Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நகர்ப்புறங்களில் காட்டப்படும் அக்கறை கிராமங்களுக்கு மறுப்பு

Featured Replies

நகர்ப்­பு­றங்­­களில் காட்­டப்­ப­டும் அக்­கறை கிரா­மங்­க­ளுக்கு மறுப்­பு

 

 கிழக்கு மாகாண மாணவர் கல்வி குறித்தும், அவர்­க­ளது எதிர்­காலம் குறித்தும் அதிகம் சிந்­திக்க வேண்­டிய தேவை தற்­கா­லத்தில் ஏற்­பட்­டுள்­ளது. இவ்­வி­ட­யத்தில் சமூ­கத்­தி­லுள்ள அனைத்துத் தரப்­பி­னரும் வித்­தி­யாசம், வேறு­பா­டின்றி ஒத்­து­ழைப்பு நல்க வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

 கிழக்கு மாகாணப் பாட­சாலை மாணவர் கல்வி தொடர்பில் அண்­மைக்­கா­லத்தில் பல்­வேறு எதிரும் புதி­ரு­மான கருத்­துக்கள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. பல்­வேறு தரப்­பி­னரால் முன்­வைக்­கப்­படும் இக்­க­ருத்­துக்கள், கிழக்கு மாகா­ணத்தில் துரித கல்வி விருத்திச் செயற்­பா­டு­களின் தேவையை சுட்டி நிற்­கின்­றன.

ஒப்­பீட்­ட­ளவில் மாகாண கல்வி வீழ்ச்சி கண்டு செல்­வ­தா­கவும், கிழக்குப் பாட­சாலை மாண­வர்­களின் அடை­வுகள் போது­மா­ன­தாக இல்லை எனவும் சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கின்­றது. அம்­பாறை, மட்­டக்­க­ளப்பு, திரு­கோ­ண­மலை மாவட்­டங்­களை உள்­ள­டக்­கிய கிழக்கு மாகா­ணத்தில் மொத்தம் 17 வலயக் கல்வி அலு­வ­ல­கங்கள் தொழிற்­பட்டு வரு­கின்­றன.

சுமார் 1115 பாட­சா­லை­களில் மொத்தம் 3 இலட்­சத்து 98288 மூவின மாண­வர்கள் கல்வி பயில்­கின்­றனர். இத் தொகையில் சிங்­கள மொழி மூல மாண­வர்­களும் அடங்­குவர். இவர்­க­ளுக்கு கல்வி வழங்கும் பணியில் சுமார் 26 ஆயிரம் ஆசி­ரி­யர்கள் ஈடு­பட்­டுள்­ளனர்.

 மூன்று தசாப்­த­கால கோர யுத்­தத்தை எதிர்கொண்ட கிழக்கு மாகா­ணத்தின் கல்வி நிலை அப்­போது, ஓர­ளவு முன்­னேற்­ற­க­ர­மா­ன­தா­கவே அமைந்­தி­ருந்­தது. ஆனால், இன்று அந்­நிலை இல்லை. யுத்தம் முடி­வு­றுத்­தப்­பட்டு, சமா­தானம் நிலை­நாட்­டப்­பட்­டுள்ள தற்­கா­லத்தில் கல்வி நிலையில் குறிப்­பி­டத்­தக்­க­ளவு முன்­னேற்­ற­மேற்­ப­ட­வில்லை என்­பதை கல்வி அமைச்சின் அறிக்­கைகள் உறு­திப்­ப­டுத்­து­கின்­றன.

 2016 தரம் – 5 புல­மைப்­ப­ரிசில் பரீட்சை பெறு­பே­று­களின் தரப்­ப­டுத்­தலின் அடிப்­ப­டையில் கிழக்கு மாகாணம் ஒன்­ப­தா­வது இடத்­திற்கு தள்­ளப்­பட்­டுள்­ளது. இந்­நி­லைக்கு கார­ண­மா­ன­வர்கள் யார் என்­பதை கண்­ட­றிந்து நிவர்த்­திக்க வேண்­டிய பொறுப்பு எங்­க­ளுக்­குண்டு.

 தரம் – 5 புல­மைப்­ப­ரிசில் மாகா­ண­மட்ட தரப்­ப­டுத்­தலில், வெட்­டுப்­புள்­ளியைத் தாண்­டிய மாண­வர்­களின் அடிப்­ப­டையில், கிழக்கு மாகாணம் கடந்த 2011ஆம் ஆண்டு ஐந்­தா­வது இடத்­திலும், 2012ஆம் ஆண்டு ஏழா­வது இடத்­திலும், 2013, 2014, 2015 ஆகிய ஆண்­டு­களில் எட்­டா­மி­டத்­தையும் பெற்றுக் கொண்­டது. குறித்த பரீட்­சையில் 2016 இவ்­வ­ருடம் இறுதி மாகா­ண­மாக காணப்­ப­டு­கின்­றமை கிழக்கு மாகா­ணத்தின் தற்­கால கல்வி நிலையை தெளி­வாக விளக்­கு­வ­தாக அமைந்­துள்­ளது.

கிழக்கு மாகாண மாணவர் கல்வி வீழ்ச்சி அல்­லது பின்­ன­டை­வுக்­கான கார­ணத்தை கண்­ட­றி­யாது, சிலர் கல்வி அமைச்­ச­ரையும், அதி­கா­ரி­க­ளையும், அதிபர், ஆசி­ரி­யர்­க­ளையும், மாண­வர்­க­ளையும், அவர்­க­ளது பெற்றோரையும் குறை கூறுகின்ற அவலம் தொடர்­கின்­றது.

 இலங்­கையின் கல்­வித்­திட்­டத்தில், 1940ஆம் ஆண்டு முன்னாள் கல்­வி­ய­மைச்சர் அமரர் சீ. டபிள்யூ. டபிள்யூ. கன்­னங்­க­ர­வினால் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட தரம் – 5 புல­மைப்­ப­ரிசில் பரீட்சை அன்று முதல் இன்று வரை போட்­டி­மிக்­க­தா­கவே காணப்­ப­டு­கின்­றது. வறிய குடும்­பங்­களைச் சேர்ந்த மாண­வர்­க­ளுக்கு இப்­ப­ரீட்சை பெரும் வரப்­பி­ர­சா­த­மாக அமைந்­துள்­ளது என்றால் அதனை எவரும் மறுக்­காது ஏற்றுக் கொள்வர்.

மாண­வர்­களை பிர­பல்­ய­மான பாட­சா­லை­க­ளுக்குத் தேர்ந்­தெ­டுப்­ப­தற்கும், வரு­மானம் குறைந்த குடும்ப மாண­வர்­க­ளுக்கு உதவிப் பணம் வழங்­கு­வ­தற்­கு­மாக இலங்கை பரீட்சைத் திணைக்­களம் மாண­வர்­க­ளுக்கு நடத்தும் இப்­ப­ரீட்­சை­யா­னது மாண­வர்கள், அதிபர், ஆசி­ரி­யர்­களை விடவும் மாண­வர்­களின் பெற்­றோர் மத்­தியில் அதிகம் எதிர்­பார்ப்­புக்­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இதற்­காக அவர்கள் கடும் பிர­யத்­த­னங்­களை மேற்­கொள்­கின்­றனர்.

தரம் – 5 புல­மைப்­ப­ரிசில் பரீட்சை பெற்­றோ­ரது போட்­டிப்­ப­ரீட்­சை­யாக மாற்றம் பெற்று, அவர்கள் பிரத்­தி­யேக கல்வி நிலை­யங்­க­ளி­னூ­டாக மாண­வர்­க­ளுக்கு கல்வி வழங்க எத்­த­னிக்­கின்­றனர்.

தங்­க­ளது பிள்ளை இப்­ப­ரீட்­சையில் சித்­தி­ய­டைய வேண்டும் என்ற கடு­மை­யான எதிர்­பார்ப்­பி­லி­ருக்கும் பெற்­றோ­ருக்கு இப்­ப­ரீட்சைப் பெறு­பேறு ஏமாற்­ற­மாக அமைந்து விடு­வ­தையும் நாங்கள் சமூ­கத்தில் நிதர்­ச­ன­மாகக் கண்டு கொள்­கின்றோம்.

இப்­ப­ரீட்சைப் பெறு­பேற்றை பாட­சாலை ரீதி­யாக ஒப்­பிடும் போதும், எதிர்பார்த்த பெறு­பேறு கிடைக்­க­வில்லை என்­ப­தா­கவே உள்­ளது. பின்­தங்­கிய பிர­தே­சங்­க­ளி­லி­ருந்து அதி­க­ள­வி­லான மாண­வர்கள் உயர் ­புள்­ளி­களைப் பெறு­கின்­ற­போது, அனைத்து வச­தி­க­ளையும் கொண்­டு­ மி­ளிரும் கிழக்கு பாட­சாலை மாண­வர்­களால் அதிக புள்­ளி­களைப் பெற முடி­யா­துள்­ளது என்­பது குறித்தும் சமூ­கத்­த­வர்­களின் கவனம் திரும்ப வேண்டும்.

 அதி­க­மான கிழக்கு மாகாணப் பாட­சா­லைகள் குறித்த பரீட்­சையில் அதி­க­ளவு மாண­வர்­களை சித்­தி­ய­டையச் செய்து முன்­னிலை வகித்த போதிலும், மாகாண ரீதி­யி­லான தரப்­ப­டுத்­­தலில் இறுதி நிலை­யி­லேயே காணப்­ப­டு­கின்­றது. இது மிகவும் கவ­லைக்­கு­ரி­யது. இந்­நிலை எதிர்­கால மாகாணக் கல்வி குறித்தும், மாண­வர்­களின் எதிர்­காலம் குறித்தும் சிந்­திக்கச் செய்­வ­தாக அமைந்­துள்­ளது.

 இவ்­வாறு, தரம் – 5 புல­மைப்­ப­ரிசில் பெறு­பேற்று அடிப்­ப­டையில், கிழக்கு மாகாண ஆரம்பக் கல்­வி­நி­லையை நோக்­கு­கின்­ற­போது, அது தொடர்ச்­சி­யான வீழ்ச்­சி­ மட்­டத்­தினை நோக்கிச் செல்­வது அவ­தா­னிக்­கப்­ப­டு­கின்­றது. இந்­நிலை தொட­ரு­மானால், அது இளந்­த­லை­மு­றை­யி­ன­ருக்கு ஆபத்­தாக அமையும் என்­பதில் சந்­தே­க­மில்லை.

 கிழக்கு மாகாண கல்வி இவ்­வாறு பின்­ன­டைவை எதிர்­கொள்­வதற்கு பல்­வேறு கார­ணங்கள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன. குறிப்­பாக ஆசி­ரியர் ஆளணி பற்­றாக்­குறை, பாட­சா­லை­களின் வளப்­பற்­றாக்­குறை, பெற்­றோரின் குடும்ப பொரு­ளா­தார நிலை, பிள்­ளை­களின் இடை­வி­லகல், தரம் – 5 வகுப்பில் சிறந்த தேர்ச்­சி­பெற்ற ஆசி­ரி­யர்கள் பணியில் இல்­லாமை, மாண­வர்­க­ளுக்கு முறை­யான ஆரம்பக் கல்வி வழங்­கப்­ப­டாமை, ஆசி­ரி­யர்­க­ளி­டத்தில் அர்ப்­ப­ணிப்பு இல்­லாமை என்­பன அவற்றுள் முக்­கி­ய­மா­ன­வை­யாகும்.

 கிழக்கு மாகா­ணத்தின் பல்­வேறு பிர­தே­சங்­க­ளி­லுள்ள பாட­சா­லை­களில் தரம்– 5 வகுப்பில் கல்வி கற்கும் மாண­வர்­களில் பலர் முதன்மை மொழி தமிழ் எழுத்­துக்­களை இனங்­காண முடி­யா­த­வர்­க­ளா­கவும், மொழியை வாசித்து விளங்கிக் கொள்ள முடி­யா­த­வர்­க­ளா­கவும், எளிய சொற்­களை தெரிந்து விளங்­கிக்­கொள்ள முடி­யா­த­வர்­க­ளா­கவும், வச­னங்­களை அமைக்கத் தெரி­யாத­வர்­க­ளா­கவும், வாக்­கி­யங்­களை இல­குவில் புரிந்­து­கொள்ள முடி­யா­த­வர்­க­ளா­கவும், அடிப்­படைக் கணித கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் என்­ப­ன­வற்றை முறை­யாகப் பிர­யோ­கிக்க முடி­யா­த­வர்­க­ளா­கவும் உள்­ளனர்.

 இவ்­வா­றான நிலையில் மாண­வர்­களின் கல்வி அடை­வினை, ஏனைய மாகாண மாண­வர்­க­ளுடன் ஒப்­பீட்டு ரீதியில் நோக்­கு­வது கடி­ன­மா­ன­தா­கவே அமையும். மாண­வர்­களின் இந்­நி­லைக்கு அர­சி­யல்­வா­தி­களும் சில வேளை­களில் கார­ண­மாக அமைந்து விடு­கின்­றனர் என்­பதை குறிப்­பி­டா­ம­லி­ருக்க முடி­யாது.

அர­சி­யல்­வா­திகள் வச­தி­க­ளுள்ள அல்­லது நகர்ப்­பு­றங்­க­ளி­லுள்ள பாட­சா­லை­களின் அபி­வி­ருத்­தியில் காட்டும் அக்­கறை போன்று, வச­தி­க­ளற்ற, பின்­தங்­கிய பிர­தே­சங்­க­ளி­லுள்ள பாட­சா­லை­களின் விட­யத்தில் அக்­கறை காட்­டு­வ­தில்லை. இதனால், கிரா­மப்­புறப் பாட­சா­லைகள் அதி­க­ரித்த ஆசி­ரியர் ஆளணிப் பற்றாக் குறை­யு­டனும், வளப்­பற்றாக் குறை­யு­டனும் தொழிற்­ப­டு­கின்­ற­மையை எவரும் மறுக்­க­ இய­லா­து.

 குறிப்­பாக, கிரா­மப்­புறப் பாட­சா­லை­களில் பணி­யாற்­று­கின்ற ஆசி­ரி­யர்­களை நோக்­கினால் பல உண்­மைகள் தெளி­வாகும். அதி­க­ள­வி­லான ஆசி­ரி­யர்கள் பாட­சா­லை­களில் மாண­வர்­க­ளுக்கு கற்­பிப்­பதை விரும்­பா­த­வர்­க­ளா­கவும், மாண­வர்­களின் எதிர்­காலம் குறித்த சிந்­த­னை­யற்­ற­வர்­க­ளா­க­வுமே உள்­ளமை கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

ஒரு ­சிலர் ஆசி­ரியர் தொழிலை பிர­தான தொழி­லாகவன்றி, இரண்­டா­வது தொழி­லா­க­வுமே மேற்­கொள்­கின்­றனர். இதனை அவர்கள் பெற்றுக் கொள்ளும் அதி­க­ரித்த சம்­ப­ள­மற்ற விடு­மு­றை­க­ளி­லி­ருந்து உறு­திப்­ப­டுத்திக் கொள்­ளலாம்.

பொது­வாக பாட­சா­லை­களின் கட்­ட­மைப்பில் மூன்று தேசிய மட்டப் பரீட்­சைகள் காணப்­ப­டு­கின்­றன. இப்­ப­ரீட்­சை­களில் கிழக்கு மாகாணம் பின்­தள்­ளப்­பட்­டுள்­ள­மை­யா­னது, எதிர்­காலக் கல்வி நிலை தொடர்­பான பல்­வேறு கேள்­வி­களைத் தோற்­று­வித்­துள்­ளன.

2015 ஆம் ஆண்டு க.பொ.த. சாதா­ரண தரப்­ப­ரீட்சை மாகாண மட்ட பெறு­பேற்­றினை நோக்கும் போதும், க.பொ.த உயர்­தரப் பிரிவில் கற்­ப­தற்குத் தகு­தி­யு­டை­யோரின் மாவட்ட வரிசைப் படுத்­தலில் கிழக்கு மாவட்­டங்கள் பின்­தள்­ளப்­பட்­டுள்­ளதை அவ­தா­னிக்­கலாம்.

 கிழக்கு மாகா­ணத்­தி­லுள்ள 17 கல்வி வல­யங்­களில் குறித்த சில கல்வி வல­யங்கள் முன்­னணி பெறு­பே­று­களை நிலை­நாட்டி, மாகா­ணத்­திற்கு பெருமை சேர்த்து வரு­கின்­றன. இது ­தொ­டர்பில் அர­சியல் பிர­மு­கர்­களும், அதி­கா­ரி­களும் மகிழ்ச்சி பாராட்­டு­கின்­றனர்.

மாகா­ணத்­தி­லுள்ள அர­சியல் பிர­மு­கர்கள் எதிர்­கால கல்விச் செயற்­பா­டுகள் தொடர்பில் கல்­வி­யி­ய­லா­ளர்கள், அதி­கா­ரி­க­ளுடன் பேசி, எதிர்­கால கல்வி வளர்ச்­சிக்கு வழி­கோல வேண்டும். காத்­தி­ர­மான உத­வி­களை நல்க வேண்டும்.

 தற்­கா­லத்தில் நிதி நிறு­வ­னங்­களின் நேர சூசியை நடை­மு­றைப்­ப­டுத்­து­வதும் கிழக்கு மாணவர் கல்வி பின்­ன­டை­வுக்கு காரணம் என கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

நிதி நிறு­வ­னங்­களின் ஆவ­ணங்­களை பூர்த்தி செய்­வ­தற்கு நிர்ப்­பந்­திக்­கப்­ப­டு­வ­தா­கவும், இதற்­காக பெரு­ம­ளவு நேரம் விர­ய­மா­வ­தா­கவும் அதிபர், ஆசி­ரி­யர்கள் குறை­பட்டுக் கொள்­கின்­றனர். இவ்­வி­ட­யங்கள் தொடர்பில் எதிர்­கா­லத்தில் கூர்­மை­யான கவனம் செலுத்­தப்­படல் வேண்டும்.

கிழக்கு மாகாண கல்விப் பின்னடை வுக்கு முறையற்ற ஆசிரிய நியமனங்கள், முறையற்ற இடமாற்றங்கள், அரசியல் தலையீடு, கல்வி அதிகாரிகள்-, அதிபர்கள்,-ஆசிரியர்களின் சுய சிந்தனைக்கு இடம ளிக்காது ஏற்படுத்தப்படும் தடைகள் என்பன காரணம் என ஆசிரியர் தொழிற் சங்கங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன. இக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் கவனம் செலுத்துவது அவசியமாகும்.

 ஆசிரியர் நியமனம் தொடர்பில் சரியான தகவல் வழங்க முடியாத அதிகாரிகள் கிழக்கு மாகாணத்தில் உள்ளதாகவும், அதிகம் ஆசிரியர் ஆளணிப் பற்றாக்குறையுள்ள வலயமாக அக்கரைப்பற்று, கல்முனை கல்வி வலயங்கள் காணப்படுவதாகவும் கிழக்கு மாகாண அமைச்சரொருவர் தனது பேச்சின் போது அண்மையில் சுட்டிக்காட்டியிருந்தார்.

கிழக்கு கல்­வித்­துறை எதிர்­கா­லத்தில் பாரிய பின்­ன­டைவை எதிர்கொள்ளும் அபாயம் உள்­ள­தா­கவும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

 குறிப்­பாக கிழக்கு மாகாண மாண­வர்கள் பொதுப் பரீட்­சை­களில் அதிகம் சித்­தி­ய­டைய முடி­யாது தவ­று­வ­தற்­கான காரணம் என்ன என்­பது தொடர்­பிலும், மாண­வர்கள் பெற்றுக் கொண்ட புள்­ளிகள் தொடர்­பிலும் முறை­யான பகுப்­பாய்­வுகள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும். அதன் மூலம் குறைகள் நிவர்த்­திக்­கப்­பட்டு, முன்­னணி மாகா­ண­மாக கிழக்கு மாகாணம் கட்டியெழுப்பப்பட வேண்டும்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-12-26#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.