Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவிலுள்ள சுற்றுள்ள தளம்

Featured Replies

சுற்றுள்ள தளம் மூனார் பற்றிய தகவல் !!!

 

munaar-064.jpg


இப்ப நம்ம தமிழ் நாட்டில் ரெம்ப சூடு அதிகமாகிவிட்டது .அதனால் மக்கள் அனைவரும் விடுமுறையே கழிக்க மலை பகுதியே நோக்கி செல்கிறார் .அப்படி போகும் இடங்களில் மூனார் முக்கிய இடத்தை பிடிக்கும் .அதை பற்றிய சில தகவல்கள் . இன்னும் உங்களுக்கு எதாவது மூனாரை பற்றிய தகவல்கள் இருந்தால் கம்மேன்ட்டில் பதிவு செய்யவும் .

இந்த ஊர் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஒரு அழகிய நகரம். . நல்ல இயற்க்கை சூழ்ந்த மழை வாசஸ்தம். தேயிலை எஸ்டேட் நிறைந்த இடம். மூன்று ஆறுகள் சந்திக்கும் இடம் அதனால் மூனார் என்று அழைக்கப்படுகிறது. முத்திரப்புழா, சண்டுவரை மற்றும் குண்டலா என்ற மூன்று ஆறுகள் தான் அவை. கண்கவர்மேகங்களும், வளைந்து நெளிந்து செல்லும் பாதைகளும் கண் கொள்ளாக் காட்சி. தமிழ்நாட்டிலிரிருந்து போடிநாயக்கனூர் வழியாக செல்ல வேண்டும். இந்த நகரை அடையும் முன்னர் போடி மெட்டு என்ற அழகிய மலையுச்சியே கேரளத்துக்கும், தமிழகத்துக்கும் உள்ள எல்லையாகும்.தேயிலைத் தோட்டத் தொழிளாலர்களாக தமிழர்கள் அதிகம் வசிக்கும் கேரள நகரம்.

மூணார் கடல் மட்டத்திலேந்து 6000 அடி மேல இருக்கு, பருவநிலை எப்போதுமே ரொம்ப ரொமேண்டிக்கா இருக்கும், சுத்தியும் பச்சை மலைகளும் டீ எஸ்டேட்களும் அருவிகளும் ரொம்ப அருமையா இருக்கும் அதுனால தான் ஹனிமூன் தேசங்கள்ல ரொம்ப முக்கியமான இடத்தை பிடிக்குது மூனார் மூணார் எப்போ வேணா போகலாம் அப்படி ஒரு இடம், வழியில் பல அழகான சிறு சிறு ஓடைகளில், நீர் ஓடுவது நமது கண்களுக்கு விருந்து. கொஞ்சம் மழைய பொருட்படுத்தாத ஆளுங்களுக்கு மூணார் ஒரு சொர்க்கம் மூணார் போறவங்க நல்ல குளிர் தாங்கும் உடைகளையும், மழை நேரத்துக்கு தேவையான உடைகளையும் எடுத்து செல்வது நல்லது, டெம்பரேச்சர் 0c - 25c வரைக்கும் இருக்கும்.

மூணார் பக்கதிலே பாக்க வேண்டிய இடங்கள் அப்படின்னு பார்த்தல்

1) மேட்டுபட்டி டேம் ( மூணார்லிருந்து 13கிமி தொலைவில் இருக்கு, கடல் மட்டத்திலிருந்து சுமார் 1700 அடி உயரத்தில் அமைக்க பட்டுள்ளது இங்கே இந்தியா - சுவிஸட்சர்லாந்து கூட்டமைப்பில் ஒரு அழகிய மாட்டு பண்ணை உள்ளது, பார்வையாளர்கள் நேரம் 0900 - 1100 hrs and 1400 - 1530 hrs. தலைக்கு 5 ரூபாய் வீதம் நுழைவுக்கட்டணம் வசுலீக்கிறார்கள், மொத்தம் உள்ள 11 பண்னைகளில் 3 பண்ணைகளை மட்டுமே பார்க்க அனுமதிக்கிறார்கள்)

2) போத்தமேடு.

போத்தமேட்டிலிருந்து பார்த்தால் மூணாரின் மொத்த அழகையும் கண்டுகளிக்கலாம், இது ஒரு நல்ல வியூபாயிண்ட். இந்த இடம் டிரக்கிங் மற்றும் ஜங்கிள் வாக் போண்ற நிகழ்வுகளுக்கு ரொம்ப
ஏற்றது.

3) தேவி குளம் ( 7 கிமி தொலைவு முணாரிலிருத்து )

இங்கிருக்கும் சீதா தேவி ஏரி மிகவும் அழகானது இந்த ஏரி trout fishing. கிற்க்கு மிகவும் சிறந்தது.

4) பள்ளிவாசல் ( 8 கிமி தொலைவு முணாரிலிருத்து )

இங்குதான் கேரளாவின் முக்கியமான Hydro Electric Project


5) அட்டுக்கல் ( 9 கிமி தொலைவு முணாரிலிருத்து )

அட்டுக்கல் முணார் மட்டும் பள்ளிவாசல் இடையில் அமைந்துள்ளது. இங்கு காணப்படும் அருவிகளும் மலை பிரதேசங்களும் நம்மை பிரமிப்பில் ஆழ்வதில் ஆச்சர்யமில்லை .இன்னும் சித்திராபுரம், லாக் ஹார்ட் கேப், ராஜமலா, இரவிக்குளம் தேசிய பூங்கா ( 15 கிமி தொலைவு முணாரிலிருத்து செயல்படுகிறது.
 

பார்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கும் வயநாடு (கேரளா ) !!!

 

kerala1.jpg


கேரளாவில் வற்றாத அழகு கொட்டிக் கிடக்கும் மாவட்டம் வயநாடு. இந்த மாவட்டத்தின் முக்கால்வாசி இடம் வனப்பகுதி என்பதால் இங்கு எங்கு திரும்பினாலும் பச்சைப் பசேல்தான். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 700 முதல் 2,100 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள வயநாடு, தமிழக மற்றும் கர்நாடக மாநில சுற்றுலாத் தலங்களான ஊட்டி மற்றும் மைசூர் அருகே அமைந்துள்ளது இன்னொரு சிறப்பு. இயற்கை ஆட்சி செய்யும் வனப்பு மிக்க வயநாடுதான்

கேரளாவில் கோழிக்கோடு மற்றும் கண்ணூர் மாவட்டங்களில் இருந்து சில பகுதிகள் பிரிக்கப்பட்டு கடந்த 1980ம் ஆண்டு வயநாடு மாவட்டம் உருவாக்கப்பட்டது. கல்பெற்றா, மானந்தவாடி, சுல்தான் பத்தேரி, வைத்திரி ஆகிய இடங்கள் முக்கியமானவையாகும். இங்கு சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் நிறைய உள்ளன.

பேகர் வனவிலங்கு சரணாலயம்:

மானந்தவாடி என்ற இடத்தில் இருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ளது பேகர் வனவிலங்கு சரணாலயம். இங்கு பலவகையான அரிய விலங்குகளைப் பார்க்கலாம். இதே போல மானந்தவாடியில் இருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் உள்ள நாகர்ஹோல் வனவிலங்கு சரணாலயப் பகுதியிலும் பல வகை விலங்குகளின் நடமாட்டத்தைக் காண முடியும். அரிய வகைத் தாவரங்களும் இங்கு உண்டு. இயற்கை விரும்பிகளுக்கு இவை மறக்க முடியாத இடங்களாகும்.

செம்ப்ரா உச்சி:

கல்பெற்றாவில் இருந்து 14 கி.மீ தொலைவில் உள்ளது செம்ப்ரா உச்சி என்ற செம்ப்ராமலை முகடு. கடல் மட்டத்தில் இருந்து 2100 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த மலை உச்சிதான் வயநாட்டின் உயரமான மலை உச்சி ஆகும். மலை ஏற்றத்துக்கு சிறந்த இடம்.
கரலாட் லேக்:

கரலாட் ஏரி கல்பெற்றாவில் இருந்து 15 கி.மீ தொலைவில் உள்ளது. அழகிய சோலைகளால் அலங்கரிக்கப்பட்ட கரலாட் ஏரியில் படகுச் சவாரி நடத்தப்படுகிறது. இந்த ஏரியில் தூண்டில் போட்டு மீன்பிடித்தும் பொழுது போக்கலாம்.

சிப்பாரா அருவி:

வயநாட்டுக்கு அருவிகளும் அழகு சேர்த்துக் கொண்டிருக்கின்றன. மேப்பாடிக்கு அருகே உள்ள சிப்பாரா அருவி காண்போரை பரவசப்படுத்துவதோடு ஆச்சரியப்படுத்தவும் வைக்கிறது. 100 அடி முதல் 300 அடி உயரத்தில் இருந்து வரிசைத் தொடராக கொட்டிக் கொண்டிருக்கும் அருவிகள், கண்களைக் கொள்ளை கொள்ளும். அருவியின் தடாகத்தில் நீந்தி மகிழலாம். இதே போல மேப்பாடிக்கு அருகே வெள்ளரிமலா கிராமத்தில் அமைந்துள்ள சென்டினல் ராக் அருவியும் பிரபலமானது.

மீன்முட்டி அருவி:

சுமார் 300 மீட்டர் உயரத்தில் இருந்து கொட்டிக் கொண்டிருக்கும் மீன்முட்டி அருவி, ஊட்டி மெயின் ரோட்டில் அமைந்துள்ளது. அழகும், ஆர்ப்பரிப்பும் மீன்முட்டி அருவியின் தனிச்சிறப்பு. விண்முட்டி நிற்கும் மீன்முட்டி அருவியின் அழகு, நம்மை கண்கொட்ட விடாமல் மீண்டும் மீண்டும் ரசிக்க வைக்கும்.

குருவா தீவு:

இயற்கை விரும்பிகளின் மிதக்கும் சொர்க்கபுரியாகத் திகழும் குருவா தீவு, கபினி ஆற்றையொட்டி சுமார் 950 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அழகான வனப்பகுதி. அரியவகை பறவைகள் இங்கு வாழ்ந்து வருகின்றன. ஆபூர்வ மூலிகைகளும் உள்ளன.
முத்தங்கா வனவிலங்கு சரணாலயம்:

சுல்தான் பத்தேரியில் இருந்து 15 கி.மீ தொலைவில் முத்தங்கா வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது. யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை, மான் போன்றவை இங்கு உள்ளன. வனத்துறையினர் ஆற்றோரமாக யானைச் சவாரியையும் நடத்தி வருகின்றனர்.

இவை தவிர அம்புக்குத்தி மலையடிவாரத்தில் உள்ள முனியறா, வயநாடு ஹெரிடேஜ் மியூசியம், கொட்டமுண்டா கிளாஸ் டெம்பிள், கோரோம் மசூதி, திருநெல்லி கோவில், பழசிராஜா டாம்ப் உள்ளிட்ட பார்க்கத் தகுந்த பல இடங்கள் உள்ளன.
கேம்ப் பயர், மரவீடுகள்:

இது தவிர சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் அடர்ந்த காட்டுக்குள் கேம்ப் பயர் நடத்தப்படுகிறது. காட்டுக்குள் கொட்டும் பனிக்கு இதமாக, நெருப்பு முன் அமர்ந்து குளிர் காய்ந்தவாறு அந்தப் பகுதியின் கதை சொல்லி ஒருவர் சொல்லும் சுவாரஸ்யமான கதையைக் கேட்டுக் கொண்டே, அங்கு அமைக்கப்பட்டிருக்கும் கூடாரத்திற்குள் சென்று தூங்கி, காலையில் மேனியை இதமாகத் தொடும் காலை வெயிலுக்கு ஹாய் சொல்லி எழுவது வித்தியாசமான அனுபவம். காட்டுக்குள் காலாற நடந்து சென்று இயற்கையை ரசிக்கலாம். மரங்களின் மீது அமைக்கப்பட்டுள்ள மரவீடுகளில் தங்கி இயற்கையுடன் ஒன்றிப் போவதும் புதுமை அனுபவமே. இவை வயநாட்டின் ஸ்பெஷல்.
உணவு, தங்குமிடம், போக்குவரத்து:

வயநாட்டில் உணவைப் பொறுத்த வரை நாவிற்கு ருசியான நல்ல உணவு வகைகள் கிடைக்கின்றன. கல்பெற்றா, மானந்தவாடி, சுல்தான் பத்தேரி, வைத்திரி ஆகிய இடங்களில் தங்கும் விடுதிகள் உள்ளன. போக்குவரத்து வசதிகளை பொறுத்தவரை வயநாட்டுக்கு நல்ல ரோடு வசதிகள் உள்ளன. அருகில் உள்ள கோழிக்கோட்டில் ரயில் நிலையமும், விமான நிலையமும் உள்ளன.
 

இந்தியாவிற்கு புகழ் சேர்த்த காதல் சின்னம் தாஜ்மஹால் !!

 

taj-mahal.jpg


இந்தியாவிலுள்ள நினைவுச் சின்னங்களுள் , உலக அளவில் பலருக்குத் தெரிந்தஒன்றாகும். இது ஆக்ராவில் அமைந்துள்ளது. முழுவதும் பளிங்குக் கற்களாலான இக்கட்டிடம், ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் கட்டப்பட்டுள்ளது. இது காதலின் சின்னமாக உலகப் புகழ் பெற்றது.

அகில உலக புகழ் தாஜ்மஹால் நீண்ட நெடிய வரலாற்றுச் சரித்திரம் கொண்டது. ஆசியாவில் இற்றைக்கு 350 வருடம் முன்பு மிகப்பலமும் செழிப்புமுள்ள சாம்ராஜ்யமுடன் இதன் கதை பின்னியுள்ளது. நினைவு மண்டபத்தின் பிரமாண்ட வரலாற்று பின்னணியும் அற்புதமான கட்டிடக்கலையும் விபரிக்கமுடியாத அழகும் பின்வருமாறு (மிக சுருக்கமாக ) அமைகின்றது.

தாஜ் மஹால் முஹல சாம்ராஜ்யத்தின் பேரரசன் "ஷாஜஹான்" (Shāh Jahān) தனது காதலி , மனைவி, அரசி " மும்தாஜ் மஹால " (Mumtaz Mahal) இன் ஞாபகார்த்தமாக நிறுவிய நினைவாலயம்.இது இந்தியாவின் 28 மாநிலங்களில் ஒன்றான உத்தர் பிரதேஷ்(Uttar Pradesh) மாநிலத்தின் அக்ரா(Agra) நகரில் அமைந்துள்ளது.
தாஜ் மஹால் (Taj Mahal) 42 ஏக்கர் நிலப் பகுதியில் மிகவும் அரிதான வெள்ளை மாஃபிள்கல்களால் 1631 ம்-1653ம் ஆண்டிற்கு இடைப்பட்ட 22 வருட காலத்தில் கட்டிமுடிக்கப்பட்டது.

கட்டிடம் கட்டப்பட்ட காலப்பகுதியில் அதி நுட்பமுடைய சுமைகாவிகள் , பொறிகள் இவற்றுடன் 22,000 வேலையாட்கள் , ஆயிரத்திற்கும் மேற்பட்ட யானைகள் , பல நிபுணர்களும் இரவுபகலாக பயன்படுத்தப்பட்டார்கள் .

இந்த மாபெரும் கட்டிடத்தின் அடித்தளம் 186 அடி சதுரமான பரப்பிலும் நிலத்தில் இருந்து 22 அடி உயரத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் முதன்மையான கோபுரம் 186 அடியும் மற்றயநான்கு மூலைகளிலுமுள்ள கோபுரங்கள் 137 அடி உயரமும் உள்ளது.

முதன்மையான மேல் தூபி 10 மாடி கட்டிட உயரத்திற்கு சமமாகவும் பல சிறிய கற்களை கொண்டும் உருவாக்கியுள்ளனர். மேலும் இதன் மொத்த எடை 13,000 தொன் (2,000 யானைகள் எடை) என்பதுடன் எந்தவிதமான தூண் கட்டுமானத்திலும் தாங்கி இல்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும்

தாஜ் மஹால் வெளிப்பகுதி முழுமையாக வெள்ளை மாஃபிள் கற்களாலும் உட்பகுதி 30 வித்தியாசமான நிறங்கள் கொண்ட கற்களின் கலை வேலப்பாட்டுடனும் அமைக்கப்பட்டுள்ளது
அகில புகழ் பலவற்றிற்கு காரணமான இந்த கட்டிடம் பல ஆச்சரியமான கட்டிட நுணுக்கங்களையும் , கலைகளையும் , வடிவத்தினையும் கொண்டுள்ளது. இஸ்லாமிய மதத்தின் கட்டிட அமைப்புடன் பேரரசன் விருப்பின் படியான சமச்சீர் அமைப்பும் , வெள்ளை மாஃபிள் கட்டிடமும் , நீர்நிலையில் அதன் கறுப்பு வடிவான நிழல் தெறிப்பும் , கட்டிடத்தை சுற்றிவர நந்தவனம் என்பன நேர்த்தியாக கையாளப் பட்டுள்ளது

ஆற்றம் கரையோரமாக கட்டப்பட்டுள்ள இந்த மகாகட்டிடம் நிலத்தின் அடியிலான பாதிப்புக்களை எதிர்கொள்ளும் விதத்தில் அபாரமான கட்டிட பொறியியல் நுட்பம் பாவிக்கப் பட்டுள்ளது . அத்துடன் ஆரம்பத்தில் இருந்த திட்டவரைவு எந்த ஒரு மாற்றங்களும் செய்யப்படாது முழுமையாக நிறைவு செய்யப்பட்டது என்பது கட்டிடத்தின் முழு திட்டமிடலை நிரூபிக்கின்றது.
தாஜ்மஹால் முகப்பில் "குறான்" வரிகள் பொறிக்கப்பட்டுள்ளது. முகப்பில் உள்ள இந்த புனித வரிகள் சாதாரண கண்களுக்கு ஒரே அளவில் (அடியில் இருந்து 30 அடிமேலான உயரத்திலும்) புலனாகும் அற்புத கலை நுணுக்கம் கையாளப்பட்டுள்ளது.

ஷாஜஹானுக்கு மூன்று மனைவியர் இருந்தபோதிலும் அதில் இரண்டாவது மனைவியாகிய முதாஜ் மீது அளவற்ற காதல் கொண்டிருந்தார். ஷாஜஹான் 16 பிள்ளைகளுக்கு தந்தையாகவும் அதில் 14 பிள்ளைகளுக்கு தாயாக முதாஜ் இருந்துள்ளார். அத்துடன் மும்தாஜ் தனது 14 வது பிள்ளையை பிரசவிக்கும் வேளையில் மரணத்தை தழுவிக்கொண்டாராம். மும்தாஜ் இறக்கும் முன்பதாக தனது இறுதி ஆசையாக ஷாஜ-ஹானிடம் கேட்டுக் கொண்டதுவே இந்த "தாஜ் மஹால்"

1983ம் ஆண்டில் இருந்து ஐக்கிய நாடுகளின் கல்வி, விஞ்ஞான, கலாச்சார மையம் (UNESCO) இதனை உலக கலாச்சார சின்னமாக அறிவித்துள்ளது.

இந்த உலக அதிசையத்தினை பார்வையிட ஒவ்வொரு வருடமும் 3 மில்லியன் மேலான மக்கள் சென்று வருகின்றனர்.

மேலும் பலபல பெருமையும், புகழும், கதைகளும் சொல்லும் யமுனை நதிக்கரையோரம் அமைந்துள்ள தாஜ் மஹால் ஒரு உலக அதிசயமாகவும், காதல் சின்னமாகவும் , உலக கலாச்சார சின்னமாகவும் இருந்து வருகின்றது.
 

வைகை அணையும் தமிழ் நாட்டில் பார்க்க வேண்டிய இடம் !!!

 

IMG_0978.JPG




வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையே வைகை அணை. பல பேர் வைகை அணை மதுரையில் உள்ளது என எண்ணிக்கொண்டிருப்பீர்கள் ஆனால் வைகை அணை தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி அருகே அமைந்துள்ளது. 111அடி உயரம் உள்ள இந்த அணையில் 71அடி நீரை சேமிக்க முடியும்.

ஜனவரி மாதம் 1959 ஆம் ஆண்டு இந்த அணை திறக்கப்பட்டது. அணையை சுற்றிலும் சுற்றுலாப் பயணிகளுக்காக பூங்காக்களும், விளையாட்டுத் திடல்களும் அமைந்துள்ளன. உல்லாச ரயிலும் இங்கு உண்டு. அணையின் முன்னால் ஒரு சிறிய பாலம் உள்ளது. அதில் நின்று அணையின் அழகை ரசிக்கலாம், உங்கள் காலடியில் தண்ணீர் போவதையும் கண்டு மகிழலாம். பூங்காக்கள் முழுவதும் அழகிய பூக்களால் அலங்கரிப்பட்டுள்ளது.

ஒரு பூங்காவில் தண்ணீர் ஆறு போல் மேலிருந்து கீழ் வரை வரும்படி செயற்கை அமைப்பும் செய்யப்பட்டுள்ளது. அந்த தண்ணீர் சில மீட்டர் தூரம் வரை பாய்ந்து இறுதியில் சின்ன அணை போன்ற அமைப்பின் வழியாக வெளிவந்து குண்டோதரன் வாயில் விழுகிறது. ஆனால் இந்த தண்ணீர் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே பாய்கிறது. இந்த பூங்கா "little brindavan" என்றே அழைக்கப்படுகிறது.

இந்த அணையின் நீர் திண்டுக்கல் மற்றும் மதுரையைச் சார்ந்த விவசாயிகளுக்கு பாசனத்திற்காகவும், மதுரை மக்களுக்கு குடிநீராகவும் பயன்படுகிறது. இந்த அணையின் அருகே தமிழ்நாடு அரசின் விவசாய ஆராய்ச்சி மையமும் அமைந்துள்ளது. அணையின் மிக அருகே அமைந்துள்ள தமிழ்நாடு மின்சாரத் துறையின் மின் உற்பத்தி நிலையம் மூலம் மின்சாரமும் தயாரிக்கப்படுகிறது. (ஒரு அணையினால எவ்வளவு பயன்)

சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அணை முழுவதும் வண்ண மயமான மின்சார விளக்குகளால் ஜொலிக்கிறது.

இங்கு செல்ல உகந்த நேரம் என்று எதுவுமில்லை. எப்போதெல்லாம் அணை நிரம்புகிறதோ அதுவே சரியான நேரம். எனவே இங்கு செல்ல உகந்த நேரத்தை வருண பகவானே முடிவு செய்கிறார் நீங்களும் முடிவு செய்யலாம், பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் அணை நிரம்புகிறது என்று கூறினால் அப்போது வைகை அணைக்கு செல்லலாம்.

எப்படி செல்வது?

1)தேனி மற்றும் ஆண்டிப்பட்டியில் இருந்து பல பேருந்துகள் இயக்கப் படுகின்றன.
2)அருகில் உள்ள ரயில் நிலையம் - திண்டுக்கல் மற்றும் மதுரை
3)அருகில் உள்ள விமான நிலையம் - மதுரை

கட்டணம்:
உள்நுழைய : ரூ.4
உல்லாச ரயில் - ரூ.10

நேரம்: காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை.

குறிப்பு : உல்லாச ரயில் நிலையம், மின் விளக்கு ஜொலிப்பது, தண்ணீர் பாய்வது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே.
 

இயற்கை எழில் கொஞ்சும் கொல்லி மலை பற்றிய தகவல் !!!

 

DSC_0124.jpg


கொல்லி மலை தமிழகத்தில் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய மலைத்தொடராகும். 1000 முதல் 1300 மீ உயரம் உள்ள இம்மலைத்தொடர்ச்சி, 280 சதுர கிமீ பரப்பளவைக் கொண்டது. நாமக்கல் நகரில் இருந்து 55 கிமீ தொலைவில் கொல்லிமலை அமைந்துள்ளது. இம்மலைக் காடுகளின் நிலவிய கடுமையான சூழல் மற்றும் மலேரியா உள்ளிட்ட பல நோய் தாக்குதல் பரவலாக இருந்ததன் காரணமாக, இம்மலைப் பிரதேசத்துக்கு கொல்லி மலை என்ற பெயர் வந்தது. கொல்லி எனப்படும் வானலாவிய மரங்களை உடையதாலும், மும்மலங்களையும் முனைப்பையும் கொல்வதாலும் இம்மலை கொல்லிமலை எனப்பட்டது என்றும் சொல்லுவதுண்டு. கொல்லிமலைக்கு நாமக்கல், சேந்தமங்கலம், இராசிபுரம் மற்றும் சேலம் நகர்களில் இருந்து பேருந்து வசதி உள்ளது. மலைப்பாதையின் தூரம் 26 கிமீ. இம்மலைப்பாதையில் 70 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளதால் அடிவாரத்தில் உள்ள காரவள்ளி வரை மட்டுமே பெரிய பேருந்துகளும் பெரிய வண்டிகளும் செல்ல முடியும்.

பழந்தமிழ்க் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, புறநானூறு, ஐங்குறுநூறு முதலியவற்றில் கொல்லி மலையைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. சுமார் கிபி 200-ல், இந்தப் பகுதியை கடையெழு வள்ளல்களில் ஒருவனான வல்வில் ஓரி ஆண்டு வந்தான். ஒரே அம்பில் சிங்கம், கரடி, மான் மற்றும் காட்டுப் பன்றியைக் கொன்றதாக வல்வில் ஓரியின் திறனைப் புகழ்ந்து பல பாடல்கள் உள்ளன.

ஆகாய கங்கை அருவி
கொல்லி மலையில் அறப்பளீஸ்வரர் கோயிலுக்கு அருகில் ஆகாய கங்கை அருவி அய்யாறு ஆற்றின் மீது உள்ளது. 600 அடி உயரமுடைய இந்த நீர்வீழ்ச்சியை அடைய சுமார் 760 படிகட்டுகள் கீழிறங்கிச் செல்ல வேண்டும். படிகள் இறங்கி, ஏறுவது கடினமாக இருக்கும்

வியூ பாயிண்ட்

சீக்குப்பாறை மற்றும் சேலூர் நாடு ஆகிய இடங்களில் வியூ பாயிண்ட்கள் அமைக்கப்பட்டுள்ளன.

செம்மேட்டில் (செம்மேடு என்பது இவ்வனப்பகுதியில் மையமான ஊராகும்; காவல் நிலையம், தீயணைப்பு நிலையம், மருத்துவமனை, நூலகம், தொலைபேசி நிலையம் முதலியன இங்கே உள்ளன.) 'வல்வில் ஓரி' மன்னனின் சிலை குதிரை மீதுள்ள 10 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு 1975ஆம் ஆண்டு முதல் வருடந்தோறும் 'வல்வில் ஓரி விழா' நடத்தப்படுகிறது. வருடம் தோறும் ஆடி மாதம் 18-ஆம் நாள் வல்வில் ஓரி விழா கொண்டாடப்படுகிறது.

வாசலூர்பட்டி படகுத் துறை

தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைத்திருக்கும் வாசலூர்பட்டி படகுத் துறை பார்க்கவேண்டிய இடமாகும் .அன்னாசி பழ ஆராய்ச்சி பண்ணை ஒன்றும் இங்கு தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது.

கொல்லி மலையில் அதிகளவில் அபூர்வ மூலிகைகள் கிடைக்கின்றன. சித்த வைத்தியத்திற்கு இந்த மூலிகைகள் பெரிதும் உதவுகின்றன. இம்மலையில் சித்தர்கள் பலர் வாழ்ந்து, நோய் தீர்க்கும் மருந்துகளை கண்டறிந்து கொடுத்துள்ளனர். கொல்லை மலையில் பல சரக்குகளை விற்கும் சந்தை வாரந்தோறும் நடக்கிறது.
 

தமிழ் நாட்டில் நாம் பார்த்து ரசிக்க வேண்டிய இடம் கொழுக்குமலை!!

 

419784_136855386436710_100003367481583_162346_26607247_n.jpg


"மைனா' படம் எடுத்தது இங்கேதான்.!!

நம்ம ஊரில் இருந்து வெளிநாட்டில் பணிபுரிந்து கொண்டு இருப்பவர்கள் .நம்ம ஊருக்கு போன நல்ல ஒரு இடத்திற்கு போய் சுற்றி பார்க்க வேண்டும் என்று நினைபவர்கள் நிறைய நண்பர்கள் இருப்பார்கள் அவர்களுக்கு இந்த இடம் கண்டிப்பாக அந்த சந்தோசத்தை கொடுக்கும் .

உலகத்திலேயே மிக உயரமான இடத்தில் தேயிலை விளையும் ஒரே இடம்தான் கொழுக்குமலை. வருடம் முழுவதும் குளிந்தே இருக்கும் மலையும் இதுதான். இந்தக் கொள்ளை அழகு கொண்ட குளு குளு கொழுக்குமலை அமைந்திருப்பது தமிழகத்தில் என்பதே சிறப்புதான்!

தேனி மாவட்டம் மேற்குத் தொடர்சசி மலைக்குக் கீழ் அமைந்துள்ள பசுமையான மாவட்டம். தேனியிலிருந்து மேற்கு திசையில் பார்த்தால் உயர்ந்த மலைக் குன்றுகளை சுற்றிச் சுற்றி மேகங்கள் விளையாடியடி தெரிவதுதான் மேற்குச் தொடர்ச்சி மலை. மலைகள் எப்போதும் ஆகாயத்துடன் பேசிக்கொண்டே இருக்கும் அவ்வளவு உயரம் மலைகளும் மேகங்களும் ஆகாயம் தொட்ட அழகிய இடம்தான் கொழுக்குமலை.

தேனி- போடி கடந்து மூணாறு சாலையில் பயணித்தால் பசுமையை ரசித்தபடி வளைந்து நெளிந்து செல்லும் போடி மெட்டுசாலை. இங்கேயே குளிர் நம்மை ஒட்டிக்கொள்ளும் பரவசம், இதமாக போடி மெட்டு கடந்து பசுமைப் பயணம் தொடர வருவது பூப்பாறை.

தேயிலை மலைத்தோட்டம் நிறைந்த பூப்பாறை கடந்து பெரிய கானல், சின்னக்கானல், அதனருகே ரம்மியமான பரந்து விரிந்து கிடைக்கும் டேம்தான் யானை இரங்கல் டேம். தேக்கடிபோல் தேயிலை மலைகளின் காலடியில் வளைந்து வளைந்து செல்லும் நீண்ட நீர்த்தேக்க டேம். பார்த்து ரசித்து பரவசமடையும் ரம்மியமாக அமைந்துள்ளது. அடுத்து சூடு பார்க்காத மலை நகரம் சூரியநெல்லி, கொழுக்குமலைக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் நுழைவுவாயில்தான் சூரியநெல்லி.

இங்கிருந்து கொழுக்கு மலைக்கு ஜீப்பில்தான் செல்லமுடியும். அவ்வளவு உயரமான மலைச்சாலை.

சுற்றியுள்ள சில மலை கிராமங்களுக்கு இன்றைக்கும் குதிரை சுமையாகத்தான் உணவுப்பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன. கொழுக்குமலைக்குச் செல்வதற்கு முன் கண்ணுக்கு எட்டிய தூரம் தேயிலைத் தோட்டங்கள்தான். அந்த பசுமையோடு குளிர்ந்த மேகக் கூஞூடடம் நம்மோடு கொஞ்சி விளையாடிக் கொண்டே வரும். அதோடு சாரல் மழையும் நம்மோடு சங்கம்மாகும்.

அழகான மலையும் சாரல் குளிர்க்காற்றும் நம்மை குஷிப்படுத்தும் உணர்வே தனி சுகம். கடல் மட்டத்தில் இருந்து 8100 அடி உயரத்தில் அமைந்த பசுமையான மலைதான் கொழுக்கு மலை. இந்த மாலையில் விளையும் தேயிலை உலக அளவில் ஃபேமஸ். ஆர்கானிக் இயற்கை முறைப்படி தயாராகும் இந்த தேயிலை உற்பத்தியை சுற்றுலாப் பயணிகள் ஃபேக்டரிக்குள் சென்று பார்க்கலாம். வருடம் முழுவதும் குளிரும் தமிழகத்தின் தலைசிறந்த இடமான இங்கிருந்து போடி, குரங்கணி, தேனி மாவட்ட பள்ளத்தாக்குப் பகுதிகளையும், கொட்டகுடி, குரங்கணி, டாப் ஸ்டேஷன், சென்ட்ரல் ஸ்டேஷன் என பசுமையான பகுதிகளையும் பார்த்து ரசிக்கலாம்.

எப்படிச் செல்வது ??

தேனி - போடி - போடிமெட்டு - கொழுக்குமலை பஸ் வசதி உண்டு. ஜீப்பிலும் போகலாம். போடிமெட்டில் தங்க நல்ல உணவு விடுதிகள் உண்டு
 

புதுச்சேரியில் பார்க்க வேண்டிய இடங்கள் !!!(பாண்டிச்சேரி)

 

Pondicherry.jpg


இந்தியாவின் தெற்கு கடற்கரையில் வங்கக் கடற்கரையில் அமைந்துள்ள அழகான நகரம் புதுச்சேரி. அமைதியான கடற்கரை பகுதிகள், அழகான சாலைகள், நேர்த்தியான தெருக்கள் என புதுச்சேரியின் பெருமையை சொல்லிக்கொண்டே போகலாம். ஒரு காலத்தில் பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து வந்ததால் புதுச்சேரியில் பிரெஞ்சு சாயல் அதிகம். யூனியன் பிரதேசமாக இருந்து வரும் புதுச்சேரியின் கட்டுப்பாட்டில் காரைக்கால், ஆந்திர பகுதியில் உள்ள மாஹே மற்றும் கேரளப்பகுதியில் உள்ள ஏனாம் ஆகிய பகுதியும் இருந்து வருகிறது. புதுச்சேரியில் பார்க்கத்தகுந்த இடங்கள் நிறைய உள்ளன.

ஆரோவில்:

புதுச்சேரியில் உள்ள ஆரோவில் சர்வதேச நகரம் புகழ் பெற்றது. உலகம் ஒன்றுதான் என்பதை உணர்த்தும் வகையில் 124நாடுகளில் இருந்து மண் எடுத்து வந்து அதை ஒன்றாக்கி வைத்து உள்ளனர். ஆரோவில் சர்வதேச நகரில் சுமார் 2ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் வெளிநாட்டினர் ஆவார்கள்.

பொட்டானிக்கல் கார்டன்:

புதுச்சேரி புது பஸ்நிலையம் அருகில் உள்ள பொட்டானிக்கல் கார்டன் 1826ம் ஆண்டு அமைக்கப்பட்டதாகும். பிரெஞ்சு ஸ்டைலில் அமைக்கப்பட்டு உள்ள இந்த பொட்டானிக்கல் கார்டன் தென்னிந்தியாவின் மிகச்சிறந்த பொட்டானிக்கல் கார்டன்களில் ஒன்றாக கருதப்படுகிறது. சுமார் 1500க்கும் மேற்பட்ட தாவர வகைகள் இங்கு உள்ளன. இங்கு வார இறுதி நாட்களில் காட்சிப்படுத்தப்படும் இசைக்கு ஏற்றாற்போல ஆடும் இசை நீரூற்று குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களையும் உற்சாகப்படுத்தி வருகிறது.

அரிக்கமேடு:

பழங்காலத்தில் ரோமானியர்களின் வர்த்தக மையமாக திகழ்ந்த இடம் அரிக்க மேடு ஆகும். புதுச்சேரியில் இருந்து 4கி.மீ தொலைவில் அரியாங்குப்பம் ஆற்றின் கரையில் இது அமைந்துள்ளது. ரோமானியர்கள், சோழர்கள், பிரெஞ்சுக்காரர்கள் தொடர்பான குறிப்புகள் இங்கு காணப்படுகின்றன. வரலாற்று விரும்பிகளுக்கு பிடித்த இடம்.

இவை தவிர 300 ஆண்டு பழமையான மணக்குள விநாயகர் கோவில், கி.பி.600ம் ஆண்டுகளில் கட்டப்பட்ட வரதராஜ
பெருமாள் கோவில், பிரெஞ்சு மிஷனால் கட்டப்பட்ட சேக்ரட் ஹார்ட் ஆப் ஜீசஸ், தேவாலயம், பழமையான ஜமாய் மசூதி போன்ற ஆன்மீக தலங்களும், சில்ட்ரன்ஸ் பார்க், பிரெஞ்சுப் போர் நினைவுச் சின்னம், காந்தி மியூசியம், பிரெஞ்ச்- இந்திய கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக நிற்கும் ராஜ் நிவாஸ் அரசுக் கட்டிடம், புதுச்சேரி மியூசியம், பாரதிதாசன் நினைவு அருங்காட்சியகம் உள்ளிட்ட பல இடங்கள் புதுச்சேரியில் பார்க்கத்தகுந்தவை.

புதுச்சேரியின் அமைதியான கடற்கரை ரோட்டில் நடந்து சென்று கடல் அழகை ரசிப்பதும், அமைதியை அனுபவிப்பதும் புதிய அனுபவம்தான். வார இறுதி நாட்களில் புதுச்சேரி கடற்கரை ரோட்டில் மக்கள் தலைகளாகத்தான் தென்படும்.

உணவு, தங்குமிடம், போக்குவரத்து:

உணவு, தங்குமிடங்களைப் பொறுத்தவரை புதுச்சேரியில் ஒரு பிரச்னையே அல்ல. தரமான உணவு விடுதிகளும் தங்கும் விடுதிகளும் உள்ளன. சென்னையில் இருந்து சுமார் 150 கி.மீ தொலைவில் புதுச்சேரி உள்ளது. அருமையான சாலை வசதி இருக்கிறது. விமான நிலையத்தை பொறுத்த வரை சென்னைதான் அருகில் உள்ள விமானநிலையம் ஆகும்.
 

பாரம்பரியம் பளிச்சிடும் திருச்சூர் !!!

 

Thrissur-Trichur-2102_5.jpg


கேரள மாநிலத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ள எழில் சூழ்ந்த பகுதி திருச்சூர். கேரளத்தின் பண்பாட்டு தலைநகரம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு பாரம்பரியப் பெருமை கொண்டது. சக்தன் தம்புரான் என அழைக்கப்பட்ட ராஜா ராம வர்மாவால் செதுக்கப்பட்ட ஊரான திருச்சூரில் ரசிக்கவும் இடங்கள் உண்டு.

சேரமான் ஜும்மா மசூதி:

கொடுங்ஙல்லூர் பகுதியில் இரிஞ்ஞாலக்குடாவில் இருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் சேரமான் ஜும்மா மசூதி அமைந்துள்ளது. இது கி.பி.629ம் நிர்மாணிக்கப்பட்ட பழமையாக மசூதி ஆகும்.

சாவக்காடு பீச்:

சாவக்காடு கடற்கரை. இங்கு 100அடி உயரத்தில் கலங்கரை விளக்கம் ஒன்று உள்ளது. இதில் ஏறிச்செல்ல படிக்கட்டுகள் உள்ளன. சிரமம் பார்க்காமல் 145 படிகளில் ஏறிச்சென்று மேலிருந்து பார்த்தால்...இறங்கி வர மனமிருக்காது. சாம்பல் நிறத்தில் விரிந்து கிடக்கும் கடலையும், கூட்டம் கூட்டமாக தலைவிரித்தாடிக் கொண்டிருக்கும் தென்னைமரங்களையும் பார்த்து ரசித்துக்கொண்டே...யிருக்கலாம்.

பாலையூர் சர்ச்:

குருவாயூரில் பாலையூர் என்ற இடத்தில் அமையப்பெற்றுள்ள கத்தோலிக்க சிரியன் சர்ச் பழமை வாய்ந்த தேவாலயம் ஆகும். இது புனித தாமஸால் நிர்மாணிக்கப்பட்ட தேவாலயம். இங்கு ஆண்டு தோறும் ஜுலை மாதம் கொண்டாடப்படும் விருந்து விழாவில் பல மாநிலங்களில் இருந்தும் கிறிஸ்தவர்கள் பங்கேற்கிறார்கள்.

கொடுங்ஙல்லூர்:

அரபிக்கடலில் பெரியாறு சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ள பகுதியான கொடுங்ஙல்லூர் மிகவும் பழமைவாய்ந்த ஒரு இடம். யூதர்கள், கிரேக்கர்கள், ரோமானியர்கள், அரேபியர்கள் என பலநாட்டு வியாபாரிகள் வர்த்தகம் செய்த இடமாக கருதப்படுகிறது.

சாலக்குடி:

திருவிதாங்கூர் நெடுங்கோட்டையை திப்புசுல்தான் முற்றுகையிட்டு தளம் அமைத்ததாக கூறப்படும் இடம்தான் சாலக்குடி. திருச்சூரில் இருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. மலைகள், மரங்கள் சூழ்ந்த பச்சைப்பசேல் பகுதி. இயற்கை விரும்பிகளுக்கு மிகவும் பிடிக்கும்.

அதிரப்பள்ளி அருவி:

சாலக்குடியில் இருந்து சுமார் 50 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது அதிரப்பள்ளி அருவி. இது பெயருக்கு ஏற்றாற்போல ச்சும்மா...அதிர வைக்கும் அருவிதான். 80 அடி உயரத்தில் இருந்து பேரிரைச்சலுடன் விழும் அருவி, அந்தப் பகுதியையே அதிர வைத்துக் கொண்டிருக்கிறது. அருவி விழுவதால் புகை மண்டலமாய் எழும் சாரல், நம் மேனியை தழுவி ஜில்லிட வைக்கிறது. இந்தியாவின் நயாகரா என வர்ணிக்கப்படும் அதிரப்பள்ளி அருவியை சுட்டுத்தள்ளாத சினிமா காமிராக்கள் மிகமிகக் குறைவு. புன்னகை மன்னன் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் அதிரப்பள்ளி அருவி அழகுத் தாண்டவம் ஆடியிருக்கிறது.

இவை தவிர திருச்சூரில் உள்ள கேரள லலித் கலா அகாடமி, சாகித்ய அகாடமி, திருப்ரயார் கோவில், திருவம்பாடி மற்றும் பாறமெக்காவு கோவில்கள், பீச்சி அணைக்கட்டு மற்றும் சரணாலயம், கதகளி நடனம் கற்றுத்தரும் செருதுருத்தி கேரள கலா மண்டலம் என திருச்சூர் மற்றும் சுற்றுப்பகுதியில் பார்க்கத்தகுந்த இடங்கள் நிறைய உள்ளன.

உணவு வசதிகளைப் பொறுத்தவரை திருச்சூர் பகுதியில் நல்ல உணவு வகைகள் கிடைக்கின்றன. தரமான தங்கும் விடுதிகள் உள்ளன. சாலை வசதிகள் சிறப்பாக உள்ளது. பிற இடங்களை இணைக்கும் வகையில் ரயில் நிலையமும் திருச்சூரில் இருக்கிறது. திருச்சூருக்கு அருகே சுமார் 40 கி.மீ தொலைவில் எர்ணாகுளத்தில் விமான நிலையம் உள்ளது.

"திருச்சூருக்கு வந்தா திருச்சுப்போக (திரும்பிப் போக) மனசு வராது..."
 

தமிழ்நாட்டில் முக்கியமான சுற்றுல்லா தளங்களில் தேக்கடி !!!

 

511095248_3dfa6ca3f8%255B9%255D.jpg


தமிழக எல்லையில் கேரளப்பகுதியில் அமைந்திருக்கும் அழகான இடம் தேக்கடி. தமிழகத்தின் தேனி மாவட்டத்தின் எல்லையில் குமுளியையொட்டி கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் தேக்கடி அமைந்துள்ளது. இயற்கையுடன் கொஞ்சம் பழகிட்டு வரலாமே என நினைப்பவர்களுக்கு எழில் கொஞ்சும் தேக்கடி நல்ல சாய்ஸ்.

வனவிலங்கு சரணாலயம்:

எழில் கொஞ்சும் தேக்கடியில் வனவிலங்கு சரணாலயம் ஒன்று அமைந்துள்ளது. 673 சதுர கி.மீ பரப்பளவில் பச்சைப் பசேலென பரந்து விரிந்து கிடக்கும் இந்த சரணாலயம் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1800 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. யானைகள், பைசன்கள், மான்கள், குரங்குகள் கூட்டம் கூட்டமாய் திரிவதை பார்த்து ரசிக்கலாம். உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் புலிகளும் கண்களில் தென்படலாம். இங்கு சலசலத்துக் கொண்டிருக்கும் பெரியாற்றில் இந்த காட்டு விலங்குகள் தண்ணீர் குடிக்கும் காட்சியை கண்டு ரசிப்பது த்ரில் கலந்த புதுமையான அனுபவமாக இருக்கும். பெரியாற்றில் படகு சவாரியும் நடத்தப்படுகிறது.

யானை சவாரி:

யானை மீதேறி சவாரி செய்வது பெரியவர்களைக் கூட குழந்தைகள் போல குஷிப்படுத்தி விடும். இதை தேக்கடியில் நேரில் காணலாம். ஒய்யாரமாக நடந்து செல்லும் யானை மீது அமர்ந்து காட்டின் அழகை ரசிப்பது மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். ஒரு ட்ரிப்புக்கு அரை மணிநேரம் என்ற கணக்கில் இங்கு யானை சவாரி நடத்தப்படுகிறது.

குமுளி:

தேக்கடி காட்டுப்பகுதியை ஒட்டி அமைந்திருக்கும் நகரம் குமுளி. இந்தப்பகுதியின் ஷாப்பிங் சென்டராக திகழ்ந்து வருகிறது. காட்டில் கிடைக்கும் வாசனைப்பொருட்களை இங்கே விற்பனை செய்கிறார்கள்.

முல்லைப் பெரியாறு அணை:

தமிழக- கேரள அரசியலில் அவ்வப்போது புயலைக் கிளப்பி வரும் முல்லைப்பெரியாறு அணை இங்குதான் அமைந்துள்ளது. ஆங்கிலேயரால் 1895ம் ஆண்டில் பெரியாற்றின் இந்த அணை கட்டப்பட்டது. கேரளப்பகுதியில் இது அமைந்திருக்கிறது.

இதே போல தேக்கடியில் இருந்து 45 கி.மீ தூரத்தில் பச்சை வெல்வெட் துணியை போர்த்தியதைப் போல புற்களால் போர்த்தப்பட்டிருக்கும் புல்லுமேடு, டிரைபல் ஹெரிடேஜ் மியூசியம் போன்ற இடங்களும் பார்க்கத் தகுந்தவையே. தேக்கடியில் வனத்துறையால் நடத்தப்படும் ட்ரெக்கிங்கும் பிரபலம்.

இயற்கையுடன் சில நாட்கள் இணைந்திருக்க நினைப்பவர்கள் தேக்கடியை தேர்ந்தெடுக்கலாம்
 

நாம் ரசிக்க வேண்டிய ஆலப்புழா மிதக்கும் படகு வீடு !!!

 

House_Boat_in_Kerala.jpg


மிதக்கும் படகு வீடு :

பாரம்பரியமிக்க வீடு ஒன்று தண்ணீரில் கம்பீரமாக மிதப்பதுபோல் காட்சியளிக்கிறது, `படகுவீடு’! மெல்ல மெல்ல அது நகர்ந்து செல்லும்போது நகரத்து பரபரப்பு, பதற்றம், இரைச்சல், கவலை போன்றவைகளுக்கெல்லாம் விடைகொடுத்துவிட்டு அமைதியையும், ஆனந்தத்தையும் நோக்கி பயணிப்பதுபோல் இருக்கிறது.

இந்த வீட்டிலும் அழகான லிவிங் ரூம், டைல்ஸ் ஒட்டிய சுவருக்கு பின்னால் டைனிங் ஏரியா, பாத் அட்டாச் பெட் ரூம்கள், சமையல் அறை போன்றதெல்லாம் இருக்கின்றன. லிவிங் ரூம் தவிர இதர பகுதிகள் அனைத்தும் ஏ.சி. செய்யப்பட்டிருக்கிறது.

மெதுவாக படகு வீடு பயணிக்கிறது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தண்ணீர். ஆலப்புழா ஆர்யநாடு படகுதுறையில் இருந்து வேம்பநாடு காயலில் பயணம் செய்யும் படகு இடது புறமாகத் திரும்பினால் குமரகம்-தண்ணீர்மூக்கு பகுதி வரும். வலது பக்கத்தில் புன்னமடை- அம்பலபுழா வருகிறது.

படகு வீடு பயணத்தில் வெளிநாட்டு பயணிகள் ஆர்வமுடன் பங்குபெறுகிறார்கள். எந்த ஒரு இயற்கை காட்சியையும் தவற விட்டுவிடக்கூடாது என்ற நோக்கத்தில் அவர்கள் கேமிராவும் கையுமாக காட்சி அளிக்கிறார்கள். தங்கள் கண்களில் சிக்கும் காட்சிகளை எல்லாம் தத்ரூபமாக படம்பிடித்துதள்ளுகிறார்கள். வெளியே இருந்து பார்க்கும்போது எல்லா படகுவீடுகளும் ஒரே மாதிரி தெரிந்தாலும், ஒன்றுக்கொன்று வித்தியாசமாகத்தான் வடி வமைக்கப்பட்டுள்ளது.

எனவே தண்ணீர் பரப்பிலே பாதையை உருவாக்கியிருக்கிறார்கள். கொச்சி முதல் கொல்லம் வரை அந்த பாதை நீளுகிறது. சிவப்பு நிற பில்லர்’ போன்று அந்த பாதை தெரிகிறது. இரவில் அதில் விளக்குகள் எரிகின்றன.

இதில் பயணிக்கும்போது கரை ஓர இயற்கை காட்சிகளை கண் நிறைய அள்ளிக் கொண்டே செல்லலாம். கட்டுமரங் களில் மீன் பிடித்துக்கொண்டிருப்பார்கள். அவைகளை எல்லாம் பார்த்தபடியே, கேரளாவின் கிராமங்களையும், அங்குள்ள மக்களையும் பார்த்துக்கொண்டே செல்லலாம். இதன் அழகால் கவரப்பட்ட வெளிநாட்டினர் சிலர் ஒரு மாதம் முழுக்க படகுவீட்டிலே தங்கி காயல் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

உள்ளே அழகான சமையல் அறையில், சமையல் செய்யவும் அதிக வசதி இருக்கிறது. வேகமாக சென்றால் சமையல் வேலை பாதிக்கும் என்பதால் மிதமான வேகத்திலே வீடு மிதந்து போகிறது.

போகும் வழியில் இருக்கும் கரை ஓர பகுதிகளை பார்க்க வசதியாக படகுகளை நிறுத்துகிறார்கள். இறங்கிச் சென்று பார்த்துவிட்டு மீண்டும் படகுகளில் ஏறிக்கொள்ளலாம். மதிய உணவாக அங்கேயே தயாரித்த பலவிதமான மீன் உணவுகள், வாத்துக் கறி போன்றவைகளை சுடச்சுட பரிமாறுகிறார்கள்.

கேரளாவில் நீர்வளம் நிறைந்த மாவட்டம் ஆழப்புழா. இத்தாலி நாட்டின் வெனிஸ் நகரும் நீர்வளம் நிறைந்ததுதான். வெனிஸ் நகரில் ஒரு வீட்டில் இருந்து இன்னொரு வீட்டுக்கு செல்வதானால் கூட படகில்தான் செல்ல வேண்டும். அதுபோலத்தான் ஆழப்புழாவும். வீட்டை விட்டு ஸ்கூல், காலேஜ், ஷாப்பிங் செல்லவேண்டும் என்றால் பெரும்பாலும் படகில்தான் செல்ல வேண்டும். பால், பேப்பர் போன்ற தினசரி சமாச்சாரங்கள் வருவதும் படகுவழிதான். இதனாலேயே ஆசியாவின் வெனிஸ் என ஆழப்புழா அழைக்கப்பட்டு வருகிறது. இங்கு மேற்கே...அலைகளை ஆடையாக தவழ விட்டபடி அழகாக புரண்டு கொண்டிருக்கும் அரபிக்கடல். ஊருக்குள் வெள்ளியை உருக்கி விட்டாற்போல ஆங்காங்கே ஓடிக்கொண்டிருக்கும் ஏரிகள். நன்னீர் ஆறுகள். உப்பங்கழிகள். இதுதான் ஆழப்புழா. இங்கு நடைபெறும் பாம்புப்படகுப் போட்டி உலக அளவில் புகழ் பெற்றது. படகுச்சுற்றுலாவும் பிரபலம். அழகான ஆலப்புழா மாவட்டம்தான் இந்த வாரம் நாம் பார்க்கப்போகும் டூரிஸ்ட் ஸ்பாட்.

காயங்குளம்கிருஷ்ணாபுரம் அரண்மனை:

மார்த்தாண்ட வர்ம மன்னனால் 18ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த அரண்மனை ஆழப்புழாவில் இருந்து சுமார் 45 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது இரண்டு அடுக்குகளைக் கொண்டது. மேலும் இங்குள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள ஓவியங்கள், வெண்கலச் சிற்பங்கள் அரண்மனையின் வரலாற்றை உணர்த்துகின்றன.

குட்டநாடு:

கேரளத்தின் அமுதசுரபியாக (நெற்களஞ்சியமாக) குட்டநாடு விளங்கி வருகிறது.இங்கு எங்கு திரும்பினாலும் பச்சைப்பசேல் நெல் வயல்வெளிகள்தான். இதுதவிர வாழை, வள்ளிக்கிழங்கு, கொடிவள்ளிக்கிழங்கு என பல வகை பயிர்களை பயிரிடுகின்றனர். குட்டநாடு கடல் மட்டத்தில் இருந்து 2 மீட்டருக்கு கீழே அமைந்துள்ளது. இருந்தபோதிலும் இங்கு விவசாயம் செழிப்பாக நடப்பது ஆச்சரியம் என்கிறார்கள்.

இவை தவிர அர்த்துங்கல் புனித செபாஸ்டியான் சர்ச், ஆலப்புழா கடற்கரை, கருமாடிக்குட்டனில் உள்ள புத்தர் சிலை, குன்னத்துமலை மகாதேவன் கோவில், சவரா பவன், சம்பங்குளம் சர்ச், பதிரா மணல், வரலாற்றில் இடம் பெற்றுள்ள புன்னப்பரா கிராமம் உள்ளிட்ட பல இடங்கள் ஆலப்புழா மாவட்டத்தில் பார்க்கத்தகுந்தவை. மாவட்ட சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் படகுச் சுற்றுலாவும் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு படகுச்சுற்றுலா அலுவலகத்தில் முன்னரே பதிவு செய்தல் வேண்டும்.

பாம்புப் படகுப்போட்டி:

ஆலப்புழாவில் பலவிதமான படகுப்போட்டிகள் நடத்தப்படுகிறது என்றாலும் இவற்றில் புகழ் பெற்றது ஜுலை மாதத்தில் நடத்தப்படும் சுண்டன்வள்ளம் பாம்புப்படகு போட்டிதான். மிக நீளமான படகை ஏராளமானோர் ஒரே நேரத்தில் துடுப்புபோட்டு அசுர வேகத்தில் செலுத்துவார்கள். பரவசப்படுத்தும் இந்த சுண்டன்வள்ளம் படகுப்போட்டியை காண்பதற்காகவே ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள்.

உணவு, தங்குமிடம், போக்குவரத்து:

ஆலப்புழா மாவட்டத்தில் உணவு வகைகளைப் பொறுத்தவரை அனைத்து வகையான உணவு வகைகளும் கிடைக்கிறது. தங்குவதற்கு சுற்றுலாத்துறை அங்கீகாரம் பெற்ற விடுதிகளும் மற்றும் தனியார் தங்கும் விடுதிகளும் உள்ளன. அசைவப் பிரியர்கள் விதவிதமான மீன்களை ருசிக்கலாம். ஆழப்புழா மீன்களின் சுவை அத்தனை சீக்கிரம் நாவை விட்டு அகன்று விடாது. போக்குவரத்தைப் பொறுத்தவரை ஆழப்புழாவில் ரயில் நிலையம் உள்ளது. பிற பகுதிகளில் இருந்து எளிதாக ரயிலில் வந்து விடலாம். சுமார் 80கி.மீ தொலைவில் கொச்சினில் விமான நிலையம் அமைந்துள்ளது. கொச்சினில் இருந்து ஆழப்புழாவுக்கு நல்ல சாலை வசதியும் இருக்கிறது. சாலை மார்க்கமாக சுமார் ஒன்றரை மணிநேரத்தில் ஆழப்புழாவை தொட்டு விடலாம்.

"பரந்து கிடக்கும் தண்ணீர். பரவிக்கிடக்கும் அழகு. பார்க்கும் இடங்களிளெல்லாம் படகு. இதையெல்லாம் மிஸ் பண்ண யாருக்குத்தான் மனசு வரும் ?"
 

பரளிக்காடு அழகானதொரு சுற்றுலா தலம் !!!

 

8RB001.JPG




பரளிகாடு மிகவும் ரம்மியமான இயற்கையான eco -friendly ஸ்பாட் .பரளிக்காட்டின் மிக முக்கியமான நிகழ்வு பரிசல் சவாரி தான் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான பில்லூர் அணைப்பகுதியில் அடர்ந்த காட்டை ஒட்டி நூற்றுக்கும் மேற்பட்ட ஆதிவாசி கிராமங்கள் உள்ளன.அதில் ஒன்று தான் பரளிக்காடு . இது பில்லூர் டேமுக்கு கொஞ்சம் முன்னால் ஊட்டிமலைக்கு கொஞ்சம் பின்னால இருக்கிற சின்ன கிராமம். புத்தம்புதிய சுற்றுலா தளம். யாருக்கும் அதிகமாக தெரியாது என்பதே இதன் சிறப்பு. கூட்டம் மிக குறைவாகவே இருக்கிறது.

சுற்றுலா தலம். செல்வதற்கு ஒரு வாரம் முன்பே முன் பதிவு செய்துக் கொள்ள வேண்டும். குறைந்த பட்சம் 3 நாட்கள் முன்பு. பரிசல் பயணம் தான் பிரதானம். அங்கு மொத்தமே 10 பரிசல்கள் தான் இருக்கின்றன. ஒரு பரிசலுக்கு 4 பேர் வீதம் ஒரு நாளைக்கு 40 பேருக்கு மட்டுமே அனுமதி. மேலும் 20 பேருக்கு மேல் முன் பதிவு செய்துகொண்டால் அவர்களுக்கும் சுற்றுலா ஏற்பாடு செய்கிறார்கள். அதற்கும் அற்புதமான மாற்றுத் திட்டம் வைத்திருக்கிறார்கள். பரளிக்காடு வனச் சுற்றுலா என்பது 2 இடங்களை உள்ளடக்கியது. ஒன்று பரளிக்காடு பரிசல்சவாரி. மற்றொன்று அத்திக்கடவு ஆற்றுக் குளியல்( பழக்கம் உள்ளவர்களுக்கு ) மற்றும் அருகில் மலையேற்றம்.

கோவையிலிருந்து பரளிக்காடு 70 கிமீ தொலைவில் இருக்கிறது.
மேட்டுப்பாளையம் சாலையில் காரமடை மற்றும் பில்லூர் அணை வழியாக செல்ல வேண்டும்.

பரிசல் சவாரிக்கு பெரியவர்களுக்கு ரூ.300

15 வயதுக்குட்பட்டவர்களுக்கு ரூ.200

10 வயதுகுட்பட்ட சிறுவர்களுக்கு இலவசம்.

பரிசல் கட்டணம் மதிய உணவிற்கும் சேர்த்து தான்.
வழக்கமாக சனி ஞாயிறுகளில் மட்டுமே சுற்றுலா உண்டு. வார நாட்களில் 40 பேர் வரை முன்பதிவு செய்யும் நாட்களில் ஏற்பாடு செய்கிறார்களாம். அதற்கு நிச்சயம் ஒரு வாரம் முன்பு முன்பதிவு செய்ய வேண்டும்.

தொடர்பு கொள்ள தொலைபேசி எண் : வன அதிகாரி திரு. சீனிவாசன் : மற்றும் வன அதிகாரி திரு. திரு.ஆண்டவர் தொலைபேசி எண் : +91 9047051011

இவர்களிடம் தான் 10 நாட்களுக்கு முன்பாகவே (முடிந்தவரை சனிக்கிழமை அல்லது சண்டே-பயணம் போகும் படியான திட்டமிட்டு)-முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்

பதிவு - முதலில் வருபவர்களுக்கு முதலில் அனுமதி - அடிப்படையில்*

இரவில் தங்க புதியதாக 2 குடில்கள் அமைத்திருக்கிறார்கள். ஒரு குடிலுக்கு ரூ.2000 வாடகை. 5 பேர் வரை தங்கலாம். குளியலறை வசதியும் உண்டு. பெண்கள், குழந்தைகளுடன் தங்குவது பாதுக்காப்பாக இருக்குமா என்பது தெரியவில்லை. யானைகள், சிறுத்தைகள் நடமாட்டம் உண்டு என்கிறார்கள்.
 

தமிழ் நாட்டில் பார்க்கவேண்டிய இடம் பிச்சாவரம் !!!

 

1.jpg

 

1.jpg


பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு கடந்த நான்கு ஆண்டுகளில் வெளிநாட்டினர் உட்பட 4 லட்சத்து 61 சுற்றுலா பய ணிகள் வந்ததன் மூலம் அரசுக்கு 2 கோடியே 4 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த பிச்சா வரத்தில் வன சுற்றுலா மையம் உள்ளது. 1,358 ஹெக்டர் பரப்பில் சதுப்பு நிலக் காடுகளில் 4,444 கால்வாய் திட்டுகளும், நீர் முள்ளி, நரி, வெண்,சிறு, கருங்கண்டன் என18 க்கும் மேற்பட்ட வகையான மூலிகைத் தாவரங்கள் நிறைந்துள்ளன. இயற்கை சீற்றங்களை தடுக்கும் அர ணாக இக்காடுகள் அமைந் துள்ளது. மூலிகை தன்மை யுள்ள காற்றை சுவாசிப் பதால் பல்வேறு நோய்கள் குணமடைகிறது. காடுகளை பாதுகாக்க 1984 ஜூன் 16ல், 5 ஏக்கர் பரப்பில் 6 படகுகளுடன் சுற்றுலாத் தலமாக துவங் கப்பட்டது. 1987 மார்ச் 13ல் தமிழ்நாடு ஓட்டல், காடு களின் நடுவில் 6 காட் டேஜ், 20 கட்டில், 2 டார் மென்டரியுடன் தங்கும் விடுதி அமைக்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்ததைத் தொடர்ந்து கூடுதல் பட குகள், சிறுவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் அரிய வகை சிற்பங்கள் அமைக்கப்பட்டது.

சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இதில் சுற்றுலா பயணிகள் வெயில் கொடுமையில் இருந்து தப்பிக்க குடை பிடித்தும் ,தொப்பிகள் அணிந்து ஆனந்தமாக படகு சவாரி செய்து வருகின்றனர்.

இங்குள்ள மாங்குரோவ் காடுகள் என்னும் சதுப்பு நில காட்டில் 4 ஆயிரம் வாய்க்கால்கள் அமைந்துள்ளது. இந்த வாய்க்கால்கள் வழியாக படகு சவாரி செய்து சுற்றுலா பயணிகள் காடுகளை ரசித்து வண்ணம் உள்ளனர். காடுகளுக்கு நடுவே சிறிய வாய்க்காலில் படகில் சென்று மாங்குரோவ் மரங்களை தொட்ட படி பயணம் செய்வது மனத்திற்கு மகிழ்ச்சியை தருகிறது.

தற்போது அக்னி வெயில் கொளுத்திவருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் வெயிலில் இருந்து தப்பிக்க ஊட்டி, கொடைக்கானல் போன்ற குளிர்பிரதேசங்களுக்கு சென்று வருகின்றனர்.ஆனால் அங்கு நடுத்தர மக்கள் சென்று வர முடியாது. இவற்றிற்கான செலவு அதிகம் என்பதால் நடுத்தர மக்கள் அங்கு செல்வதில்லை.இருப்பினும் ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களுக்கு ஊட்டியாகவும், கொடைக்கானல் ஆகவும் இந்த பிச்சாவரம் சுற்றுலா மையம் அமைந்துள்ளது.

காடுகளை படகு மூலம் ரசிப்பதற்காக சுற்றுலா துறை சார்பில் 38 துடுப்பு படகுகளும், 8 மோட்டார் படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. துடுப்பு படகில் ஒரு நபருக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.40 வசூல் செய்யப்பட்டு வருகிறது.மோட்டார் படகில் 8 பேர் பயணம் செய்யலாம். இதில் 1 மணி நேரத்திற்கு 8 பேருக்கு ரூ.1200 வசூ லிக்கப் பட்டு வருகிறது. இதே படகில் 2 மணி நேரத்திற்கு சவாரி செய்ய ரூ.2 ஆயிரம் வசூலிக்கப் படுகிறது.படகு சவாரி செய்ய குறைந்த கட்டணமே வசூல் செய்வதால் இங்கு அனைத்து தரப்பு மக்களும் எளிதில் வந்து செல்கின்றனர்.

பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு சிதம்பரத்தில் இருந்து அடிக்கடி பேருந்து வசதி உள்ளது. கடலூரிலிருந்து பரங்கிப்பேட்டை வழியாகவும் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதனால் எளிதில் இந்த சுற்றுலா மையத்திற்கு செல்ல முடியும்.கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 12 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.கடந்த மே மாதம் 24 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.தற்போது மே மாதம்( 5-ந் தேதி )நேற்று வரை 3 ஆயிரம் சுற்றுலா பயணிகள் இந்த சுற்றுலா மையத்திற்கு வருகை தந்துள்ளனர்.இன்னும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று சுற்றுலாத்துறை மேலாளர் ஹரி கரன் தெரிவித்தா
 

உலகிலேயே மிக அதிக உயரத்தில் இருந்து விழ கூடிய நீர்வீழ்ச்சி

 

angel-falls-a-closer-view.jpg


ஏஞ்சல் நீர் வீழ்ச்சி (Angel Falls in Venezuela )

அனைவருக்கும் அமெரிக்கா – கனடா எல்லையில் உள்ள நயாகரா நீர்வீழ்ச்சி பற்றி தெரிந்திருக்கும், பலர் அதைத்தான் உயரமான நீர்வீழ்ச்சியாக கருதிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், உண்மையில் உயரமான நீர் வீழ்ச்சி தென் அமெரிக்க கண்டத்திலுள்ள‌ வெனிசுலா நாட்டிலுள்ள ” ஏஞ்சல்” நீர்வீழ்ச்சியாகும்!

சுமார் 979 மீற்றர் உயரமுள்ள இந்த நீர்வீச்சியில் இருந்து ஒரு துளி தரையை அடைய 14 விநாடிகள் எடுக்கின்றன.
இவ் நீர் வீழ்ச்சி ” Tepui (தெபுய்) ” எனும் செங்குத்து மலைச்சரிவினூடாக பாய்கிறது.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இவ் நீர்வீழ்ச்சி நீரைப்பாய்ச்சி வருகிறது. ஆரம்பத்தில் இவ் நீர்வீழ்ச்சியை அவ் இடத்தை அண்டிய செவ்விந்தியர்கள் ” Churun Meru ( சுருன் மேரு) ” என்று அழைத்தார்கள். அப்படியென்றால் ஏன் ஏஞ்சல் நீர்வீழ்ச்சி என்கிறார்கள் என ஜோசிக்கிறீர்களா?

1935 ஆம் ஆண்டு, அமெரிக்க விமானியான ஜிம்மி ஏஞ்சல் என்பவர் தங்கத்தை தேடி மலைகளின் மேல் பறந்து தெரிந்த போது இவ் நீர்வீழ்ச்சியைகண்டு அதை உலகின் பார்வைக்கு கொண்டுவந்தார். அதனால் ” ஏஞ்சல்” என்ற பெயருடன் அவரின் நினைவாக இந்த நீர்வீழ்ச்சி இன்றுவரை அழைக்கப்படுகிறது.இறவன் படித்ததில் எண்ணற்ற அதிசியங்கள் உலகத்தில் இருக்கிறது . அதில் இதுவும் ஒன்றாகவே கருத படுகிறது

http://dreamsway2sucess.blogspot.com.au/p/downloads.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.