Jump to content

சிறுகதைகள் 2016: உயிர்ப்புடன் இருக்கும் சிறுகதை உலகம்


Recommended Posts

books_3098682f.jpg
 
 
 

பத்துக்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுப்புகள் குறிப்பிடத்தக்க விதத்தில் இந்த ஆண்டு வெளிவந்திருக்கின்றன. இவற்றின் கதைகள் ஆர்வத்தையும் சுவாரசியத்தையும் ஒருசேர அளிக்கின்றன. எஸ்.ராமகிருஷ்ணனின் பதினைந்தாவது தொகுப்பும், சாம்ராஜ், போகன் சங்கர், ஜி.காரல் மார்க்ஸ், கே.ஜே.அசோக்குமார் ஆகியோரின் முதல் தொகுப்பும் வெளி வந்திருக்கின்றன. இக்கதைகள் காட்டும் நிலப்பகுதிகள் வேறுபட்டவை. பிரத்தி யேகப் பேச்சுவழக்குகள், பண்பாட்டுக் கூறுகள், வாழ்நிலைகளை அவை கொண் டிருக்கின்றன. பெயர்களிலும் அடையாளங் களிலும் கதை மாந்தர்களுக்குள் வேறுபாடு இருப்பினும் சில விதிவிலக்குகள் நீங்கலாக இந்தக் கதையுலகுகள் பெரும் பாலும் உணர்ச்சியின் தளத்தில் ஒன்றிணை கின்றன. பல கதைகளில் காமம் வெவ்வேறு வடிவங்களில் கலந்திருக்கிறது.

சென்ற நூற்றாண்டின் கதைகளின் வழியே அதன் ஆசிரியர்கள் எதிர்கொண்ட வாழ்க்கை, படைப்புரீதியான அகப் போராட்டங்கள் ஆகியவற்றிலிருந்து வேறு பட்டவை இருபத்தொன்றாம் நூற்றாண்டு முற்பகுதியின் படைப்புகள். அதன் தொடர்ச்சி அறுபடாத வேளையிலும் அதைக் கடந்து செல்ல விழையும் முனைப்பு ஆர்வ மூட்டுகிறது. ஆனால், அந்த ஆர்வம் சிலவற்றில் அதீதமாகி நடுவிலேயே கொழ கொழத்துப்போய்விடுகிறது.

தமிழில் பரிசோதனை முயற்சிகளை விடவும் யதார்த்த, இயல்புவாத, செவ்வியல், நவீனத்துவக் கதைகூறு முறைகளும் நவீனக் கதை சொல்லல் உத்திகளுமே பரவலான கவனத்துக்கும் சிலாகிப்புக்கும் உள்ளாகின்றனவோ என எண்ணச் செய்யும் தொகுப்புகளாகவே இவை இருக்கின்றன.

பிறரால் அறிய முடியாத இஸ்லாமிய வாழ்வே கீரனூர் ஜாகீர் ராஜாவின் கதைக்களம். கடலூர் (இமையம்), கன்னி யாகுமரி (போகன் சங்கர்), கொங்குப் பகுதி (தேவிபாரதி, ஜாகீர் ராஜா), சென்னை (அரவிந்தன்), மதுரை, கேரளா (சாம்ராஜ்) எனக் கதைகள் பல்வேறு நிலப்பரப்புகளில் விரிகின்றன. ஈழமும் அயல் தேசங்களுமே முத்துலிங்கம் கதை களின் பின்னணி. சிறுகதைகள் என்னும் பொதுப் பெயரில் இத்தொகுதிகள் சுட்டப் பட்டாலும் நெடுங்கதைகளும் குறுங் கதைகளும் (தமிழவன்) மாறுபட்ட கதை சொல்லலும் (பாலசுப்பிரமணியம் பொன் ராஜ், எஸ்.ராமகிருஷ்ணன்) முயன்று பார்க்கப் பட்டிருக்கின்றன.

உலகின் பல்வேறு இடங்களையும் நிலக்காட்சிகளாகக் கொண்டிருப்பவை அ.முத்துலிங்கத்தின் கதைகள். அதற்கு ‘ஆட்டுப்பால் புட்டு’ தொகுப்பும் விதிவிலக் கல்ல. புலம்பெயர்ந்து வாழ நேர்ந்துவிட்ட வளின் பத்து வயது மகளுக்கு வெள்ளிக் கிழமைகளைத் தாங்க முடிவதில்லை. அவளுக்குத் தன் தந்தையைத் தெரிய வேண்டும் என்னும் பிடிவாதம். ‘வெள்ளிக்கிழமை இரவுகள்’ கதைக்குள் குரூரம் உறைந்திருக்கிறது. 70 வயதில் வேலை வேண்டி தட்டச்சு பயிலும் ஆப்பிரிக்கக் கிழவரைப் பற்றிய ‘சின்ன ஏ…பெரிய ஏ…’, இரு மாதங்களுக்கு ஒரு முறை ‘ஆட்டுப்பால் புட்டு’ தின்பதற் காகவே வீடு வரும் சிவப்பிரகாசம், மரங்களின் மீது மாறா நேசம் கொண்ட சிங்களவனான சோமபாலாவைக் குறித்த ‘சிம்மாசனம்’ போன்ற கதைகள் முத்து லிங்கத்தின் தனித்துவத்தைக் காட்டுகின்றன.

இஸ்லாமியரின் வாழ்க்கை

books1_3098683a.jpg

கீரனூர் ஜாகீர் ராஜாவின் கதைகள் பெரும்பாலும் அவர் வாழ்ந்து பெற்ற அனு பவங்களிலிருந்து உருவாகி வந்தவையே. அவரை நல்ல கதைசொல்லியாக நிலை நிறுத்துவதும் அத்தகைய கதைகளே. நவீன இலக்கியத்துக்குள் இஸ்லாமியச் சமூகத்துக்கான இடம் குறைவானது. அவ்வுலகைப் பிறர் சமைப்பதும் சுலபமல்ல. அச்சமூகத்தின் எளிய மனிதர்களின், லெளகீகத்தில் தோற்றுப்போனவர்களின் துயரார்ந்த வாழ்வையே ஜாகீர் ராஜா கதைகளாக்குகிறார். ‘கொமறு காரியம்’ தொகுப்பும் அவ்வகையானதே. பள்ளிவாசல் வேலை பறிபோய் உயிர் வாழும் பொருட்டு, இல்லாத மனைவிக்குப் புற்றுநோய் எனவும் திருமணமாகாத நான்கு ‘கொமறு’களுக்கு (உண்மையில் ஒரு மகள்) மணமுடிக்க வேண்டும் எனவும் அச்சடிக்கப்பட்ட தாளைத் தூக்கித் திரிந்து வயிறு வளர்க்கப் போராடும் தந்தையின் பாடுகளை மகளின் மனம் வழியாகச் சொல்கிறது ‘கொமறு காரியம்’ கதை. ‘தலாக்’ பெற்றுச் சிறு வயது மகனுடன் பிறந்த ஊர் திரும்பும் பெண், வயதான காலத்தில் ‘தலாக்’ வாங்கி ராட்டை சுற்றிக் காலம் கழிக்கும் அம்மாவிடம் அடைக்கலம் தேடு வதை ‘பாவம் இவள் பெயர் பரக்கத்நிஸா..’ காட்டுகிறது.

இது போன்ற கதைகளை விடுத்து, ‘வேறு மாதிரி’ எழுதப்பட்ட ஜாகீரின் கதைகள் வெற்று முயற்சிகளாகவும் பலவீனமான வையுமாகவே எஞ்சுகின்றன. சில கதைகளில் அவர் சிரிப்பு மூட்ட ஆசைப்படும் இடங்களை வாசிப் பவர் மவுனமாகக் கடக்க நேர்வது துரதிஷ்டவசமானதுதான்.

மீள முடியாத துயரங்கள்

பரிதவிப்புகளால், எளிதில் வெளிக்காட்ட முடியாத ஆழமான காயங்களால், உணர்ச்சியின் தத்தளிப்புகளால், அகத்தின் மாறாட்டங்களால், எளிதில் மீள முடியாத துயரங்களால் ஆனது போகன் சங்கரின் புனைவுலகம் (கிருஷ்ணன் ஆயிரம் நாமங்கள்). பாதிக்கும் மேற்பட்ட கதை களின் சரடாகக் காமம் இருக்கிறது. கதைகளில் பலவும் எல்லையோர மாவட்ட மான குமரியில் நிகழ்கிறது. ‘யாமினி அம்மா’ மலையாளக் கதையொன்றின் மொழிபெயர்ப்பு போலவே இருந்தது. ‘நடிகன்’, ‘நிறமற்ற வானவில்’ இரண்டும் ஆழமான கதைகள். ஆற்றுப்படுத்த முடியாத உணர்ச்சியின் மீது கட்டப்பட்ட ‘மீட்பு’ கதை முடிந்த பின்பும் தேவையற்றுத் தொடர்கிறது. கதைகளுள் தொடர்ச்சியாகப் பயின்றுவரும் உவமைகளால் அமைந்த நடையிலிருந்து போகன் வெளியேற வேண்டும். சில கதைகளின் முடிப்பு குறையாகத் தொக்கி நிற்கிறது.

இவ்வாண்டு வெளிவந்தவற்றிலேயே பெருந்தொகுப்பு (25 கதைகள்) எஸ். ராம கிருஷ்ணனின் ‘என்ன சொல்கிறாய் சுடரே’. நேரடிச் சித்தரிப்புகளைக் கொண்ட யதார்த்தக் கதைகளும் மிகுபுனைவுகளும் தொகுப்பில் கலந்திருக்கின்றன. ஆயினும் கதைகளை வாசித்து முடித்து நிமிர்ந்ததும் அலுப்பும் சோர்வும் மனதை மூடியதை எவ்வளவு முயன்றும் தடுக்க இயலவில்லை. ‘உலகின் கண்கள்’, ‘புதுமைப்பித்தனின் கடிகாரம்’ ஆகியவை குறிப்பிடும்படி இருக்கின்றன.

முந்தைய கதைகளின் சட்டகங்களி லிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு புதிய வடிவம் நோக்கிச் செல்பவை தேவிபாரதியின் நான்கு நெடுங்கதைகளின் தொகுப்பான ‘கறுப்பு வெள்ளைக் கடவுள்’. மொழியின் மீது தீவிர கவனம் கொண்டவை இப்புனைகதைகள். புனைவுக்கும் நிஜத்துக்குமான கோட்டை அழித்துப் பயணிக்கும் ‘அ.ராமசாமியின் விலகல் தத்துவ’த்தை வாசிக்கையில் கிட்டும் சுவாரசியம், அதை அசைபோடும்போது காணாமல் போய்விடுகிறது. இந்திய இலக்கிய ‘க்ளாஸிக்’கான ‘அக்னி நதி’ நாவலைப் போன்ற ஒன்றைத் தன் நெடுங் கதையில் மீட்டுருவாக்கம் செய்ய முயன்றிருக்கும் ‘கழைக்கூத்தாடியின் இசை’யே தொகுப்பில் சிறப்பான படைப்பு. மற்ற இரு நெடுங்கதைகளும் தேவைக் கதிகமாக நீட்டப்பட்டுவிட்டனவோ என்னும் உணர்வையே அளித்தன.

books2_3098685a.jpg

மதுரை மற்றும் கேரளத்தின் பிரதான சாலைகள் மட்டுமல்ல; குறுக்குச் சந்து களும் கண்முன் தெரியும்படியான காட்சி களைக் கொண்ட கதைகளின் தொகுதி சாம்ராஜின் ‘பட்டாளத்து வீடு’. புறக்காட்சி களின் சித்தரிப்புகளால் ஆன கதைகள் என்றபோதும் அவை ஒரு கட்டத்தில் பாத்திரங்களின் மன இயல்புடன் கலந்து விடுகின்றன. இடதுசாரி அரசியலின் களப்பணியினுள் அம்மனிதர்கள் சந்திக்க நேர்வதென்ன என்பதைக் காட்டும் கதைகளுள் ஒன்று ‘களி’. மென்மையும் நாசூக்கும் கொண்டு அதிராத தொனியில் நகரும் ‘13’ இறுதியில் வைத்திருக்கும் அதிர்ச்சி எதிர்பார்க்க முடியாதது. இந்த ஆண்டு வாசிக்கக் கிடைத்த காதல் கதைகளில் குறிப்பிடத்தக்கது ‘நாயீஸ்வரன்’. கதைகளின் நடை பேச்சாளரின் தொனியைக் கொண்டிருப்பது தொகுதியின் குறை.

மத்திய வர்க்கப் பின்னணி கொண்ட மனிதனை முதன்மையான, அல்லது கதையை நகர்த்திச் செல்லும் பாத்திரமாகக் கொண்டிருக்கும் அரவிந்தனின் ‘கடைசி யாக ஒரு முறை’ தொகுப்பின் கதைகள் பெரும்பாலும் சென்னையைப் பின்னணி யாகக் கொண்டிருக்கிறது. அந்த ஒரு மனிதனே வேறு வேறு காலகட்டங்களில் இக்கதைகளுக்குள் இருக்கிறான் என்பதே இக்கதைகளின் நிறையாகவும் பாதக மாகவும் இருக்கிறது. திரும்பிப் பார்த்தல், மனநடுக்கத்தை உற்று நோக்குதல், தர்க்கங்களை அடுக்கி வகை பிரித்தல் என்பதே இக்கதைகளின் பொதுப்பண்பு. தலைப்புக் கதையும் ‘மலையும் மலை சார்ந்த வாழ்வும்’ கதையும் குறிப்பிடத் தக்கவை. கூறுமுறையில் மேலும் மெனக் கெட்டிருந்தால் இன்னும் சில கதைகள் மேலும் நன்றாக வந்திருக்கக்கூடும்.

பன்முகம் காட்டும் கதைகள்

பாலசுப்பிரமணியன் பொன்ராஜின் ‘துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை’யும் தமிழவனின் ‘நடனக்காரியான 35 வயது எழுத்தாளர்’ தொகுப்பும் வழக்கமான கதைப் போக்குகளிலிருந்து விலகியவை. தமிழவனுடையது சிறிய, குறுங்கதைகளின் தொகுதி. தொகுப்பிலுள்ள 22 கதை களிலும் உள்ளூர ஏதோ பொதிந்துகிடப்ப தான தோற்றத்தை அளிக்கும் உரை யாடல்கள் இடம் பெற்றிருக் கின்றன. ஆனால், அவை வெறும் தோற்றம் மட்டுமே. இதைவிடவும் பல மடங்கு அர்த்தக் கூறுகளைத் தம் அடியோட்டமாகக் கொண்ட சிறுகதைகள் முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே தமிழில் எழுதப்பட்டுவிட்டன. ‘மூவரும் மெளனமானர்கள்’, ‘கொலை செய் யாதிருப்பாயாக’, ‘நால்வரின் அறையில் இருந்த சிலர்’ ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

வாழ்க்கையின் வெறுமை யையும் இரு இணைகளுக்கிடை யேயான ஈகோ யுத்தங்களையும் பேசும் கதை, புதிர்த் தன்மை கொண்ட குறுநாவல், பின்நவீனக் கதை என பாலசுப்பிரமணியன் பொன் ராஜின் புனைவுலகம் வித்தியாசம் கொண்டிருந்தாலும் கலையாக ஆகாமல் ஏதோ ஒரு விதத்தில் நழுவிப் போய் விடுகின்றன. ஆனால் ‘வலை’ குறுநாவல் பாலாவின் தனித் துவத்தைக் காட்டக்கூடியது. அதில் அவர் எழுப்பும் வினாக்களும் புதிர்த் தன்மை கொண்ட கதை சொல்லல் முறை யும் ரமேஷ் பிரேம் விட்டுச் சென்ற இடத்தைத் தொடுபவராக அவரை அடையாளம் காட்டுகின்றன. இத்தொகுப்பில் சிறந்த ஆக்கமாகக் கருதத்தக்கது ‘வலை’. ‘உடைந்துபோன பூர்ஷ்வா கனவு’ குறிப்பிடத்தக்க கதை.

பத்துக் கதைகளைக் கொண்டிருக்கும் ஜி.காரல் மார்க்ஸின் ‘வருவதற்கு முன்பிருந்த வெயில்’ தொகுப்பில் அக்கதைகளின் பாத் திரங்களுக்குப் பெயர்களே இல்லை. ஆண் பெண் உறவுகளைப் பேசும் காரல் மார்க்ஸின் கதைகளில் சில தருணங்கள் நன்றாக இருக்கின்றன. ‘காட்டாமணக்கு’, ‘உப்புச்சுவை’ ஆகியவை குறிப்பிடத்தக்கவை. எளிய மொழி என்றபோதும் அதில் ஆழமின்றி இருப் பதும் உரைநடையில் சொற்களைச் செறி வாகக் கைகொள்ளத் தவறியிருப்பதும் இக்கதைகளின் பலவீனங்கள்.

‘சாமத்தில் முனகும் கதவு’, கே.ஜே.அசோக்குமாரின் முதல் தொகுப்பு. குறிப்பு களாகச் சொல்ல வேண்டியதை விரிவாகவும் விஸ்தரித்து எழுத வேண்டியதை ஒற்றை வாக்கியத்திலும் சொல்லி நகர்கின்றன இக்கதைகள். காமத்தின் நிறத்தை அறிய முயலும் ‘சாமத்தில் முனகும் கதவு’, வித்தியாசமான கருப்பொருளைக் கொண்ட ‘வருகை’ ஆகியவை கவனத்தில் நிலைக்கின்றன. தேவை யற்றுக் கதையை வளர்த்துச் செல் வதையும் பழைய பாணியை நினை வூட்டும் கூறல்முறை களையும் கடந்து சென்றால் மேலும் நல்ல கதைகளை இவரால் அளிக்க இயலும்.

தனித்து நிற்கும் கதைகள்

2016-ல் வெளிவந்துள்ள சிறுகதைத் தொகுப்புகளில் மெச்சத் தக்கது இமையத்தின் ‘நறுமணம்’. தேர்ந்தெடுக்கும் கருப்பொருளைச் செய்நேர்த்தியுடன் கலையாக மாற்றும் ரசவாதம் ஒன்றிரண்டு கதைகள் தவிர்த்துப் பிற அனைத் திலும் நிகழ்ந்திருக்கிறது. உலக மயமாக்க லில் இந்நூற்றாண்டு அடைந்திருக்கும் கசப்புகளையும் இழப்புகளையும் இமைய மளவுக்குக் கதைகளுக்குள் கொணர்ந்த வர்கள் மிகச் சிலரே. வியாபாரமயத்தின் நச்சுப் பொய்கை சக மனிதர்களைக்கூடப் பண்டமாக, ஏதிலிகளாக ஆக்கிவைத் திருப்பதை நுட்பமாகப் பொதிந்துவைத்திருக் கிறார். பிரச்சாரமாக ஆகியிருக்கக்கூடிய ‘நறுமணம்’ அவரது சொல்முறையால் கலைஅமைதி பெற்றிருக்கிறது.

இவ்வாண்டின் மொத்தக் கதைகளிலும் உயர் தளத்தில் வைத்து மதிப்பிட வேண்டியது ‘ஈசனருள்’. பெண்களின் மன உலகை நெருங்கிச் சென்று காட்டும் இமையம், தேர்ந்த படைப்பாளிகளின் குறுக்கே பால் பேதங்களின் சுவர்கள் ஏதுமில்லை என உணர்த்துகிறார். உயிரோட்டமான பாத்தி ரங்களும் உரையாடல்களில் வட்டார வழக்கின் கொச்சையும் இக்கதைகளுடன் அணுக்கமான பிணைப்பை உண்டாக்கி விடுகின்றன. சில கதைகளில் வெளிப்படும் தொனியின் நிழல் வேறு சிலவற்றிலும் பரவிவிட்டதோ எனத் தோன்றும் ஐயமே இத்தொகுப்பின் குறை.

இந்தத் தொகுப்புகள் அனைத்தையும் வாசித்தபோது பலரும் எண்ணிக்கொண் டிருப்பதுபோல தமிழில் சிறுகதை வடிவம் சுணங்கிப் போய்விடவில்லை என்ற எண்ணமே ஏற்பட்டது. அவ்வடிவத்தின் மீது படைப்பாளிகளுக்குள்ள தாகம் அடங்கிவிடவில்லை என்றும் தோன்றியது. 2016-ல் வந்துள்ள கதைகளிலிருந்து தேர்ந்தெடுத்த கதைகளின் தொகுப்பை உருவாக்கினால் அது தமிழ்ச் சிறுகதையுலகினுள் என்ன நடந்துகொண் டிருக்கிறது என்பதை அறிவதற்கான தொகுப் பாக இருக்கும். ஆனால், அந்நூலைக் கையில் பற்றியபடி அத்தொகுப்பு குறித்துப் புளங்காங்கிதமடையவோ இறுமாப்புக் கொள்ளவோ முடியுமா என்பது ஐயமே.

கே.என்.செந்தில், எழுத்தாளர், ‘கபாடபுரம்’ இணைய இதழின் ஆசிரியர். தொடர்புக்கு: KNSENTHILAVN7@GMAIL.COM

http://tamil.thehindu.com/general/literature/சிறுகதைகள்-2016-உயிர்ப்புடன்-இருக்கும்-சிறுகதை-உலகம்/article9410013.ece?homepage=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஐபிஎல் 2024: பேட்ஸ்மேன்களின் காட்டடியால் கலங்கும் பந்துவீச்சாளர்கள் - டி20இல் நிகழும் மாற்றங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இங்கிலாந்து அணியின் ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் ஜோஸ் பட்லர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக மூன்று இன்னிங்ஸ்களில் இரண்டு சதங்கள் அடித்துள்ளார். கட்டுரை தகவல் எழுதியவர், அயாஸ் மேமன் பதவி, கிரிக்கெட் எழுத்தாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் உலகின் பணக்கார கிரிக்கெட் போட்டியான இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) இந்த ஆண்டு பேட்டிங்கில் அபாரமான வாண வேடிக்கையைப் பார்க்க முடிகிறது. நாடு முழுவதும் உள்ள மைதானங்களில், பேட்ஸ்மேன்கள் எச்சரிக்கையைக் காற்றில் பறக்க விடுகிறார்கள். இரக்கமின்றி பெரிய ஷாட்களை அடிக்கிறார்கள், கிட்டத்தட்ட ஒவ்வொரு போட்டியையும் சிக்ஸர் அடிக்கும் திருவிழாவாக மாற்றுகிறார்கள். இதனால், பந்துவீச்சாளர்கள் வெலவெலத்துப் போயுள்ளனர். டி20 கிரிக்கெட் எங்கே போய்க்கொண்டிருக்கிறது என நிபுணர்களும், ரசிகர்களும் குழம்பிப் போயுள்ளனர். நாம் இதுவரை பார்த்த அதிரடி பேட்டிங்கின் சில புள்ளிவிவரங்களைப் பார்ப்போம். செவ்வாய்க்கிழமை இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னெள சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான சீசனின் 39வது போட்டிக்குப் பிறகு, மொத்தம் 1,191 பவுண்டரிகள் மற்றும் 686 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன. ஐபிஎல் 2023இல் மொத்தம் 2,174 பவுண்டரிகள் மற்றும் 1,124 சிக்ஸர்கள் பதிவு செய்யப்பட்டன. நடப்பு சீசன் பாதிக்கு மேல் எஞ்சியுள்ள நிலையில் கடந்த ஆண்டின் புள்ளிவிவரங்கள் எளிதில் முறியடிக்கப்படும் என்று எதிர்பார்ப்பது நியாயமானதே. பவுண்டரிகள், சிக்ஸர்கள் அதிகரித்திருப்பது அணியின் ஸ்கோரையும் அதற்கேற்ப உயர்த்தியுள்ளது.   எளிதில் முறியடிக்கப்படும் சாதனைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டி20 வரலாற்றில் அதிக பவர்பிளே ஸ்கோரை பதிவு செய்ய டிராவிஸ் ஹெட் உதவினார். ஆரம்பக்கால ஐபிஎல் சீசன்களில், 150-160 ரன் என்பது சவால் கொடுக்கும் ஸ்கோராக கருதப்பட்டது. ஆனால் இன்று பெரும்பாலும் 10 போட்டிகளில் 8இல் இது போன்ற ஸ்கோர் அடித்த அணிகள் தோல்வியடைகின்றன. ஸ்கோரிங் முறைகளில் ஏற்பட்ட மாற்றத்தை விளக்குவதற்கு இந்த உதாரணத்தைப் பார்ப்போம். 2007ஆம் ஆண்டு தொடக்க டி20 உலகக் கோப்பையில் ஸ்டூவர்ட் பிராட் பந்தில் யுவராஜ் சிங் ஆறு சிக்ஸர்களை விளாசினார். அப்போது இந்தியா மொத்தம் 218 ரன்கள் எடுத்தது. அந்த நேரத்தில் இது ஒரு பெரிய சாதனை. இருப்பினும் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அணி 200 ரன்கள் அடிப்பது என்பது வாடிக்கையாகிவிட்டது. செவ்வாய்க்கிழமை வரை இந்த ஐபிஎல் சீசனில் நடந்து முடிந்துள்ள 39 ஆட்டங்களில் அணிகள் 19 முறை 200 ரன்களை கடந்துள்ளன. மொத்த ஸ்கோர் ஒன்பது முறை 400 ரன்களை தாண்டியது. வியக்க வைக்கும் வகையில் இரண்டு போட்டிகளில் இரு அணிகளின் மொத்த ஸ்கோர் 500 ரன்களை தாண்டியுள்ளது. சுவராஸ்யமான தகவல்கள் இன்னும் முடியவில்லை. இந்த சீசனில் சராசரி ரன் விகிதம் ஓவருக்கு 10. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சீசனின் தொடக்கத்தில் இருந்தே சாதனைகளை முறியடிக்கும் ஓவர் டிரைவில் உள்ளனர். டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான முதல் பவர்பிளேவில் (ஆறு ஓவர்கள்) முன் எப்போதும் இல்லாத வகையில் 125 ரன்களை குவித்தனர். இது ஒரு ஓவருக்கு 20.83 ரன்கள் என்ற வியக்க வைக்கும் சாதனை. இந்த சீசனில் சன்ரைசர்ஸ் அணி, மூன்று முறை 250 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிராக 287 ரன்கள் எடுத்ததும் இதில் அடங்கும். இதுவொரு ஐபிஎல் சாதனை. இந்தப் போக்கு தொடருமானால் இந்த சீசனிலேயே 300 ரன்கள் என்ற சாதனை படைக்கப்படலாம். டி20 கிரிக்கெட், இயல்பிலேயே அதிரடி ஆட்டத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. பேட்டிங்கிற்கு நிலையான ஸ்ட்ரோக் ஆட்டம் தேவைப்படுகிறது. அங்கு ஒரு டாட் பால்கூட ஏற்றுக்கொள்ள முடியாதது. பேட்ஸ்மேன்கள் ஒவ்வொரு பந்திலும் அதிகபட்ச ரன் எடுக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆகவே மட்டையை வீச தடையற்ற சுதந்திரம் வழங்கப்படுகிறது. இந்த உத்தியால் ஆபத்துகள் இருந்தாலும், பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களால் உந்தப்பட்ட ரன் குவிப்பு இந்த சீசனில் ஒரு விதிவிலக்காகவே உள்ளது.   இத்தகைய அதிரடி பேட்டிங்கிற்கு காரணம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் வீரர் அஷூதோஷ் ஷர்மா 28 பந்துகளில் 61 ரன்கள் குவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். எளிதான ஆடுகளங்கள் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. உலகமெங்கும் ஒயிட்-பால் கிரிக்கெட், ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20க்கான ஆடுகளங்கள் எளிதாக விளையாடக் கூடியதாகவே தயார் செய்யப்படுகின்றன. டி20 கண்கவர் ஆக்‌ஷன் வாக்குறுதியைக் கொண்டிருப்பதால், ரசிகர்கள், ஒளிபரப்பாளர்கள் மற்றும் ஸ்பான்சர்களுக்கு அதிரடி ஷாட்கள் முக்கிய அம்சமாகிவிட்டன. இதற்காகவே எல்லா ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. மற்ற டி20 லீக்குகளை போல் அல்லாமல் ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு உகந்ததாக இருப்பதை ஐபிஎல் உறுதி செய்கிறது. இருப்பினும் ஃப்ளாட் பிட்சுகள் மட்டுமே பந்துவீச்சாளர்கள் எதிர்கொள்ளும் ஒரே தடை அல்ல. பேட்டர்கள் தற்போது நல்ல உடல் தகுதியுடனும், நல்ல வலுவுடனும், சாகசங்களுக்குத் துணிந்தவர்களாகவும் உள்ளனர். குறிப்பாக இளம் வீரர்கள் தங்கள் ஆரம்ப ஆண்டுகளிலேயே டி20இல் இழுக்கப்படுகின்றனர். அவர்கள் அதிக ரிஸ்குகளை எடுக்கின்றனர். போட்டிகளில் வெற்றிபெற, அற்புதமான சாதனைகளைப் படைக்க முயற்சி செய்கிறார்கள். போட்டியை எதிர்த்து சமாளிக்கவும், அதிக அங்கீகாரம் மற்றும் வெகுமதிக்காகவும் அவர்கள் இதைச் செய்கின்றனர். சில விதிமுறை மாற்றங்களும் பந்து வீச்சாளர்களின் முக்கியத்துவத்தைக் குறைப்பதில் பங்களித்துள்ளன. உதாரணமாக இந்த ஐபிஎல் சீசனில் இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட் அறிமுகமாகியுள்ளது. சரியான நேரத்தில் ஒரு குறிப்பிட்ட வீரரைக் கொண்டு வருவதற்கு பயிற்சியாளர்கள் மற்றும் கேப்டன்களுக்கு இது வாய்ப்பளித்துள்ளது. சூழலுக்கு ஏற்ப ஆட்டத்தை மாற்றிக்கொள்ள இதுவொரு சுவாரஸ்யமான வாய்ப்பைக் கொடுக்கிறது. மேலும் ஒரு பந்து வீச்சாளரைக்கூட இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட்டாக கொண்டு வர முடியும். ஆனால் இதுவரையிலான போக்கு பேட்டிங் வீரர்களுக்கு சாதகமாகவே உள்ளது. கிரிக்கெட் ஒரு பேட்டரின் விளையாட்டு என்று சொல்லப்படுகிறது. ஆனால், மட்டைக்கும் பந்துக்கும் இடையே அதிகரித்து வரும் இந்த இடைவெளி டி20க்கு நல்லதா என்பதுதான் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் நடக்கும் பரபரப்பான விவாதம். இந்தச் சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பேட்டிங் ஜாம்பவானுமான சுனில் கவாஸ்கர் பந்துவீச்சாளர்களுக்கு ஆதரவு அளித்துள்ளார். "இது இந்த அளவுக்கு ஒருதலைப்பட்சமாக இருந்தால் அது போட்டியின் மீதான ஆர்வத்தைக் குறைத்துவிடும்," என்று அவர் கூறுகிறார்.   பந்துவீச்சாளர்களுக்கு சவாலான நிலை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆண்ட்ரே ரசல் அடிக்கும் ஒரு ஷாட். வழக்கமான 75 கெஜத்தில் இருந்து 65 அல்லது அதற்கும் குறைவாக பவுண்டரி தூரம் குறைக்கப்பட்டது கவாஸ்கரின் கோபத்திற்கு முக்கிய காரணம். "ஒரு பந்து வீச்சாளர் தன் பந்து மூலம் பேட்ஸ்மேனை தவறு செய்யத் தூண்டுகிறார். ஆனால் பவுண்டரி தூரம் குறைக்கப்பட்டதால் அது பந்துவீச்சாளருக்கு எதிராகிவிடுகிறது. கேட்ச் ஆக மாற வேண்டிய பந்து சிக்ஸருக்கு சென்றுவிடுகிறது,” என்று அவர் கடுப்புடன் கூறினார். நவீன பேட்டுகளின் வல்லமை காரணமாகத் தவறாக அடிக்கப்படும் ஷாட்டுகளில்கூட பந்து கணிசமான தூரம் பயணிக்கிறது. இது கவாஸ்கரின் கவலையை நியாயப்படுத்துகிறது. முன்னாள் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன், பந்து வீச்சாளர்களின் திறமை மற்றும் மனோபாவத்திற்கு சவால் விடும் சூழ்நிலையாக இதைப் பார்க்கிறார். "பௌலர்கள் நான்கு ஓவர்களில் ஹீரோக்களாக மாறுவதற்கான வாய்ப்பும் ஊக்கமும் உள்ளது" என்கிறார் ஸ்டெய்ன். டி20 ஆட்டத்தின் மனநிலை மரபுவழியில் இருந்து வியத்தகு முறையில் மாறியுள்ளது. இந்த மாற்றம் தொடர்கிறது. எனவே கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் என்று அனைவருமே ஆற்றல்மிக்கவர்களாக, செயல்திறன் கொண்டவர்களாக, ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஆனால் கோல்ஃப் மற்றும் பேஸ்பாலின் சங்கமம் போல டி20 கிரிக்கெட் மாறாமல் இருக்க, பேட் மற்றும் பந்தின் சமநிலை பராமரிக்கப்பட வேண்டும். https://www.bbc.com/tamil/articles/c1038g85e13o
    • டி.ஆர்.பாலுவை விமர்சித்த யூடியூபர் குடும்பத்துக்கு மிரட்டல் என குற்றச்சாட்டு - திமுக தரப்பு விளக்கம் என்ன? பட மூலாதாரம்,சிவராமகிருஷ்ணன் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஸ்ரீபெரும்புதூர் திமுக நிர்வாகி ராமலிங்கத்தின் மகன் சிவராமகிருஷ்ணன் ஜப்பானில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். தனது சொந்த ஊரான ஸ்ரீபெரும்புதூரில், திமுக எம்.பி. டி.ஆர்.பாலு வளர்ச்சித் திட்டங்கள் எதையும் நடைமுறைப்படுத்தவில்லை எனக் குற்றம் சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனால் அவருடைய குடும்பத்தாருக்கு திமுகவினரே‌ மிரட்டல் விடுப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், ஸ்ரீபெரும்புதூர் நகர செயலாளர் சதீஷ் பிபிசி தமிழிடம் பேசியபோது, இந்த விவகாரம் குறித்துத் தனக்கு எதுவும் தெரியாது என்றும் சிவராமகிருஷ்ணனின் தந்தை ராமலிங்கத்துடன் தனக்கு நெருங்கிய பழக்கமே கிடையாது எனவும் விளக்கம் அளித்தார். என்ன நடந்தது? ஜப்பானில் பணியாற்றும் சிவராமகிருஷ்ணன் ஜப்பான் தமிழ் ப்ரோஸ் என்ற யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்.‌ அதில் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர், “அனைவரும் ஸ்ரீபெரும்புதூர் பிரம்மாண்டமாக வளர்ந்திருப்பதாக நினைக்கிறார்கள். வளர்ந்துள்ளது என்றால் என்ன‌ பொருள்? வேலை வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால், மக்களுக்குத் தரமான வாழ்க்கை இருக்கிறதா? இத்தனை பேர் வாழும் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு பூங்கா கிடையாது. சாலை போட இந்த அரசுக்குத் தெரியுமா? பத்து ஆண்டுகளாகப் பல நூறு கோடி செலவு செய்து பாதாள சாக்கடை கட்டப்பட்டு வருகிறது. அது செயல்முறைக்கு வரும்போதுதான், அந்தத் திட்டம் எப்படி இருக்கிறது என்று தெரியும். (டி.ஆர்‌.பாலு) ஸ்ரீபெரும்புதூரில் என்ன செய்து விட்டார் என்று இரண்டாவது முறையாக அவருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரியவில்லை,” என்று பேசியிருந்தார். அவர் 3 லட்சம் பின் தொடர்பவர்கள் கொண்ட தனது யூ டியூப் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டார்.   பட மூலாதாரம்,திமுக ஸ்ரீபெரும்புதூர் வார்டு அவைத்தலைவர் ராமலிங்கம் இந்த வீடியோவை வெளியிட்டதற்காக திமுக நகரச் செயலாளரும், ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சித் தலைவர் சாந்தியின் கணவருமான சதீஷ் தன்னை மிரட்டியதாக, ஸ்ரீபெரும்புதூர் இரண்டாவது வார்டு அவைத் தலைவராக உள்ள ராமலிங்கம் கூறுகிறார். இந்த விவகாரம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், “கடந்த 12 ஆண்டுகளாக பாதாள சாக்கடைப் பணிகள் நடைபெறுகின்றன. நானும் என் மனைவியும் ஒருமுறை தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து பலத்த காயமடைந்தோம். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, என் மகன் ரூ.8 லட்சம் சிகிச்சைக்காக செலவு செய்தான். பள்ளிக் குழந்தைகள், பொதுமக்கள் எனப் பலரும் அதில் விழுகிறார்கள்," என்று கூறினார். மேலும், அந்த ஆதங்கத்தில் தனது மகன் வீடியோவை வெளியிட்டதாகவும் அதற்காக தாம் கட்டிக் கொண்டிருக்கும் வீட்டை இடித்துவிடுவதாக சதீஷ் மிரட்டியதாகவும் கூறினார். பட மூலாதாரம்,YOUTUBE நான்கு நாட்கள் முன்பு “DMK Sriperumbudur MP டி.ஆர் பாலு UPகள் மிரட்டல்” என்று மற்றொரு வீடியோவை வெளியிட்டிருந்தார். முதல் வீடியோவில் தாம் பேசியதற்காக ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி நகர திமுக செயலாளர் சதீஷ் தனது தந்தையை மிரட்டியதாக அதில் கூறியிருந்தார். அந்த வீடியோவில், “ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் என்ன பிரச்னைகள் இருக்கின்றன என்பது இந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலுவின் காதுகளுக்கு எட்ட வேண்டும் என்றுதான் காணொளி வெளியிட்டிருந்தேன். அதற்காக எனது தந்தையை மிரட்டியுள்ளனர். நான் காணொளி வழியாக வெளிப்படுத்திய பிரச்னைகளை வருங்காலத்தில் நிவர்த்தி செய்வோம் என்று கூறியிருக்கலாம். ஆனால் அதை விட்டு, மிரட்டுவது எந்த விதத்தில் நியாயம்? இப்போது என்னை சீண்டிவிட்டார்கள், நான் சும்மா விடமாட்டேன்," எனப் பேசியுள்ளார். மேலும், "ஸ்ரீபெரும்புதூர் பஞ்சாயத்து கடந்த மூன்று ஆண்டுகளில் முறைகேடுகளைச் செய்துள்ளனர். இதுவரை என்னென்ன திட்டங்கள், எவ்வளவு செலவு செய்துள்ளனர் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் முழு தகவல்களையும் வெளியே கொண்டு வரப் போகிறேன். நான் எந்தக் கட்சி சார்பாகவும் பேசவில்லை. பெரிய கட்சிகள் என்று கூறுகிறார்கள், அவர்களின் முகத் திரைகள் கிழிக்கப்பட வேண்டும். நான் என்ன திமுகவுக்கு எதிரியா? நாளை பாஜக, அதிமுக, நாம் தமிழர் என யார் ஆட்சிக்கு வந்தாலும் கேள்வி கேட்கும் சாதாரண மனிதன். பெரிய தலைவர்கள் தங்களுக்குக் கீழ் உள்ளவர்களுக்குக் கடிவாளம் போடத் தவறுவதால்தான் திமுக மீது இவ்வளவு அவபெயர் ஏற்படுகிறது. அதிமுக ஆட்சியில் இருந்தபோதும் லஞ்சம் ஊழல் இருந்தது. ஆனால் அது மக்களை நேரடியாகப் பாதிக்கவில்லை. ஆனால், இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, கல், மண், ஜல்லி என எதைத் தொட்டாலும் லஞ்சம்,” என்று அந்த வீடியோவில் பேசியிருந்தார்.   பட மூலாதாரம்,YOUTUBE மேலும் அதே வீடியோவில் தனது தந்தை வீடியோ கால் மூலம் தன்னிடம் பேசியதை வெளியிட்டிருந்தார் சிவராமகிருஷ்ணன். அதில், “செயலாளர் சதீஷ் என்னை அழைத்து, 'எப்படி உன் மகன் இப்படி வீடியோ போடலாம், நீ எப்படி வீட்டு வரி, குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு வாங்குவாய் எனப் பார்க்கிறேன். அனைத்துக்கும் என்னிடம்தான் வர வேண்டும், எப்படி வாங்குகிறாய் எனப் பார்க்கிறேன்' என்று கூறியதாக" ராமலிங்கம் பேசியிருந்தார். திமுக உட்பட எந்தக் கட்சியில்தான் இல்லை என்று கூறிய சிவராமகிருஷ்ணன் பிபிசி தமிழிடம் பேசியபோது, “ஸ்ரீபெரும்புதூரில் பல சுற்றுச்சூழல் பாதிப்புகள் உள்ளன. அங்குள்ள நெடுஞ்சாலையை நான்குவழிச் சாலையிலிருந்து ஆறு வழிச் சாலையாக மாற்றும் திட்டம் நடைபெறுகிறது. வயலுக்குச் செல்ல நாங்கள் இந்த நெடுஞ்சாலையைக் கடந்து செல்ல வேண்டும். எனவே ஒரு மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை கட்டித் தருமாறு கேட்டோம். அதை இன்னும் செய்யவில்லை. நான் காணொளியில் கூறியது என் கருத்து. ஆனால், எனது அப்பாவை மிரட்டியுள்ளனர். எங்களுக்கு நான்கு வீடுகள் உள்ளன. அதில் ஒன்றில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கான குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புகள் கிடைக்காது என்றும், வீடுகளை இடித்து விடுவோம் என்றும் தொடர்ந்து பலரது முன்னிலையில் அவதூறாகப் பேசியுள்ளனர். இதனால் எனது தந்தை மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார்,” என்றார் சிவராமகிருஷ்ணன்.   பிபிசி தமிழிடம் பேசிய ஸ்ரீபெரும்புதூர் நகர செயலாளர் சதீஷ், “இந்த விவகாரம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது, நண்பர்கள் கூறித்தான் அந்த வீடியோவையே பார்த்தேன். ராமலிங்கம் கட்சி உறுப்பினர்தான். இதே பகுதியில், செல்வபெருமாள் தெருவில்தான் வசிக்கிறார். ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்தார். வாக்குப்பதிவு நாளில் அவரை நான் பார்த்தபோது 'வாக்குப்பதிவு நன்றாக போய்க் கொண்டிருக்கிறது' என்று கூறினார். அவருடன் எனக்கு நெருங்கிய பழக்கமே கிடையாது. அவர் நிலத்தில் அவர் வீடு கட்டினால் நான் என்ன செய்து தடுக்க முடியும்?” என்று விளக்கம் அளித்தார். https://www.bbc.com/tamil/articles/cw8qd458jjgo
    • Published By: VISHNU 26 APR, 2024 | 08:26 PM (நெவில் அன்தனி) மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் பந்துவீச்சில் இந்தோனேசிய கிரிக்கெட் வீராங்கனை ரொஹ்மாலியா அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவுசெய்து உலக சாதனை படைத்துள்ளார். 17 வயதான ரொஹ்மாலியா ஒரு ஓட்டமும் விட்டுக் கொடுக்காமல் 7 விக்கெட்களைக் கைப்பற்றி ஆண்களுக்கான மற்றும் பெண்களுக்கான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான உலக சாதனையை படைத்தார். பாலியில் நடைபெற்ற மொங்கோலியாவுக்கு எதிரான 5ஆவது மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான ரொஹ்மாலி 3.2 ஓவர்கள் பந்துவீசி ஒரு ஓட்டத்தையும் விட்டுக்கொடுக்காமல் 7 விக்கெட்களை வீழ்த்தி உலக சாதனை நிலைநாட்டினார். மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் 7 விக்கெட்களை வீழ்த்திய 3ஆவது வீராங்கனை ரொஹ்மாலியா ஆவார். இதற்கு முன்னர் பெரு அணிக்கு எதிராக 2022இல்  ஆர்ஜன்டீனாவின் அலிசன் ஸ்டொக்ஸ் என்பவரும் பிரான்ஸுக்கு எதிராக 2021இல் நெதர்லாந்தின் ப்ரெடரிக் ஓவர்டிக என்பவரும் ஒரே பந்துவீச்சுப் பெறுதியான 3 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்கள் என்ற உலக சாதனையை சமமாகக் கொண்டிருந்தனர். ஆடவர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் 8 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்கள் என்ற சாதனையை சீன வீரர் சியாஸ் ஐத்ருஸ் தன்னகத்தே கொண்டுள்ளாளர். கோலாலம்பூரில் மலேசியாவுக்கு எதிராக கடந்த வருடம் நடைபெற்ற போட்டியில் அவர் இந்த சாதனைக்கு சொந்தக்காரரானார். இது ஆடவருக்கு மட்டும்  சர்வதேச ரி20 கிரிக்கெட்   உலக சாதனையாகும். https://www.virakesari.lk/article/182055
    • ஒரு அரசியல் கட்சியின்/ இயக்கத்தின்  கடந்த கால  நடவடிக்கைகளையோ அல்லது கட்சிகளின்/ இயக்கங்களின்  தலைவர்களையோ விமர்சிப்பது என்பது அவர்கள்ளை ஒட்டு மொத்தமாக நிராகரிப்பதாகாது.  அரசியல் விமர்சனம் என்பது அரசியல் பிரமுகர்கள் அல்லது நிறுவனங்களின் நடவடிக்கைகள், கொள்கைகள் அல்லது நம்பிக்கைகளை பகுப்பாய்வு செய்து மதிப்பீடு செய்வதை உள்ளடக்கியது. ஒரு  அரசியல் தலைவரை அல்லது கட்சியை/ இயக்ததை  ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதையோ  அல்லது  அந்த தலைவரை/ அக்கட்சியை/ இயக்கத்தை  விமர்சனத்துக்கு  அப்பாற்பட்டவர்களாக புனிதப்படுத்துவதுவதோ  நேர்மையான அரசியல் கருத்தாடலுக்கு பங்கம் விளைவிக்கும் என்பதுடன் ஆரோக்கியமான அரசியல் கருத்தாடலாக அமையாது. 
    • யாழில் நான்காயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்ட தேங்காய்!! (மாதவன்) யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் வருடாந்தம் நடத்தும் போர்த் தேங்காய் போட்டிக்காக பயன்படுத்தும் தேங்காய்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன்போது ஓர் தேங்காய் நான்காயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சங்கானை இந்து இளைஞர் அமைப்பினால் இந்த போர்த் தேங்காய் ஏல விற்பனை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது போர்த் தேங்காய் போட்டிக்கு பயன்படுத்தப்படக் கூடிய வைரமான தேங்காய்கள் தெரிவு செய்யப்பட்டு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட ஏனைய அனைத்து தேங்காய்களும் ஆயிரம் ரூபாவிற்கும் அதிகமாக ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டதுடன் அதில் ஒரு தேங்காய் 4000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அந்த தேங்காயை பல போட்டியாளர்கள் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பாரம்பரிய போர்த் தேங்காய் விளையாட்டை பேணிப் பாதுகாக்கும் நோக்கில் சங்காய் இளைஞர் அமைப்பு இந்த போட்டியை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (ஏ) யாழில் நான்காயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்ட தேங்காய்!! (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.