Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகத்தின் வீரமும் தீரமும் மிக்க தலைவர்களில் பிரபாகரனே முதன்மையானவர்: விஜயகலா புகழாரம்

Featured Replies

 

இலங்கையிலும் உலகத்திலும் உள்ள தலைவர்களில் வீரமும் தீரமும் மிக்க முதன்மையான தலைவராக பிரபாகரன் விளங்குகிறார் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

கிளிநொச்சி பொதுச்சந்தையில் ஏற்பட்ட தீ விபத்தினால் அழிவுக்குள்ளான கடை உரிமையாளர்களுக்கு மீள்குடியேற்ற அமைச்சினால் ஒதுக்கபட்ட 74 மில்லியன் ரூபா நட்ட ஈடு வழங்கும் நிகழ்வு இன்று அரச செயலக மாநாட்டு மண்டபத்தில் அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன், வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே, இணைத்தலைவரும் யாழ்ப்பாண கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவர் மு.சந்திரகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது உரை நிகழ்த்திய இராஜாங்க அமைச்சர் விஜயகலா, ஜனாதிபதி மற்றும் பிரதமர் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினரோடு இணைந்து நல்லாட்சி பயணம் ஒன்றை மேற்கொண்டு இருக்கின்றனர். 

வடக்கு கிழக்கு மக்களின் வாழ்வியலை கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் நோக்கம். நாங்கள் தேர்தல் வாக்குகளை நோக்கி இவற்றை செய்யவில்லை. இந்த நட்டஈட்டை நாங்கள் பெற்றுத்தருவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டோம். சில துரோகிகள் எங்களை துரோகிகள் என்கிறார்கள். கடந்த ராஜபக்ச காலத்தில் இங்கு என்ன நடந்தது என்பது எல்லோருக்கும் தெரியும்.

நேர்மையாக செயற்பட்ட கிராம சேவையாளர்களை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஆதாரவாளர் என்று கூறி வேலையில் இருந்து நீக்கினார்கள்.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு ஆதரவாளர்கள் எனக்கூறி அரசாங்கம் வழங்கிய மின்சாரங்களை சில கிராமங்களுக்கு நிறுத்தினார்கள். ஆனால் இன்று இவர்கள் தங்களை தலைவர்களாக காட்ட முயற்சிக்கின்றார்கள்.

இலங்கையிலும் உலகத்திலும் உள்ள மிகச்சிறந்த வீரம்மிக்க தலைவர் வல்வெட்டித்துறை மண் தந்த பிரபாகரனே. நீங்கள் வாக்களிக்கும் போது உங்கள் இனம் சார்ந்த தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கே வாக்களியுங்கள் என்று குறிப்பிட்டார்.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

 

http://www.tamilwin.com/community/01/129690?ref=home

  • தொடங்கியவர்

உண்மையில் விடுதலைப்புலிகளின் தலைவருக்கு என்ன நடந்தது??

அடங்கிப் போயிருந்த ஓர் விடயத்தினை மீண்டும் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பேச அது தென்னிலங்கை தரப்பில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்தால், அவர் பிரதமர் பதவிக்கு தகுதியானவராக இருப்பார் என தெரிவித்த வார்த்தைகளே அவை. இதுவே பல தென்னிலங்கை அரசியல் வாதிகளால் விமர்சிக்கப்பட்டு வருகின்றது.

உண்மையில் பிரபாகரன் இருக்கும் போது தமிழ் மக்களின் வாழ்வில் பிரச்சினைகள் இருக்கவில்லை என்பதும் வடக்கு வாழ் மக்களின் ஓர் கருத்து என கூறப்படுகின்றது.

அதே வகையில் விஜயகலாவின் குறித்த கருத்து தொடர்பில் அரசு தரப்பில் பெரிதாக விமர்சனங்கள் எழுப்பப்பட வில்லை, ஆனால் அரசுக்கு எதிரானவர்கள் பலவிதமான கருத்துக்களை முன்வைத்து வருகின்றார்கள்.

அதேபோன்று பிரபாகரன் மரணிக்கவில்லை என பாராளுமன்றத்தில் சரத் பொன்சேகா இவ்வருட ஆரம்பத்தில் தெரிவித்திருந்தார்.

பழ. நெடுமாறன் உட்பட பலரும் கூட இவ்வாறான ஒரு கருத்தை 2016ஆம் ஆண்டு ஆரம்பப்பகுதிகளில் தெரிவித்திருந்தார்கள்.

மேலும், “யுத்தத்தின் இறுதி தருணங்களில் நடந்த உண்மைகளை கண்டறியும் நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ளும்.

இறுதிக்கட்டத்தில் பிரபாகரன் உயிருடன் இருந்தாரா? போர் முறைமைக்கு முரணான வகையில் அவர் கொல்லப்பட்டாரா? என்பது கண்டறியப்படும்”.

இவை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன 2016ஆம் வருட ஆரம்ப பகுதிகளில் தெரிவித்த வார்த்தைகள். ஆனால் இன்றுடன் வருடமும் நிறைவுக்கு வந்து விட்டது.

என்றாலும் கூட அதற்கான எந்தவிதமான நடவடிக்கைகளையும் செயற்பாடுகளில் இதுவரையிலும் எடுக்கப்பட்ட வில்லை என்பதே உண்மை.

அதே போன்று பசில் ராஜபக்ச கூட அண்மையில் “கடந்த அரசாங்கம் பிரபாகரனின் மரணச் சான்றிதழ் வழங்க வில்லை ஆனால் இந்த அரசாங்கம் அதனை செய்யலாம்” என கருத்து தெரிவித்திருந்தார்.

இவ்வாறாக பலரும் பல விதமான கருத்துகளை முன்வைத்து வருகின்றார்களே தவிர இது வரையில் அந்த பிரச்சினைக்கு தீர்வு கண்டதாக தெரியவில்லை.

இதற்கான காரணம் என்ன? அரசு தரப்பு பிரபாகரனின் மரணத்தை உறுதி செய்து விட்டு விடுமானால் இப்போதைக்கு இவ்வாறான கருத்துகளை எவரும் வெளிப்படுத்த மாட்டார்களே. ஏன் அரசு அதனை செய்ய தயங்குகின்றது என்பது ஓர் கேள்வியே.

இப்போதும் விடுதலைப்புலிகளின் தலைவர் குறித்து விஜயகலா பேசியதை விமர்சனப்படுத்துகின்றார்களே தவிர அந்த கருத்துக்கு அடித்தளமாக இருந்த விடயம்., அதாவது பிரபாகரனின் மரணம் உண்மையா? பொய்யா என்பது தொடர்பில் வெளிப்படையாக அரசு எதனையும் கூறவில்லை அதனை கூறியிருந்தால் இனிமேல் இவ்வாறான கருத்துகள் எழுப்பப்படாது என்றே கூறப்படுகின்றது.

இவற்றினை பார்க்கும் போது இன்று வரை அரசு பிரபாகரனின் மரணத்தை ஒப்புக்கொள்ளவில்லை என்பது மட்டுமே தெளிவாகின்றது. இல்லாவிடின் இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவந்திருக்க முடியும்.

மற்றொரு வகையில் தென்னிலங்கை அரசியல் மாற்றங்களுக்கு விடுதலைப்புலிகளும் அதன் தலைவரின் பங்களிப்பும் மிக அவசியம் என்பதும் சுட்டிக்காட்டப்படத்தக்கது.

யுத்தம் நிறைவுக்கு வந்து ஆண்டுகள் மட்டுமே கடந்து கொள்கின்றதே தவிர சர்ச்சைகளுக்கு மட்டும் தீர்வு காண எந்த அரசும் முன்வரவில்லை.

இவற்றின் அடிப்படையில் பார்க்கும் போது அரசும் கூட பிரபாகரனின் மரணத்தை ஏற்றுக் கொள்ளாமல் தடுமாறிக்கொண்டு இருக்கின்றது என்றே தெரிவிக்கப்படுகின்றது.

யுத்தகாலத்தில் களத்தில் இருந்தவர்களாலும், அப்போது ஆட்சி நடத்தியவர்களாலும் மட்டுமே இதற்கான விடையை கொடுக்க முடியும். அதுவரையில் வருடங்கள் மாறினாலும் ஆட்சிகள் மாறினாலும் விமர்சனங்களும் முன்னுக்கு பின் முரண்பட்ட கருத்துக்களும் மட்டுமே வெளிவரும்.

ஆகமொத்தம் அரசியல் இலாபங்களுக்காக விடுதலைப்புலிகளின் தலைவர் பெயர் உச்சரிக்கப்பட்டு வருகின்றது என்பது மட்டும் ஒரு வகையில் உண்மை என்றே தென்னிலங்கை அரசியல் புத்திஜீவிகள் தெரிவித்துள்ளனர்.

2017ஆம் வருடம் சரி இதற்கான பதில் கிடைக்குமா, பிரபாகரனுக்கு உண்மையில் என்ன நடந்தது? இரகசியம் உடைக்கப்படுமா என்பதும் ஒரு இப்போதைக்கு மிகப்பெரிய கேள்வி.

http://www.tamilwin.com/politics/01/130022?ref=morenews

 
  • தொடங்கியவர்

பிரபாகரனுக்கு நாடு அச்சமடைந்துள்ளதா?? - நாட்டிற்கு முக்கிய திருப்பு முனைகள் ஏற்படும்..!

விடுதலைப்புலகளின் தலைவர் பிரபாகரன் தொடர்பில் இன்னும் நாடு அச்சமடைந்துள்ளதா? அவர் பிரதமராக தகுதி பெற்றவர் என்று விஜயகலா கூறிய கருத்திற்கு நாடு அமைதியாக உள்ளது என பிவிதுருஹெல உறுமய கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மதுமாதவ அரவிந்த தெரிவித்தார்.

நேற்று கொழும்பில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

மேலும், நாட்டில் பைத்தியக்காரத்தனமாக செயற்பட்ட பிரபாகரன் கல்லறைகளை உருவாக்கியவர். அழிவை ஏற்படுத்தி நாட்டிற்கு துரோகம் செய்தவர்.

அவ்வாறான தொரு நபர் இன்று இருந்திருந்தால் நாட்டின் பிரதமராக தகுதியான நபர் என விஜயகலா நாட்டிற்கு அழிவை ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளார் என்பதை ஐக்கிய தேசிய கட்சி ஏற்றுக் கொண்டதா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

இப்போது நாட்டின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே அப்படியானால் பிரபாகரன் இருந்திருந்தால் அந்தப் பதவியை கொடுக்க நீங்கள் ஒத்துக் கொள்வீர்களா?

இந்தக் கேள்வியை பிரதமரான உங்களிடம் நாம் கேட்கின்றோம் எனவும் மதுமாதவ அரவிந்த தெரிவித்தார்.

இதேவேளை குறித்த ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில கருத்து தெரிவிக்கையில்,

நாடு இந்த வருடத்தின் முக்கிய காட்டிக்கொடுப்புகளை நிறைவேற்றும், அதனால் பல திருப்புமுனைகள் ஏற்படும் அதில் முக்கியமானது நாட்டை தமிழர்களுக்கு கொடுப்பதே. அது எதிர்வரும் மார்ச் மாதம் நிறைவேற்றப்படும்.

அதேபோன்று நாட்டை பலம் மிக்க பிரதான நாடுகளுக்கு கொடுத்து விடும் அபாயமும் இந்த வருடம் நிறைவேற்றப்படும் எனவும் உதயகம்மன்பில தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.tamilwin.com/politics/01/130337?ref=youmaylike2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.