Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சட்டமூலத்தை திருத்துவதற்கு பிரதமர் ரணில் இணக்கம்

Featured Replies

சட்டமூலத்தை திருத்துவதற்கு பிரதமர் ரணில் இணக்கம்

raaa-3c952eb02f7a325d8efd4255b7330f7e34d2e352.jpg

 

முதலமைச்சர்களுடனான சந்திப்பில் தீர்மானம்

(ஆர்.ராம்)

அபி­வி­ருத்தி விசேட ஏற்­பா­டுகள் சட்­ட­மூ­லத்தை மீளத்­தி­ருத்­து­வ­தற்கு தயா­ர­ாக­வுள்­ள­தாக முத­ல­மைச்­சர்­க­ளி­டத்தில் தெரி­வித்த பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மாகா­ணங்­க­ளுக்­கான அதி­கா­ரங்­களை பறிப்­பது தமது நோக்­க­மல்ல எனக் குறிப்­பிட்டதுடன் அனைத்து முத­ல­மைச்­சர்­க­ளையும் உள்­ள­டக்கி மற்று­மொரு கலந்­து­ரை­யா­டலை மேற்­கொள்­வ­தற்கும் அழைப்பு விடுத்­துள்ளார்.  

இதேவேளை மாகா­ண­ச­பையின் அதி­கா­ரங்­களை பறிப்­ப­தற்கு எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் இட­ம­ளிக்க முடி­யாது என மாகாண முத­ல­மைச்­சர்கள் பிர­த­ம­ரி­டத்தில் நேர­யா­கவே சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர்.

அபிவிருத்தி விசேட சட்டமூலம் தொடர்பாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கும் மாகாண முத­ல­மைச்­சர்­க­ளுக்­கு­மி­டை­யி­லான சந்­திப்­பொன்று நேற்று வெ ள்ளிக்­கி­ழமை அல­ரி­மா­ளிக்­கையில் நடை­பெற்­றது. இந்த சந்­திப்பில் ஒன்­பது முத­ல­மைச்­சர்­களில் கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் நஸீர் அஹமட், மேல்­மா­காண முத­ல­மைச்சர் இசுரு தேவ­ப்­பி­ரிய, தென்மாகாண முதலமைச்சர் சான் விஜயலால், ஊவா முத­ல­மைச்சர் சாமர சம்பத் தஸ­நா­யக்க ஆகிய நால்­வ­ருமே பங்­கேற்­றி­ருந்­தனர்.

இச்­சந்­திப்பு குறித்து மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க முதலில் கொண்­டு­வ­ரப்படவுள்ள உத்­தே­சித்­தி­ருக்கும் அபி­வி­ருத்தி விசேட ஏற்­பா­டுகள் சட்­ட­மூ­லத்தின் நன்­மைகள் தொடர்பில் விரி­வான விளக்­கத்­தினை வழங்­கினார்.  

குறிப்­பாக இந்த சட்­ட­மூ­ல­மா­னது கடந்த காலத்தில் கொண்டு வரப்­பட்ட திவி­நெ­கும சட்­ட­மூலம் போன்று அமை­யாது. இந்த சட்­ட­மூ­ல­மா­னது அபி­வி­ருத்­தியை மட்­டுமே இலக்­காக கொண்­ட­தாகும். ஆகவே அது தொடர்பில் அச்­ச­ம­டையத் தேவை­யில்லை.

மேலும் நாம் மாகா­ண­ச­பை­க­ளுக்­கான அதி­கா­ரங்­களை பறிப்­ப­தனை நோக்­காக கொண்டு எவ்­வி­த­மான நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொள்­ள­வில்லை. நாட்டை அபி­வி­ருத்­தியில் முன்­னோக்கிக் கொண்டு செல்லும் போது பிராந்­தி­யங்­க­ளுக்­கான அபி­வி­ருத்தி மிகவும் முக்­கி­ய­மா­ன­தா­கின்­றது.

அதற்­க­மை­வா­கவே பிராந்­திய அபி­வி­ருத்­தியில் விசேட கவனம் செலுத்­து­வ­தற்கு இல­கு­வா­கவும் அதே­நேரம் மாகாண சபை­க­ளுடன் இணைந்து அபி­வி­ருத்தி திட்­டங்­களை முன்­னெ­டுக்கும் வகை­யி­லுமே இச்­சட்ட மூலம் அம­ய­வுள்­ளது என்றார்.

இதன்­போது முத­ல­மைச்­சர்கள், குறித்த சட்ட மூலம் தொடர்பில் தாம் கொண்­டி­ருக்கும் நிலைப்­பாட்டை பிர­த­ம­ரி­டத்தில் எடுத்­துக்­கூ­றி­னார்கள். குறிப்­பாக மாகாண சபை­க­ளுக்­கான அதி­கா­ரங்கள் மேலும் வழங்­கப்­ப­ட­வேண்டும் என்ற கோரிக்கைள் ஒட்டு மொத்த மாகாண சபை­க­ளிலும் இருக்­கின்ற நிலையில் இவ்­வா­றான சட்ட மூலங்கள் கொண்­டு­வ­ரப்­ப­டு­வதால் அதி­கா­ரங்கள் குறைக்­கப்­படும் நில­மை­களே ஏற்­படும் எனச் சுட்­டிக்­காட்­டி­னார்கள்.

அத்­தோடு குறித்த சட்ட மூலத்தில் மாகாண சபையின் அதி­கா­ரங்­களை வலு­வி­ழக்­கச்­செய்யும் வகை­யி­லான விட­யப்­ப­ரப்­புக்­க­ளையும் பிர­த­மரின் கவ­னத்­திற்கு கொண்­டு­வந்­தி­ருந்­தனர்.

இத­னை­ய­டுத்து கருத்து வெளியிட்ட பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, அவ்­வா­றாயின் குறித்த சட்­ட­மூ­லத்தை மீளாய்­வுக்கு உட்­ப­டுத்தி மீண்டும் திருத்­தங்­களை மேற்­கொள்வோம். இன்­றைய(நேற்று) தினத்தில் முத­ல­மைச்­சர்கள் அனை­வரும் சமு­க­ம­ளித்­தி­ருக்­காதன் கார­ணத்தால் மீண்­டு­மொ­ரு­த­டவை அனைத்து முத­ல­மைச்­சர்­க­ளையம் சந்­தித்து அவர்­களின் கருத்­துக்­க­ளையும் பெற்­றுக்­கொண்டு அடுத்த கட்ட நட­வ­டிக்­கை­களை எடுப்போம் என்றார்.

இச்­சந்­திப்பு குறித்து கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் தெரி­விக்­கையில், கிழக்கு மாகா­ணத்தைப் பொறுத்­த­வை­ரயில் மூவின மக்­க­ளையும் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­திய ஒரு மாகா­ண­மாக காணப்­ப­டு­கின்­றது. கிழக்கு மாகாண சபையும் அபி­வி­ருத்­திக்கு அதி­க­ள­வான முக்­கி­யத்­து­வத்தை வழங்­கு­கின்­றது.  

எனினும் கடந்த காலங்­களில் திவி­நெ­கும போன்ற சட்­ட­மூ­லங்கள் ஏதேச்­ச­தி­கா­ர­மாக நிறை­வேற்­றப்­பட்டு மாகா­ண­ச­பை­களின் அதி­கா­ரங்கள் வலு­வி­ழக்கச் செய்­யப்­பட்­டி­ருப்­பதை அனு­ப­ரீ­தி­யாக காண்­டி­ருக்­கின்றோம்.

ஆகவே எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் மாகா­ண­ச­பைக்­கான அதி­கா­ரங்கள் இழக்­கப்­படும் எந்­த­வொரு சட்­ட­மூத்­திற்கும், நட­வ­டிக்­கை­களும் நாம் இணங்கப்போவதில்லை. மேலும் கிழக்கு மாகாண சபையின் வரவு செலவுத்திட்ட அமர்வு நடைபெற்று வருவதால் குறித்த சட்ட மூலம் இதுவரையில் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதை பிரதமரிடத்தில் கூறினேன் என்றார்.

இதனையடுத்து பிறிதொரு தினத்தில் அனைத்து முதலமைச்சர்களுடனான சந்திப்பு நடத்தப்படுவதாக உறுதியானபோதும் திகதி குறிப்பிடப்படாத நிலையில் பிரமருடனான சந்திப்பு நிறைவுக்கு வந்தது. இச்சந்திப்பில், வடக்கு, வடமத்திய, வடமேல், சப்ரகமுவ, மத்திய ஆகிய மாகாணங்களை சேர்ந்த முதலமைச்சர்கள் பங்கேற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-12-24#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.