Jump to content

புதிய அரசியல் சாசனத்திற்கான சரித்திர பயணம்


Recommended Posts

புதிய அரசியல் சாசனத்திற்கான சரித்திர பயணம் 31

 

ஆர் . ராம்

 

இதே­நேரம் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தி­யொ­ரு­வரை பத­வி­யி­லி­ருந்து நீக்­கு­வது குறித்து உறுப்­புரை 38இல் கூறப்­பட்­டுள்­ளது. குறிப்­பாக ஜனா­தி­பதி உளப் பல­வீனம், உடற்­ப­ல­வீனம், அர­சி­ய­ல­மைப்பை மீறிச் செயற்­பட்­டமை, தேசத் துரோகம் புரிந்த குற்றம், அதி­கார துஷ்­பி­ர­யோக குற்றம், ஒழுக்கக்கேட்டுக் குற்றம், இலஞ்சம் பெற்ற குற்றம் ஆகி­ய­வற்றை சாட்­சி­யங்­க­ளுடன் நிரூ­பிக்­கு­மி­டத்து ஜனா­தி­பதி பத­வி­யி­லி­ருந்து நீக்க முடியும்.

ஆனாலும் நிறை­வேற்று அதி­கா­ர­முள்ள ஜனா­தி­ப­தி­யொ­ரு­வரை பதவி நீக்­கு­வது என்ற விடயம் மிக நீண்ட செயற்­கட்­ட­மைப்­புக்­களைக் கொண்­ட­தாக இருக்­கின்றது.

முத­லா­வ­­தாக, பாரா­ளு­மன்­றத்தின் மொத்த உறுப்­பி­னர்­களில் மூன்­றி­லி­ரண்டு பங்­கிற்கு குறை­யாத வகையில் உறுப்­பி­னர்கள் கையொப்­ப­மிட்டு குற்­றப்­பி­ரே­ரணை ஒன்றை சபா­நா­ய­கர் ஊடாக பாரா­ளு­ம­ன்­றத்­திற்கு சமர்ப்­பித்தல் வேண்டும். அல்­லது பாரா­ளு­ம­ன்ற உறுப்­பி­னர்­களில் அரை­வா­சிக்கு மேற்­பட்டோர் கையொப்­ப­மிட்டு ஒரு பிரே­ர­ணையை சபா­நா­ய­க­ருக்கு அனுப்ப வேண்டும். அப்­பி­ரே­ர­ணையின் உண்­மைத்­தன்மை உள்­ளிட்ட விட­யங்­களை ஆராய்ந்து அது உரிய தகை­மை­களைக் கொண்­டி­ருக்­கின்­றது என சபா­நா­யகர் கரு­தினால் அதனை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பித்தல் வேண்டும்.

இரண்­டா­வ­தாக பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்ட குற்ற பிரே­ரணை பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களில் மூன்­றி­லி­ரண்டு பங்­கி­னரால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்டு ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டுதல் வேண்டும். அதா­வது குற்றப் பிரே­ரணை பாரா­ளு­மன்­றத்தில் மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மை­யி­னரால் நிறை­வேற்­றப்­ப­டுதல் அவ­சி­ய­மா­கின்­றது.

மூன்­றா­வ­தாக இவ்­வாறு நிறை­வேற்­றப்­பட்ட குற்ற பிரே­ர­ணையின் பிர­காரம் குற்­ற­வி­சா­ர­ணையை உயர் நீதி­மன்றம் விரி­வாக ஆராய்ந்து உயர் நீதி­மன்­றத்­தி­னாலும் நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ரணை அங்­கீக­ரிக்­கப்­பட வேண்டும்.

நான்­கா­வ­தாக, உயர் நீதி­மன்­றத்­தினால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட குற்றப் பிரே­ரணை தீர்­மானம் மீண்டும் பாரா­ளு­மன்­றத்­திற்கு அனுப்­பப்­பட்டு மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மை­யினால் நிறை­வேற்­றப்­ப­டுதல் வேண்டும். இவ்­வா­றான நான்கு படி­மு­றை­களின் பிர­காரம் பிரே­ர­ணை­யொன்று நிறை­வேற்­றப்­ப­டு­மா­க­வி­ருந்தால் மட்­டுமே ஜனா­தி­பதி பதவி நீக்­கப்­ப­டுவார்.

அத்­துடன் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­ப­தி­யாக பதவி வகிக்கும் ஒரு­வ­ருக்கு ஜனா­தி­பதி தனது பத­வியை வகிக்­கின்­ற­போது அவர் பதவி வழி­யாக அல்­லது தனிப்­பட்ட வழி­களில் செய்த, செய்­யாது விட்ட எக்­க­ரு­மங்கள் தொடர்­பா­கவும் நாட்டின் நீதியை நிர்வ­கிக்கும் எந்த நிறு­வ­னத்­திலும் கேள்வி எழுப்ப முடி­யாது.

நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி தொடர்­பாக நீதி­மன்றில் வழங்கக்கூடிய ஒரு சட்டம் இயற்­றப்­ப­டினும் கூட அச்­சட்டம் ஜனா­தி­பதி பதவி வகித்த காலப்­ப­கு­தியை தவிர்த்­தே இயற்­றப்­பட வேண்டும். ஜனா­தி­ப­திக்கு இருக்கும் சட்ட பாது­காப்பு உரிமை, ஜனா­தி­பதி தேர்தல் தொடர்­பான வழக்­குகள், மக்கள் தீர்வு, தேர்தல் தொடர்­பான வழக்­குகள் என்­ப­வற்­றுக்கு பொருந்­தாது. மேலும் இவ்­வி­டயம் தொடர்­பாக வழக்­கு­களை தொடரும் போது சட்­டமா அதி­பரை எதிரி­யாக குறிப்­பிட்டே வழக்­கு­களை தொடர முடியும்.

ஜனா­தி­பதி பதவி பாது­காப்பில் உள்ள இன்­னொரு விடயம் என்­ன­வென்றால், அவ­ரது சம்­ப­ளமும், ஓய்­வூதி­யமும் ஆகும். இவை பாரா­ளு­மன்­றத்­தினால் தீர்­மா­னிக்­கப்­பட்டு திரட்டு நிதியின் மீது பொறுப்­பாக்­கப்­படும். இவ்­வாறு சம்­ப­ளத்தை தீர்­மா­னிக்கும் போது அதன் தொகையை ஜனா­தி­ப­தி­யா­னவர் முன்னர் வேறு பத­வி­களை வகிக்கும் போது பெற்ற சம்­ப­ளத்­திலும் பார்க்க கூடி­ய­தாக இருத்தல் வேண்டும். நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­ப­தியின் சம்­ப­ளத்­தினை அவ­ரது பதவிக்காலத்தில் அதி­க­ரிக்க முடி­யுமே தவிர அதனை குறைக்க முடி­யாது.

உறுப்­புரை 33 இல் ஜனா­தி­ப­தியின் பணி­களும், தத்­து­வங்­களும் என்னும் தலைப்பில் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­ப­தியைப் பொறுத்­த­வ­ரையில், பாரா­ளு­மன்­றத்தை கூட்­டுதல், கலைத்தல், ஒத்­தி­வைத்தல், பாரா­ளு­மன்­றத்தில் சிம்­மா­சன உரையை நிகழ்த்தல், பாரா­ளு­மன்ற கூட்ட தொடரை ஆரம்­பித்து வைத்தல், தான் விரும்­பிய நேரம் பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­றுதல், செய்­திகள் விடுத்தல், பாரா­ளு­மன்­றத்தின் சடங்கு முறை­யான இருக்­கை­க­ளுக்கு தலைமை தாங்­குதல், அவ­சர கால வேளை­­களில் சட்­டங்­களை இயற்­றுதல், தான் விரும்­பிய சட்­ட­மூ­லங்­களை மக்கள் தீர்ப்­புக்கு விடுதல், தான் விரும்­பிய ஆனால் பாரா­ளு­மன்­றத்­தினால் நிரா­க­ரிக்­கப்­பட்ட சட்­ட­மூ­லங்­களை மக்கள் தீர்ப்­புக்கு விடுதல் போன்ற சட்­ட­வாக்­கத்­துறை அதி­கா­ரங்­களைக் கொண்­டி­ருப்­ப­தற்­கான ஏற்­பா­டுகள் காணப்­ப­டு­கின்­றன.

அதே­வேளை அரசின் தலை­வ­ரா­கவும் அர­சாங்­கத்தின் தலை­வ­ரா­கவும், ஆயுதம் தாங்­கிய முப்­ப­டை­களின் தலை­வ­ரா­கவும், அமைச்­ச­ர­வையின் தலை­வ­ரா­கவும் விளங்கும் அவர் அமைச்­ச­ர­வைக்கு தேவை­யான அமைச்­சர்­களை நிய­மித்தல், மாற்­றுதல், நீக்­குதல், அமைச்­சர்­க­ளுக்­கான அமைச்­சுக்­களை ஒதுக்­குதல், மாற்­றுதல், அமைச்­சர்­க­ளுக்­கான திணைக்­க­ளங்­களை ஒதுக்­குதல், மாற்­றுதல், அரச உயர் அதி­கா­ரி­களை நிய­மித்தல், வெளிநாட்டு தூது­வர்­களை நிய­மித்தல், இலங்­கைக்­கான வெளிநாட்டு தூது­வர்­களை ஏற்று அங்­கீ­க­ரித்தல், யுத்த பிர­க­டனம் செய்தல், சமா­தான ஒப்­பந்தம் செய்தல், நாட்டின் பொது இலட்­சி­னை­யினை வைத்­தி­ருத்தல், வெளிநாட்டு உடன்­ப­டிக்­கையை மேற்­கொள்ளல், அர­சா ங்க சேவை ஆணைக்­கு­ழு­வினை நிய­மித்தல், குறைகேள் அதி­கா­ரி­யினை நிய­மித்தல் ஆகிய நிர்­வா­கத்­துறை தொடர்­பான அதி­கா­ரங்­க­ளையும் கொண்­டி­ருப்­ப­தற்­கான ஏற்­பா­டுகள் காணப்­ப­டு­கின்­றன.

அர­சி­ய­ல­மைப்­புக்கு கொண்­டு­வ­ரப்­பட்ட 17 ஆம் திருத்­தச்­சட்­டத்­தின்­படி தேர்தல்கள் ஆணைக்­குழு, பகி­ரங்க சேவை ஆணைக்­குழு, தேசிய பொலிஸ் ஆணைக்­குழு, இலங்­கை மனித உரி­மைகள் ஆணைக்­குழு, இலஞ்சம் அல்­லது ஊழல் குற்­றச்­சாட்­டுக்­களை புல­னாய்வு செய்­வ­தற்­கான நிரந்­தர ஆணைக்­குழு, நிதி ஆணைக்­குழு, எல்லை நிர்­ணய ஆணைக்­குழு என்­ப­வற்றின் தலை­வ­ரையும் உறுப்­பி­னர்­க­ளையும் நிய­மிக்கும் போது ஜனா­தி­பதி அர­சி­ய­ல­மைப்பு பேர­வையின் சிபாரிசின் அடிப்­ப­டை­யி­லேயே நிய­மிப்­ப­தற்­கான அதி­கா­ரத்­தி­னையும் கொண்­டி­ருப்­ப­தற்­கான ஏற்­பா­டுகள் உள்­ளன.

இதே­நேரம், உயர் நீதி­மன்ற நீதி­ப­தி­களை நிய­மித்தல், மேல் முறை­யீட்டு நீதி­மன்ற, மேல் நீதி­மன்ற நீதி­ப­தி­களை நிய­மித்தல், நீதிச்­சேவை ஆணைக்­குழு உறுப்­பி­னர்­களை நிய­மித்தல், அர­சி­ய­ல­மைப்­புக்கு கொண்­டு­வ­ரப்­பட்ட 17 ஆவது திருத்­தச்­சட்­டத்தின் படி பிர­தம நீதி­ய­ர­சரும், உயர் நீதி­மன்ற நீதி­ப­தி­களும், மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்ற தலை­வரும் நீதி­ப­தி­களும், நிதிச்­சேவை ஆணைக்­கு­ழுவின் தலைவர் தவிர்ந்த உறுப்­பி­னர்கள் உள்­ளிட்­ட­வர்­களை நிய­மிக்கும் போது ஜனா­தி­பதி அதற்­கான பெயர்­களை சிபா­ரிசு செய்து அர­சி­ய­மைப்பு பேரவை அதனை அங்­கீ­க­ரித்த பின்னர் ஜனா­தி­பதி நிய­ம­னங்­களை மேற்­கொள்­வ­தற்­கான ஏற்­பா­டுகள் நீதித்­துறை சார்ந்து உயர் நீதி­மன்ற நீதி­ப­தி­க­ளி­னதும் மேன்­மு­றை­யீட்டு நீதி­ம­ன்ற தலை­வர்­க­ளி­னதும் நீதி­ப­தி­க­ளி­னதும் நிய­ம­னங்­களை மேற்­கொள்­ளும்­போது ஜனா­தி­பதி பிர­தம நீதி­ய­ர­ச­ரி­னதும், சட்­டமா அதி­ப­ரி­னதும் ஆலோ­ச­னைகளை பெற்­றுக்­கொள்­ளலாம். சட்­டமா அதிபர், கணக்­காய்­வாளர் நாயகம், பொலிஸ்மா அதிபர், ஒம்­புட்ஸ்மன், பாரா­ளு­ம­ன்ற செய­லாளர் நாய­கம் என்­போரை நிய­மிக்கும் போதும் ஜனா­தி­ப­தி­யினால் சிபா­ரிசு செய்­யப்­பட்ட பெயர்­களை அர­சி­ய­ல­மைப்பு பேரவை அங்­கீ­க­ரித்­ததன் பின்­னரே நிய­ம­னங்­களை மேற்­கொள்­வ­தற்கான ஏற்­பா­டுகள் காணப்­ப­டு­கின்­றன.

இத­னை­வி­டவும் உறுப்­புரை 34 இன் பிர­காரம், இலங்கை குடி­ய­ரசின் உள்ளே நீதி­மன்றம் எதிலும் எத்­த­வ­றுக்­கா­கவும் குற்­றத்­தீர்ப்பு அளிக்­கப்­பட்­ட­ குற்­ற­வாளி எவ­ரி­னதும் விட­யத்தில் ஜனா­தி­பதி தலை­யீடு செய்து கட்­டற்ற ஒரு மன்­னிப்பை அல்­லது சட்டமுறையான நிபந்தனைகளுக்கு அமைந்ததொரு மன்னிப்பை வழங்கலாம்.

அதேபோன்று குற்றவாளிக்கு வழங்கப் பட்ட தண்டனைத் தீர்ப்பை நிறைவேற்று வதில் காலவரையறையற்ற அல்லது பொருத்தமான காலந்தாழ்த்துதலை வழங்க முடியும். மேலும் குற்றவாளிக்கு வழங்கப் பட்ட தண்டனைக்கு பதிலாக கொடூரம் குறைந்த தண்டனையை விதிக்கலாம். அல்லது குடியரசுக்குள் செல்மதியான வகையில் விதிக்கப்பட்ட தண்டனைக்கு பதிலாக மாற்றுத்தண்டனையை வழங் குதல் அல்லது அத்தண்டனையிலிருந்து ஏதேனும் பாகத்தினை தளர்த்துதல் ஆகிய வற்றுக்கு விசேட அதிகார ஏற்பாடுகள் உள்ளன.  

மேலும் உறுப்புரை 35 இன் பிரகாரம், எவரேனும் ஆள் ஜனாதிபதி என்ற பதவியை வகிக்கின்றபோது அவரது பதவி முறையில் அல்லது தனிப்பட்ட முறையில் அவரால் செய்யப்பட்ட அல்லது செய்யாது விடப்பட்ட எவ்விடயம் தொடர்பிலும் அவருக்கு எதிராக வழக்கு நடவடிக்கைகள் எவையும் தொடுக்கப்படுதல் அல்லது நடத்தப்படுத்தல் ஆகாது எனவும் குறிப் பிடப்பட்டுள்ளது.

(தொடரும்...)

http://epaper.virakesari.lk/

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • 2 weeks later...

புதிய அரசியல் சாசனத்திற்கான சரித்திர பயணம் 35

 

1978 ஆம் ஆண்டு அப்­போ­தைய ஜனா­தி­பதி ஜே.ஆர். ஜெய­வர்­த­ன­வினால் உரு­வாக்­கப்­பட்ட இலங்கை ஜன­நா­யக சோச­லிச குடி­ய­ரசின் 2ஆவது அர­சியல் அமைப்பின் ஊடாக நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஆட்சி முறை அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­ட­போது,

ஜனா­தி­பதி ஜே. ஆர். ஜெய­வர்­தன தன்னால் உரு­வாக்­கப்­பட்ட நிறை­வேற்று அதி­கா­ரத்தின் மூலம் ஒரு ஆணை பெண்­ணா­கவும், பெண்ணை ஆணா­கவும் மாற்­று­வதை தவிர ஏனைய அனைத்­தையும் நிறை­வேற்ற முடியும் எனப் பெரு­மிதம் கொண்­டி­ருந்தார். ஜனா­தி­பதி யாருக்­குமே பொறுப்புக் கூற வேண்­டி­யி­ருக்­க­வில்லை என்று குறிப்­பிட்டார்.

இத்­த­கைய நிலையில் காணப்­பட்ட நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை­மையை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தனது காலத்தில் அனைத்து விமர்­ச­னங்­க­ளையும் கடந்து, எடுத்த எடுப்­பி­லேயே சகல அதி­கா­ரங்­க­ளு­டனும் கூடிய ஜனா­தி­ப­தி­யாக தொடர்ந்தும் ஆச­னத்தில் அம­ர­வேண்டும் என்ற இலக்கை மட்டும் முனைப்­பாக கொண்டு மூடிய அறைக்குள் திட்­ட­மிட்டு அர­சி­ய­ல­மைப்பில் 18ஆவது திருத்­தத்­தினை மேற்­கொண்­டி­ருந்தார்.

இத்­த­கைய அதி­ர­டி­யான அர­சி­ய­ல­மைப்பு ­தி­ருத்­த­த்தினால் ஜன­நா­யக விழு­மி­யங்கள் முற்­றாக மறு­த­லிக்­கப்­பட்டு அதி­கா­ரங்கள் தனி­நபர் ஒரு­வ­ரி­டத்தில் குவிக்­கப்­பட்­டன. உள்­நாட்டு யுத்­தத்­தினை நிறை­வுக்கு கொண்டு வந்த தலைவர் என்ற போர்­வைக்குள் இருந்­த­வாறு அத்­தனை செயற்­பா­டு­க­ளையும் தனக்குச் சாத­கமாக செய்­தி­ருந்த மஹிந்த ராஜ­பக் ஷ தனது இரண்­ட­ாவது பத­விக்­காலம் நிறை­வ­டை­வ­தற்கு முன்­ன­தா­கவே ஜனா­தி­பதி தேர்­த­லொன்றை நடத்­து­வ­தற்­கான அழைப்­பினை விடுத்தார்.

தனக்கு நிக­ரான வேட்­பாளர் ஒருவர் இல்­லாத நிலை­யிலும், சட்­டங்கள், அரச வளங்கள், அதி­கா­ரங்கள் என அனைத்­துமே தன்­ன­கத்தே ஒருங்கே இருக்­கின்ற நிலையில் யார் தான் தேர்­தலுக்கு முகங்­கொ­டுக்க அஞ்­சு­வார்கள். அத்­த­கைய மனோ­நி­லையில் தான் மஹிந்த ராஜ­ப­க் ஷவும் முன்­கூட்­டிய தேர்தல் அறி­விப்­பினை செய்தார். ஆனால் 2015ஆம் ஆண்டு ஜன­வரி எட்டாம் திகதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் அனைத்து திட்­டங்­களும் தலை­கீ­ழாக மாறின.

குறிப்­பாக நாடு ஜன­நா­யக விழு­மி­யங்கள் அற்ற நிலையில் பய­ணிக்க ஆரம்­பித்­த­மை யால் ஆட்சி மாற்றம் அவ­சியம் என்­பது அனை­வ­ராலும் உண­ரப்­பட்­டது. விசே­ட­மாக சிறு­பான்மை சமூ­கங்கள் இதனால் பெரும் பாதிப்­புக்கு தொடர்ச்­சி­யாக முகங்­கொ­டுத்து வந்தன. அதன் எ­தி­ரொ­லி­யாக பொது­வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கிய மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­பதி தேர்­தலில் சிறு­பான்மை மக்­களின் வாக்குப் பலத்­தினால் வெற்றி பெற்­றி­ருந்தார்.

மேலும் மைத்­தி­ரி­பால சிறி­சேன தனது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் நாட்டில் காணப்­படும் குறை­பா­டு­களை நுணுக்­க­மாக கண்­ட­றிந்த விட­யங்­களை உள்­வாங்­கி­யி­ருந்தார். குறிப்­பாக நாடு சர்­வா­தி­கா­ரத்­தினை நோக்கி பய­ணிக்­கின்­ற­மைக்கு கார­ண­மாக இருந்த ஜனா­தி­ப­தியின் நிறை­வேற்று அதி­கா­ரங்கள் நீக்­கப்­பட வேண்டும் என்­பதில் அவர் உறு­தி­யா­கவி­ருந்தார்.

வழ­மை­யா­கவே இலங்கை வர­லாற்றில் பல்­வேறு வாக்­கு­று­தி­களை வழங்கி அரி­யா­சனம் ஏறும் ஜனா­தி­ப­திகள் அதன் பின்னர் சாட்­டுப்­போக்­கு­களை கூறி காலம் ­க­டத்­து­வதும், ஏமாற்­று­வதும் சிறு­பான்மை மக்­க­ளுக்கு புதி­ய­தொரு விட­ய­மல்ல. இவ்­வா­றான நிலையில் உத்­தேச 19ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்தம் 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் திகதி அமைச்­ச­ர­வைக்கு சமர்ப்­பிக்­கப்­பட்­டது. இதன்­போது உத்­தேச 19 ஆவது திருத்த யோச­னையை திருத்­தங்­க­ளின்றி ஏற்­றுக்­கொள்­வ­தற்­கான ஏகோ­பித்த அங்­கீ­காரம் கிடைக்­கப்­பெற்­றி­ருந்­தது.

இவ்­வா­றான நிலையில் உத்­தேச 19ஆவது திருத்­தச்­சட்ட மூலம் 2015 மார்ச் மாதம் 24ஆம் திகதி பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­வினால் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டது. இதனை விவா­தத்­துக்கு எடுப்­ப­தற்கு இரண்டு தட­வைகள் நாட்கள் குறிக்­கப்­பட்­ட­போதும் அவை பிற்­போ­டப்­பட்­டனமுத­லா­வ­தாக ஏப்ரல் 9ஆம், 10ஆம் திக­தி­களில் விவாதம் நடை­பெ­று­வ­தாக இருந்­த­போதும் உத்­தேச 19 ஆவது திருத்­தத்­திற்கு ஆத­ர­வாக 5மனுக்­களும் எதி­ராக 14மனுக்­க­ளு­மாக மொத்­த­மாக 19 மனுக்கள் உயர் நீதி­மன்­றத்தில் தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்­தன. அம்­ம­னுக்கள் மீதான விசா­ர­ணைகள் நிறை­வ­டைந்து நீதி­மன்ற அறி­விப்பு பாரா­ளு­மன்­றத்­திற்கு கிடைப்­பதில் தாம­தங்கள் ஏற்­பட்­டி­ருந்­தன.

மேலும் உயர் நீதி­மன்ற நீதி­ய­ர­ச­ராக இருந்த ஸ்ரீபவன் தலை­மை­யி­லான மூவர் கொண்ட அமர்வு 19ஆவது திருத்த சட்­ட­மூலம் தேசிய ஒற்­று­மையின் சின்­ன­மாக திகழ்­கின்­றது என்று அறி­வித்­தது. அத்­துடன் சட்ட மா அதி­பரும் உத்­தேச 19 ஆவது திருத்­தச்­சட்­டத்­தினை பாரா­ளுமன்ற மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மை­யுடன் நிறை­வேற்ற முடியும் என்றும் அறி­வித்தார். இத­னை­ய­டுத்து பாரா­ளு­மன்­றத்தில் குறித்த சட்­ட­மூ­லத்தின் மீதான விவா­தத்­தினை 20, 21ஆம் திக­தி­களில் நடத்­து­வ­தாக அறி­விக்­கப்­பட்­ட­போதும் அர­சி­யல்­கட்­சி­க­ளுக்குள் ஏற்­பட்ட குழப்­பத்தின் கார­ண­மாக மீண்டும் 27ஆம் திக­திக்கு விவாதம் ஒத்­தி­வைக்கப் பட்­டது.

ஈற்றில் 2015ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் திகதி உத்­தேச 19ஆவது திருத்­தச்­சட்­டத்தின் மீதான விவா­தத்­தினை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆரம்­பித்­து­வைத்தார். இந்த விவாதம் 28 ஆம் திகதி இரவு 7 மணி­வரை இடம்­பெற்­றது.

19ஆவது திருத்­தச்­சட்­ட­மூ­லத்­துக்கு எதிர்க்­கட்சி மற்றும் ஆளும் கட்சி சார் பில் 174 திருத்­தங்கள் முன்­வைக்­கப்­பட்­டன. எதிர்க்­கட்சி சார்பில் 111 திருத்­தங்­களும், ஆளும் கட்சி சார்பில் 63 திருத்­தங்­களும் முன்­வைக்­கப்­பட்­டன. ரஜீவ விஜேசிங்க 55 திருத்­தங்­க­ளையும், டபிள்யூ. டி.ஜே.சென­வி­ரட்ன 29 திருத்­தங்­களை யும், வாசு­தேவ நாண­ய­க்கார 8 திருத் தங்­க­ளையும், சஜின்வாஸ் குண­வர்த்­தன 7 திருத்­தங்­க­ளையும், டக்ளஸ் தேவா­னந்தா 8 திருத்­தங்­க­ளையும், சிறி­யான விஜ­ய­விக்­ரம 2 திருத்­தங்­க­ளையும், கீதாஞ்­சன குணவர்த்­தன மற்றும் தினேஷ் குண­வர்த்­தன ஆகியோர் தலா ஒவ்­வொரு திருத்தங் களையும் முன்­வைத்­தி­ருந்­தனர். இவற்றில் பெரும்­பா­லான திருத்­தங்­க­ளுக்கு இரு தரப்பும் இணக்கம் தெரி­வித்­தன.

ஆனால் அர­சி­ய­ல­மைப்பு சபைக்கு பாரா­ளு­மன்­றத்­துக்கு வெளியி­லி­ருந்து சுயா­தீ­ன­மான நபர்­களை நிய­மிப்­பது மற்றும் பிர­த­மரின் ஆலோ­ச­னை­யுடன் அமைச்­ச­ர­வையை நிய­மிப்­பது ஆகிய இரண்டு சரத்­துக்கள் தொடர்பில் முன்­வைக்­கப்­பட்ட திருத்­தங்­களை ஏற்றுக் கொள்­வதில் இரு தரப்­புக்­கு­மி­டையில் இணக்­கப்­பாடு ஏற்­ப­ட­வில்லை.

19 ஆவது திருத்­தச்­சட்­டத்தின் ஊடாக உரு­வாக்­கப்­படும் அர­சி­ய­ல­மைப்பு சபைக்கு பத்து உறுப்­பி­னர்கள் நிய மிக்­கப்­ப­டுவர். இதில் பிர­தமர், சபா­நாய கர், எதிர்க்­கட்சித் தலைவர் மற்றும் ஜனா­தி­ப­தியின் பிர­தி­நிதி ஆகியோர் அடங்­குவ தோடு, பிர­த­மரும், எதிர்க்­கட்­சித்­தலை வரும் இணைந்து ஏனைய கட்­சிகள் மற்றும் சுயா­தீனக் குழுக்­களின் இணக்­கப்­பாட்­டுடன் சுயா­தீன நபர்கள் ஐவரை நிய­மிப்­ப­தற்கு ஆரம்­பத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்ட அர­சி­ய­ல­மைப்புத் திருத்­தத்தில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரத்தை பாரா­ளு­மன்­றத்­துக்கு வழங்­காமல் வெளி நபர்­க­ளுக்கு வழங்­கு­வ­தற்கு எதிர்ப்புத் தெரி­வித்த எதிர்த்­த­ரப்­பினர், இதற்கு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை நிய­மிக்க வேண்டும் என வலி­யு­றுத்­தினர். ஆனால், சுயா­தீ­ன­மான வெளி ந­பர்­களே இதற்கு நிய­மிக்­கப்­பட வேண்டும் எனவும், அர­சி­யல்­வா­தி­களை நிய­மிப்­ப­தா­னது மீண்டும் அதனை அர­சி­யல்­ம­ய­மாக்கி விடும் என அரச தரப்பில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டது.

பின்னர் பேச்­சு­வார்த்­தை­க­ளை­ய­டுத்து அர­சி­ய­ல­மைப்பு சபைக்கு நிய­மிக்கும் 10 பேரில் ஏழு பேர் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளா­கவும், மூவர் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அற்ற சுயா­தீ­ன­மான நபர்­க­ளா­கவும் அமையும் வகையில் திருத்தம் செய்ய உடன்­பாடு எட்­டப்­பட்­டது.

ஈற்றில் சுயாதீன எம்.பி. அஜித் குமார வாக்களிப்பை புறக்கணித்திருந்த அதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எம்.பி.க்களான பிரேம்லால் ஜயசேகர, ஜனக பண்டார, ஜகத் பாலசூரிய, எல்லாவல மேதானந்த தேரர், கெஹலிய ரம்புக்வெல்ல, பஷில் ராஜபக் ஷ ஆகிய 6 பேரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியான அப்பாத்துரை விநாயகமூர்த்தி எம்.பி. உட்பட மொத்தம் 7 பேர் பாராளுமன்றத்துக்கு சமுகமளித் திருக்காத நிலையில் உத்தேச 19ஆவது திருத்தச்சட்டத்தின் இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவாக 215 வாக்குகள் கிடைத்ததோடு எதிராக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர மாத்திரம் வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இத்தகைய நிலையில் 19ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக குறைக்கப்பட்ட நிறைவேற்று அதிகாரங்கள் மற்றும் ஜனநாயகத்தினை வலுப்படுத்தும் ஏற்பாடுகள் எவை என்பதை அடுத்த பகுதியில் பார்ப்போம்.

                                                                                                           தொடரும்...

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-12-09#page-7

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

புதிய அரசியல் சாசனத்திற்கான சரித்திர பயணம்...36

 

19ஆவது திருத்­தச்­சட்டம் பெரும்­பான்மை வாக்­கு­களால் நிறை­வேற்­றப்­பட்­டதன் பால் இலங்­கையில் மீண்டும் ஜன­நா­யகம் துளிர்க்­கின்­றது என்று வாஞ்­சை­யுடன் ஆளும், எதிர், சிறு­பான்மை தரப்­புக்கள் பகி­ரங்­க­மா­கவே கூறி­னார்கள். உண்­மையில் 19ஆவது திருத்தத்தில் எவ்­வா­றான விட­யங்கள் உள்­ளீர்க்­கப்­பட்­டி­ருக்­கின்­றன என்­பதை பார்ப்­போ­மானால், இலங்­கையில் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி ஆட்சி முறை அகற்­றப்­பட்டு, ஜனா­தி­பதி மற்றும் பாரா­ளு­மன்­றமும் சேர்ந்து நிர்­வ­கிக்கும் ஆட்சி முறை­யாக மாற்­றப்­ப­டுதல், இலங்­கையில் அனைத்து தேர்­த­ல்களிலும் விகி­தா­சார முறை நீக்­கப்­பட்டு, ஒவ்­வொரு தொகு­தி­யிலும் யார் அதிக வாக்­கு­களைப் பெறு­கி­றாரோ அவரே வெற்­றி­பெற்­றவர் என்ற முறை கடைப்­பி­டிக்­கப்­ப­டுதல், ஒருவர் அதி­க­பட்­ச­மாக இரண்டு ஆட்­சிக்­கா­லங்களுக்கு மட்­டுமே ஜனா­தி­ப­தி­யாக பதவி வகிக்க முடியும் என்ற நிபந்­தனை மீண்டும் கொண்­டு­வ­ரப்­ப­டுதல், ஜனா­தி­ப­தியின் ஓர் ஆட்­சிக்­காலம் என்­பது ஆறு ஆண்­டு­களில் இருந்து ஐந்து ஆண்­டு­க­ளாக குறைக்­கப்­படும், பாரா­ளு­மன்றம் தெரி­வு­செய்­யப்­பட்டு ஓராண்டு கடந்­து­விட்ட பின்னர், அதனை கலைக்கும் அதி­காரம் ஜனா­தி­ப­திக்கு இருக்­காமை, ஒரு பாரா­ளு­மன்றம் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டு நான்கு ஆண்­டுகள் கடந்­து­விட்ட பின்­னர்தான் அதனைக் கலைக்கும் உரிமை மறு­ப­டியும் ஜனா­தி­ப­திக்கு கிடைத்தல்,

ஒருவர் ஜனா­தி­ப­தி­யாக இருக்­கும்­போது அவர் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக செய்யும் காரி­யங்­களை எதிர்த்து நீதி­மன்­றத்தில் வழக்கு தொடுப்­ப­தற்கு இருந்­து­வ­ரு­கின்ற சட்டத் தடை அகற்­றப்­ப­டுதல், இலங்­கையில் அதி­க­பட்­ச­மாக 30 பேரே அமைச்­ச­ரவை அந்­தஸ்­து­டைய அமைச்­சர்­க­ளா­கவும், அதி­க­பட்­ச­மாக 40 பேரே துணை அமைச்­சர்­க­ளா­கவும் என ஆக மொத்தம் 70 பேரே அமைச்­சர்­க­ளாக இருக்க முடியும் என்ற வரம்பு ஏற்­ப­டுத்­தப்­ப­டுதல், 17ஆம் அர­சியல் சட்டத் திருத்தம் மீண்டும் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டுதல், நாட்டின் ஆணைக்­கு­ழுக்கள் ஜனா­தி­ப­தியால் அல்­லாமல் சுயா­தீ­ன­மான முறையில் மீண்டும் தெரி­வு­செய்­யப்­ப­டுதல் ஆனாலும், அமைச்­ச­ர­வையின் தலை­வ­ரா­கவும், முப்­ப­டை­களின் தலைமைத் தள­ப­தி­யா­கவும் தொடர்ந்தும் ஜனா­தி­ப­தியே விளங்­குவார், பிர­த­ம­ரையும் அமைச்­சர்­க­ளையும் நிய­மிக்கும் அதி­காரம் தொடர்ந்து ஜனா­தி­ப­தி­க்கே இருத்தல் ஆகிய பிர­தான பத்து விட­யங்­க­ளையே இச்­சட்டத்திருத்தம் கொண்­ட­மைந்­தி­ருந்­ தது.

இந்த விட­யங்­களை உள்­ளீர்ப்­ப­தற்­காக முயற்­சிகள் எடுக்­கப்­பட்­ட­போதும் தேர்தல் திருத்­த­மொன்றை செய்­வதில் கட்­சி­க­ளுக்­கி­டையில் காணப்­பட்ட இழு­பறி நிலை­மை­களால் அந்த முயற்சி கைவி­டப்­பட்­டது. அத்­துடன் மக்­க­ளிடம் இறைமை இருப்­பது அர­சி­ய­ல­மைப்பின் மிக அடிப்­ப­டை­யான கட்­ட­மைப்பைச் சேர்ந்த அர­சி­ய­ல­மைப்புப் பிரி­வு­களில் ஒன்­றாகும். மக்­களின் நிறை­வேற்­றுத்­துறை அதி­கா­ரங்கள் ஜனா­தி­ப­தி­யிடம் வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. அதன் பிர­காரம் நிறை­வேற்­றுத்­துறை ஜனா­தி­பதி முறை­மையும் அர­சி­ய­ல­மைப்பின் மிக அடிப்­ப­டை­யான கட்­ட­மைப்பைச் சேர்ந்த அர­சி­ய­ல­மைப்புப் பிரிவு என உயர் நீதி­மன்றம் முன்னர் ஒரு சந்­தர்ப்­பத்தில் பொருள்­கோடல் செய்­துள்­ளது. இத­னையும் கவ­னத்தில் கொண்டும், சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பிற்குப் போக அவ­சி­ய­மில்­லாத அர­சியல் சீர்­தி­ருத்­தங்­களைத் தான் செய்வேன் என்று ஜனா­தி­பதி சிறி­சேன அளித்­தி­ருந்த உறுதிமொழி­க­ளையும் அடிப்­ப­டை­யாகக் கொண்டே திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன.

அதன் பிர­காரம், 30 (1) இலங்கை குடி­ய­ரசில் ஜனா­தி­பதி ஒருவர் இருத்தல் வேண்டும். அவரே அரசின் தலை­வ­ரா­கவும், ஆட்­சித்­து­றை­யி­னதும், அர­சாங்­கத்­தி­னதும் தலை­வ­ரா­கவும், ஆயுதம் தாங்­கிய படை­களின் படைத் தள­ப­தி­யா­கவும் இருத்தல் வேண்டும். (30 உறுப்­புரை நீக்­கப்­பட்டு அதற்கு பதி­லாக பிர­தி­யி­டப்­பட்டு)

30 (2) குடி­ய­ரசு ஜனா­தி­பதி மக்­களால் தேர்ந்­தெ­டுக்­கப்­ப­டுதல் வேண்­டு­மென்­ப­துடன் ஐந்து ஆண்­டுகள் கொண்­ட­தொரு காலப்­ப­கு­திக்குத் பதவி வகித்­தலும் வேண்டும்.

ஜனா­தி­பதி பத­விக்கு மக்­களால் இரண்டு முறை தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டுள்ள ஆள் எவரும் அதன் பின்னர் எத்­த­கைய பத­விக்கு மக்­களால் தேர்ந்­தெ­டுக்க தகை­மை­யு­டை­ய­வ­ராகார்.(31 உறுப்­புரை திருத்­தப்­பட்­டுள்­ளது)

33 (அ) உட்­பு­குத்தல். ஜனா­தி­பதி அர­சி­ய­ல­மைப்பின் கீழும் மற்றும் பொது­மக்கள் பாது­காப்பு பற்­றிய அப்­போ­துள்ள சட்டம் உட்­பட எழுத்­தி­லான ஏதேனும் சட்­டத்தின் கீழும் தமது தத்­து­வங்­க­ளையும், கட­மை­க­ளையும் மற்றும் பணி­க­ளையும் உரிய முறையில் பிர­யோ­கிப்­ப­தற்கும் பகிர்­வ­தற்கும் பாரா­ளு­மன்­றத்­திற்கு பொறுப்­பாதல் வேண்டும்.

46 (1) அமைச்­ச­ரவை அமைச்­சர்­களின் மொத்த எண்­ணிக்கை 30 விட விஞ்­சு­த­லா­காது. அத்­துடன் 46(2) அமைச்­ச­ரவை உறுப்­பி­னர்­கள்­ அல்­லாத அமைச்­சர்­க­ளி­னதும் பிரதி அமைச்­சர்­க­ளி­னதும் கூட்டு மொத்த எண்­ணிக்கை மொத்­தத்தில் 40 விட விஞ்­சு­த­லா­காது.

46 (4) உறுப்­புரை 46 (1) எது எப்­ப­டி­யி­ருப்­பினும் அர­சியல் கட்சி அல்­லது சுயேச்சை குழு தேசிய அர­சாங்­க­மொன்றை உரு­வாக்­கு­மி­டத்து அமைச்­ச­ரவை அமைச்­சர்­க­ளது எண்­ணிக்­கையும் அமைச்­ச­ரவை உறுப்­பி­னர்கள் அல்­லாத அமைச்­சர்­க­ளது எண்­ணிக்­கையும் பாரா­ளு­மன்­றத்­தினால் தீர்­மா­னிக்­கப்­ப­டுதல் வேண்டும்.

பாரா­ளு­மன்­ற­மா­னது முன்­ன­தாக கலைக்­கப்­பட்டால் ஒழிய ஒவ்­வொரு பாரா­ளு­மன்­றமும் அதன் முத­லா­வது கூட்­டத்­திற்­கென நிய­மிக்­கப்­பட்ட திக­தி­யி­லி­ருந்து 5 ஆண்­டுகள் கொண்ட காலத்­துக்கு தொடர்ந்­தி­ருத்தல் வேண்டும். அதற்கு மேற்­பட்ட காலத்­தில்­ அல்ல. 62 (2) நீக்­கப்­பட்டு அதற்கு பதி­லாக சேர்க்­கப்­பட்­டது.

ஜனா­தி­பதி பிர­க­ட­னத்தின் மூலம் பாரா­ளு­மன்­றத்தை கூடு­மாறு அழைக்­கலாம், அமர்வு நிறுத்­தலாம். அத்­துடன் கலைக்­கலாம். ஆயினும் ஜனா­தி­பதி பாரா­ளு­மன்றம் அதன் முதல் கூட்­டத்­துக்­காக நிய­மித்த திக­தி­யி­லி­ருந்து நான்கு ஆண்­டுகள் ஆறு மாதங்­க­ளுக்கு எண்­ணிக்­கையின் (சமு­க­ம­ளிக்­காதோர் உட்­பட) மூன்­றி­லி­ரண்­டுக்கு குறை­யாத உறுப்­பி­னர்­களால் அதன் சார்பில் வாக்­க­ளித்து நிறை­வேற்­றப்­படும் தீர்­மா­ன­மொன்றில் அங்­ஙனம் செய்­யு­மாறு பாரா­ளு­மன்றம் ஜனா­தி­ப­தியை வேண்­டி­னா­லொ­ழிய கலைத்­த­லா­காது.

(70(1)) நீக்­கப்­பட்டு திருத்­தப்­பட்­டுள்­ளது).

92 ஆம் உறுப்­பு­ரையின் (அ) திருத்­தப்­பட்­டுள்­ளது. ஜனா­தி­பதி பத­விக்கு தகு­தி­யு­டை­யவர் முப்­பது வய­து­டை­ய­வ­ராக என்னும் சொல் முப்­பத்­தைந்து வய­து­டை­ய­வ­ராக மாற்­றப்­பட்­டுள்­ளது.

14 ஆம் உறுப்­பு­ரையை உட்­பு­குத்தல். (1) ஒவ்­வெரு பிர­ஜையும், பிர­ஜை­யொ­ரு­வரின் உரி­மை­களைப் பிர­யோ­கிப்­ப­தற்கு அல்­லது பாது­காப்­ப­தற்கு தேவைப்­ப­டுத்­தப்­ப­டு­வதும் பின்­வ­ரு­ப­வர்­க­ளினால் வைத்­தி­ருக்­கப்­ப­டு­வ­து­மான தக­வலாக உள்­ள­து­மான ஏதேனும் தக­வலை சட்­டத்­தினால் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ள­வ­ராக பெற அணு­கு­வ­தற்­கான உரி­மையை கொண்­டி­ருத்தல் வேண்டும்.

அர­சி­ய­ல­மைப்­புக்­கான 19ஆவது திருத்­தத்தின் மூலம் 18 ஆவது திருத்­தத்­தி­லி­ருந்து பாரா­ளு­மன்ற பேரவை நீக்­கப்­பட்டு 17 ஆவது திருத்­தத்தின் மூலம் கொண்டு வரப்­பட்ட அர­சி­ய­ல­மைப்பு பேரவை மீண்டும் ஸ்தாபிக்­கப்­பட்­டுள்­ளது. இதன்­படி சில உயர்­தர அரச நிய­ம­னங்­களை ஜனா­தி­பதி மேற்­கொள்ளும் போது அர­சி­ய­ல­மைப்பு பேர­வையின் அங்­கீ­காரம் மற்றும் சிபா­ரிசு அவ­சி­ய­மாகும்.

அர­சி­ய­ல­மைப்பு பேரவை பின்­வரும் உறுப்­பி­னர்­களை கொண்­டது. பிர­தமர், சபா­நா­யகர், எதிர்க்­கட்சி தலைவர்,  ஜனா­தி­ப­தியால் நிய­மிக்­கப்­படும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒருவர் பிர­த­ம­ரி­னாலும் எதிர்க்­கட்சித்தலை­வ­ரி­னாலும் பெயர் குறித்து ஜனாதிபதியால் நியமிக்கப்படும் 5 பேர். இவர்களுள் 2 பேர் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்க வேண்டும். 

பிரதமரதும் எதிர்க்கட்சித்தலைவரதும் கட்சியை சேராத பாராளுமன்ற உறுப் பினர்களின் பெரும்பான்மையோரின் விருப்பில் பெயர் குறித்து நியமிக்கப்படும் ஒருவர் சபாநாயகர் பேரவையின் தலைவ ராவார். அரசியலமைப்பு பேரவைக்கு 5 உறுப்பினர்களை சிபாரிசு செய் கின்ற போது உயர் தொழில் மற்றும் வேறுபட்ட சமூகங்கள் உள்ளிட்ட இலங்கையின் பல்லின சமுதாயங்களை பிரதிபலிக் கின்றது என்பதை உறுதிப் படுத்துவதற்காக பாராளுமன்றத் தில் பிரதிநிதித்துவம் வகிக்கின்ற அரசியல் கட்சிகளதும், சுயேச் சை குழுக்களதும் தலைவர்களை கலந்தா லோசிக்க வேண் டும்.  

பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லாத நபர்கள் பகிரங்க வாழ்வில் அல்லது உயர்தொழிலில் தமக்கென்று சிறந்த நிலையை ஏற்படுத்திக் கொண்ட கீர்த்தியும், நேர்மை வாய்ந்தவர்களாகவும் அரசியல் கட்சியின் பாராளுமன்ற உறுப்பின ரல்லாத வராகவும் இருத்தல் வேண்டும். 

(தொடரும்...)

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-12-23#page-6

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

Page-24-8b735acca17385d1ee810a66f826a54d

புதிய அரசியல் சாசனத்திற்கான சரித்திர பயணம்...37

 

Page-21-949df87c1e1af6c95fb695e227e8757c

புதிய அரசியல் சாசனத்திற்கான சரித்திர பயணம்...38

http://epaper.virakesari.lk/

Link to comment
Share on other sites

 

புதிய அரசியல் சாசனத்திற்கான சரித்திர பயணம்...39

 

34p1j4p.jpg

புதிய அரசியல் சாசனத்திற்கான சரித்திர பயணம்...39

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான அறிக்கைகள் உடனடியாக வெளிப்படுத்தப்பட வேண்டும் - நிமல் லான்சா எம்.மனோசித்ரா கத்தோலிக்க திருச்சபை மற்றும் கத்தோலிக்க மக்களை ஏமாற்றாமல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கைகளை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும். அவற்றில் ஏதேனும் குறைபாடுகள் அல்லது பிழைகள் இருந்தால் அவை தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தெரிவித்தார். நீர்கொழும்பில் வியாழக்கிழமை (17) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மிகவும் உணர்ச்சிகரமான விடயமாகும். எனவே அந்த தாக்குதல்கள் தொடர்பான அறிக்கைகளை வெளியிட்டு நீதி வழங்கப்பட வேண்டும் என கத்தோலிக்க திருச்சபையும் கத்தோலிக்க மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.  இது நாடகம் அல்ல. கத்தோலிக்க மக்கள் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை நம்புகின்றனர். எனவே அந்த நம்பிக்கையை அவர் பாதுகாக்க வேண்டும். ரணில் விக்கிரமசிங்க இந்த நாட்டைப் பொறுப்பேற்றபோது அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை இருந்தது.  ஆனால், அவர் பதவியேற்ற பின்னர், அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டது. நல்லாட்சியின்போதும் சம்பளம் அதிகரிக்கப்பட்டது. ஊதிய முரண்பாடுகளைக் களைய குழுக்கள் நியமிக்கப்பட்டன. பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளதால் அடுத்த வருடம் முதல் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சம்பளத்தை அதிகரிக்கவுள்ளதாக முன்னர் மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்தது. ஆனால் தற்போது தாம் சம்பள அதிகரிப்பை வழங்குவதாகக் கூறவில்லை என்று அவர்கள் மறுக்கின்றனர்.  சுமார் 80 சதவீத அரச ஊழியர்கள் தேசிய மக்கள் சக்திக்கே வாக்களித்தனர். எனவே அவர்களை இந்த அரசாங்கம் ஏமாற்றக்கூடாது என்றார்.  https://www.virakesari.lk/article/196511
    • போட்டியை நடத்தும் கந்தப்புவுக்கு நன்றி பல🙏🏽 தமிழ்நாட்டு அரசியலைப் பற்றி உள்ள அறிவும், தரவும் இலங்கை அரசியலைப் பற்றி இல்லை! அதிலும் குறிப்பாக மக்களின் நாடிப்பிடிப்பை உணர்த்தும் நம்பகமான கருத்துக்கணிப்பு இல்லை. ஆனாலும் போட்டியில் கட்டாயம் கலந்துகொள்வேன்😀 யாழ் களப் போட்டியில் நான் வெல்வது சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் வெல்வது மாதிரித்தான் இருக்கும்😆
    • எங்களை வைத்து வியாபாரம் செய்வதே அரசியல் வாதிகளின் நோக்கமாக இருப்பதாக முன்னாள் போராளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளைக் கொண்ட சுயேட்சை குழு தெரிவித்துள்ளது. எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் முன்னாள் போராளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளைக்கொண்ட சுயேட்சைக்குழுவானது அரிக்கன் இலாம்பு சின்னத்தில் போட்டியிடுகின்றது. இது தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகசந்திப்பு வவுனியாவில் வியாழக்கிழமை (17) இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள்; வன்னியில் அவையவங்களை இழந்த பலபோராளிகள் உள்ளனர். அன்றாட உணவுக்கே அவர்கள் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அநாதைகளாக உள்ள அவர்களை  இந்த அரசியல் வாதிகள் யாருமே கண்டுகொள்வதில்லை. எம்மை வைத்து வியாபாரம் செய்வதே அவர்களது நோக்கம். எனவே நேரடியாக பாதிக்கப்பட்ட எமக்கே அந்த விடயங்கள் புரியும். எனவே எமது தேவைகளை பூர்த்திசெய்வதற்காக இந்த தேர்தலில் நாம் நிற்கிற்றோம் என்றனர். https://www.virakesari.lk/article/196540
    • பட மூலாதாரம்,ESSEX POLICE படக்குறிப்பு, பெற்றோரை கொலை செய்தபின் அவர்களின் ஓய்வூதியத்தை விர்ஜினியா பயன்படுத்தி வந்துள்ளார் கட்டுரை தகவல் எழுதியவர், லூயிஸ் ஆடம்ஸ் & டெபி டப்பி பதவி, பிபிசி நியூஸ், எசக்ஸ் 17 அக்டோபர் 2024 [எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள சில விவரங்கள் உங்களுக்குச் சங்கடத்தை ஏற்படுத்தலாம்.] காவல்துறையினர் தனது வீட்டின் கதவை உடைத்து ஏன் உள்நுழைந்தார்கள் என விர்ஜினியா மெக்கல்லாவிற்கு (Virginia McCullough) தெரியும். ஆனால், அதற்குக் காவல்துறை இவ்வளவு நாட்களை எடுத்துக்கொண்டது ஏன் என அவர் ஆச்சர்யப்பட்டார். “உற்சாகமாக இருங்கள், குறைந்தபட்சம் நீங்கள் குற்றவாளியைப் பிடித்துவிட்டீர்கள்,” என தனக்குக் கைவிலங்கு மாட்டிய அதிகாரிகளிடம் அவர் அமைதியாகக் கூறினார். ஜான் (John) மற்றும் லூயிஸ் மெக்கல்லா (Lois McCullough) இருவரும் கடலோரத்தில் வசித்து வருவதாக அவர்களின் அண்டை வீட்டார் நினைத்திருந்தனர். ஆனால், உண்மையில் இருவரும் தன் மகளால் இரக்கமற்ற வகையில் விஷம் கொடுக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கின்றனர். பிரிட்டனில் இருக்கும் செல்ம்ஸ்ஃபோர்ட், எசக்ஸ் (Chelmsford, Essex) அருகில் உள்ள கிரேட் பேடோ (Great Baddow) என்ற பகுதிக்கு அருகில் உள்ள மெக்கல்லாவின் குடும்ப வீடு பெரும் ரகசியமானதாகவே இருந்து வந்தது. மெக்கல்லா தம்பதி அவர்களது உறவினர்களிடம் தங்களிடமிருந்து விலகி இருக்குமாறு கூறியிருந்தனர். இந்நிலையில், அவர்கள் கிளாக்டன் பகுதியில் உள்ள எசக்ஸ் சன்ஷைன் கடற்கரை பகுதியில் வசிப்பதாக நண்பர்களிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த பயங்கரமான உண்மைச் சம்பவம் மிகவும் வித்தியாசமானது. பம்ப் ஹில் (Pump Hill) குடியிருப்புப் பகுதியின் மூடிய கதவுகளுக்கு உள்ளே நடந்த இந்தச் சம்பவத்தை கண்டுபிடிக்க 4 வருடங்கள் ஆகியிருக்கிறது. எப்போதும் திரையால் மூடப்பட்ட வீடு கொடிய விஷம் கொடுக்கப்பட்டு கொல்லப்பட்ட ஜான் மெக்கல்லா ஓய்வு பெற்ற வணிகவியல் விரிவுரையாளர். 70 வயதான அவரது உடலை வீட்டில் போர்வைகள், மணல், மற்றும் சிமென்ட் கலவையாலான இலகுரகக் கற்களைக் கொண்டு கல்லறை போன்ற அமைப்பில் மறைத்து வைக்கப்பட்டது. 71 வயதான அவரது மனைவி லூயிஸ்-இன் உடல் மாடியில் உள்ள அலமாறியின் படுக்கை விரிப்புக்குப் பின் மறைத்து வைக்கப்பட்டது. லூயிஸ் மெக்கல்லா சுத்தியலால் தாக்கப்பட்டார். அதனுடன், அவருடைய மகள் அவருக்கு பரிந்துரைக்கபட்ட மருந்துகளுடன் விஷத்தையும் கலந்து கொடுத்திருக்கிறார். வெள்ளிக்கிழமையன்று (அக்டோபர் 11), 36 வயதான விர்ஜினியா மெக்கல்லாவிற்கு, இந்தக் கொலைகளைச் செய்ததற்காக செல்ம்ஸ்ஃபோர்ட் க்ரௌன் (Chelmsford Crown) நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அதன்படி, அவர் குறைந்தபட்சம் 36 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும். “அவரது வீடு எப்போதும் திரையால் மூடப்பட்டிருக்கும், உள்ளே யார் இருக்கிறார்கள் என்பதைக்கூடப் பார்க்க முடியாது,” என மெக்கல்லாவின் வீட்டிற்கு அருகில் 20 ஆண்டுகளாக வசிக்கும் ஃபில் சார்ஜெண்ட் (Phil Sargeant) தெரிவிக்கிறார். தன்னுடைய அண்டை வீடு ஏன் இவ்வளவு ரகசியமாக இருந்தது என்பதற்கான காரணத்தை சார்ஜெண்ட் இப்போது தெரிந்து கொண்டார். “விர்ஜினியா தனது பெற்றோரைக் கொலை செய்து விட்டார் என்பதைச் சொல்லக் கூட மிகவும் கடினமாக இருக்கிறது,” என்கிறார் சார்ஜெண்ட். “அவள் அமைதியாகவும் இனிமையாகவும் இருந்தார். அவர் வேடிக்கையான ஒரு நபர். எதிலும் தலையிட மாட்டார்", என்கிறார் சார்ஜெண்ட்.   பட மூலாதாரம்,STEVE HUNTLEY/BBC படக்குறிப்பு, விர்ஜினியாவின் பெற்றோரின் சடலங்கள் நான்கு ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே இருந்துள்ளன ‘கற்பனை உலகில் சஞ்சரிப்பவர்’ 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் எசக்ஸ் பாதுகாப்புக் குழுவிடம் இருந்து எசக்ஸ் காவல்துறைக்கு ஒரு ஃபோன் அழைப்பு வந்தது. மெக்கல்லா தம்பதியின் நலனில் அக்கறை கொண்ட குடும்ப மருத்துவர் அவர்களைச் சில காலம் பார்க்கவில்லை என்பதால் அதுகுறித்துக் கவலையை வெளிப்படுத்தியுள்ளார். ஒவ்வொரு சந்திப்பின் போதும், வெவ்வேறு காரணங்களைக் கூறி தனது பெற்றோரால் மருத்துவப் பரிசோதனைக்கு வர முடியாது என அவர்களது சார்பாக விர்ஜினியா கூறியுள்ளார். நாடு முழுவதும் கொரோனா பொதுமுடக்கம் நிலவியதும் அவருக்குச் சாதகமாக அமைந்தது. அதனால், அவருடைய பெற்றோர் நீண்ட காலமாக வெளியே தென்படவில்லை. ஆனால், காவல்துறை மெக்கல்லாவிடம் பேசியபோது, அவர் எதையோ மறைக்கிறார் என்பது தெரியவந்தது. ஏன் அவரது பெற்றோர்கள் எப்போதும் நகரை விட்டு வெளியே இருக்கிறார்கள் என்பது தெளிவாகியது. மெக்கல்லாவிற்குத் தொலைக்காட்சியை வாடகைக்குக் கொடுத்த ஆலன் தாம்சன் என்பவருக்கும் சந்தேகம் ஏற்பட்டது. அவரது பெற்றோர்கள் சார்பாக, விர்ஜினியா மெக்கல்லா திடீரென ஃபோன் செய்து தொலைக்காட்சியை உரிமையாளரான ஆலன் தாம்சனிடமே கொடுத்து விடுவதாக கூறியுள்ளார். தொலைக்காட்சியைப் பெற தாம்சனின் பணியாளர் அவரது வீட்டிற்கு வந்தபோது, வீட்டுக்குள் நுழையக் கூடாது என்றும் தொலைக்காட்சி முன்வாசலில் தயாராக வைக்கப்பட்டிருக்கிறது என்றும் விர்ஜினியா கூறியுள்ளார். “அவர் ஓரளவுக்குக் கற்பனையிலேயே வாழ்பவர் என நினைத்தேன். ஆனால் ஒரு கொலைகாரர் என்று நான் நினைக்கவே இல்லை,” என்கிறார் தாம்சன்.   பட மூலாதாரம்,ESSEX POLICE படக்குறிப்பு, ஜான் மெக்கல்லாவின் உடல் போர்வைகள் மற்றும் ஓவியங்களாலான கல்லறை போன்ற அமைப்பில் மறைத்து வைக்கப்பட்டது. 'நான் இதற்கு தகுதியானவள் தான்' விர்ஜினியாவின் வீட்டுக்கு காவல்துறை விசாரணைக்ககச் சென்றபோது, அவர்கள் அங்கு செல்வது முதல்முறை அல்ல. உடல்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு, தான் தாக்குதலுக்கு உள்ளானதாகக் கூறிக் காவல்துறையினரை விர்ஜினியா தன் வீட்டுக்குள் அழைத்தார். காவல்துறையினரை அழைத்ததன் நோக்கம் அவருக்குத் தான் தெரியும். ஆனால், நிலைமையைச் சோதித்துப் பார்க்க காவல்துறையினரை வீட்டுக்குள் அழைத்ததாகச் சிலர் கருதினர். இறுதியில், தான் தாக்கப்பட்டதாக அவர் கூறியது உண்மையில்லை என தெரியவந்தது. 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் காவல்துறையினர் வீட்டுக்கு வந்தபோதும் மெக்கல்லா முன்கூட்டியே தயாராக இருந்தார். “இந்த நாள் எப்படியும் வரும் என எனக்கு தெரியும்,” என்று அவர் ஒப்புக்கொண்டார். “இந்தத் தீர்ப்பு எனக்குக் கிடைக்க வேண்டியது தான், அதை ஏற்கிறேன். அதை ஏற்பதுதான் சரி. அது எனக்கு கொஞ்சம் அமைதியைத் தரும்,” என்று அவர் கூறினார். அவரது வீட்டிலிருந்து எடுக்கப்பட்ட ஆவணங்கள் மூலம் விர்ஜினியா தன் பெற்றோரிடம் நிதி சம்பந்தமானப் பிரச்னையை மறைக்கத் தீவிரமாக முயற்சித்தது தெரிய வந்தது. அவர்களது நம்பிக்கையை கெடுக்கும் வகையில், வாடகை இல்லாமல் வாழ்ந்துள்ளார். அவர்களது பணத்தைப் பயன்படுத்தியும், அவர்களது கிரெடிட் கார்டையும் அதிகமாகப் பயன்படுத்தியுள்ளார். மோசடியால் பணம் இழந்துவிட்டீர்கள் என்று போலியான கடிதங்களைக் காட்டித் தனது பெற்றோரை மெக்கல்லா நம்ப வைத்துள்ளார். உண்மையில், அந்த பணம் விர்ஜினியாவால்தான் ‘ஏமாற்றப்பட்டது’.   பட மூலாதாரம்,ESSEX POLICE படக்குறிப்பு, விர்ஜினியாவின் தாய் சுத்தியலால் தாக்கப்பட்டும் விஷம் கொடுத்தும் கொல்லப்பட்டார். தந்தை விஷம் கொடுத்து கொல்லப்பட்டார் எதற்காக கொலை செய்தார்? அவரது பெற்றோர்களைப் பொறுத்தவரை, விர்ஜினியா நல்ல தகுதி உடையவர், பொருத்தமான வேலையில் இருப்பவர், மேலும், கலைஞராக வருவதற்குக் கடுமையாக உழைத்தார் என்று நினைத்தனர். மேலும், பிற்காலத்தில் நிதி சார்ந்த உதவிகளைத் தனது பெற்றோருக்கும் செய்வதாக அவர்களிடம் கூறியிருந்தார் விர்ஜினியா. அதற்குப் பதிலாக, விர்ஜினியா சூழ்ச்சியுடன் தன் பெற்றோரின் பணத்தைப் பயன்படுத்தி வந்தார். தன் பெற்றோரின் இரக்கத்தை நன்றாகப் பயன்படுத்தியும், துஷ்பிரயோகம் செய்தும் வந்துள்ளார். அவர்களது ஓய்வூதியம், கிரெடிட் கார்ட் பயன்பாடு, சொத்துக்களை விற்றல் என மொத்தமாக விர்ஜினியா தனது பெற்றோரைக் கொலை செய்ததன் மூலம் 1,49,697 பவுண்டுகள் (தோராயமாக 1.6 கோடி ரூபாய்) பயனடைந்துள்ளார். 2019 - 2023 ஆண்டுக்கிடையில் அவர் ஆன்லைன் சூதாட்டத்திற்காக 21,000 பவுண்டுகள் (தோராயமாக 23 லட்சம் ரூபாய்) செலவழித்ததையும் நீதிமன்றம் விசாரித்தது. தான் கூறிய பொய்கள் மற்றும் மாட்டிக் கொள்வோமோ என்ற பயம் காரணமாக, இறுதியில் தனது பெற்றோரை கொடூரமாகக் கொலை செய்துள்ளார். அவரது வீட்டிற்கு அருகில் உள்ள வினியார்ட்ஸ் வணிக மையத்தில் காய்கறிக் கடை வைத்திருக்கும் பால் ஹேஸ்டிங்ஸ் (Paul Hastings) என்பவரும் விர்ஜினியாவின் பெற்றோர் வெளியே வராததை கவனித்துள்ளார். அவருடைய கடையில் பொருட்கள் வாங்கும் தனது பெற்றோர், தற்போது கிரேட் பேட்டோவில் வாழவில்லை என்று கடைக்காரரிடம் விர்ஜினியா தெரிவித்துள்ளார். எந்த விஷயத்தையும் சந்தேகப்படாத அளவிற்கு அவரால் சொல்ல முடியும் என்பதுதான் அவருடைய தனித்துவம் வாய்ந்த இயல்பு என ஹேஸ்டிங் தெரிவித்தார். “விர்ஜினியா, என் கடைக்கு வந்து, ‘காவல்துறை என்னை பின் தொடர்கிறார்கள், நான் என் அம்மா, அப்பாவைக் கொலை செய்திருக்கலாம் என அவர்கள் நினைக்கின்றனர்’ என தெரிவித்தார்,” என அவர் கூறினார். “எனக்கு அது வித்தியாசமாக தோன்றியது. ஆனால் அதைப்பற்றி வேறு எதையும் நான் யோசிக்கவில்லை. அது அவருடைய விசித்திரமான இயல்பு என்று நான் நினைத்தேன்,” என்கிறார் ஹேஸ்டிங். சில சமயங்களில் அவர் தனது கடைக்கு ஒரு நாளைக்கு நான்கு முறை வருவார், அடுத்த 15 நாட்கள் காணமல் போவார் என ஹேஸ்டிங் கூறுகிறார்.   பட மூலாதாரம்,FAMILY HANDOUT படக்குறிப்பு, விர்ஜினியா தன் பெற்றோரின் நல்லெண்ணத்தைத் தவறாக பயன்படுத்தியிருக்கிறார் என்கிறார் கிர்பி ‘கர்ப்பிணி போல நடித்தார்’ அவர் தனது கடைக்கு வந்து உணவு உள்ளிட்ட பொருட்களை வழங்குவார் என்று விர்ஜினியாவின் விட்டருகே பூக்கடை நடத்தி வரும் டெப்பி பொல்லார்ட் (Debbie Pollard) கூறிகிறார். “அவர் வித்தியாசமானவர் என எங்களுக்குத் தெரியும். ஆனால், அவர் இப்படிச் செய்வார் என்று நாங்கள் கனவிலும் நினைத்ததில்லை,” என்கிறார் டெப்பி. “அவருடைய அம்மா, அப்பாவின் சடலங்களுடன் இத்தனை ஆண்டுகள் அவர் வாழ்ந்திருக்கிறார். நினைத்தாலே பயமாக இருக்கிறது,” என்கிறார். விர்ஜினியா கர்ப்பிணியைப் போன்று கூட நடித்திருக்கிறார் என்றும் தன் ஆடையின் உள்ளே போலியான பொருள் மூலம் தனது வயிற்றைப் பெரிதாகக் காட்டியிருக்கிறார் என்றும் ஹேஸ்டிங்ஸ் மற்றும் டெப்பி கூறுகின்றனர்.   பட மூலாதாரம்,STUART WOODWARD/BBC படக்குறிப்பு, "மிகவும் அனுபவம் வாய்ந்த துப்பறிவாளர்களுக்குக் கூட இந்த கொலைகளின் விவரங்கள் அதிர்ச்சியையும் திகிலையும் அளிக்கும்" என்கிறார் ராப் கிர்பி தீர்ப்பு வழங்கப்பட்ட அக்டோபர் 11 அன்று விர்ஜினியா பெரும்பாலும் எவ்வித உணர்ச்சியும் இன்றி தரையையே பார்த்துக் கொண்டிருந்தார். தன் தாயை எப்படிக் கொலை செய்தேன் என காவல்துறையினரிடம் தான் கூறியதன் பதிவைப் பின்னர் கேட்கும் போதுதான் அவர் அழத்தொடங்கினார். "அவர் (தாய்) மிகவும் அப்பாவியாக இருந்தார். வானொலியைக் கேட்டுக்கொண்டு அமர்ந்திருப்பார்," என்று அவர் அதிகாரிகளிடம் கூறினார். “தைரியத்தை வரவைக்க மூன்றுமுறை உள்ளே சென்றேன். பின்னர் தயங்காமல் இதை செய்தாக வேண்டும் என்று முடிவெடுத்தேன். அவர் (தாய்) நம்ப முடியாமல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்,” என்றார் விர்ஜினியா.   பட மூலாதாரம்,ESSEX POLICE படக்குறிப்பு, விர்ஜினியா மெக்கல்லாவிற்கு 36 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது எசக்ஸ் காவல்துறையின் துப்பறிவுக் கண்காணிப்பாளர் ராப் கிர்பி (Rob Kirby), நீதிமன்றத்தில் அவரது அமைதியானச் செயல்பாடுகள், ஒரு ‘திட்டமிட்டக் கொலைகாரரது செயல்பாடுகள் போல’ அமைதியாக இருந்தன என்கிறார். “அவர் செய்த வஞ்சகம், துரோகம், மோசடி ஆகியவை குறித்த பரந்த அளவிலான விசாரணையை நாங்கள் மேற்கொண்டோம்,” என்கிறார் அவர். “இது அதிர்ச்சியூட்டும் வகையிலும், பெரிய அளவிலும் இருந்தது. விர்ஜினியா தனது வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் பொய் சொல்லியிருக்கிறார். அவரைச் சுற்றியுள்ள அனைவரையும் ஏமாற்றியிருக்கிறார். கேலிக்கூத்தாக்கி இருக்கிறார். மேலும், தெளிவாக அவரது பெற்றோரின் நம்பிக்கையை பயன்படுத்தியிருக்கிறார்,” என்கிறார். “தனது பெற்றோர்களைப் பற்றியோ, அல்லது அவர்களது இழப்பால் பாதிக்கப்படுபவர்களைப் பற்றியோ யோசிக்காமல் கொடூரமாக அவர்களைக் கொலை செய்துள்ளார். அவர் ஒரு புத்திசாலி, விஷயங்களைத் திறமையாக கையாளுபவர்,” என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cg4qwrlqnp3o
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.