Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பந்தன் மீதான பாராட்டும் அவரது நியாயமான நிலைப்பாடும்

Featured Replies

சம்­பந்தன் மீதான பாராட்டும் அவ­ரது நியா­ய­மான நிலைப்­பாடும்

 

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தொடர்பில் அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்­சர்கள் தொடர்ந்தும் பாராட்­டுக்­களை தெரி­வித்து வரு­கின்­றனர். புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் விட­யத்தில் அவர் மிகுந்த விட்டுக் கொடுப்­புடன் செயற்­பட்டு வரு­வ­தா­கவும் அவர்கள் பாராட்­டு­கின்­றனர்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறிசேன கூட அண்­மையில் நடை­பெற்ற கூட்­ட­மொன்றில் உரை­யாற்­றும்­போது எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்­தனின் நிலைப்­பாட்­டினை வர­வேற்று வந்தார். இதேபோல் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­கவும் சம்­பந்­தனின் நிலைப்­பாட்­டிற்கு பல தட­வைகள் பாராட்­டுக்­களை தெரி­வித்­தி­ருக்­கின்றார். இவ­ரது காலத்­திற்குள் இனப் பிரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வை கண்டு விட வேண்டும் என்று அர­சாங்­கத்தின் பல அமைச்­சர்­களும் கருத்­துக்­களை கூறி வரு­கின்­றனர்.

கடந்த சில தினங்­க­ளுக்கு முன்னர் அம்­பாந்­தோட்­டையில் நடை­பெற்ற மக்கள் சந்­திப்­பொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரி­வித்த ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் முக்­கி­யஸ்­தரும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் செய­லா­ள­ரு­மான அமைச்சர் மஹிந்த அம­ர­வீர, எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்தன் தொடர்பில் பாராட்­டுக்­களை தெரி­வித்­தி­ருந்தார். அத்­துடன் சம்­பந்­தனின் நிலைப்­பாடு தொடர்­பிலும் கருத்து வெளியிட்­டி­ருந்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் எதிர்க்­கட்சித் தலை­வ­ராக இருக்கும் இரா. சம்­பந்தன் சிறந்த அர­சியல் தலை­வ­ராவார். அவர் இருக்­கும்­போதே தேசிய பிரச்­சி­னைக்கு தீர்வு காண அர­சாங்கம் எதிர்­பார்த்­துள்­ளது. அவ­ரு­ட­னான பேச்­சு­வார்த்­தை­க­ளின்­போது அவர் சமஷ்டிக் கோரிக்­கையை அல்­லது தனி நாட்டுக் கோரிக்­கையை முன்­வைத்­த­தில்லை. அத்­துடன் இந்த நாடு பௌத்த நாடு என்­பதை அவரும் ஏற்றுக் கொண்­டுள்ளார். பௌத்­தத்­திற்­கான முன்­னு­ரி­மையை நீக்க வேண்டும் என்று ஒரு­போதும் தான் கோரிக்கை விடுக்கப் போவ­தில்லை என்றும் சம்­பந்தன் கூறி­யுள்ளார். இவ்­வா­றாக மிகவும் மதிக்­கப்­படும் சம்­பந்தன் போன்ற ஒரு அர­சி­யல்­வா­தி­யிடம் இருந்து இத்­த­கைய கருத்­துக்கள் வெளியா­கும்­போதே நாட்டின் பிர­தான பிரச்­சி­னை­க­ளுக்கு நாம் தீர்வு காண நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் மஹிந்த அம­ர­வீர தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

தமிழ்த் தலைவர் ஒருவர் எதிர்க்­கட்சித் தலை­வ­ராக இருப்­பது நாட்டு மக்கள் செய்த பாக்­கியம் ஆகும். சம்­பந்தன் போன்ற சிறந்த அர­சியல் தலைவர் ஒருவர் எதிர்க்­கட்சித் தலை­வ­ராக இருக்கும் காலத்­தி­லேயே நாட்டின் தேசிய பிரச்­சி­னை­யான இனப்பிரச்­சி­னைக்கு தீர்­வு­கா­ணப்­பட வேண்டும். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பத­வியில் இருக்கும் காலப்­ப­கு­தியில் அர­சியல் யாப்பில் பௌத்த மதத்­திற்கு வழங்­கப்­பட்­டுள்ள முன்­னு­ரிமை ஒரு­போதும் குறைக்­கப்­படமாட்­டாது. அதேபோல் சமஷ்­டியோ அல்­லது வேறு எந்த வழி­யி­னூ­டா­கவோ நாட்டைப் பிரிக்க இட­ம­ளிக்கமாட்டோம். வடக்கு, கிழக்கு அல்­லது வேறு எந்த மாகா­ணங்­க­ளையும் இணைக்­கவும் இட­ம­ளிக்கமாட்டோம். எதிர்க்­கட்­சியில் இருக்கும் அர­சியல் வாதிகள் கூறு­வது போல் ஒற்­றை­யாட்சி நீக்­கப்­ப­டவோ சமஷ்டி முறை ஏற்­ப­டுத்­தப்­ப­டவோ மாட்­டாது என்­பதை மகா­நா­யக்க தேரர்­க­ளுக்கு மிகத் தெளிவாக எடுத்துக் கூறி­யுள்ளோம் என்றும் அமைச்சர் அம­ர­வீர இந்த மக்கள் சந்­திப்­பின்­போது சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.

இதே­போன்றே எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்­தனின் நிலைப்­பாடு தொடர்பில் அர­சாங்க தரப்­பி­னரின் கருத்­துக்கள் அமைந்­துள்­ளன. புதிய அர­சியல் அமைப்பில் உள்­ள­டக்­கப்­ப­ட­வுள்ள அர­சியல் தீர்வு தொடர்­பான விட­யத்தில் எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்தன் மிகுந்த விட்டுக் கொடுப்­புக்­களை மேற்­கொண்டு வரு­வ­தனால் பிரச்­சி­னைக்குத் தீர்வை காண்­பதில் முரண்­பாடு எழப்­போ­வ­தில்லை என்ற வகை­யி­லேயே அரச தரப்­பி­னரின் கருத்­துக்கள் அமைந்­தி­ருக்­கின்­றன.

உண்­மை­யி­லேயே இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்­வா­னது இணைந்த வடக்கு, கிழக்கு மாகா­ணத்தில் சமஷ்­டியை உள்­ள­டக்­கி­ய­தாக அமைய வேண்டும் என்­பதே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் நிலைப்­பா­டா­க­வுள்­ளது. கடந்த வட மாகாண சபைத் தேர்தல் மற்றும் பாரா­ளு­மன்றத் தேர்தல் என்­ப­வற்­றின்­போது வெளியி­டப்­பட்ட தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு தொடர்பில் மிகத் தெளிவாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு உறுதி மொழி வழங்­கி­யி­ருந்­தது.

இதற்­கி­ணங்­கிய வகை­யி­லேயே இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு அமைய வேண் டும் என்­பதில் கூட்­ட­மைப்பு உறு­தி­யா­க­வுள்­ள­தா­கவே தெரி­கின்­றது. ஆனாலும் தென் பகுதி பெரும்­பான்­மை­யின மக்­களின் சம்ம­தத்­து­ட­னான தீர்­வொன்றை காண வேண் டும் என்­ப­தனால் சில விட்டுக்கொடுப்­புக்­களை மேற்­கொள்­வ­தற்கு கூட்­ட­மைப்பின் தலைமை முன்­வந்­தி­ருக்­கின்­றது. ஆனாலும் அந்த விட்டுக் கொடுப்­பா­னது தமிழ் மக்­களின் அபி­லா­ஷை­க­ளுக்கு எதி­ரா­ன­தாக அமைய முடி­யாது என்ற விட­யத்தில் கூட்­ட­மைப்பு தலைமை உறு­தி­யா­க­வுள்­ள­தா­கவே தெரி­கின்­றது.

அர­சாங்க தரப்­பினர் தெரி­வித்து வரும் கருத்­துக்­க­ளுக்கு பதி­ல­ளிக்கும் வகையில் எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன் தெரி­வித்­துள்ள விட­யங்கள் இதனை உறு­திப்­ப­டுத்­து­வ­தாக அமை­கின்­றது. எமது மக்­க­ளுக்­கான தீர்­வா­னது ஒற்­றை­யாட்­சிக்குள் ஏற்­பட முடி­யாது. புதிய அர­சியல் அமைப்­பிற்கு பெரு­வா­ரி­யான மக்­களின் அங்­கீ­கா­ரத்தை பெற்றுக் கொள்­வ­தற்­காக, எமது மக்­க­ளுக்கு ஆபத்தை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய விட்டுக் கொடுப்­புக்கு இட­ம­ளிக்க முடி­யாது என்று கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்தன் தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில், புதிய அர­சி­ய­ல­மைப்பு விடயம் தொடர்பில் தற்­போது சில முன்­னேற்­ற­க­ர­மான விட­யங்கள் நடை­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன. அதனை குழப்­பு­வ­தற்கு நாங்கள் விரும்­ப­வில்லை. வீணான சர்ச்­சை­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கு­ரிய காலம் இது­வல்ல. நாங்கள் அந்த விட­யங்­களை பெரிதுபடுத்­து­வ­தற்கு விரும்­பில்லை. தமி­ழீ­ழத்தை சம்­பந்தன் கோர­வில்லை. சமஷ்­டியை சம்­பந்தன் கோர­வில்லை என்றே கூறப்­பட்­டி­ருக்­கி­றது. ஆனால், ஒற்­றை­யாட்­சிக்குள் தேசிய பிரச்­சி­னைக்­கான தீர்வை காண்­ப­தற்கு இணங்கி விட்டோம் என அவர்கள் கூற­வில்லை. அப்­படி என்றால் அதன் அர்த்தம் என்ன? நாம் எத்­த­னையோ தட­வைகள் தென்­னி­லங்கை தலை­வர்­களை சந்­தித்­த­போது ஒற்­றை­யாட்­சிக்குள் எமது மக்­க­ளுக்­கான தீர்வை எட்ட முடி­யாது என்­பதை தெளிவாக கூறி­யி­ருக்­கின்றோம். எமது மக்­க­ளுக்கு ஏற்­பு­டைய நியா­ய­மான தீர்­வொன்று வழங்­கப்­பட வேண்டும் எனவும் அவர்­களி ­டத்தில் தெளிவாக எடுத்துக் கூறி­யுள்ளோம் என்றும் கூறி­யி­ருக்­கின்றார்.

சம்­பந்­தனின் இந்தக் கருத்­தா­னது ஒற்­றை­யாட்­சிக்குள் தீர்வு என்­பது சாத்­தி­ய­மில்லை என்­பதை அழுத்தி உரைப்­ப­தா­கவே உள்­ளது. ஆனால், அர­சாங்க தரப்­பி­னரோ ஒற்­றை­யாட்­சிக்குள் மட்­டுமே தீர்வு என்­பதை அடிக்­கடி தெரி­வித்து வரு­கின்­றனர்.

கொழும்பில் நேற்­று­முன்­தினம் செய்­தி­யாளர் மாநா­டொன்றை நடத்­திய அமைச்சர் எஸ்.பி. திஸா­நா­யக்க அர­சி­ய­ல­மைப்பில் மாற்றம் செய்­வ­தற்­கான செயற்­பா­டுகள் தற்­போது முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. அதில் தனி மாகாண ஆட்சி உரு­வாக்­கவோ அல்­லது ஒற்­றை­யாட்­சியை சிதைக்­கவோ இட­ம­ளிக்­கப்­படமாட்­டாது. எனவே ஒற்­றை­யாட்­சியின் கீழ் இந்த நாட்டில் சிறு­பான்­மை­யி­னத்­த­வரும் ஏற்றுக் கொள்ளும் வகை­யி­லான ஒரு தீர்வை பெற வேண்டும் என்ற நிலைப்­பாட்­டி­லேயே நாம் உள்ளோம் என்று தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

அர­சாங்­கத்தின் சகல அமைச்­சர்­களும் இத்­த­கைய கருத்­துக்­க­ளையே தெரி­வித்து வரு­கின்­றனர். ஆனாலும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான இரா . சம்­பந்தன் ஒற்­றை­யாட்­சிக்குள் தீர்­வு­காண முடி­யாது என்ற விட­யத்தில் உறு­தி­யா­கவே இருக்­கின்றார். அப்­ப­டி­யாயின் தீர்வு என்­பது எப்­படி சாத்­தி­ய­மாகப் போகின்­றது என்ற கேள்வி தற்­போது எழு­கின்­றது.

தற்போதைய நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனுக்கு அரசாங்க தரப்பினர் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றமையானது தமிழ் மக்கள் சார்பில் அவர் மீதான விமர்சனங்கள் அதிகரிப்பதற்கே வழிவகுத்து வருகின்றது.

எனவே, இவ்வாறான பல பிரச்சினைகளை எதிர்நோக்கிய போதி லும் தீர்வொன்றை கண்டுவிட வேண்டும் என்பதற்காக கூட்ட மைப்பின் தலைமை அரசாங்கத்துடன் ஒத்துழைத்து செயற்பட்டு வருகின்றது. ஆனால், இந்த ஒத்துழைப்பை உரிய வகையில் பயன்படுத்த அரசாங்கம் தவறினால் நாட்டில் நிரந்தர சமாதானம் என்பது சாத்தியமாற்றதாக போய்விடும். இந்த விடயத்தில் கூட் டமைப்பின் தலைமையின் விட்டுக்கொடுப்பை மதித்து அரசாங்க தரப்பு செயற்பட வேண்டும். தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யக்கூடிய தீர்வைக்காண முன்வர வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-12-29#page-4

முத்தி நெறி அறியாதவர் - மூக்கர் தமிழர் மனம் அறியாதவர் - கயவர்

12868.jpg

சமஷ்டி முறைமை அவுட் என்றாகி விட்டது. இனி ஒற்றையாட்சிக்குள் தீர்வு என்பதுதான் முடிவு. ஒற் றையாட்சிக்குள் தீர்வு என்றால் எல்லா அதிகாரங்களும் கிடைத்து விடும் யாரேனும் நம்பினால் அதுதான் மிகப்பெரும் மடமைத்தனம்.

ஆக, தமிழர்களுக்கான தீர்வு என்பது எதுவும் இல்லை என்றாகிவிட்டது. அப்படியானால் இதுவரை நடந்த மண்மீட்புப் போர், எங்கள் பிள்ளைகளின் தியாகம், உறவுகளின் இழப்பு, சொத்தழிவு, இடப்பெயர்வு என அனைத்தும் வீணாகிவிட்டதா? என்ற கேள்வி எழும்.

இந்தக் கேள்விக்கு விடையில்லை. இவையெல்லாம் சேர்ந்துதான் எங்கள் மூத்த அரசியல் தலைவர்,  காளி அம்மன் மீது கொண்ட அளப்பெரும் கருணையால் தேசியக் கொடியும் சிங்கக் கொடி மீது அளவற்ற பற்றும் கொண்ட, சீமான் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தர் அவர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைத்தது.

இது ஒன்று போதும் எங்கள் இனம் இதைச் சொல்லிச் சொல்லியே சீவியம் நடத்தும். என்ன செய்வது? போராட்டம் தோற்றது என்பதற்கப்பால் போராட்டத்தின் தோல்விக்குப் பின்னர் தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தை பொறுப்பேற்ற எங்கள் அரசியல் தலைமை இருக்கிறதே; அதுதான் எங்கள் ஊழ்வினையின் அடையாளம் என்று கூறிக்கொள்ளலாம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்று தமிழ் மக்கள் கூறினாலும் இருவரைக் கொண்ட அமைப்பாகவே அது இப்போது உள்ளது. மற்றும்படி ஒருசிலர் அரசை முடக்குவோம் என வீராப்பு பேசுகின்றனர். இது அவர் களின் பாத்திரத்துக்கான வசனம். இதுகூட அந்த இருவரில் ஒருவரால் எழுதப்பட்டதாக இருக்கலாம்.
இவ்வாறு பேசப்படுகின்ற வீராப்பு வசனத்தை கேள்வியுற்றதும் முதலில் சிரிப்பவர்கள் அந்த இரு வருமாகவே இருக்க முடியும் . 

என்ன செய்வது? இம்மை மறுமை தெரியாத நிலையில் எங்கள் அரசியல் தலைமைக்கு முறைப்பாடு கொடுக்கும் தமிழ் அரசியல்வாதிகளை நினைத்தால் இதயம் கருகிப்போகும்.

சரி, இவைதான் ஒருபுறம் என்று விட்டுவிடலாம் என்றால் இன்றுவரை; இந்த நிமிடம் வரை தமிழ் அர சியல் தலைமை எங்களுக்கு சமஷ்டித் தீர்வை எடுத்துத் தரும். வடக்கு - கிழக்கை இணைக்கும் என்று நம் புகின்ற அப்பாவிகளை நினைக்கும் போது கண்கள் கலங்கிக் கொள்கின்றன.

சரி, அவர்கள் ஆளும் இனம். நாங்கள் ஆளப்படும் இனம். வந்து பிறந்துவிட்டோம் வாழத் தெரியவில்லை என்று பேசாமல் இருந்தால், 

வடக்கில் சிங்கள மீள்குடியேற்றம். ஆனால் தமிழன், தானிருந்த தனது பூர்வீக மண்ணில் குடியிருக்க அனுமதி மறுப்பு.

புத்த விகாரைகள் வடக்கில் அமைப்பு. இந்து ஆலயங்கள் உடைப்பு என்பதாக நிலைமை இருப்பதால் நாளும் நம் இதயம் நொருங்குகிறது.

பேசாமல் இருந்தாலும் விடுகிறார்கள் இல்லை. தமிழன் வாழ்ந்த பூமியையும் புத்தர் பிறந்த இடமாக காட்டுவதிலேயே அவர்கள் கரிசினை கொள்கின்றனர்.  

இந்நிலையில் ஒற்றையாட்சில் தீர்வு என்பதற்கு எங்கள் அரசியல் தலைமை உடன்படுகிறது என்றால், இதைவிட அநியாயம் வேறு எதுவாகவும் இருக்க முடியாது.

என் செய்வோம்? முத்தி நெறி அறியாத மூக்கரோடும் தமிழ் இனத்தின் பிரச்சினை தெரியாத கயவரோடும் வாழ்வதென்பது முடியாத காரியம் அவ்வளவு தான்.  

http://www.valampurii.lk/valampurii/content.php?id=12868&ctype=news

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.