Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லிணக்க செயற்பாட்டில் பின்வாங்கிவிட வேண்டாம்

Featured Replies

நல்­லி­ணக்க செயற்­பாட்டில் பின்­வாங்­கி­விட வேண்டாம்

 

யுத்தம் முடி­வ­டைந்து எட்டு வரு­டங்கள் ஆகப்­போ­கின்ற நிலையில் இன்னும் இனங்­க­ளுக்­கி­டை­யிலும் சமூ­கங்­க­ளுக்­கி­டை­யி­லும் நல்­லி­ணக்­கத்தை எவ்­வாறு முன்­னெ­டுப்­பது என்று நாடு பேசிக்­கொண்­டி­ருக்­கின்­றதே தவிர நல்­லி­ணக்கப் பொறி­மு­றையில் வெற்­றி­பெற முடி­யாமல் இருக்­கி­றது. குறிப்­பாக யுத்தம் முடி­வ­டைந்­ததன் பின்னர் நாட்டின் இனங்­க­ளுக்கும் சமூ­கங்­க­ளுக்­கு­மி­டையில் தேசிய நல்­லி­ணக்க வேலைத்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு தேசிய ஒற்­று­மையும், புரிந்­து­ணர்வும் கட்­டி­யெ­ழுப்­பப்­ப­டு­மென எதிர்­பார்க்­கப்­பட்ட போதும் துர­திர்ஷ்­ட­வ­ச­மாக அவ்­வா­றான நிலை­மையை உரு­வாக்க முடி­ய­வில்லை. அதற்கு மாறாக யுத்தம் முடி­வ­டைந்த பின்­னரும் இனங்­க­ளுக்கு இடை­யிலும் சமூ­கங்­க­ளுக்கு இடை­யிலும் விரி­சல்­களை ஏற்­ப­டுத்தும் சம்­ப­வங்­களே கடந்த காலங்­களில் அரங்­கேற்­றப்­பட்­டன.

குறிப்­பாக இனங்­க­ளுக்­கி­டையில் விரி­சல்­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு திட்­ட­மிட்ட ரீதி­யி­லான கடும்­போக்­கு­வாத செயற்­பா­டுகள் கடந்­த ­காலத்தில் முன்­னெ­டுக்­கப்­பட்­ட­தாக கடு­மை­யான குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்­டன. யுத்தம் முடி­வ­டைந்து நல்­லி­ணக்­கத்தை உரு­வாக்­கும்­ வ­கை­யிலும் தேசிய ஒற்­று­மையை பலப்­ப­டுத்தும் நோக்­கிலும் வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுக்­கு­மாறு சர்­வ­தேச தரப்பு உள்­ளிட்ட அனைத்துத் தரப்­பி­னரும் வலி­யு­றுத்தி வந்த போதும் அதற்­கான முயற்­சிகள் யுத்தம் முடி­வ­டைந்த பின்னர் சாத்­தி­ய­மா­க­வில்லை.

 இந்­நி­லையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 9 ஆம் திகதி ஆட்­சிக்கு வந்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான நல்­லாட்சி அர­சாங்கம் தேசிய நல்­லி­ணக்க வேலைத்­திட்­டங்­க­ளுக்கு முன்­னு­ரிமை கொடுத்து செயற்­பட ஆரம்­பித்­தது. ஆனால் நல்­லாட்சி அர­சாங்கம் இவ்­வாறு நல்­லி­ணக்க வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுத்து செல்­வ­திலும் பாரிய முட்­டுக்­கட்­டைகள் காணப்­ப­டு­கின்­றன. உதா­ர­ண­மாக தற்­போ­தைய நிலை­மை­யிலும் கடும்­போக்­கு­வா­திகள் இன­வா­தத்தை கக்­கிக்­கொண்­டி­ருக்கும் நிலையில் தேசிய நல்­லி­ணக்க செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­பது என்­பது பாரிய சவா­லுக்­கு­ரிய விட­ய­மாக காணப்­ப­டு­கின்­றது. இனங்­க­ளுக்கும் சமூ­கங்­க­ளுக்­கு­மி­டையில் நல்­லி­ணக்க முயற்­சி­களை முன்­னெ­டுக்­கின்ற போதே அவை நாட்டை பிரி­வி­னைக்கு உட்­ப­டுத்­தி­விடும் என பிர­சாரம் செய்து மக்கள் மத்­தியில் விரி­சலை ஏற்­ப­டுத்தும் முயற்­சி­க­ளையே கடும்­போக்­கு­வா­திகள் முன்­னெ­டுத்து வரு­கின்­றன.

 இவ்­வா­றான சூழலில் அர­சாங்கம் ஜன­வரி மாதம் 8 ஆம்­ தி­கதி முதல் 14 ஆம் திக­தி­வ­ரை­யான காலப்­ப­கு­தியை தேசிய ஒரு­மைப்­பாட்டு நல்­லி­ணக்க வார­மாக பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யுள்­ளது. அதா­வது ஒவ்­வொரு வரு­டமும் இக்­கா­லப்­ப­கு­தியில் தேசிய ஒரு­மைப்­பாட்டு மற்றும் நல்­லி­ணக்க வார­மாக நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டு­மென நல்­லி­ணக்க விட­ய ­தா­னத்தை தனக்­குக்கீழ் வைத்­துக்­கொண்­டுள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முன்­வைத்த யோச­னைக்கு அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ளது. இக்­கா­லப்­ப­கு­தியில் நாடு­ த­ழு­விய ரீதியில் பாட­சா­லைகள், ஊட­கங்கள், அரச மற்றும் தனியார் நிறு­வ­னங்­களை மைய­மாகக் கொண்டு தேசிய ஒரு­மைப்­பாட்டின் முக்­கி­யத்­து­வத்தை வெளிப்­ப­டுத்­து­கின்ற பல்­வேறு வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுப்­ப­தற்கு அர­சாங்கம் தீர்­மா­னித்­தி­ருக்­கின்­றது. அதன்­படி அர­சாங்கம் நாட்டின் தேசிய நல்­லி­ணக்­கத்தை முன்­னெ­டுக்­க­வேண்­டி­யதன் முக்­கி­யத்­து­வத்தை புரிந்­து­கொண்­டி­ருப்­பதை உணர முடி­கின்­றது. அது­மட்­டு­மன்றி நல்­லி­ணக்க செயற்­பா­டுகள் நாட­ளா­வி­ய ­ரீ­தியில் பரந்­து­பட்ட ரீதியில் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டு­மென்­ப­திலும் மக்கள் மத்­தியில் தேசிய ஒற்­று­மை­யையும் புரிந்­து­ணர்­வையும் விரை­வாக ஏற்­ப­டுத்த வேண்­டு­மென்­ப­தையும் உணர்ந்து அர­சாங்கம் செயற்­பட்டு வரு­வதை காண முடி­கின்­றது.

எனினும் நாட்டில் அவ்­வப்­போது இடம்­பெறும் அடிப்­ப­டை­வாதம் மற்றும் இன­வாத நோக்­கங்­களைக் கொண்ட செயற்­பா­டு­களை அவ­தா­னிக்­கும்­போது எங்கே தேசிய நல்­லி­ணக்கம் மற்றும் ஒற்­று­மையை வலுப்­ப­டுத்தும் செயற்­பா­டுகள் சாத்­தி­ய­மா­காமல் போய்­வி­டுமோ என்ற அச்­சமும் ஏற்­ப­டு­கின்­றது. காரணம் நாட்டில் முன்­னெ­டுக்­கப்­படும் தேசிய நல்­லி­ணக்க மற்றும் ஒற்­று­மைக்­கான செயற்­பா­டு­களை கடும்­போக்­கு­வா­திகள் இன­வாத சாயல்­கொண்டு வர்­ணிப்­பதன் கார­ண­மாக அந்த நல்­லி­ணக்க செயற்­பா­டு­களை தொடர்ந்து கொண்டு செல்­வதில் பாரிய தடை­களும் முட்­டுக்­கட்­டை­களும் ஏற்­ப­டு­கின்­றன.

குறிப்­பாக மத­வா­தத்தை மூல­த­ன­மாகக் கொண்டு நல்­லி­ணக்க செயற்­பா­டு­களை முறி­ய­டிப்­ப­தற்கு இன­வா­த ­சக்­திகள் முயற்­சி­களை மேற்­கொள்­வ­தையும் காண­மு­டி­கின்­றது. விசே­ட­மாக இவ்­வா­றான செயற்­பா­டு­களின் மூலம் மீண்டும் நாடு அமை­தி­யின்­மையை நோக்கிப் பய­ணிப்­ப­துடன் மக்­களின் சுதந்­திரம் பாதிக்­கப்­படும் சூழல் உரு­வாகும் என்­பதை இன­வா­தத்தை மூல­த­ன­மாகக் கொண்டு செயற்­படும் சக்­திகள் புரிந்­து­கொள்­ள­வேண்டும். இவ்­வாறு இன­வாத செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்து அர­சாங்­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­படும் நல்­லி­ணக்க செயற்­பா­டு­களை குழப்பி அவற்­றுக்கு தடை ஏற்­ப­டுத்­து­வதன் மூலம் நாடு வெற்­றிப்­பா­தையை நோக்கி பய­ணிக்க முடி­யாமல் போய்­விடும் என்­பதை கடும்­போக்­கு­வா­திகள் புரிந்­து­கொள்­ள­வேண்டும்.

எமது நாட்டு மக்­களைப் பொறுத்­த­வ­ரையில் எப்­போ­துமே இன­வா­தத்தை நிரா­க­ரித்­த­வர்­க­ளா­கவே முன்­னின்­றுள்­ளனர். குறிப்­பாக கடந்த ஜனா­தி­பதி மற்றும் பாரா­ளு­மன்றத் தேர்­தல்­களில் நாட்டு மக்கள் இன­வாத சக்­தி­களை முழு­மை­யாக தோற்­க­டித்­துள்­ளனர். அது­மட்­டு­மன்றி முதல்­த­ட­வை­யாக நாட்டில் இரண்டு பிர­தான கட்­சி­க­ளு­மான ஐக்­கிய தேசி­யக்­கட்­சியும் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியும் தேசிய நல்­லி­ணக்க செயற்­பாட்டின் முக்­கி­யத்­து­வத்தை உணர்ந்து­ கொள்ளும் வகை­யி­லான தீர்ப்பை மக்கள் கடந்த தேர்­தல்­களில் வெளிக்­காட்­டி­யி­ருந்­தனர். இதன்­மூலம் தேசிய நல்­லி­ணக்க மற்றும் இனங்­க­ளுக்­கி­டை­யி­லான ஒற்­றுமை புரிந்­து­ணர்வு போன்ற விட­யங்கள் எந்­த­ளவு தூரம் முக்­கி­ய­மா­னவை என்­பதை இரண்டு பிர­தான கட்­சி­களும் உணர்ந்­து­கொண்­டுள்­ளன. அதன்­படி ஐக்­கிய தேசி­யக்­கட்­சியும், சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியும் இணைந்து அமைத்­துள்ள தற்­போ­தைய நல்­லாட்சி தேசிய அர­சாங்­க­மா­னது இனங்­க­ளுக்கும் சமூ­கங்­க­ளுக்­கு­மி­டை­யி­லான நல்­லி­ணக்க செயற்­பா­டு­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் அளிக்­க­வேண்­டிய கட்­டா­யத்­திற்கு தள்­ளப்­பட்­டுள்­ளது. இந்த இடத்தில் அர­சாங்கம் இந்த நல்­லி­ணக்க செயற்­பா­டு­களின் முக்­கி­யத்­து­வத்தை உணர்ந்து வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுப்­பதை காணக்­கூ­டி­ய­தாக உள்­ளமை வர­வேற்­கத்­தக்­க­தாகும். ஆனால், எங்கே கடும்­போக்­கு­வாதம், இன­வாத சக்­தி­க­ளுக்கு அஞ்சி அர­சாங்கம் தேசிய நல்­லி­ணக்க செயற்­பா­டு­களில் பின்­வாங்­கி­வி­டுமா என்ற அச்­சமும் மக்­க­ளுக்கு இல்­லாமல் இல்லை. அண்­மையில் இது­ தொ­டர்பில் கருத்து வெளி­யிட்­டி­ருந்த வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர நல்­லாட்சி அர­சாங்­க­மா­னது இன­வா­தி­க­ளுக்கு ஒரு­போதும் அஞ்­சாது என்றும் இன­வா­திகள் எவ்­வாறு அச்­சு­றுத்­தி­னாலும் அர­சாங்கம் நல்­லி­ணக்க செயற்­பா­டு­களை வெற்­றி­க­ர­மாக முன்­னெ­டுக்கும் என்றும் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார். அத்­துடன் வடக்­கிலும், தெற்­கிலும் இருந்து தற்­போது இன­வாத பேய்கள் திடீர்திடீ­ரென தோன்றி வரு­வ­தா­கவும் எவ்­வா­றெ­னினும் அவற்­றுக்கு அஞ்சி அர­சாங்கம் ஒரு­போதும் பின்­வாங்­காது என்றும் வெளி­வி­வ­கார அமைச்சர் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.

அர­சாங்கம் இவ்­வாறு நல்­லி­ணக்க செயற்­பா­டு­க­ளிலும் மக்­க­ளுக்­கி­டையில் தேசிய ஒற்­று­மை­யையும் புரிந்­து­ணர்­வையும் ஏற்­ப­டுத்தும் நட­வ­டிக்­கை­க­ளிலும் திட­மாக இருக்­கின்­றமை வர­வேற்­கத்­தக்­க­தாகும். ஆனால், அர­சாங்கம் இந்த விட­யத்தை தொடர்ந்தும் அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். எக்­கா­ரணம் கொண்டும் இன­வாத செயற்­பா­டு­க­ளுக்கு அஞ்சி இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தும் செயற்­பா­டு­களில் பின்­வாங்­கி­வி­டக்­கூ­டாது என்­பதை அனைத்துத் தரப்­பி­னரும் தொடர்ச்­சி­யாக வலியுறுத்தி வருகின்றனர்.

குறிப்பாக கடந்த முப்பது வருடகால யுத்தம் காரணமாக நாட்டில் இனங்களுக்கிடையில் பாரிய விரிசல்களும் இடைவெளிகளும் நம்பிக்கையீனங்களும் ஏற்பட்டிருந்தன. எனினும் யுத்தம் முடிவடைந்த பின்னரும் கூட அந்த இடைவெளிகளையும் விரிசல்களையும் போக்குவதற்கு கடந்த காலத்தில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை. அதன் காரணமாகவே நாட்டில் இதுவரை நல்லிணக்க செயற்பாடுகளில் வெற்றி பெறுவதற்கு முடியாமல் போனது. எனினும் தற்போதைய அரசாங்கம் இந்த விடயத்தில் உறுதியாக இருக்கின்ற காரணத்தினால் மக்கள் மத்தியில் நல்லிணக்கம் தொடர்பான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. அந்த மக்களின் எதிர்பார்ப்பை உரிய முறையில் நிறைவேற்றவேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். எக்காரணத்தைக் கொண்டும் நல்லிணக்க முயற்சிகளை பின்வாங்கிவிடக்கூடாது.

இனங்களுக்கிடையிலும் சமூகங்களுக்கிடையிலும் நல்லிணக்க செயற்பாடுகளை வலுப்படுத்துவதன் ஊடாகவே நாட்டில் ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்பதே யதார்த்தமாகும். அதனை உணர்ந்து அரசாங்கம் செயற்படவேண்டும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-12-23#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.