Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆட்டத்தை தொடங்கினார் சசிகலா... போயஸ் கார்டனில் அமைச்சர்கள், நிர்வாகிகளுடன் அதிரடி ஆலோசனை!

Featured Replies

ஆட்டத்தை தொடங்கினார் சசிகலா... போயஸ் கார்டனில் அமைச்சர்கள், நிர்வாகிகளுடன் அதிரடி ஆலோசனை!

 

சென்னை போயஸ் கார்டனில் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகளுடன் சசிகலா ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் அடுத்த பொதுச்செயலர் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சென்னை: ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுகவை கையில் எடுத்திருக்கும் சசிகலா அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகளுடன் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.

ஜெயலலிதாவுக்குப் பின்னர் அதிமுகவின் எதிர்காலம் என்ன? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுகவையும் ஆட்சியையும் தமது கட்டுப்பாட்டில் வைக்க சசிகலா வெளிப்படையாக அரசியல் களத்துக்கு வர வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

நேரடி அரசியல் இல்லை?

நேரடி அரசியல் இல்லை?

ஆனால் உடனடியாக நேரடி அரசியலுக்கு வருவதை சசிகலா விரும்பவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் தமது ஆதரவாளர்களை கட்சியின் பொதுச்செயலர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளுக்கு கொண்டு வந்தாக வேண்டிய நிலையில் சசிகலா இருக்கிறார்.

 

அதிரடி ஆலோசனை

இனியும் தாமதிக்காமல் கட்சிப் பணிகளை உடனே தொடங்க வேண்டும் என்ற நிலையில் உள்ள சசிகலா நேற்று மூத்த அமைச்சர்கள் சிலர் மற்றும் அதிமுக நிர்வாகிகளை போயஸ் கார்டனுக்கு வரவழைத்து ஆலோசனை நடத்தினார். அப்போது புதிய பொதுச்செயலர் நியமனம் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

இனிதான் இருக்கு...

சோ உடலுக்கு அஞ்சலி

இதனைத் தொடர்ந்து தமக்கு ஆகாதவராக இருந்தபோதும் பத்திரிகையாளர் சோவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் சசிகலா.

இனிதான் இருக்கு...

இதேபோல் அடுத்தடுத்து கட்சிப் பணிகளில் தீவிர கவனத்தையும் ஆட்சியின் லகானை இறுகவும் பிடிப்பதில் சசிகலா முனைப்பு காட்டுவார் என்றே கூறப்படுகிறது.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/sasikala-meets-ministers-admk-functionaries-269279.html

  • தொடங்கியவர்

சசிகலா தலைமையை அதிமுகவினர் ஏற்பார்களா?

 
சசிகலா | கோப்பு படம்
சசிகலா | கோப்பு படம்
 
 

ஜெயலலிதாவுக்கு அடுத்து அதிமுகவின் தலைமை யார் என்பது பற்றிய எதிர்பார்ப்பு நாடெங்கும் ஏற்பட்டுள்ளது. அதிமுக தலைமைப் பொறுப்புக்கு ஜெயலலிதாவின் தோழி சசிகலா ஏற்றுக் கொள்ளப்படுவாரா அல்லது நிராகரிக்கப்படுவாரா என்ற விவாதமும் வீதிதோறும் நடைபெறுகிறது.

அதிமுகவில் தன்னிகரில்லா தலைவராக விளங்கிய ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அக்கட்சிக்குள் நடைபெறும் அதிகார மாற்றத்துக்கான நிகழ்வுகள் தேசிய அளவில் உன்னிப்பாக கவனிக்கப்படுகின்றன. திமுக உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் மட்டுமின்றி பாஜக, காங்கிரஸ் போன்ற தேசியக் கட்சிகளின் தலைமைகளும் அதிமுகவின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றி தீவிரமாக கண்காணித்து வருகின்றன.

தற்போதைய நாடாளுமன்ற மக்களவையில் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு அடுத்து 37 உறுப்பினர்களுடன் மூன்றாவது பெரிய கட்சியாக உள்ளது அதிமுக. மாநிலங்களவையிலும் இக்கட்சிக்கு 13 உறுப்பினர்கள் உள்ளனர். இரு அவைகளிலும் சேர்த்து மொத்தம் 50 உறுப்பினர்களைக் கொண்டுள்ள ஒரே மாநில கட்சி அதிமுக மட்டுமே.

ஜெயலலிதா எனும் தலைமைக்கு கிடைத்த மாபெரும் மக்கள் செல்வாக்குதான் அதிமுகவின் இத்தகைய பெருமைக்கு காரணம். இவ்வாறு அதிமுகவை வழிநடத்திச் சென்ற பலம் பொருந்திய தலைவரான ஜெயலலிதாவின் மறைவு, அக்கட்சிக்குள் மிகப்பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவை தலைமையேற்று வழிநடத்தக் கூடிய அடுத்த தலைவர் யார் என்பதை அறிந்து கொள்வதில் இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஜெயலலிதா தனது அரசியல் வாரிசு என்று யாரையும் கைகாட்டவில்லை. இந்நிலையில் சசிகலா தலைமையை வலியுறுத்தும் ஒரு குழு, கட்சி நடவடிக்கைகளில் சசிகலா தலையீட்டை விரும்பாத மற்றொரு குழு என அதிமுகவில் பிளவு ஏற்படும் என்ற பேச்சு உள்ளது. அவ்வாறு அதிமுகவில் பிளவு ஏற்பட்டால் எம்எல்ஏக்கள் மத்தியிலும் அந்த பிளவு பிரதிபலிக்கும். பலமான எதிர்க்கட்சியாக திகழும் திமுகவுக்கு இன்னும் சுமார் 30 எம்எல்ஏக்களின் ஆதரவு கிடைத்தால் ஆட்சி அமைக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்துவிடும். ஆகவே, அதிமுகவில் பிளவு ஏற்படுமானால், அதில் ஒரு பிரிவினரின் ஆதரவைப் பெற்று திமுக நிச்சயம் ஆட்சி அமைத்துவிடும் என்று பலரும் பேசுகின்றனர். ஜெயலலிதா இல்லாத அதிமுகவால் உடனடி பலன் பெறும் கட்சியாக திமுகதான் இருக்கும் என்று பேசப்படுகிறது.

இந்நிலையில், தேசிய அரசியலிலும் அதிமுகவின் அடுத்தகட்ட தலைவர் குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மோடி தலைமையிலான பாஜக அரசு தற்போது மிகவும் நெருக்கடியான காலகட்டத்தை எதிர்கொண்டிருக்கிறது. நாடாளுமன்ற மக்களவையில் பலம் பொருந்திய கட்சியாக பாஜக திகழ்ந்தாலும், மாநிலங்களவையில் போதிய உறுப்பினர்கள் அக்கட்சிக்கு இல்லை. அதனால் அரசின் மிக முக்கியமான முடிவுகள் வெற்றி பெற வேண்டுமானால் மாநிலங்களவையில் தோழமைக் கட்சிகளின் ஆதரவை நாட வேண்டிய நிலையில் உள்ளது. இந்தச் சூழலில் அதிமுகவின் 13 மாநிலங்களவை உறுப்பினர்களின் ஆதரவை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் பாஜகவுக்கு உள்ளது. ஆகவே, அதிமுகவின் புதிய தலைமை எவ்வாறு அமையப் போகிறது என்பதை பாஜக தலைமையும் மிக உன்னிப்பாக கவனித்து வருகிறது. இதேபோல காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற பல கட்சிகளுக்கும் அதிமுகவின் புதிய தலைமை குறித்து பல எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன.

இதற்கிடையே, சசிகலாவின் தலைமையை அதிமுக தொண்டர்கள் ஏற்றுக் கொள்வார்களா, மாட்டார்களா என்பதுதான் தற்போது பிரதான அரசியல் விவாதப் பொருளாகியுள்ளது. ஜெயலலிதாவின் அரசியல் பிரவேச காலம் தொடங்கி, எம்ஜிஆர் மறைவின்போது மிக மிக நெருக்கடியான காலத்தில் அவருக்கு உற்ற துணையாக உடனிருந்தவர் சசிகலா மட்டுமே. ஜெயலலிதாவை அருகிலேயே இருந்து கவனித்துக் கொண்டவர்.

ராஜாஜி அரங்கில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உடல் அருகே அவரது முதல் பிரதிநிதியாக சசிகலாதான் நின்று கொண்டிருந்தார். பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தேசியத் தலைவர்கள் முதல் உள்ளூர் தலைவர்கள் வரை தங்களது இரங்கலை சசிகலாவிடம்தான் தெரிவித்துச் சென்றனர். ஜெயலலிதா உடல் கிடத்தி வைக்கப்பட்டிருந்த மேடையைச் சுற்றிலும் சசிகலா குடும்பத்தினர் வீற்றிருந்தனர். மிக நீண்ட நாட்களாக அதிமுகவுடன் வெளிப்படையான தொடர்பு இல்லாமல் இருந்த சசிகலாவின் கணவர் நடராஜன், தம்பி திவாகரன் போன்றவர்களும் ஜெயலலிதாவின் உடலைச் சுற்றி நின்றதை தமிழக மக்கள் அனைவரும் தொலைக்காட்சிகளில் பார்த்தனர்.

இந்தக் காட்சிகள் யாவும் ஜெயலலிதாவுக்கு மிகவும் வேண்டப்பட்ட முதல் நபர் சசிகலாதான் என்பதை நாட்டுக்கு உணர்த்துவதாக இருந்தன. மேலும், ஜெயலலிதாவின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த கட்சி, தற்போது சசிகலாவின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விட்டதையே இது காட்டுவதாகவும், அதிமுகவின் அதிகாரமிக்க அமைப்பான பொதுக்குழு விரைவிலேயே கூடி சசிகலாவை கட்சியின் பொதுச் செயலாளராக முறைப்படி தேர்வு செய்யும் என்றும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

அதேநேரத்தில் ஜெயலலிதாவை தங்கள் உயிரினும் மேலான தலைவராக ஏற்றுக்கொண்ட அதிமுக தொண்டர்கள், சசிகலாவை தலைவராக ஏற்றுக் கொள்வார்களா என்பது சந்தேகமே என்ற கருத்தையும் பரவலாக கேட்க முடிகிறது.

இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத அரசியல் பிரமுகர் ஒருவர் கூறியதாவது:

சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை கட்சியில் இருந்து ஜெயலலிதா விலக்கி வைத்தபோது அதிமுகவின் அடிமட்டத் தொண்டர்கள் மத்தியில் பெரும் ஆரவாரமும், மகிழ்ச்சியும் ஏற்பட்டது என்பது யாவரும் அறிந்த உண்மை. அதேபோல சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் ஜெயலலிதா அடைக்கப்பட்டிருந்த காலத்தில் தமிழகத்தில் ஏற்பட்ட கொந்தளிப்பு அனைவரும் அறிந்ததே. ஜெயலலிதாவுக்கு இத்தகைய துயரம் ஏற்பட சசிகலாவின் குடும்பத்தினரே காரணம் என்ற புலம்பலை வெளிப்படையாகவே அதிமுகவினரிடம் காண முடிந்தது.

இதை ஜெயலலிதாவும் உணர்ந்துகொண்ட காரணத்தாலேயே கட்சியின் உயர் பதவிகளுக்கு சசிகலாவை முன்னிறுத்தவில்லை. அண்மைக்கால கட்சியின் செயல்பாடுகளிலும் சசிகலாவின் வெளிப்படையான தலையீடுகள் எதுவும் தெரியாமலேயே ஜெயலலிதா பார்த்துக் கொண்டார். இந்தச் சூழலில் தற்போது சசிகலாவை அதிமுகவின் தலைமைப் பொறுப்புக்கு முன்னிறுத்தினால் அதை தொண்டர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பது மிகவும் சந்தேகத்துக்குரியதுதான்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கு முற்றிலும் எதிரான வாதத்தை வேறு சில அரசியல் பார்வையாளர்கள் முன்வைக்கிறார்கள். ‘‘எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுக என்பது முழுக்க முழுக்க கருணாநிதியின் எதிர்ப்பு உணர்வுகளை ஒன்று திரட்டி கட்டப்பட்ட இயக்கம். தற்போதைய சூழலில் அதிமுக பிளவுபட்டு பலவீனமடை வதன் மூலம் திமுக பலம் பெறும் என்றால் அதை அதிமுகவின் அடிமட்டத் தொண்டன் ஒருநாளும் ஏற்றுக் கொள்ளமாட்டான்’’ என்கிறார்கள் அவர்கள்.

‘‘ஜெயலலிதா மறைவையடுத்து புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்பட்டு, அவரது தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சி மிக சுமுகமாக நடந்தேறியுள்ளன. அதுபோலவே கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு சசிகலா தேர்வு செய்யப்படுவதும் சிக்கலின்றி முடியும்’’ என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

எனினும் இந்த வாதத்தை எதிர்ப்பவர்கள், ‘‘ஜெயலலிதா வின் உடல் கிடத்தி வைக் கப்பட்டிருந்த மேடையில் நேற்று சசிகலா குடும்ப அங்கத்தினர்கள் நிறைந்திருந்ததை கண்டோம். கட்சியிலும், ஆட்சியிலும் சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம் இனி எவ்வாறு இருக்கும் என்பதற்கான சிறு அடையாளமே இந்தக் காட்சிகள். ஒருவேளை இதை அதிமுகவினர் ஏற்றுக்கொண்டாலும்கூட, தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்’’ என்கின்றனர்.

அதிமுக வரலாற்றின் எதிர்காலத்தில் என்ன நிகழப் போகிறது என்பதை காலம்தான் தீர்மானிக்கும். பொறுத்திருந்து பார்ப்போம்.

http://tamil.thehindu.com/tamilnadu/சசிகலா-தலைமையை-அதிமுகவினர்-ஏற்பார்களா/article9416593.ece?homepage=true

  • தொடங்கியவர்
 
 
 
gallerye_231958108_1664474.jpg

மறைந்த ஜெயலலிதா வகித்து வந்த, பொதுச் செயலர் பதவி யாருக்கு என்ற கேள்வி, ஆளும், அ.தி.மு.க.,வில் எழுந்துள்ளது.

 

Tamil_News_large_1664474_318_219.jpg

இப்பதவியை கைப்பற்றுபவரே, கட்சியிலும், ஆட்சியிலும் ஆதிக்கம் செலுத்த முடியும் என்பதால், சசிகலா குடும்பத்தில் கடும் போட்டி துவங்கி உள்ளது.

முதல்வர் பதவியை, தென் மாவட்டத்தை சேர்ந்தவருக்கு கொடுத்துள்ளதால், கட்சி பதவியை, மேற்கு மண்டலத்தினருக்கு வழங்க வேண்டும் என, கொங்கு பகுதி தலைவர்கள் முனைப்பு காட்டுவதால், அ.தி.மு.க.,வில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

அ.தி.மு.க.,வில், பொதுச் செயலர் பதவிக்கே, அனைத்து அதிகாரங்களும் தரப்பட்டு உள்ளன. நிர்வாகிகள் நியமனம், நீக்கம், எம்.பி., - எம்.எல்.ஏ., வேட்பாளர்கள் தேர்வு என, எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொள்பவர் என்பதால், இப்பதவியில் இருந்த ஜெயலலிதா வின் கட்டுப்பாட்டுக்குள் கட்சி அடங்கி கிடந்தது.
 

ஆட்டிப்படைக்கலாம்


இப்போது, அவரது மறைவுக்கு பின், அவர் வகித்து வந்த முதல்வர் பதவி, மூத்த அமைச்ச ரான, ஓ.பன்னீர்செல்வத்திற்கு தரப்பட்டுள்ளது. அதில் சிக்கல் இருந்தாலும், வெளியில் தெரியா மல், விரைவாக முடிவு எடுக்கப்பட்டது; அதே போல, பொதுச் செயலர் விஷயத்தில், முடிவு எடுக்க முடியாது என தெரிகிறது.

காரணம், இப்பதவியை பிடிப்பவரின் கட்டுப் பாட்டில் தான் ஒட்டுமொத்த கட்சியும் கட்டுப் பட்டு இருக்க வேண்டும். அதன் மூலம், ஆட்சி நிர்வாகத்தையும் ஆட்டி படைக்க முடியும். மேலும், இப்பதவிக்கு வரக்கூடியவருக்கு, அடுத்து வரவிருக்கும், சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட கூடிய வாய்ப்பும் கிடைக்கலாம்.

எனவே, இந்த பதவி யாருக்கு என்பது தான், இப்போது எழுந்துள்ள மிகப்பெரிய கேள்வி. அதன் தொடர்ச்சியாக, இந்த உயர் பொறுப்பு, சசிகலா குடும்பத்தினருக்கு கிடைக்குமா அல்லது அ.தி.மு.க.,வில் யாருக்காவது

கிடைக் குமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

சசிகலா குடும்பம் என்கிற போது, அதில், சசி கலாவே முன்னிலையில் இருக்கிறார். 25 ஆண்டுகளுக்கும் மேலாக, ஜெயலலிதாவின் நிழலாக இருந்து, அரசியலை உற்று கவனித்து வந்தவருக்கு, அந்த ஆசை இல்லாமல் இருக் காது என்றே நம்பப்படுகிறது. அது, ஜெயலலிதா வுக்கு இறுதி சடங்குகள் செய்த போதும், பத்திரிகையாளர், சோ ராமசாமி மறைவுக்கு, தனியாக சென்று அஞ்சலி செலுத்திய போதும், பளிச்சென வெளிப்பட்டு உள்ளது.

அவரது குடும்பத்தினரில், கணவர் நடராஜன், சகிகலா அக்கா மகன் தினகரன், தம்பி திவாகரன் ஆகியோரும்,இப்பதவிக்கு வர விரும்புகின் றனர். அவர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களிடம் ஆதரவு திரட்டும் வேலையில், தீவிரமாக இறங்கி உள்ளனர். தற்போது, ஒரு வாரம், துக்க காலமாக அறிவித்துள்ளனர்; அதன்பின், இது தொடர்பான நடவடிக்கைகள் வெளிப்படையாக துவங்கும் என தெரிகிறது.
 

தினகரன்


இது குறித்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: புதிய பொதுச் செயலரை, செயற் குழு கூடி தேர்வு செய்யும். பின், பொதுக்குழு கூடி, அங்கீகாரம் அளிக்கும். தற்போது, நடராஜன், கட்சியை வழிநடத்தி செல்லும் பொறுப்பு, தனக்கு உள்ளதாக, நேற்று, வட மாநில, 'டிவி' சேனல்களுக்கு பேட்டி அளித்துள் ளார்; அதன் மூலம், பொதுச்செயலர் பதவிக்கு போட்டியிட, அவர் விரும்புவது தெரிய வந்துள்ளது.

ஆனால், சசிகலாவோ அல்லது தினகரனோ தான், அந்த பதவிக்கு வர வேண்டும் என, அவரது குடும்பத்திலும், கட்சியில் ஒரு தரப்பி லும் கூறுகின்றனர். ஏற்கனவே, ஜெயலலிதா பேரவை செயலர், பொருளாளர் பதவிகளை வகித்தவர் தினகரன். லோக்சபா - எம்.பி.,யாக வும், ராஜ்யசபா - எம்.பி.,யாகவும் இருந்துள்ளார்.

இதற்கிடையில், கட்சி எம்.எல்.ஏ.,க்களில் மேற்கு மண்டலத்தை சேர்ந்த, கவுண்டர் இனத்த வரே அதிகம் உள்ளனர். எனவே, அவர்களில் ஒருவருக்கு, பொதுச் செயலர் பதவி தர வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
 

1989 முதல் 2016 வரை...


அ.தி.மு.க., சட்ட விதிகளின்படி, ஐந்து ஆண்டு களுக்கு ஒரு முறை, பொதுச் செயலர் பதவிக்கு தேர்தல் நடத்த வேண்டும். 1988ல்,எம்.ஜி.ஆர்.,

 

மறைவுக்கு பின், ஜானகி அணி, ஜெயலலிதா அணி என, அ.தி.மு.க., இரண்டாக உடைந்தது.

அப்போது, ஜெ., அணி சார்பில், பொதுச் செயலராக, ஜெயலலிதா தேர்வு செய்யப்பட்டார். அடுத்து, 1989ல், இரண்டு அணிகளும் இணைந்தன. மீண்டும், அ.தி.மு.க., பொதுச் செயலராக, ஜெயலலிதா தேர்வு செய்யப்பட்டார்.அதன்பின், 1993, 1998, 2003, 2008, 2014ல் நடத்தப்பட்ட தேர்தலில், பொதுச் செயலராக, ஜெயலலிதா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மறையும் வரை, அவரே அந்த பதவியில் நீடித்தார்.
 

ஜெ., விசுவாசிகள் எதிர்ப்பு!


ஜெயலலிதா தனக்கு பின், யார் கட்சியை வழிநடத்துவார் என்பதை அறிவிக்காததால், குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதாவுடன் ஒரே வீட்டில் வசித்து வந்த சசிகலா, பொதுச் செயலராக முயற்சி மேற்கொண்டுள்ளார். ஆனால், அவரை தேர்வு செய்வதற்கு, ஜெயலலிதாவின்
விசுவாசிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையில், பொதுச் செயலர் பதவியை பிடிக்க, லோக்சபா துணை சபாநாயகர், தம்பி துரை முயற்சிப்பதாகவும், தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு, பா.ஜ., ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது.

முதல்வராக, முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த, பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ள தால், பொதுச் செயலர் பதவியை, கவுண்டர் சமூகத்தை சேர்ந்த, தம்பிதுரைக்கு வழங்க வேண்டும் என, கொங்கு மண்டல, எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்துவதாக தெரிகிறது.
 

சசி குடும்பத்தில் பூசல்!


சசிகலா குடும்ப உறுப்பினர்களில், நடராஜன், திவாகரன், தினகரன் உட்பட சிலர், பொதுச் செயலராக விரும்புவதால், குடும்பத்தில் பூசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கட்சி நிர்வாகி களில் பெரும்பாலானோர், யார் பக்கம் சாய்வது எனதெரியாமல், தவித்து வருகின்றனர். எனவே, பொதுச் செயலர், போட்டியின்றி தேர்வு செய்யப் படுவாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

எனினும், அனைவரையும் சமாதானப்படுத்தி, பொதுச் செயலரை போட்டியின்றி தேர்வு செய் வதற்கான முயற்சியில், சிலர் ஈடுபட்டுள்ளனர். பொதுச் செயலரை தேர்வு செய்ய, செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடத்துவது தொடர்பான அறிவிப்பு, அடுத்த வாரம் வெளியாக வாய்ப்புள்ளது.

- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1664474
  • தொடங்கியவர்

‘அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பதவிக்கும் ஓ.பன்னீர்செல்வம்!?’  - மத்திய அரசின் வியூகம்

ops_long_11138.jpg

மிழக முதல்வராக வலம் வரத் தொடங்கிவிட்டார் ஓ.பன்னீர்செல்வம். 'ஆட்சியைப் போலவே, கட்சியின் பொதுச் செயலாளராகவும் ஓ.பி.எஸ் தேர்வு செய்யப்பட்டால் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படாது என மத்திய அரசின் கவனத்துக்கு கோரிக்கைகள் சென்றுள்ளன' என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள்.

முதல்வர் ஜெயலலிதா மறைவின் எதிரொலியாக, ஆளுநர் மாளிகையில் நள்ளிரவில் தமிழக முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார் ஓ.பன்னீர்செல்வம். "ஆட்சி அதிகாரத்தில் ஓ.பி.எஸ் தொடர்ந்தாலும், கட்சியின் கட்டுப்பாட்டை தன்னுடைய பிடிக்குள் வைத்துக் கொள்ளவே சசிகலா விரும்புகிறார். கடந்த 5-ம் தேதி மருத்துவமனைக்கு வரவழைக்கப்பட்ட ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்களிடம் வெற்றுப் பேப்பர்களில் கையெழுத்து வாங்கப்பட்டன. 'ஆட்சியின் சூழலுக்கு ஏற்ப, சிலவற்றில் மாறுதல்களைக் கொண்டு வருவதற்காக கையெழுத்து வாங்கப்பட்டது' எனவும் பேசுகின்றனர். மத்திய அரசின் துணையோடு முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார் ஓ.பி.எஸ். ஆனால், கட்சியைப் பொறுத்தவரையில் பொதுச் செயலாளர் பதவி என்பது அதிகாரம் நிரம்பியது. இதனைக் கைப்பற்றுவதற்கான கோஷ்டி பூசல்கள் தொடங்கிவிட்டன" என விவரித்தார் அ.தி.மு.க தலைமைக் கழக நிர்வாகி ஒருவர்.

அவர் நம்மிடம், "அ.தி.மு.க பொதுக் குழுவை கூட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் சசிகலா. ஆனால், இந்தக் கூட்டத்தில் கட்சியின் தலைமைப் பதவிக்கு சசிகலா தேர்வு செய்யப்படுவதில் ஜெயலலிதா ஆதரவு சீனியர்கள் பலருக்கும் விருப்பமில்லை. 'கட்சியின் பிடி நழுவிவிட்டால், ஒட்டுமொத்தக் கட்டுப்பாடும் தன்னைவிட்டுப் போய்விடும் என்பதால், பொதுச் செயலாளராக வருவதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கிறார் சசிகலா. பொதுக்குழு உறுப்பினர்களிடம் மன்னார்குடி உறவுகள் பேசி வருகின்றனர். ஆனால், இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நோக்கம் வேறாக இருக்கிறது. ' சசிகலாவை முழுமையாக எதிர்க்கவில்லை. ஆனால், கட்சிக்குள் அவர் வருவதை பிரதமர் விரும்பவில்லை' என்கின்றனர் பா.ஜ.க நிர்வாகிகள். இந்த நேரத்தில் மோடியின் ஆதரவோடு, கட்சியின் பொதுச் செயலாளராக ஓ.பி.எஸ் தேர்வு செய்யப்படுவதற்கான காரியங்களில் சிலர் இறங்கியுள்ளனர்" என்றவர் சின்ன இடைவெளிவிட்டு மேலும் தொடர்ந்தார்.

"அ.தி.மு.க பொதுச் செயலாளர் பதவிக்குத் தம்பிதுரை தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதே பிரதமரின் சாய்ஸாக இருக்கிறது. முதலமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெற்றவராக இருந்தாலும், மத்திய அரசுக்கு அணுக்கமான போக்கில் நடந்து கொள்வார்; தொண்டர்கள் மத்தியிலும் பெரிய எதிர்ப்புகள் இருக்காது என நம்புகின்றனர். மறுபக்கம் மதுசூதனன் உள்ளிட்டவர்களும் கட்சிப் பதவிக்கு வர விரும்புகிறார்கள். சீனியர்கள் ஆளுக்கு ஆள் பதவி கேட்டு நிற்பதை அறிந்துதான், ஓ.பி.எஸ் தரப்பினர் தெளிவாக காய்களை நகர்த்துகின்றனர். 'சோனியா காந்தியைப் போல் கட்சி நிர்வாகத்தை கவனித்துக் கொண்டு, ஆட்சி அதிகாரத்தில் வேறு ஒருவர் இருந்ததைப் போல் அ.தி.மு.கவில் மேற்கொள்ள முடியாது. கட்சியில் கோலோச்சுகின்றவர்களால், ஆட்சி நிர்வாகத்தில் இடையூறு ஏற்படும். நிம்மதியாகச் செயல்பட முடியாது. ஜெயலலிதாவைப் போல் இரண்டு பதவிகளும் ஒருவரிடம் இருந்தால், கட்சியின் எதிர்காலம் சிறப்பானதாக இருக்கும். ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பேர் ஆட்சி மற்றும் கட்சியில் இருந்தால், மக்கள் மத்தியில் வேறு எண்ணத்தைத் தோற்றுவிக்கும். தொண்டர்களும் சிதறுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். எனவே, பொதுச் செயலாளர் பதவிக்கும் ஓ.பி.எஸ் தேர்வு செய்யப்பட வேண்டும்' என மத்திய அரசில் உள்ளவர்களிடம் பேசி வருகின்றனர். 'பிரதமர் அழுத்தம் கொடுத்தால், சசிகலா பணிவார்' எனவும் அவர்கள் நம்புகின்றனர். 

ஆனால், இதனை மன்னார்குடி உறவுகள் ஏற்பதாக இல்லை. 'முதல்வர் பதவியை விட்டுத் தரும் முடிவிலேயே நாங்கள் இல்லை. ஆளுநர் அழுத்தம் கொடுத்ததால்தான் சம்மதித்தோம். மற்றபடி கட்சிப் பதவிக்கு சசிகலாவைத் தவிர வேறு யாரையும் யோசிப்பதாக இல்லை' எனக் கொதிக்கின்றனர். பொதுச் செயலாளர் பதவிக்கு ஓ.பி.எஸ், தம்பிதுரை, மதுசூதனன் ஆகியோர் முட்டி மோதிக் கொண்டிருக்கின்றனர். பொதுக்குழுவுக்காக காத்திருக்கிறார்கள் தொண்டர்கள்!" என்கிறார் சசிகலா ஆதரவு அ.தி.மு.க நிர்வாகி ஒருவர். 

அ.தி.மு.கவை எம்.ஜி.ஆர் தொடங்கிய காலத்தில் கருணாநிதி எதிர்ப்பு அரசியலால் கட்சியை வளர்த்தெடுத்தார். ஜெயலலிதாவின் வெற்றியும் அதைப் பின்பற்றியே தொடர்ந்தது. தற்போது சசிகலா எதிர்ப்பு மற்றும் ஆதரவு என்ற இரு புள்ளிகளில் அ.தி.மு.கவின் எதிர்காலம் மையமிட்டுள்ளது. இது கட்சியின் எதிர்காலத்திற்கு நல்லதா என்ற கேள்விகளும் எழாமல் இல்லை!  

http://www.vikatan.com/news/tamilnadu/74451-will-ops-take-over-as-aiadmk-general-secretary.art

  • தொடங்கியவர்

சசிகலா அதிமுக தலைமைப் பதவிக்கு வந்தால் என்ன ஆகும்? - என். ராம் பேட்டி

ராம்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அதிமுக தலைமைப் பதவியைக் கைப்பற்ற நினைத்தால் கட்சி பலவீனமாகிவிடும் என்று மூத்த பத்திரிகையாளர் என். ராம் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவு குறித்து மேலும் படிக்க:ஜெ மறைவு: அசாதாரண வேகத்தில் நடந்த ஆட்சி மாற்றம் எழுப்பும் கேள்விகள்

இதுகுறித்து, பிபிசி தமிழுக்கு பேட்டியளித்த அவர், இனிமேல் கூட்டுத் தலைமை மூலம்தான் கட்சியை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்று தெரிவித்துள்ளார்.

சமமான அந்தஸ்து உள்ளவர்கள் வரிசையில் ஓ.பி.எஸ். முதன்மையாக இருக்கிறார் என்ற நிலையில் அவருக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஜெயலலிதா வகித்து வந்த பொதுச் செயலர் பதவியை அடைய நினைத்தால் எதிர்ப்பு இருக்கும். அதனால், தவறான திசையில் சென்று, அதிகாரத்தைக் கைப்பற்ற நினைத்தால் கட்டாயமாக அந்தக் கட்சி பலவீனமாகிவிடும். எல்லா தரப்பினரும் சசிகலா தலைமையை ஏற்க மாட்டார்கள் என்றார் ராம்.

தனக்குத் தாய் இல்லாத குறையைப் போக்கும் வகையில், சசிகலா தன்னை ஒரு சகோதரியாகப் பார்த்துக் கொள்கிறார் என்று பலமுறை ஜெயலலிதா தெரிவித்திருக்கிறார். ஆனால், அரசியலில் எந்தப் பங்கும் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார். கட்சியில் சாதாரண உறுப்பினர். அதிலிருந்து கூட இரண்டு முறை நீக்கப்பட்டு, மன்னிப்புக் கோரிய பிறகு சசிகலாவை சேர்த்துக் கொண்டார். அதுவும், தன் குடும்பத்துடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ள மாட்டேன் என்றும் உறுதியளித்திருந்தார் என ராம் தெரிவித்தார்.

சசிகலாவுக்கு ஆதரவாக எம்.எல்.ஏ.க்கள் இருந்தாலும், அதை நம்பி அதிகாரத்தைக் கைப்பற்ற நினைத்தால், அது பேரழிவான ஓர் ஏற்பாடாகக்கூட முடியலாம் என்று என். ராம் தெரிவித்தார்.

ஜெயலலிதா மறைவு முன்பே தெரிந்துவிட்டது

ஜெயலலிதாவின் உயிர் பிரிந்துவிட்டது என்பது ஏற்கெனவே தெரிந்துவிட்டது. அவரைக் காப்பாற்றுவதற்கான முயற்சி பலனளிக்காது என்று உறுதியாகிவிட்டது. அதனால், புதிய முதலமைச்சரைத் தேர்ந்தெடுப்பதற்கான பணிகளை முன்னதாகவே தொடங்கிவிட்டார்கள் என என். ராம் கூறினார்.

இதில் ஒரு வெளிப்படைத் தன்மை இல்லாவிட்டாலும் கூட, அந்த ஏற்பாடு தெளிவான ஏற்பாடுதான் என்று ராம் குறிப்பிட்டார்.

அதே நேரத்தில், பல்வேறு முடிவுகளை எடுப்பதில், மத்திய அரசு தலையிட்டிருக்க வாய்ப்பில்லை என்றும் என். ராம் கருத்துத் தெரிவித்தார்.

http://www.bbc.com/tamil/india-38245075

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.