   இரா.சம்பந்தன தெரிவித்துள்ளார்.jaya-f2120.jpg

அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,

முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம்  1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி இந்தியாவின் மைசூர் மாநிலத்தில் ஜெயராம் - வேதவல்லி தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார். 

பெங்களூர் பிஷப் கொட்டன் மகளிர் உயர் கல்லூரியில் கல்வி கற்ற பின்னர், சென்னை சேர்ச் பார்க் பிறசென்ரேசன் கொன்வென்ட்டிலும் அதனைத் தொடர்ந்து சென்னை, ஸ்ரெல்லா மேரீஸ் கல்லூரியிலும் கல்வி பயின்றார்.  

பின்னர் சினிமாத்துறையில் பிரவேசித்து இரசிகர்களைக் கவரும் வகையில் பிரதான கதாபாத்திரங்களில் நடித்து தனது திறமையை வெளிக்காட்டி மக்கள் அபிமானத்தைப் பெற்றிருந்தார். 

1982 ஆம் ஆண்டு அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பாண்மையைப் பெற்றுக்கொண்டதுடன், 1983 ஆண்டு அன்றைய முதலமைச்சர்  எம்.ஜி. இராமச்சந்திரனினால்  அக்கட்சியின் பிரசாரச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  

1984 ஆம் ஆண்டு ராஜ்ய சபா உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், 1989 ஆம் ஆண்டு வரை அப்பதவியை வகித்து வந்தார்.  

முதலமைச்சராகவிருந்த மாண்புமிகு  எம்.ஜி.இராமச்சந்திரனின் மறைவைத் தொடர்ந்து 1989 ஆம் ஆண்டு அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் பெருவெற்றியைப் பெற்றதன் மூலம் 1991 ஆம் ஆண்டு யூன் மாதம் முதல் 1996 ஆம் ஆண்டு மே மாதம் வரை முதலமைச்சராக முதலாவது தடவையாகப் பதவி வகித்தார்.

அதனைத் தொடர்ந்து 2001, மே மாதம் முதல் 2001 செப்ரெம்பர் வரை இரண்டாவது தடவையும், 2002 மார்ச் முதல் 2006 மே வரை மூன்றாவது தடவையும், 2011 மே முதல் 2014 செப்ரெம்பர் வரை நான்காவது தடவையும், 2015 மே முதல் ஐந்தாவது தடவையாகவும் முதலமைச்சராகப் பதவி வகித்த  ஜெயலலிதா ஜெயராம், ஆறாவது தடவையாக மே 2016 ஆம் ஆண்டு முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மறையும் வரை தமிழ்நாட்டின் முதலமைச்சராகத் திகழ்ந்தார்.

அவரின் அரசியல் வாழ்வில் பல நெருக்கடிகளையும் சோதனைகளையும் சந்தித்தபோதும் அவற்றையெல்லாம் எதிர்கொண்டு மக்கள் சேவையில் தொடர்ந்தும் ஈடுபட்டு மக்கள் மனதில் அழியா இடம்பிடித்த ஒரு தலைவியாக மிளிர்ந்தார்.

காலத்துக்குக் காலம் இலங்கைவாழ் தமிழ்மக்களுக்காக ஓங்கிக் குரல் கொடுத்து வந்த அவர், எமது மக்களது உரிமை தொடர்பில் தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதுடன், இந்திய மத்திய அரசுடனும் பேச்சுக்களை நடத்தி வந்தார்.

இலங்கையில் இன்னல்களுக்குள்ளாகி தமது பாதுகாப்புக்கெனத் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்த இலங்கைத் தமிழ் அகதிகளை அரவணைத்து அவர்களுக்கு தனது அரசின் மூலம் வழங்கக்கூடிய அனைத்து உதவிகளையும் வழங்கி அவர்களை வாழவைத்தமையை இவ்வேளையில் நன்றியுடன் நினைவுகூருகின்றேன்.

மறைந்த முதலமைச்சர்  ஜெயலலிதா ஜெயராமின்  ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்பதுடன், அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தமிழக மக்களுக்கும் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினருக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இலங்கைவாழ் தமிழ்பேசும் மக்கள் சார்பிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பிலும் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் எனது சார்பிலும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். 

http://www.virakesari.lk/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.