Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே திருப்பதியில் சுவாமி தரிசனம்

Featured Replies

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே திருப்பதியில் சுவாமி தரிசனம்

 
திருமலைக்கு வந்த இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்த தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சதலவாடா கிருஷ்ண மூர்த்தி (இடது).
திருமலைக்கு வந்த இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்த தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சதலவாடா கிருஷ்ண மூர்த்தி (இடது).
 
 

இலங்கை பிரதமர் ரணில் விக்ரம சிங்கே தனது குடும்பத்தாருடன் நேற்று திருமலைக்கு வந்து ஏழு மலையானைத் தரிசனம் செய்தார்.

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தனது மனைவி மைத்ரி விக்ரமசிங்கே, இலங்கை அமைச்சர்கள் பழனி திகம்பரம், சுவாமிநாதன் மற்றும் உறவினர் களுடன் நேற்று இலங்கையில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தார். பின்னர் அங் கிருந்து சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் ரேணிகுண்டா விமான நிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து கார் மூலம் திருமலைக்கு சென்றார்.

அங்கு தேவஸ்தான அறங் காவலர் குழு தலைவர் சதலவாடா கிருஷ்ண மூர்த்தி மற்றும் உயர் நிர்வாக அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து அவரை வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து அங்குள்ள  கிருஷ்ணா விடுதியில் குடும் பத்துடன் தங்கி ஓய்வெடுத்தார். பின்னர் இரவு7.30 மணியளவில் தனது மனைவி மற்றும் உறவினர்களுடன் சென்று ரணில் விக்ரமசிங்கே ஏழுமலையானைத் தரிசனம் செய்தார். அப்போது தேவஸ்தானம் சார்பில் அவர் களுக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து இரவு திருமலையில் தங்கிய ரணில் விக்ரமசிங்கே இன்று காலை 5.30 மணியளவில் மீண்டும் ஏழு மலையானைத் தரிசனம் செய்தார்.

http://tamil.thehindu.com/india/இலங்கை-பிரதமர்-ரணில்-விக்ரமசிங்கே-திருப்பதியில்-சுவாமி-தரிசனம்/article9439634.ece?homepage=true

  • தொடங்கியவர்

திருப்பதி தேவஸ்தானத்திலேயே தங்கி சிறப்புப் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்ட பிரதமர்

 

 

ஒருநாள் விஜயத்தை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று திருப்பதி தேவஸ்தானத்தில் சிறப்புப் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார்.000012.jpg

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவரது மனைவி மற்றும் அமைச்சர்களான பழனி திகாம்பரம், டி.எம். சுவாமிநாதன் ஆகியோர் நேற்று நண்பகல் 1.55 மணியளவில் இந்தியா நோக்கி புறப்பட்டுச் சென்றனர். 

திருப்பதி தேவஸ்தானத்திற்கு சென்றவர்களுக்கு நேற்று திருப்பதி தேவஸ்தான சார்பாக விசேட வரவேற்புகள் செய்யப்பட்டுள்ளன. 

அதனைத் தொடர்ந்து நேற்று மாலை 7.30 மணிக்கு வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.000013.jpg

இரவு வணக்கத்திற்கு பின்னர் திருப்பதி தேவஸ்தானத்திலேயே தங்கிய பிரதமர் உள்ளிட்ட குழுவினர் இன்று அதிகாலை 5.30 மணியளவிலும் வாழிகாடுகளில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/14650

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.