Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தீவக தாக்குதல் வழக்கு நாளை -இன்று தொகுப்புரைகள் வழங்கப்பட்டன

Featured Replies

தீவக தாக்குதல் வழக்கு நாளை -இன்று தொகுப்புரைகள் வழங்கப்பட்டன
 
 
தீவக தாக்குதல் வழக்கு நாளை -இன்று   தொகுப்புரைகள் வழங்கப்பட்டன
நாரந்தனை தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகள் அனைத்தும் நிறைவு பெற்ற நிலையில் இன்றையதினம் அரச, எதிர்த்தரப்பு சட்டத்தரணிகள் தமது தொகுப்புரை களை  யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் முன்னிலையில் நிகழ்த்தி முடி த்த னர். அத்தோடு இவ் வழக்கின் தீர்ப்பானது நாளைய தினம் 10:30 மணியளவில் வழங்கப்ப டும் என நீதிபதி தெரிவித்தார்.
 
யாழ் தீவகத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் மீது ஈ.பி.டி. பி யினர்  2001/11/28 அன்று மேற்கொண்ட தாக்குதல் தொடர்பாக தொடர் வழக்கு விசாரணை முடிவடைந்து இன்று சட்டத்தரணிகள் சார்பில் தொகுப்புரைகள் இடம்பெற்றன. 
 
இதில் முதலாவதாக தொகுப்புரையை  வழக்கு தொடருனர் தரப்பு சட்டத்தரணி நாகரத்தினம் நிஷாந்தன் நிகழ்த்தினார் அதன் போது அவர் 
 
சம்பவம் நடைபெற்று 15 வருடங்கள் கழித்தும். சட்டமா அதிபர் திணைக்களம் இவ்வழக்கை விசாரனை செய்ய யாழ் நீதிமன்றத்திற்கு பணித்து 10 வருடங்கள் கழிந்த நிலையில் தற்போது இவ் வழக்கின் தொகுப்புரை வாசிக்கப்படுகிறது. என கூறிய அவர் இவ் வழக்கானது 2 பேரை மரணம் அடையச் செய்ததுடன், 18 பேர் காயமடைந்தமை உட்பட 48 குற்றச்சாட்டுகளை உள்ளடக்கியதான மிகப் பெரிய வழக்கு எனவும். 
 
இதில் குற்றம் சாட்டப்பட்ட எதிரிகள் சார்பில் தன்னால் வழங்கப்பட்ட சாட்சிகள், மற்றும் ஆதாரங்களை அடிப்படையாக கொண்டு குறித்த நீதியை இந்த நீதிமன்றம் நிலை நிறுத்த வேண்டும் எனவும், 
 
1ஆம்,2ஆம்,3ஆம் குற்றவாளிகள் இந்த பாரிய குற்றச் செயலுடன் நேரடியாக தொடர்பு பட்டுள்ளனர். இவர்களுக்கு தண்டனைக் கோவையில் உள்ள ஏற்பாடுகளின் படி மூன்று எதிரி களுக்கும் முதலாவது குற்றச் செயலான இரண்டு கொலை செய்தமைக்காக இரட்டை மரண தண்டனையும், மரணத்தை ஏற்படுத்தும் நோக்கில் பாரிய ஆயுதங்களால் தாக்கியமை, மற்றும் 16 இற்கும் அதிகமான நபர்களுக்கு படுகாயத்தை ஏற்படுத்தியமை, சட்டவிரோத குழு வில் உறுப்பினராக இருந்தமை, போன்ற 48 குற்றச் சாட்டுகளுக்காக  தாலா 10, 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை, அத்தோடு மேலும் 5-7 ஆண்டுகள் வரையான சிறைத்தண்டனை யையும் வழங்க முடியும். 
 
எனவே இக் குற்றவாளிகளுக்கு குறைந்ததுமரணதண்டனையும்,10ஆண்டுகாலசிறைத் தண்ட னையும் நிச்சயம் வழங்கப்பட வேண்டும் என சட்டமா அதிபர் சார்பில் கேட்டுகொள்கின்றேன் என்றார். 
 
அத்தோடு இவர் 4 ஆம் எதிரி தொடர்பில் கூறும்போது நான்காம் எதிரியான கருணாகர மூர்த்தி சம்பவம் நடந்த இடமான நாரந்தனையில் சம்பவம் நடந்த நேரத்தில் இருக்கவில்லை என்பதனையும், இந்த குற்றச் செயலுடன் நேரடியாக தொடர்புபடவில்லை என்பதனையும் நான் ஏற்றுக் கொள்கின்றேன். இவர் தொடர்பான தீர்ப்பினை கௌரவ மன்றின் சார்பில் விடுகி றேன் என்றார். 
 
இதனைத் தொடர்ந்து எதிரிகள் சார்பில் ஆஜராகிய சிரேஸ்ட சட்டத்தரணி றெமிடியஸ் தனது தொகுப்புரையை வழங்கினார். 
 
இவர் தனது தொகுப்புரையில் நாரந்தனையில் நடந்த சம்பவத்திற்கும், அதனுடன் தொடர்பு பட்டவர்களாக குற்றம் சாட்டப்பட்டுள்ள 4 எதிரிகளுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என தன் தரப்பு வாதங்கள், மற்றும் இவர்களை குற்றவாளிகளாக இனங்காட்டிய சாட்சிகளில் உள்ள சிக்கல்களை எடுத்து காட்டினார். 
 
மேலும் இச்சம்பவம் பாரதூரமான சம்பவம், இதில் சம்பந்தப்பட்ட உன்மையான குற்ற வாளிகள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்களுக்கு இடம் இல்லை. ஆனால் இந்த நான்கு எதிரிகளும் இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களாக காட்டும் சாட்சிகளில் எந்த வித உண்மைத் தன்மையும் இல்லை, அவர்கள் தாங்கள் சார்ந்த அரசியல் நலன் காரணமாக இந்த எதிரிகள் மீது பழிவாங்கும் நோக்குடன் சாட்சி அளித்துள்ள னர். 
 
குறிப்பாக வடக்கு மாகாணசபை உறுப்பினர் விந்தன் வழங்கிய சாட்சியில் எந்த விதமான உன்மைத் தன்மையும் இல்லை, எனவே அவருடைய சாட்சியை மன்று கவனத்தில் எடுக்க கூடாது எனத் தெரிவித்தார். 
 
ஆயிரம் குற்றவாளிகள் தப்பலாம் ஆனால் ஒரு நிரபராதி சட்டத்தின் முன் தண்டனைக்கு உட் டுத்தப்படக் கூடாது எனவும். இந்த நான்கு எதிரிகளும் நிரபராதிகள் எனத் தீர்ப்பு வழங்கி நால்வரையும் விடுதலை செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். 
 
மதியம் 2 மணிவரை நடந்த இந்த வழக்கின் தீர்ப்பு நாளைய தினம் காலை 10:30 மணிக்கு வழங்கப்படும் என யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தெரிவித்து. வழக்கை நாளை வரை ஒத்தி வைத்ததோடு. 3ஆம்,4ஆம் எதிரிகளை தொடர்ந்து விளக்க மறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார்.

http://www.onlineuthayan.com/news/21051

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.